Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

முகம் ஜொலிக்கணுமா?

முகத்தை மசாஜ் செய்ய நீங்கள் பார்லருக்குத் தான் போக வேண்டும் என்பதில்லை.

வீட்டிலேயே செய்த கொள்ளலாம். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும்,ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்துகு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்யுங்கள்.
பஞ்சில் கிலென்சிஸ் மிக் அல்லது தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள்

பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் (Brand) நரிஸிங் க்ரீம் கிடைக்கிறது. உங்களுக்கு பொருந்தும் க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய்போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நரிஷிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக்கொள்ளுங்கள். கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்றுஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுகி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். மசாஜ் செய்து முடித்ததும் ஒரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். (சதை மேல் நோக்கி அழுத்துபடி தட்ட வேண்டும்.) பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளுங்கள். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பால் நரிஷிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும். எல்லாம் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு நொறுநொறுப்பான பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடஙகள் வரை கரகரப்பாக தேய்க்க வேண்டு. பின் மூக்கின் ஓரங்களில் இருக்கும் பிளாக் ஹெட்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்களை நீக்கும் முயற்சி வேண்டாம் வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும். அதற்கு அழகுக் கலை நிபுணரைத்தான் அணுக வேண்டும். மேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது. எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள். பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். சருமம் மினுமினுப்பதைக் கண்டு பூரித்துப் போவீர்கள்.

பருவைக் கிள்ளாதே!

வெயில் காலம் என்றால் எண்ணெய் பசைத்தோல் கொண்டவர்களுக்கு சோதனையான ஒரு காலகட்டம். அவர்கள் என்னென்ன விதத்தில் கவனம் எடுத்துக் கொண்டால் தோலை நன்றாக பராமரிக்க முடியும் என்பதை கூறுகிறேன்.ஏற்கெனவே முகம் எண்ணெய்ப் பசைத் தன்மை உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் இன்னும் அதிகம் எண்ணெய் வழியும். காரணம்வெயிலின் சூ டு அதிகரிக்க, அதிகரிக்க எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. சோப்புக்கு பதில் முகத்தை சுத்தப்படுத்த தயிர் உபயோகிக்கலாம் என்று (பனி சீஸனுக்காக) நாம் யோசித்திருந்தோம். ஆனால் இந்த வெயில் சீஸனில் முகத்துக்கு எந்த காரணம் கொண்டும் தயிர் உபயோகிக்கக் கூடாது. காரணம் தயிரில் எண்ணெய் தன்மை அதிகம். ஏற்கனவே எண்ணெய் வழியும் முகத்தில் தயிர் தடவினால் இன்னும் அல்லவா மோசமாகப் போய்விடும்?

தயிரின் ஆடையை எடுத்துவிட்டு தண்ணீர் ஊற்றி மோராக்கிக் கொண்டு அதை வைத்து முகத்தை சுத்தப்பத்தலாம். அல்லது பாலில் இரண்டு சொட்டு எலுமிச்சை ஜூஸ் விட்டும் முகத்தை சுத்தப்படுத்தலாம். (தயிரோடு ஒப்பிட்டால் பாலில் எண்ணெய்ப் பிசு பிசுப்புத் தன்மை கம்மி).

