Welcome
ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய சபாரி பிரவுசரின் பதிப்பு 5 னை அண்மையில் வெளியிட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான பதிப்புகள் வெளியாகியுள்ளன. எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி இது வந்துள்ளது. இதில் தரப்பட்டுள்ள புதிய சிறப்புகளைப் பார்க்கலாம்.
1. சபாரி ரீடர்: இந்த புதிய பதிப்பில் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இணைய தளங்கள் தரும் தேவையற்ற பாப் அப்கள்விலக்கப்படுகின்றன. இணைய தளங்களைப் பார்வையிடுகையில் ரீடர் பட்டன் என்பதனை அழுத்தி விட்டால், மேலே சொன்னபடி நாம் எந்த இடையூறும் இன்றிப் பார்க்கலாம்.
2. எச்.டி.எம்.எல். சப்போர்ட்: எச்.டி.எம்.எல்.5 ஜியோ லொகேஷன் உட்பட பல எச்.டி.எம்.எல். 5 சார்ந்த தொழில் நுட்பங்களை, இந்த பிரவுசர் சப்போர்ட் செய்கிறது.
3. அதிக வேகம்: இந்த பிரவுசரில் நிட்ரோ இஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதுவரை உள்ள பிரவுசிங் வேகத்தைக் காட்டிலும் இது கூடுதல் வேகம் கொண்டதாக உள்ளது. ஓர் இணைய தளத்தில் உள்ள லிங்க்குகளுக்கான, இணைய முகவரிகளைக் கண்டு தளங்களை மிக வேகமாகத் தருகிறது.
4. பிங் சர்ச்: ஐ போனில் உள்ளதைப் போல, சபாரியில் பிங் சர்ச் பார் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள யாஹூ மற்றும் கூகுள் உடன் இவை தரப்பட்டுள்ளன.
சபாரி பிரவுசர் இயக்க, விண்டோஸ் எக்ஸ்பி (எஸ்.பி.2) குறைந்த பட்சம் தேவை. மெமரி 250 எம்பியாவது இருக்க வேண்டும். ப்ராசசர் குறைந்தது 500 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்க வேண்டும். மேக் சிஸ்டத்தில் இயங்க Mac OS X Leopard 10.5.8 அல்லது Mac OS X Snow Leopard® 10.6.2 தேவை.
ஆப்பிள் நிறுவனம் இந்த பிரவுசர் தான் அதிக வேகத்தில் இயங்கும் முதன்மை பிரவுசர் என்று அறிவித்துள்ளது. (பார்க்க: http://www.apple.com/safari/download//) இந்த பிரவுசரை மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி, அதன் மூலம் இந்த தகவலைத் தந்துள்ளது ஆப்பிள் நிறுவனம். விண்டோஸ் இயக்கத்தில் இதனை இயக்கி, கிடைத்த வேக முடிவுகளை ஆப்பிள் தந்திருந்தால், இதனை ஏற்றுக் கொள்ளலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமையல் கலைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய தகவல்கள் எல்லாம் மாறி மருத்துவப் புத்தகத்துக்கு வந்துவிட்டதா என நினைக்காதீர்கள். எண்ணெய் பற்றி இங்கு பேசுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
நாம் பயன்படுத்துகிற எண்ணெய்க்கும் இதய நலனுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. எண்ணெய் பற்றி சில விஷயங்களைச் சொன்னால்தான் உங்களால் அந்தத் தொடர்பு பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
எண்ணெய்யைச் சமையலில் பயன்படுத்துவதற்கு அடிப்படைக் காரணம் என்ன?
நாம் சாப்பிடும் உணவுக்கு அது சுவையையும், நறுமணத்தையும் கூட்டுகிறது.
சமையல எண்ணெய்களை ஆற்றலின் பெட்டகம் என்று சொல்லலாம். மிகவும் குறைந்த அளவில் அதிக வெப்ப ஆற்றலைத் தரக்கூடியது எண்ணெய்.
கொழுப்பில் கரையும் தன்மையுள்ள உயிர்ச்சத்துகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகச் செயல்படுகிறது.
உணவுக் குழல், இரைப்பையில் உள்ள மென் திசுக்களைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கத் துணை புரிகிறது.
மேலே சொன்னவை போன்ற பல காரணங்களுக்காகத்தான் எண்ணெய்யை நாம் உபயோகிக்கிறோம்.
நம்மில் பலர் எண்ணெய்யும், கொழுப்பும் வேறு வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் எண்ணெய் என்பது திட நிலையில் உள்ள கொழுப்பு. கொழுப்பு என்பது திட நிலையில் உள்ள எண்ணெய் (A fat is a solid oil and an oil is a liquid fat). கொழுப்பும், எண்ணெய்யும் புறத்தோற்றத்தில்தான் வித்தியாசப்படுகின்றனவே தவிர, வேதியியல் மூலக்கூறு அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.
