விடியல்
தோழனே
போராட துணிவிருக்கும் போது
போர்வைக்குள் சுகம் தேடுகிறாயே?
நீ போர்களத்தினுள்
பூத்திருக்கிறாய்
போராடினால் தான் வாழலாம் !
சாதனை படைத்தவர்களெல்லாம்
ஜாம்பவான்கள் அல்ல...
ஜனனத்தில் நம்மோடு
சமமானவர்கள் தான்
ஆனால்
சாதிக்க வேண்டுமென்ற
ஆதிக்கத்தை
அடிமனது வரை
ஆக்கிரமிப்பு செய்தவர்கள் !
தோழனே...
துணிவோடு போராட புறப்படு
இருண்டு கிடக்கும்
வாழ்க்கை ஒளிமயமாக
ஒரு நாள் உனக்கும்
கிழக்கு வானம் வெளுக்கும்!