நேரம் கிடைக்கும்போது முகத்துகு கீழ்கண்ட ஃபேஸ்பேக் போடுவதும் முகத்தின் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் குறைக்க உதவும். வெள்ளரிக்காயை கழுவிவிட்டு பொடிப்பொடியாக நன்றாக துருவிக் கொள்ளுங்கள். படுத்த நிலையில் அந்த துருவலை எடுத்து முகத்தில் புருவம் தவிர எல்லா இடங்களிலும் வருமாறு பரப்பி வைத்தபடி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே படுத்திருங்கள். அப்புறம் முகம் கழுவிக் கொள்ளலாம். முகம் குளிர்ச்சியாக இருக்க உடம்பும் குளிர்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். அதனால் வெளிலில் கிளம்பும்முன் ஒரு டம்ளர் மோரோ, எலுமிச்சை அல்லது தக்காளி ஜூஸோ குடித்துவிட்டுப் போங்கள். மேலே கூறிய ஃபேஸ்பேக்கில் வெள்ளரிக்குப் பதில் தர்பூசணியைகூட உபயோகிக்கலாம் அல்லது தக்காளியை வெட்டி அப்படியே முகத்தில் வைத்து நன்றாக மசாஜ் செய்துவிட்டு அது காய்ந்தபின் கழுவிக் கொள்ளலாம்.தக்காளியை முகத்தில் தேய்க்கும்போது ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். பருக்கள் இருந்தால் எந்தக் காரணம் கொண்டு முகத்தில் பருக்கள் இன்னும் நிறையத்தான் வரும். கல்லூரி படிக்கும் வயதில்தான் பருக்கள் அதிகமாக வருகின்றன. காரணம் அந்த வயதில் எண்ணெய் பசைசுரப்பிகள் முழு வீச்சில் சுரப்பதுதான். தவிர அந்த வயதில் ஏற்டும் ஹார்மோன் பிரச்சினைகளும் இதற்குக் காரணம். எப்படி பருக்களைச் சரிப்படுத்துவது? இரவு சாப்பிட்டபின் புதினாவை அரைத்து பருக்கள் இருக்கும் இடங்களின் மேல் மட்டும் தடவிக்கொள்ளுங்கள். இரவு அப்படியே தூங்கிவிடுங்கள். இப்படி செய்வதால் பரு அமுங்கி அப்படியே காய்ந்து போய்விடும்(காய்ந்து போய்விட்டதா என்று பருவைக் கிள்ளியெல்லாம் பார்ததுவிடாதீர்கள். எரித்து சாம்பலாக்கிய பின்னால்கூட சாம்பலிந்து ஃபீனிக்ஸ் பறவை திரும்ப உயிர்பெற்று வருமாம். அது மாதிரி பருக்களும் திரும்ப வந்து தொலைக்கும்) முகப்பருவை நீக்க மஞ்சள், வேப்பிலை அரைத்து குளிப்பதற்கு அரைமணி முன்பு முகத்தில் பூசலாம். சந்தனம், தேன் இரண்டையும் கலந்து குளிப்பதற்கு முன் முகத்தில் பூசி ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம். இதனால் முகப்பருக்கள் நீங்கும்.முகப்பரு உள்ளவர்கள் தினமும் எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். முகப்பரு உள்ளவர்கள் இனிப்பு உண்பதை தவிர்க்க வேண்டும். தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். சந்தன தைலத்தை முகப்பருவின் மேல் தடவினால் முகப்பரு பழுத்து உடையும்.
முகப்பரு வராமலிருக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்:

முகத்தில் பாலாடைகளை பூசிக்கொண்டு அரை மணிநேரம் கழித்து முகத்தை சுத்தமாக கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் ஒரு மாதம் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும, புதுப்பொலிவுடனும் காணப்படும். முகப்பரு வருவதும் தடுக்கப்படும்.

இளஞ்சூடாக உள்ள வெந்நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின் சுத்தமாக முகத்தை துணியைக் கொண்டு துடைக்க வேண்டும்.பிறகு ஆலிவ் எண்ணெயை முகத்தில் பூசிக் கொண்டு இரண்டொரு நிமிடம் நன்றாக ஊற வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் (ஐஸ் வாட்டராகஇருந்தாலும் பரவாயில்லை) முகத்தை கழுவி துடைத்து விடவும். இப்படி தொடர்ந்து செய்தால் முகப்பரு வருவது தடுக்கப்படும். கசகசாவை எலுமிச்சம் பழச்சாறுவிட்டு மை போல அரைத்து அடிக்கடி முகப்பருவின் மேல் தடவி வந்தால் பருக்கள் மறைந்து முகம் அழகு பெறும்.

ஸ்பைவேர் - ஆட்வேர் தடுப்பது எப்படி ?

கணினி பயன்படுத்துபவர்களை பயமுறுத்தும் விஷயங்கள் பட்டியலில், அதிகம் கவலைக்குள்ளாக்குவது ஸ்பைவேர், ஆட்வேர், மால்வேர் எனக் குறிப்பிடப் படும் தொகுப்புகளே. இவை இன்டர்நெட் வழியாக, கம்ப்யூட்டர் உள்ளே வருவது நிச்சயமாகிவிட்ட ஒரு உண்மையாகும். ஆனால், இவை உள்ளே உள்ளனவா என்று தெரியாமலேயே நாம் இவை குறித்து அச்சம் கொண்டிருப்பது தான், கூடுதல் கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. எந்த விஷயமானாலும், இன்டர்நெட் வழி தான் என்று ஆகிவிட்ட நிலையில், இது போன்ற ஆபத்துக் களிலிருந்து கூடுமானவரை பாதுகாப்பதற்குரிய வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அவை குறித்து இங்கு சுருக்கமாகக் காணலாம்.
1. ஸ்பைவேர் தடுப்பு: நீங்கள் ஏற்கனவே இதனைச் செய்திராவிட்டால், உடனே மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு இதுவாகும். உடனடியாக ஸ்பைவேர் தடுப்பு புரோகிராம் (spyware blocker) ஒன்றை நிறுவுங்கள். இங்கு குறிப்பிடப்படுவது ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அல்ல. ஸ்பைவேர் என்பது வைரஸ் அல்ல. பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், ஸ்பைவேர் புரோகிராம்களைத் தடுப்பதில்லை. எனவே தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தாலும், ஸ்பைவேர்களைத் தடுக்கும் புரோகிராம்களையும் நாம் இன்ஸ்டால் செய்திட வேண்டும். செக்யூரிட்டி சூட் (Security Suite) என்று சொல்லபடுகிற தொகுப்புகளில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர் புரோகிராம் மற்றும் பயர்வால் சேர்ந்தே கிடைக்கின்றன. ஆனால் இந்தவகை தொகுப்பு புரோகிராமினால், உங்கள் கம்ப்யூட்டர் இயக்கம் மெதுவாகிறது என்றால், தனித்தனியே ஒவ்வொரு தடுப்பிற்கும்,தனி புரோகிராமினை நிறுவலாம்.