பொதுவாக ஒரு மனிதனுக்குத் தினமும் தேவைப்படும் சக்தியானது 1800 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். இந்த மொத்தக் கலோரிகள் தேவையில் சுமார் 4 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சமையல் எண்ணெய்யைப் பாதுகாப்பாக அன்றாடம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது 72 கலோரிகள் அளவு வெப்பத்தைத் தரக்கூடிய சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். கிராம் அளவில் கணக்கிட்டால் 9 கிராம் அளவு உள்ள எண்ணெய் போதும்.
சமையலுக்கு எந்த எண்ணெய்யைப் பயன்படுத்துகிறோம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அந்தந்த மாநிலத்தில் பயிர் செய்யும் எண்ணெய் வித்துகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டே இது தீர்மானிக்கப்படுகிறது.
வட மாநிலங்களில் கடுகு எண்ணெண்யையும், தென் மாநிலங்களில் தேங்காய் எண்ணெய், நெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களையும் காலம் காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். 17&ம் நூற்றாண்டுக்குப் பிறகு போர்ச்சுகீசியர்களின் உபயத்தால் கடலை எண்ணெய்யைப் பயன்படுத்தி வருகிறோம். அண்மையில் சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், தவிட்டு எண்ணெண், பருத்திகொட்டை எண்ணெய் போன்ற எண்ணெய்களையும் சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்.
பொதுவாக சமையல் எண்ணெய்யின் தன்மை, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஒரு எண்ணெய்யில் எந்த அளவு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளனவோ அதை அடிப்படையாகக் கொண்டு செறிவுற்ற, கொழுப்பு செறிவற்ற என எண்ணெய் வகைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். கொழுப்பு எந்தவிதமான சிதைவு மாற்றங்களும் இல்லாமல் கெட்டியான நிலையில் இருக்கும்.
வெண்ணெய், நெய், விலங்கினங்களின் கொழுப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை செறிவுற்ற கொழுப்புச் சில உதாரணங்கள். இவற்றில் தேங்காய் எண்ணெய்யும், பாமாயிலும் திரவ நிலையில் இருந்தாலும், வேதியியல் அடிப்படையில் செயல்படும் போது மற்றவகையான சேறிவுற்ற கொழுப்புபோலவே இருக்கும்.
இந்தக் கொழுப்பு வகையில் வருகிற சமையல் எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிக்க கவனம் தேவை. ஏனென்றால், இவ்வகையான சமையல் எண்ணெய்கள் ஓரளவு நன்மை தந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் இதயம் மற்றும் இதயம் தொடர்புடைய ரத்தக் குழாய்களுக்குப் பலவகையான சிக்கல்களை காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடும்.
இவ்வகையான சமையல் எண்ணெய்கள் தோலுக்குத்தான் சிறந்தவை. இதயத்துக்கு அல்ல என்று சொல்வதுண்டு (Oil is good for the skin but bad for the heart).
அளவுக்கு அதிகமாக தினசரி சமையலில் செறிவுற்ற எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இதயத்தில் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இதயத் தமனிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இவ்வகையா எண்ணெண் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ராலாக அளவுக்கு அதிகமாகச் சேர்ந்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாகப் படியும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள்விட்டத்தை முழுமையாக அடைப்பதால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபட்டு இதயத் தமனி நோய் ஏற்படுகிறது.
செறிவுய்ய கொழுப்பு (Unsaturated Fat)
கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்கள் முழுமையாக இல்லாமல், குறைவான அளவில் இருக்கும் கொழுப்பு வகை எண்ணெய்களை செறிவற்ற கொழுப்பு எண்ணெய் (Unasturated Fatty oils) என்று சொல்வார்கள்.
ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவற்றைப் பொதுவாக மியூஃபா எண்ணெய் என்றும் பியூஃபா எண்ணெய் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
பியூஃபா கொழுப்பு
கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையை பியூஃபா என்பது (PUFA) எண்ணெய் என்று சொல்வார்கள். (பியூஃபா என்பது Poly Saturated Fatty Acid என்பதன் சுருக்கம்).
பியூஃபா எண்ணெய்யை ஒமேகா&3 இன்றியமையா கொழுப்பு அமிலம் (Omega-6 Essential Fatty Acid) என்றும் பலவகைகளாகப் பிரித்துள்ளனர்.
பெயருக்கு ஏற்றார்போல் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. நம் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவது இவைதான்.
ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் உள்ள செல்களைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இவ்வகை அமிலங்கள், பிராஸ்டாகிளாண்டென் (Prosta Glanden) என்ற ஹார்மோன் சுரக்கத் துணைபுரிகிறது.
