கலகம் இல்லா உலகம் காண்போம்;
"ஒன்றே குலம்-ஒருவனே தேவன்"
நன்றாய் மனம், மொழி,மெய்யால் நடத்தி காட்டுவோம்;
தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? படைத்தவன் ஒருவனுக்கே பயந்து விட்டால்....
படைப்பினம் யாவும் வசமாகும் நம்மிடம்!!!
சமத்துவம் என்னும் மரத்தினை
வேரறுக்கும் சுயநலக் கோடாரியைத் தொட வேண்டா.
இவையெல்லாம் இன்றே நடந்து விட்டால்.....
ஆதாம் ஏவாள் ஆனந்தமாய் உலா வந்த
சுவனத்து சுகம்போல்
அமைதி பூங்காவாய்
அகிலமே மாறிவிடும்...