2. பயர்வால்: மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே பயர்வால் தடுப்பு ஒன்றினைத் தருவது ஒரு நல்ல முயற்சியாகும். ஆனால், கூடுதல் வசதிகள் கொண்ட, சிறப்பாகச் செயல்படும் பயர் வால்கள் சில உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஒரு பயர்வால், உங்கள் கம்ப்யூட்டருக்குள் உங்கள் அனுமதி இன்றி, அல்லது உங்களுக்குத் தெரியாமலேயே நுழையும் எதனையும், அது ஸ்பைவேர், வைரஸ், மால்வேர், ஹேக்கர் போன்ற எதுவாக இருந்தாலும், அவற்றைத் தடுக்கிறது. பயர்வால் செட்டிங்ஸ் சில வேளைகளில் குழப்புவது போல் இருக்கும். எனவே தெளிவடைந்த பின்னரே, அதனை அமைத்துப் பயன்படுத்த வேண்டும். பயர்வால் அமைத்த பின்னர், அவை சரியாக உள்ளனவா என்று அறிய நீங்கள் Hackerwatch.org/ Malwarehelp.org என்ற இரண்டு தளங்களின் உதவியை நாடலாம்.


3. அப்டேட், அப்டேட்: உங்களுடைய செக்யூரிட்டி சாப்ட்வேர் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டால் தான், திடீர் திடீரென உருவாக்கப்பட்டு வரும் கெடுதல் அளிக்கும் புரோகிராம்களைத் தடுக்கலாம். விண்டோஸ் அப்டேட்ஸ், செக்யூரிட்டி அப்டேட்ஸ், பேட்ச்சஸ், டெபனிஷன்ஸ், உங்களுடைய பயர்வால், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர் புரோகிராம் ஆகிய அனைத்தும் அப்டேட் செய்யப்பட்டதாகவே இருக்க வேண்டும்.


4. பாதுகாப்பான இன்டர்நெட் பயணம்: இன்டர்நெட் பிரவுஸ் செய்வது, இப்போதெல்லாம் ஊர்ந்து, பறந்து, பாய்ந்து செல்லும் ஜீவராசிகள் வாழும் காட்டின் நடுவே நடந்து செல்வது போல ஆகிவிட்டது. எந்த நேரத்தில் எந்த வைரஸ் அல்லது மால்வேர் வந்து நம்மைத் தாக்கும் என்று நமக்குத் தெரியாது. சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், நாம் இவற்றைத் தடுக்கலாம். இணைய தளங்களில் எந்த லிங்க்கிலும் கிளிக் செய்திட வேண்டாம். 25 நாளில் 25 கிலோ எடை குறைய, இங்கே கிளிக் செய்திடுக என்று உங்களைத் தூண்டும் வாசகம் இருக்கும். அதிலிருந்து ஓடிவிடுங்கள். பிரபலமான சினிமா நடிகை குறித்த சுவராஸ்யமான தகவல் குறித்து அறிவிப்பு இருக்கும். அலட்சியப்படுத்துங்கள். பாப் அப் விண்டோ எழுந்து வருகிறதா? அதில் இது போன்ற செய்தி உள்ளது. உடனே அதில் உள்ள எக்ஸ் அடையாளத்தில் கிளிக் செய்து, அதனை மூட முயற்சிக்காதீர்கள். அதில் கிளிக் செய்தால் கூட, அது ஆக்டோபஸ் போல உங்களை இழுத்துக் கொண்டு நாசப்படுத்தும். அதுதானே அப்போதைக்கு ஆக்டிவ் விண்டோ. எனவே ஆல்ட்+ எப்4 அழுத்துங்கள். அது உடனே மூடப்படும்.
இதே போலத்தான் இமெயில் செய்திகள் கொண்டு வரும் லிங்க்குகளும். எதனையும் தொட வேண்டாம். அதில் உங்கள் கர்சரைக் கொண்டு சென்றாலே, அது உங்களை இழுத்துச் செல்ல இருக்கும் தளத்தின் முகவரி காட்டப்படும். அதனைப் பார்த்தே, அந்த தளம் உண்மையானதா என்று தெரியவரும்.