ரத்த உறைவைத் தடுக்கவும் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக் கொள்ளவும், நோய் தடுக்கும் ஆற்றல் அதிகமாகவும் இவை துணை புரிகின்றன. இதயத்தைப் பாதுகாப்பதிலும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
ஒமேகா கொழுப்பு அமிலங்களை, தேவையான அளவில் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உற்பத்தியை கல்லீரல் அதிகமாக்குகிறது. நன்மைதரும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள் பகுதியில் படியும் கொழுப்புத் துகள்களை அகற்றி, ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதால்தால் இவற்றை ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. எனவே ரத்தத்தில் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவதால் இதயத் தமனி அடைப்புகளில் இருந்து இதயத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.
ஒமேகா&3 கொழுப்பு எண்ணெய்கள், மீன் வகை உணவுகளிலும், சோயா, மொச்சையில் இருந்து தயாரிக்கப்படம் எண்ணெய்யிலும் மிக அதிகமாக உள்ளன. இதுபோல் ஒமேகா&6 கொழுப்பு எண்ணெய்கள், சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய் போன்றவற்றில் மிக அதிகமாக உள்ளது.
ஒரு தனி மனிதனின் அன்றாட எண்ணெய்த் தேவையில் பியூஃபா வகை கொழுப்பு, மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.
மியூஃபா கொழுப்பு
கொழுப்பு அமில சங்கிலித் தொடரில் ஒரு இணை ஹைட்ரஜன் அணுக்கள் குறைந்தால் அவ்வகையான சமையல் எண்ணெய்களை மியூஃபா எண்ணெய்கள் என்று சொல்வார்கள். MONO UNASATURATED FATTY ACID என்பதன் சுருக்கம்தான் மியூஃபா (mufa) என்பதாகும்.
மியூஃபா வகைக் கொழுப்பாலும் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.
நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களின் அமைப்பைச் சிதைவுறாமல் நிலை நிறுத்துகிறது.
நமது ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது.
நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கத் துணைபுரிகிறது.
மியூஃபா வகை கொழுப்பு கடுகு எண்ணெய்யிலும், கடலை எண்ணெய்யிலும் அதிக அளவில் உள்ளது.
எண்ணெய்யில் பல வகைகள் இருந்தாலும், இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் நம் நாட்டுச் சூழலுக்கு இந்த எண்ணெய் ஒத்துவருவதில்லை. மேலும் இதன் மனமானது நம்முடைய சுவைக்கு ஏற்றதாகவும் இல்லை. நம் நாட்டில் பெரும்பாலும் பலவகையான சாலடுகள் தயாரிக்கத்தான் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
உலக அளவில் ஆலிவ் எண்ணெய் சிறந்ததாகக் கருதப்பட்டாலும் நம் நாட்டு மக்களின் சுவைக்கு ஏற்ப, நமது அன்றாடத் தேவைக்கு ஏற்ப, நமது சமையல் முறைக்கு ஏற்ப நமது உடல் நலத்துக்கு ஏற்ப, குறிப்பாக இதயத்தின் நலம் காக்கும் தன்மையுள்ள சிறந்த சமையல் எண்ணெய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தொன்று தொட்டு நம் நாட்டில் பலவகையான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தாலும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் சில சிறப்புத் தன்மைகளும் சில தீய தன்மைகளும் இயற்கையாகவே ஒரு சேர இருக்கும். எனவே நாம் அன்றாட சமையலுக்கு ஒரு குறிப்பிட்ட சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவதால், முழுமையான பயனைப் பெற இயலாது.
எனவே நம் நாட்டில் பயன்படத்தும் சிறந்த சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அன்றாட சமையலுக்கு ஏற்றபடி கலவையாகப் பயன்படுத்துவதுதான் சரியான வழிமுறை.
செறியுற்ற கொழுப்பு என்றும் பியூஃபா கொழுப்பு என்றும் மியூஃபா கொழுப்பு என்றும் சமையல் எண்ணெய் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த மூன்று வகையான கொழுப்பு வகைகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கக்கூடிய எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை 1: 1 : 1 என்ற அளவில் தினசரி சமையலுக்கு அளவாகப் பயன்படுத்தினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
அதாவது நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றை இதயத்துக்கு ஏற்ற சிறந்த எண்ணெய்களாக நாம் தேர்வு செய்யலாம். இந்த எண்ணெய்களைத் தினசரி சமையலுக்கு மாறி மாறி தனித்தனியாக பயன்படுத்தலாம். அல்லது இந்த மூன்று எண்ணெய்களையும் 1: 1: 1: என்ற சம அளவில் கலந்து தினமும் சமையலுக்குப் பயன்படுத்துவதால் இதயத்தின் நலனைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு மூன்று வகையான எண்ணெய்களையும் கலந்த கலவை எண்ணெய் இனிமையான எண்ணெய் (ஷிஷ்மீமீt ஷீவீறீ) என்று அழைக்கப்படுகிறது.
சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது உடல் அமைப்பு அன்றாட உடல் உழைப்பு, நமது அன்றாட தேவை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய்யை அளவோடு பயன்படுத்தினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இந்தக் கணக்கைப் பற்றிக் கவலைப் படாமல், சுவைக்காக அளவுக்கு அதிகமாக எண்ணெய்களைப் பயன்படுத்துவது இதய நலனைப் பெரிதும் பாதிக்கக்கூடும். An oil is an oil is an oil.
வெப்பக்கோளமாக இருந்த பூமியில், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து பெய்த மழையால் தான் கடல் உருவானது என்று கூறப்படுகிறது. பாறைகளில் இருக்கும் உப்பு, மழைநீரால் கரைக்கபட்டு, ஆற்றுநீரால் அடித்து வரபட்டு கடலில் வந்து கலந்தது; அதன்பிறகு ஆவியாதல் முலம் கடலநீர் மேலே சென்றுவிட, உப்பு மட்டும் கடலிலேயே தங்கி விட்டது; இதுபோல் லட்சக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றதால் கடலில் அதிகளவு உப்பு சேர்ந்து விட்டது என்றே கருதபட்டது.
ஆற்று நீரில் அதிகளவு இருப்பதோ, கால்சியம் மற்றும் பை-கார்பனேட் உப்பு. கடலில் அதிகளவு இருபது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு. அதாவது அடிபடையில் ஆற்றுரில் உள்ள உப்பும், கடல்நீரில் உள்ள உப்பும் வெவ்வேறானவை. எனவே, கடலநீரில் காணப்படும் சோடியம் குளோரைடு உப்பு எங்கிருந்து வந்தது?
பூமி, முதலில் பாறைக்குழம்புக் கோளமாக எரிமலைகளுடன் இருந்தது. அதன்பின்னர் படிபடியாகக் குளிர்ந்ததால், பல்வேறு அடுக்கு பாறைகளுடன் புவி ஓடு உருவானது. பாறைக்குழம்பில் இருந்து பாறைத் தட்டுகள் உருவானபோது, நீர் தனியே பிரிந்து பூமிக்கு மேல் வந்ததால் தான் கடல் உருவானது.
ஆதிகாலத்தில் எரிமலைகளின் முலமாக பூமிக்குள் இருந்து சோடியம் குளோரைடு உப்புகள், வாயு வடிவில் பூமிக்கு மேல் வந்ததால் தான் கடலநீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உப்பு இருக்கிறது. இக்கருத்துக்கு ஆதாரமாக பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் வியாழன் கிரகத்தின் துணைக்கிரகமான `இயோ' விளங்குகிறது.
பூமியில் உள்ள எரிமலைகளை விட, இயோவின் மேற்பரப்பில் அதிக வெப்பமுள்ள எரிமலைகள் காணபடுகின்றன. இந்த எரிமலைகளில் இருந்து சோடியம் மற்றும் குளோரைடு உள்பட உப்பு முலபொருட்கள் வாயு வடிவில் பீய்ச்சியடித்துக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாகின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாரல் ஸ்ட்ரோபில் என்ற ஆராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்.
1974-ம் ஆண்டு பாபிரவுன் என்ற ஆராய்ச்சியாளர், இயோவின் வாயு மண்டலத்தில் மெலிதான சோடியம் மேகங்கள் இருப்பதை தொலைநோக்கி முலம் கண்டறிந்து அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பு பல ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியபட வைத்தது. காரணம், இயோவின் மேற்பரப்பில் எங்குமே உப்பு படிவங்கள் இல்லை. முதன்முறையாக எரிமலைகளின் முலம் உப்பு வாயுக்கள் பீய்ச்சியடித்துக் கொண்டிருபதை டாரல் கண்டுபிடித்ததன் முலம், பல்வேறு புதிர்களுக்கு விடை கிடைத்திருக்கிறது.
அதிக வெப்பநிலையில் பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் இயோவில், உப்பு எரிமலைகள் இருப்பதைபோல், நம் பூமியும் முதலில் பாறைக்குழம்புக் கோளமாக இருந்தபோது எரிமலைகளில் இருந்து சோடியம் குளோரைடு வெளிவந்தது தெளிவாகிறது. எனவேதான், கடல்நீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உள்ளது.
வகை வகையாய் வைரசுகள்
2. BACKDOOR SANTA: : இணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவீர்கள். அப்போது அதே புரோகிராம், உங்களை அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு, நீங்கள் செல்லும் இணைய தளங்கள், நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. Alexa மற்றும் Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs சென்று அதனை நீக்கவும்.
3. BHO: இதனை விரித்தால் Browser Helper Object என்று கிடைக்கும். நீங்கள் உங்கள் பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில பி.எச்.ஓ.க்கள் நமக்கு உதவுபவை. ஆனால் சில புரோகிராம்கள், நம்மை இணையத்தில் திசை திருப்பி, பாலியல் தளங்களில் கொண்டு சென்றுவிடும். உங்கள் கம்ப்யூட்டரை இது ஹைஜாக் செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். சில ட்ரோஜன் வைரஸ்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கும்.
4. BLENDED THREAT: கம்ப்யூட்டரில் அதிக பட்ச சேதம் விளைவிக்கும் தாக்குதல். வைரஸ் மற்றும் வோர்ம் இணைந்து செயல்படுவது போல இயங்கும். இது இமெயில் வழியே வைரஸை பரப்பும். Nடிட்ஞீச் என்பது இத்தகைய தாக்குதல் ஆகும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் புரோகிராமினை வேகமாகப் பரவிவிடும்.
5. BOTNETS: குழுவாக நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, ஹேக்கர்கள் கைப்பற்றியபின் இவ்வாறு அழைக் கின்றனர். ஹேக்கர்கள் இவற்றைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள். அந்த நெட்வொர்க் ஒரு ரோபோ ("robot network")போலச் செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.
6. BROWSER HIJACKER: இந்த புரோகிராம், நாம் பிரவுசர் மூலம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். மீண்டும் நாம் இயங்கிய தளங்களுக்கு வர முடியாது. அது மட்டுமின்றி, நம் பிரவுசர் செட்டிங்குகளையும் மாற்றிவிடும். நம் ஹோம் பக்கத்தை மாற்றிவிடும். நாமாக அதனை பழையபடி மாற்றினால், மீண்டும் அது செட் செய்திடும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்துவிடும்.
7. ADWARE COOKIES: : பொதுவாக குக்கிகள் என்பவை, சில இணைய தளங்களால், நம் கம்ப்யூட்டரில் பதியப்படும் சிறிய பைல்கள். இவை உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை அந்த இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய தளங்கள் Adware tracking cookies பதிந்துவிடுகின்றன. இவை நீங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் விளம்பரங்களை அந்த தளங்கள் உங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். Adware Cookies எப்போதும் மோசமானவை என்று கருத முடியாது. ஆனால் நிச்சயம் இவை உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைச் சிறிது மந்தப்படுத்தும்.
8. DIALERS: ஒருவகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம். இது நம் அனுமதியின்றி, நம் மோடம் மூலமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் சில இணைய தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். பாலியல் தளங்களுக்குத்தான் பெரும்பாலும் இவை தொடர்பு அளிக்கின்றன. தொலைபேசி வழியாக இன்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில் தொலைபேசி வழி இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாகத் தகவல் இல்லை.
7. GRAYWARE: இது தனிப்பட்ட ஒரு தொல்லை தரும் வைரஸாகத் தெரியவில்லை. பொதுவாக தடை செய்யப்பட வேண்டிய, நம் பணியை நாசம் செய்யக் கூடிய சிறிய புரோகிராம்களை இந்த சொல் கொண்டு அழைக்கலாம். மேலே சொல்லப்பட்ட அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த பெயரில் அடங்கும்.
8. KEYLOGGERS: நாம் கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும் அப்படியே அவை எந்த கீகள் என்று பதிந்து, இந்த புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும். நம் குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள், எந்த தளங்களுக்குச் செல்கிறார்கள் என்று கண்டறிய, இதனை நாம் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த புரோகிராம்கள் பதியப்படுகின்றன. சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும்.
9. MALWARE: Malicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம்.
10. STALKING HORSE: : இவை பிரபலமான புரோகிராம் களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கும். கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிக்கப்படும். ஆனால் நம் வேலைகளின் தன்மை குறித்து, புரோகிராம் தந்த நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பி, பின் விளம்பரங்களை அனுப்பி வைக்கும்
என்டர் செய்வதனைக் கேட்க:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நீங்கள் டேட்டா என்டர் செய்திடுகையில், அவை என்ன என்று உங்களுக்கு, சொல்லிக் காட்டப்படும் வசதி, எக்ஸெல் தொகுப்பில் உள்ளது. அதனை எப்படி இயக்கலாம் மற்றும் நிறுத்தலாம் என்று பார்க்கலாம். உங்களிடம் எக்ஸெல் 2003 தொகுப்பிருந்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் மூலம் இந்த வசதியினை இயக்கவும் நிறுத்தவும் செய்திடலாம்.
1. View | Toolbars | Text to Speech என்ற வழியில் சென்று தேர்ந்தெடுக்கவும். அல்லது Tools | Speech | Show Text to Speech Toolbar எனச் செல்லவும்.
2. இங்கு இந்த டூல்பாரில் வலது கோடியில் உள்ள Speak on Enter டூலினைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள், ஆன் செய்யப்பட்டு, ஒலி அளவு சற்று அதிகமாக வைக்கப்பட்டிருந்தால், இந்த வசதி இயக்கப்பட்டதாக ஒலிக்கப்படும். ஒவ்வொரு முறை ஒரு செல்லில் டேட்டா அமைக்கப்பட்டு, அந்த செல்லை விட்டுச் செல்கையில், அது என்ன என்று ஒலிக்கப்படும்.