5. புரோகிராம் இன்ஸ்டலேஷன்: பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் குறித்துத் தெரிந்து கொண்டு, அவற்றை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்கிறோம். அவற்றை இன்ஸ்டால் செய்திடும் முன், அதில் தரப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் படித்துவிடுங்கள். சில சிறிய அளவான எழுத்துக்களில், உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருடுவதற்கான தகவல் இருக்கும்.


6. யூசர் ஐ.டி. திருட்டு: நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடுவது, இப்போது மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே யூசர் நேம் கூடுமானவரை குழப்பமானதாகவே இருக்கட்டும். அதே போல பாஸ்வேர்டுகளும், யாரும் எளிதில் கணிக்க முடியாததாக இருக்கட்டும்.
நல்ல ஸ்பைவேர் தடுக்கும் புரோகிராம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், பயர்வால், சரியான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட், அடிக்கடி அப்டேட்டிங் ஆகிய வற்றைக் கடைப்பிடித்தால், நம் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு பாதுகாப்பானது என்ற நல்ல நம்பிக்கையுடன் செயல்படலாம்.

பணத்தை சேமிப்பது எப்படி?

பணம் பத்தும் செய்யும். பணத்தை சேமிக்க விரும்பினால் நீங்களும் சில காரியங்கள் செய்ய வேண்டும்.

இளமையில் ஓடியாடி வேலை பார்க்கிறார்கள். வயதாகி ஓய்ந்து போகும் வேளையில் வயிற்றுபாட்டைத் தள்ளக்கூட வழியில்லாமல் போகிறார்கள் பலர். காரணம் எங்கேயோ செல்வத்தை கோட்டை விட்டிருக்கிறோம் என்பதுதான். குருவி சேர்பதுபோல கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தாலும், அவ்வப்போது வாழ்வில் வரும் காலச் சுனாமி அத்தனையையும் கரைத்து காலியாக்கி விட்டுச் செல்கிறது. எஞ்சியதில் கூழோ, கஞ்சியோ பார்த்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. இந்த வேதனையை தவிர்க்க இன்றே சேமிக்க ஆரம்பிக்கலாமே...! சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம் தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.

முதலில் நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கவனித்து தவிர்க்க வேண்டியதை தவிருங்கள். பிறகு தானாக செல்வம் பெருகத் தொடங்கும். செல்போன் அழைப்புகளை தேவையான நேரத்தில் மட்டும் பேசுங்கள். கண்டிப்பாக குறிபிட்ட தொகை மிஞ்சும். ஒரு நாளில் பலமுறை காபி குடிப்பவராக இருந்தால் பிளாஸ்க்கில் எடுத்துச் சென்று பயன்படுத்துங்கள். சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை சேமிப்பது நல்ல வழி. வாரம் தோறும் அல்லது மாதம் தோறும் சிறு தொகையை சேமிப்புக் கணக்கில் போடலாம். அது `சிறுதுளி பெருவெள்ளம்' எனும் பொன்மொழிக்கேற்ப பெருகி வளரும்.

சேமிப்பு பழக்கத்தை கடைபிடிப்பதன் முலம் உங்களின் நோக்கம் எளிமையாக நிறைவேறும். அது மேலும் சேமிக்கும் ஆவலைத் தூண்டும். முதலில் சேமிக்க பழகுவது கொஞ்சம் கடினமான காரியம். எனவே காலத்தை ஒத்திபோடாமல் அந்த சிந்தனை தோன்றிய இக்கணமே சேமிப்பை ஆரம்பிங்கள். வீட்டுச் செலவுக் கணக்கை எழுதுங்கள். பணத்தைச் சேமிக்க இதைவிட சிறந்த வழியில்லை. பணம் வரும் வழியும், போகும் வழியும் தெரிந்தால்தான் `பணம் எப்படித்தான் காலியாகுதோ' என்று புலம்பும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.

பணம் வீணாகும் வழியை செலவுக் கணக்கு முலம் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். சேமிக்க முடியாமல் போனதற்கான காரணத்தையும் கண்டறிந்து விடலாம். பின்னாளில் நீங்கள் மனநிம்மதிடன் வாழ, இப்போதே நீங்கள் வீட்டுச் செலவை எழுத வேண்டும். நேற்று வரை இந்த பழக்கம் இல்லாதிருந்த இன்றிலிருந்தாவது வரவு செலவை குறிக்க பழகுங்கள். வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே. அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, உங்கள் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கபடும்.

வாழ்வெனும் போர்க்களத்தில் திடீர் பணத் தேவைகள் உங்களை சூழ்நிலைக் கைதியாக்கலாம். அப்போது மற்றவர்களை எதிர்பார்த்து மதில்மேல் பூனையாக தவிக்கும் நிலைமையை இது தடுக்கும். மொத்தமாக வாங்கிய சமையல் பொருட்களையும் தேவைக்கு ஏற்ப பக்குவமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்கக் கூடாது. ஏமாறாமல் இருப்பதுவும் சேமிப்பு வழிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் சலுகை அறிவிப்புகள் வருவதை பார்க்கலாம். ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம், 50 சதவீதம் தள்ளுபடி என்று கவர்ச்சி அறிவிப்புகள் வருகின்றன. இவையெல்லாம் வியாபார தந்திரம் தான்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் உங்கள் சிந்தனை மழுங்கடிக்கபடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.ஆழமாக சிந்தித்து பார்த்தால் உண்மை விலை, தள்ளுபடி விலையை விடக் குறைவாக இருக்கும். பழமையில் பெருமை காண விரும்பினால் புதுமையாக பணம் சேமிக்கலாம். ஆமாம், ஏற்கனவே பயன்படுத்தபட்ட பொருட்களை செகட் ஹேண்டாக வாங்குவது பணத்தை மிச்சம் பிடிக்கும் சிறந்த வழியாகும்.

வாங்கிய ஓராண்டு காலத்திற்குள்ளாக புதிய காரின் விலை முன்றில் ஒரு பங்கு குறைந்து விடுகிறது. தரமும் தாழ்ந்து போவதில்லை. அப்படி இருக்கும்போது இரண்டாம் தரமாக வாங்கி பயன்படுத்துவதில் என்ன பிழையிருக்கிறது? போதிய அளவு சோதனை செய்து பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நமக்குத்தானே லாபம். எலக்ட்ரானிக் சாதனங்களையும், வீட்டு உபயோக பொருட்களையும் கூட இந்த இரண்டாம் பட்டியலில் சேர்க்கலாம். மேற்படிப்பை தொடர்கிறவர்கள் தங்கள் பொருளாதார நிலையை உத்தேசித்து புதிய புத்தகங்களை விலைக்கு வாங்கி படிப்பதை விட, பொதுநுலகத்தை பயன்படுத்தினால் செலவு கட்டுபடும். ஆனால் அத்தியாவசியம் என்னும் புத்தகங்களை மட்டும் விலை கொடுத்து சொந்தமாக வாங்கி விடுவது நல்லது.

டீ, காபி செலவு, நொறுக்குத் தீனி, ரெஸ்டாரண்ட் உணவுகள் போன்றவற்றின் செலவுக் கணக்கை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு முறை அவற்றை சொந்த தயாரிப்பில் உபயோகித்தால் எவ்வளவாகிறது என்பதையும் கணக்கு போட்டு பாருங்கள். இரண்டு நிலைக்கும் செலவில் எவ்வளவு வித்தியாசம் என்பது உங்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். அதோடு வீட்டு உபயோகம் என்பது நுறு சதவீத ஆரோக்கியமான விஷயமும் கூட. வீணாக்காமல் பயன்படுத்துவதும் ஒரு சேமிப்புதான். நாம் வாழ்க்கை முழுவதும் நுகர்வோராகவே இருக்கிறோம். மற்றவைகளை அனுபவிப்பதன் முலமே நமது வாழ்க்கை நகர்கிறது. வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். சிலவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும். இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த முன்றையும் சரியாகச் செய்வதுதான் உண்மையான சேமிப்பாகும்.

மின்விளக்கு, விசிறி, ஏ.சி. போன்ற சாதனங்களை தேவைக்கேற்ப குறைவாக பயன்படுத்துவதன் முலம் நிறைய சேமிக்கலாம். மற்றவர்களுக்காக பகட்டாக காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருட்களை வாங்காமல் இருந்தால், அதுவும் சேமிப்புதான்.