பார்முலா ஒன்றினை அமைத்தால், அதன் முடிவு அறிவிக்கப்படும்.
இந்த வசதியின் இயக்கத்தினை நிறுத்த, மீண்டும் Speak on Enter ல் கிளிக் செய்து நிறுத்தலாம். அப்போது இந்த வசதி நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவிப்பு கிடைக்கும். இதன் பின் நீங்கள் மௌனமாக எக்ஸெல் ஒர்க்ஷீட்டினை இயக்கலாம்.
எக்ஸெல் : பார்முலாக்கள்
பார்முலாக்கள் இல்லாமல் ஒரு எக்ஸெல் ஒர்க்ஷீட்டை உருவாக்க மாட்டோம். இந்த பார்முலாக்களை அமைக்கையில் சில எளிய அடிப்படை விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக ரேஞ்ச். அதாவது அந்த பார்முலாவின் கணக்கீடு எந்த பரப்பில் வேலை செய்ய இருக்கிறது என்பதே இது. ஒர்க்ஷீட் பரப்பளவு செல்களில் தான் குறிப்பிடப்படுகிறது. ஒரு செல்லிலிருந்து இன்னொரு செல் வரை குறிப்பிடுகையில் அதனை ரேஞ்ச் எனலாம். இந்த ரேஞ்சினைக் குறிப்பிடுகையில், ஒர்க்ஷீட்டில் கமா, கோலன் (இரு புள்ளி) ஸ்பேஸ் எனப் பலவகைகளைப் பயன்படுத்துகிறோம். நம் வாசகர்கள் பலர் தொலைபேசியில், நான் சரியாகத்தான் பார்முலாவை எழுதி உள்ளேன். ஆனால் அது பிழை என்கிறது எக்ஸெல்; அல்லது விடை தவறாக உள்ளது என்பார்கள். இதற்குக் காரணம் இவற்றின் அடிப்படை இயக்கத்தினை நாம் தவறாகப் புரிந்து கொள்வதுதான்.
இந்த குறியீடுகள் நாம் வாக்கியங்களுக் கிடையே அமைக்கப்படும் குறியீடுகள் அல்ல. அவற்றை இங்கு வேறு பொருளில் பயன்படுத்துகிறோம். அவற்றைப் பார்ப்போமா!
( : ) : கோலன். இந்த குறியீடு தனியான ஒரு பரப்பெல்லையைக் குறிக்கிறது. அதாவது ரேஞ்ச். இங்கு A1:C2 என்று பார்முலாவில் அமைத்தால், அது A1 முதல் C2 வரையிலான செல்களைக் குறிக்கிறது.
(,) : கமா என்னும் காற்புள்ளி இரண்டு ரேஞ்ச் செல்கள் இணைந்ததைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக A1:C2 B1:B4 என்பது A1 முதல் C2 வரையிலான ரேஞ்சையும் பி1 முதல் பி4 வரையிலான ரேஞ்ச் செல்களையும் இணைந்த தொகுதியைக் குறிக்கிறது. இது போன்ற இணைப்பு செல்களைக் குறிப்பிடுகையில் கவனமாகக் கண்காணித்துக் கொள்வது நல்லது. நீங்கள் விரும்புகின்ற வகையில் பார்முலா செயல்படுகிறதா என்பதனைக் கவனிக்க வேண்டும்.
இறுதியாக ஸ்பேஸ் என்னும் இடைவெளி செல் ரேஞ்ச்களில் குறுக்கிடும் செல்களை மட்டுமே குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக A1:C2 B1:B4 எனக் குறிப்பிட்டால் இந்த இரு ரேஞ்ச் செல்களும் எங்கு குறிக்கிடுகின்றனவோ அந்த செல்கள் மட்டுமே பார்முலாவில் இயக்கப்படும்.
இங்கு எடுத்துக் காட்டுக்களில் செல்களின் பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன. ஆனால் பார்முலா இயங்கும் போது அவற்றின் மதிப்புகள் கணக்கிடப்படும். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எத்தனை செல்கள்?
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் வேலை செய்கையில், பலமுறை செல்களைத் தேர்ந்தெடுத்து பணி செய்திட வேண்டியுள்ளது. எத்தனை செல்களை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதனை நாம் அறிந்தால், அதனைக் கொண்டு சரியாகத் தேர்ந்தெடுத்துள்ளோமா என்பதனை உறுதி செய்திடலாம். இந்த தகவலை அறிந்து கொள்ள எக்ஸெல் வழி ஒன்றைத் தருகிறது.