வேர்ட் பேக் அப் வழிகள்

கம்ப்யூட்டரில் நாம் அதிகம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நாம் உருவாக்கிய ஆவணங்கள் மீண்டும் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. நாம் என்ன திருத்தங்களை மேற்கொண்டோம் என்பது நினைவில் இருப்பதில்லை. அப்போதுதான், அடடா! இதற்கான இறுதி நிமிட பேக் அப் பைல் இருந்தால் நல்லது அல்லவா! என்று எண்ணுகிறோம். வேர்ட் இதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. நாம் தான் அதனை செட் செய்திட வேண்டும். அவை குறித்து இங்கு காணலாம்.
வேர்ட் தொகுப்பு இரண்டு வகையான பேக் அப் பைல் காப்பிகளை உருவாக்க வழி தருகிறது. முதலாவது பேக் அப், நீங்கள் குறிப்பிட்ட பைலில் ஏதேனும் மாற்றங்களை உருவாக்கும் முன் அமைக்கப்படுவது. இன்னொன்று குறிப்பிட்ட காலத்தில் ஏற்படுத்தப்படும் பேக் அப் காப்பி.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007 தொகுப்பு வைத்திருப்பவர்கள் ஆபீஸ் பட்டன் அழுத்திப் பின்னர், வேர்ட் ஆப்ஷன்ஸ் செல்லவும். வேர்ட் 2010, ரிப்பனில் பைல் டேப் காட்டும். அதில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும்.)
2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் உள்ள Advanced என்பதனைக் கிளிக் செய்திடவும்.
3. கீழாக உள்ள Save பிரிவிற்குச் செல்லவும்.இதில் Always Create Backup Copy என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
4. நீங்கள் விருப்பப்பட்டால் Allow Background Saves என்ற பெட்டியிலும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தலாம்.
5. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இங்கு ஏற்படும் பேக் அப் காப்பி, நாம் திறக்கும் டாகுமெண்ட் பைலை எடிட் செய்வதற்கு முன் ஏற்படுத்தப்படும் ஒரு காப்பி. இந்த பேக் அப் பைலின் துணைப் பெயர் மட்டும் WBK என மாறும். அதாவது வேர்ட் இங்கே அந்த பைலுக்கு வேறு பெயரினைச் சூட்டிப் பத்திரமாக வைத்துக் கொள்கிறது. இந்த பைலை வேறு ஒரு இடத்தில் சேவ் செய்து வைத்துக் கொள்ளுமாறு செட் செய்திட முடியாது. டாகுமெண்ட் பைலுடன் இந்த பேக் அப் பைலும் ஒரே டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும். நீங்கள் டாகுமெண்ட்டை எடிட் செய்து சேவ் செய்திடுகையில், இறுதியாக மேற்கொள்ளப் பட்ட திருத்தத்துடன் பைல் சேவ் செய்யப்படும். அதற்கு முந்தைய நிலையில் இருந்த பைல், பேக் அப்பாக வைத்துக் கொள்ளப்படும். எனவே எத்தனை முறை நீங்கள் ஒரு பைலை சேவ் செய்தாலும், இறுதி வடிவத்தில் ஒரு ஒரிஜினல் பைலும், இறுதி திருத்தத்திற்கு முற்பட்ட பேக் அப் பைல் என இரண்டு பைல்கள் மட்டுமே அந்த டாகுமெண்ட்டிற்கு இருக்கும்.
இன்னொரு வகையான ஆட்டோமேடிக் பேக் அப் பைலை நாம் உருவாக்கலாம். நாமாகவே, இவ்வளவு நிமிடங்களுக்குள் டாகுமெண்ட் டினை சேவ் செய்திடும்படி அமைக்கலாம். நாமாக, பைலை அவ்வப்போது சேவ் செய்திட மறந்துவிட்டால், பைல் தானாகவே சேவ் செய்திடப்படும். இது சேவ் செய்யப்படுவதனை நாம் உணர மாட்டோம். வேர்ட் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகி முடக்கப்படுகையில், தானாக சேவ் செய்யப்பட்ட பைல் நமக்குக் கிடைக்கும். அடுத்த முறை வேர்ட் தொகுப்பினை நாம் திறக்கையில், "Recovered" என்ற தலைப்பில் இறுதியாக சேவ் செய்யப்பட்ட பைல்கள் நமக்குக் கிடைக்கும். இந்த ஆட்டோ ரெகவர் (AutoRecover) பேக் அப் வழியை நாமாக செட் செய்துவிடலாம்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007 தொகுப்பு வைத்திருப்பவர்கள் ஆபீஸ் பட்டன் அழுத்திப் பின்னர், வேர்ட் ஆப்ஷன்ஸ் செல்லவும். வேர்ட் 2010, ரிப்பனில் பைல் டேப் காட்டும். அதில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும்.)
2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் உள்ள Save என்பதனைக் கிளிக் செய்திடவும்.
3. Save AutoRecover Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. வேர்ட் சேவ் செய்வதற்கான நீங்கள் விரும்பும் கால இடைவெளியை இங்கு அமைக்கவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை இங்கு அமைக்கலாம்.
5. நீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்து பவராக இருந்தால், Keep the Last Auto Recovered File If I Close Without Saving என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
6. மீண்டும், நீங்கள் விருப்பப்பட்டால், இந்த ஆட்டோ ரெகவர் பைல்களுக்கு, ஏற்கனவே வேர்ட் மாறாத நிலையில் வைத்திருக்கும், டைரக்டரி இடத்தை மாற்றி, நீங்கள் விரும்பும் டைரக்டரியை அமைக்கலாம்.
7. மாற்றங்களை ஏற்படுத்திய பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
உங்களுக்கு ஒரு எண்ணம் வரலாம். ஆவணங்களை நாம் உருவாக்குகையில், நாமாக அவ்வப்போது சேவ் செய்து விட்டால், இந்தப் பிரச்னை வராதே என்று நீங்கள் எண்ணலாம். இந்த எண்ணம் சரிதான். ஆனால் எத்தனை பேர் அடிக்கடி சேவ் செய்கிறோம். ஆவணத்தை உருவாக்கும் பணியில், நம் சிந்தனைப் போக்கிற்குத்தான் முதல் இடம் தருவோம். சேவ் செய்திட மறந்து போவோம். அல்லது நீண்ட கால இடைவெளியில், 15 நிமிடத்திற்கு ஒரு முறை, சேவ் செய்திடுவோம். மேலும் கம்ப்யூட்டர் இந்த வேலைகளை நமக்கென செய்திட முடியும் என்கிற போது, அதனை வேலை வாங்குவது தானே நல்லது. பேக் அப் பைல் இருந்தால், வேர்ட் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, பேக் அப் பைல்களைக் கொண்டு சரி செய்துவிடலாம்.

கண்ணீர்க் கால்வாய்...!

சிலர் அழுதால்... கண்ணீர் ஆறாக ஓடும். அவ்வளவு கண்ணீர் உடலுக்குள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா...

கண்ணீர் தினமும் உற்பத்தியாகிறது. ஆனால் தினமும் வெளியேறுவதில்லை. அது கண்களை சுத்தபடுத்துகிறது. எஞ்சிய கண்ணீர் எங்கே செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? முக்குதான் கண்ணீர் செல்லும் கால்வாயாகும். சாதாரண நேரங்களில் குறைந்த அளவில் கண்ணீர் முக்கின் வழியாக வழிந்து ஆவியாகி விடுவதால் தெரிவதில்லை. துக்க வீட்டில் பெண்கள் அழும்போது அடிக்கடி முக்கை பிடித்துக் கொள்வதை பார்த்திருக்கலாம். அப்போது முக்கின் வழியாக வருவது கண்ணீரின் ஒரு பகுதிதான். கண்களுக்கு முக்குடன் இணைப்பு துவாரங்கள் இருக்கின்றன. இது கண்ணீரோடை போல செயல்படுகிறது.

இறைவ‌னிட‌ம் சில கேள்விக‌ள் ........!

இறைவாக‌

உண்மையாக‌
உன் பெயரென்ன‌ ...?
வ‌டிவென்ன‌ ....?
உன் விலாச‌ந்தான்
என்ன‌....?

நீ
ஒன்றென்கிறார்க‌ள் !
ப‌ல‌ என்கிறார்க‌ள் !
நீ
ஒன்றா..?
அத‌ற்கும் மேலா ?

இறைவா ....!
சுட்ட‌ம‌ண் பாத்திர‌மான‌
ம‌னித‌ உட‌ம்பில்
ஒன்ப‌து ஓட்டைக‌ள் !
இந்த‌ ஓட்டைப் பாத்திர‌த்திலும்
உயிரூற்றி வைத்திருக்கிறாயே..!
இதெப்ப‌டி ....?

நீ
க‌ட‌வுள் ஆனால்
எதைக் க‌ட‌ந்திருக்கிறாய் ?
எதில் க‌ல‌ந்திருக்கிறாய் ?

நீ
உருவ‌மா ...?
அருவ‌மா ...?
உண்மையா ? பொய்யா ?