செல்களைத் தேர்ந்தெடுக்க மவுஸ் மற்றும் கீ போர்டினைப் பயன்படுத்தலாம். ஒரு சிலர் கீ போர்டிலிருந்து கைகளை எடுத்து மவுஸைத் தேடிப் பயன்படுத்த வேண்டுமா என்ற எண்ணத்துடன் ஷிப்ட் கீயுடன் அம்புக்குறி கீகளைப் பயன்படுத்தி செல்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்போது Name பெட்டியில் எத்தனை செல்கள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளன என்று காட்டப்படும். இதில் பிரச்னை என்னவென்றால், ஷிப்ட் கீயிலிருந்து விரலை எடுத்தவுடன், Name பாக்ஸ் காலியாகிவிடும். அதில் இருந்த எத்தனை செல்கள் என்ற தகவல் தொடர்ந்து கிடைக்காது. இதனைச் சமாளிக்க மீண்டும் ஷிப்ட் கீயையும் அம்புக்குறி கீயினையும் அழுத்தலாம். உடன் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களின் எண்ணிக்கையுடன் ஒன்று சேர்த்துக் காட்டப்படும். மீண்டும் எதிர்முனை அம்புக் குறி கீயினை அழுத்த, தேவையான செல்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப் படுவதுடன், எத்தனை செல்கள் என்ற தகவலும் சரியாகக் காட்டப்படும்.
Ctrl+B புக்மார்க் பாரினைத் தரும், மூடும்
Ctrl+H ஹிஸ்டரி பக்கத்தினைக் காட்டும்
Ctrl+J டவுண்லோட் பக்கத்தினைப் பார்க்கலம்
Shift+Escape டாஸ்க் மேனேஜரைப் பெற்றுப் பார்க்க
Ctrl+P அப்போதைய பக்கத்தினை அச்சடிக்க
F5 அப்போதைய பக்கத்தினை மீண்டும் இணையத்திலிருந்து பெற்றுத் தர
Esc பக்கம் இணையத்திலிருந்து இறக்கப்படுவதனைத் தடுக்க
Ctrl+F5 or Shift+F5 ஏற்கனவே நினைவகத்தில் இருக்கும் பக்கம் இல்லாமல், இணையத்திலிருந்து புதிதாக இறக்கு
Hold Alt, while clicking a link டவுண்லோட் செய்திடு
Ctrl+F Findinpage பெட்டியைத் திற
Ctrl+G or F3 Findinpage பெட்டியில் அடுத்த இணையைக் கண்டுபிடி
Ctrl+Shift+G or Shift+F3 Findinpage பெட்டியில் முந்தைய இணையைக் கண்டுபிடி
Ctrl+U மூலத்தைக் கண்டுபிடி
Drag link to bookmarks bar லிங்க்கினை புக்மார்க்குக்கு இழுத்து வர
Ctrl+D அப்போதைய இணையப் பக்கத்தினை புக்மார்க்காக குறித்து வை.
Ctrl++ டெக்ஸ்ட் அளவினை அதிகப்படுத்து
Ctrl+ டெக்ஸ்ட் அளவினைக் குறைத்திடு
Ctrl+0 மீண்டும் டெக்ஸ்ட்டின் வழக்கமான அளவிற்குத் திரும்பு
பெர்சனல் கம்ப்யூட்டிங் உலகம் மாறி வருகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் விற்பனை அறிக்கைகளை வைத்துப் பார்க்கையில், டெஸ்க் டாப் விற்பனை பின்னுக்குச் செல்கிறது. லேப்டாப் அதன் இடத்தைப் பிடித்துள்ளது. கம்ப்யூட்டர் என்றால் அது லேப்டாப் தான் என்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விற்பனையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எடுத்துச் செல்ல எளிதாக இருப்பதாலும், விலை குறைந்து இருப்பதாலும், கம்ப்யூட்டர் செயல்பாட்டு எதிர்பார்ப்பில் சிலவற்றை தியாகம் செய்து, மக்கள் நெட்புக் கம்ப்யூட்டரினைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர்.
இவை எல்லாவற்றைக் காட்டிலும், இவற்றின் இடத்தை ஸ்மார்ட் போன்கள் பிடித்து வருகின்றன. இவற்றின் இயக்கம் முற்றிலும் ஒரு கம்ப்யூட்டர் போலவே இருப்பதால், கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனாலேயே இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள், பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை, ஸ்மார்ட் போனுக்கு இணைவாக உருவாக்கி வெளியிட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்துபவருக்குப் பணம் செலவானாலும், நேரத்தின் அருமை கருதி, பலரும் ஸ்மார்ட் போன்களைக் கம்ப்யூட்டரின் இடத்தில் பயன்படுத்தத் தொடங்கி வருகின்றனர்.