சில‌ர்
அன்பே சிவ‌ம் என்கிறார்க‌ள் !
அறிவே க‌ட‌வுள் என்கிறார்க‌ள் !

இன்னும் சில‌ர்
செய்யும் தொழிலே
தெய்வ‌ம் என்கிறார்க‌ள் !

நீ
அன்பா ? அறிவா ?
வேறு எதுவாக‌
நீயிருக்கிறாய் ..?

உன்னை
ஞானியும் தேடுகிறான் !
விஞ்ஞானியும் தேடுகிறான் !
எத்த‌னையோ யுக‌ங்க‌ளாகியும்
உன்னைக்
காண‌முடிய‌வில்லையே ..!

எங்க‌ள் ம‌க்க‌ள் க‌விஞ‌ன்
ப‌ட்டுக்கோட்டை
க‌ல்யாண‌ சுந்த‌ர‌ம்
க‌ட‌வுள் இருப்ப‌தும்
இல்லையென்ப‌தும்
க‌தைக்குத‌வாத‌ வெறும்பேச்சென‌
விளாசிவிட்டுப் போயிருக்கிறான் !

நாங்க‌ள் .... எதை ந‌ம்ப‌ ...?

நீ இருப்ப‌தையா ...?

இல்லையென்ப‌தையா ...?

விஞ்ஞான‌த்தின்
வெகும‌தியாய்
வித‌வித‌மாக‌
எதையெதையோ
க‌ண்டுபிடித்துள்ளோம் !

ஆனால்
உன்னைப்ப‌ற்றிய‌
ம‌ர்ம‌த்தை ம‌ட்டும்
எங்க‌ளால் ...
க‌ண்டுபிடிக்க‌ முடிய‌வில்லை !

இறைவா !
எங்க‌ள் இய‌லாமையில்
உட்கார்ந்து
நீ சிரிக்கிறாய் ...?

உன் ப‌டைப்புக‌ளில்
பேசும், சிரிக்கும் பெருமை
ம‌னித‌ர்க‌ளுக்குத் தானே...!
எங்க‌ள் ம‌ர‌ண‌த்தையும்
குறித்து வைத்திருப்ப‌து
நீதானே ...!

இறைவா ....! உன்
க‌ண்ணாமூச்சி ஆட்ட‌த்திற்கு
அள‌வேயில்லை !

புல்லும்
ப‌னிக்குட‌ம் சும‌க்க‌ வைப்பாய் !

பூவிலும்
வாச‌ம் தேக்கி வைப்பாய் !

உப்புக் க‌ட‌லிலும்
மின் வ‌ள‌ர்த்துக் காட்டுவாய் !

இன்னொரு அதிச‌ய‌ம்
தெரியுமா ..?

உன்னை இல்லையென்பார்க்கும்
சுவாச‌ம் த‌ருகிறாய் ...!

இந்த‌வுன் ஈர‌ம்
எந்த‌ எடைக்குள்ளும்
அட‌ங்காது !

இறைவா...!
காற்றாய், ம‌ழையாய்
க‌ட‌லாய், ந‌தியாய்
ம‌னித‌ர்க‌ளுக்கு
இய‌ற்கையை தோழ‌மையாக்கிய‌
நீ
எங்க‌ளில் யாரிட‌மாவ‌து
எவ‌ரிட‌மாவ‌து
உன் இருப்பைச் சொல்லாமே ....!

சொல்லி உன்
மௌன‌த்தை க‌லைக்கலாமே ...!
எங்க‌ள் ம‌ய‌க்க‌த்தை
தீர்க்க‌லாமே ....!

உன்னை
ம‌த‌வாதிக‌ள் கூறுபோடுகிறார்க‌ள்
உன்னைக் க‌ல்லாக‌வும்
ம‌ண்ணாக‌வும் பார்க்கிறார்க‌ள் !

ஆனால் ... நீ
நெல்லுக்குள்ளும்
அரிசி வைத்தும் நிற்கிறாய்

கோழிக்குள் முட்டைவைத்தும்
முட்டைக்குள்
கோழி வைத்தும் புன்னைக்கிறாய்

நீ எங்கிருந்தாலும் ச‌ரி !
எங்க‌ள் திசைக‌ளுக்குத்
தென்ற‌லைக் கொண்டு வா !

இதுபோதும்

அதுவ‌ரை இப்போது

இடைவேளை

( பொற்கிழிக் க‌விஞ‌ர் மு. ச‌ண்முக‌ம், இளையான்குடி )

பழைய சாதத்தின் மகிமை

திரைப்படங்களில் கிராமத்து சீன். கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில்கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.

ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப்பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம் !
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில,

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர,ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி...!)

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து,சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!