இந்த மூன்று சாதனங்களுக்குமான விற்பனை விலையில் வேறுபாடு அப்படி ஒன்றும் அதிக அளவில் வித்தியாசமானதாக இல்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆஹா! இப்படிச் சொன்னால் எப்படி! எதனை நாங்கள் வாங்க வேண்டும் எனப் பட்டியலிட்டால் தானே, ஒரு முடிவு எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறீர்களா! இதோ நம் வேலை அடிப்படையில் இவற்றின் நிறை, குறைகளைப் பார்க்கலாம். இவை எல்லாமே மொபைல் சாதனங்கள் என்ற அடிப்படையில் வருகின்றன. கைகளில் எடுத்துச் சென்று, எந்த இடத்திலும் நம் கம்ப்யூட்டர் வேலைகளை நாம் மேற்கொள்ள முடியும்.
1. நிறுவன, அலுவலக வேலைகள்: நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள நிறுவன, அலுவலக வேலைகளுக்கு நீங்கள் கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்துகிறீர்களா! பெரிய வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஒர்க் ஷீட்கள், மல்ட்டிமீடியா காட்சித் தொகுப்புகள், உங்கள் நிறுவனத்திற்கென அமைத்துத் தரப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம்கள் ஆகியன உங்கள் பணியை நிர்ணயம் செய்கின்றனவா? இந்த சாதனங்கள் உங்களுக்கு எப்படி பயன்படும் என்று பார்க்கலாம்?
இத்தகைய வேலைகளுக்கு ஒரு முழுமையான லேப்டாப்தான் சிறந்த தேர்வாக அமையும். அதிக சக்தியுடன் கூடிய சி.பி.யு., ராம் மெமரி, எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருந்து இடர்களைத் தாங்கும் சக்தி லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கே உள்ளது. ஆனால் ஒரு நல்ல பிசினஸ் லேப்டாப், மற்ற இரண்டு சாதனங்களின் விலையைக் காட்டிலும் இரு மடங்காக இருக்கும்.
இந்த வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் கொஞ்சம் இடவசதி குறைவான கீ போர்ட், திரை மற்றும் திறன் குறைந்த சிபியு, ராம் மெமரி, அலுவலகப் பயன்பாட்டிற்கு இதனைத் தேர்ந்தெடுக்கத் தடையாய் உள்ளன. இத்தகைய வேலைகளில் ஈடுபடுவோருக்கு ஸ்மார்ட் போன் ஒன்று நிச்சயம் தேவையாய் இருக்கும். ஆனால் அது லேப்டாப் கம்ப்யூட்டரில் கிடைக்கும் வேகத்தினைத் தருவதில் இன்னும் பின்தங்கியே உள்ளது. எனவே இந்த பணியில் ஈடுபடுபவர்கள், நல்ல திறன் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றையும், ஸ்மார்ட் போன் ஒன்றையும் தங்களுக்கென வாங்கிக் கொள்ளலாம்.
2. வீடுகளிலும் மாணவர்களிடமும்: பெரிய அளவில் நிறுவன வேலைகள் இல்லாதவரா? மாணவரா? இந்த இருவகையினரும் வெளியே அலைந்து திரிந்து தங்கள் நாளைக் கழிப்பவர் என்றாலும், ஒரு நிறுவன ஊழியர் அளவிற்குக் கம்ப்யூட்டர் தேவை இருக்காது. குறிப்பாக மாணவர்களுக்கு நோட்ஸ் எடுக்க, இணையம் பார்க்க, பிரசன்டேஷன் காட்சிகள் அமைக்க, கட்டுரைகளை எழுத எனப் பல கல்வி சார்ந்த வேலைகளைத் தாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று கனமான தாகவும், புத்தகங்கள் மற்றும் பைகளுடன் தூக்கிச் செல்லச் சற்று சிரமமானதாகவும் இருக்கும். எனவே இவர்கள் நெட்புக் கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் திரை, கீ போர்டு இவர்களின் வேலையை அவ்வளவாகப் பாதிக்காது. ஏனென்றால் இவர்களின் பணி சற்றுப் பொறுமையாக மேற்கொள்ளும் வகையில் அமையும். இவர்களுக்கு ஸ்மார்ட் போன் நல்ல துணைவனாக இருந்தாலும், கற்பனை மற்றும் உழைப்பின் அடிப்படையில் அமைக்கப்படும் திட்டங்களுக்கு அது உதவாது.
3. இணைய உலா வர: இணையத்தில் எதனையேனும் திடீர் திடீரெனப் பார்க்க வேண்டியதிருக்கும். யாரேனும் நண்பர் போன் செய்து, உனக்கு ஒரு பைல் அனுப்பி உள்ளேன். பார்த்து உடன் பதில் அனுப்பு என்பார். அல்லது இந்த இணைய தளத்தில் புதிதாக ஒன்றின் விலை வந்துள்ளது. வாங்கி மாற்றிவிடலாமா? என்பார். அப்போது நீங்கள் வீட்டில் இருந்து வெளியே இருக்கலாம். இணையத் தொடர்பிற்கென லேப் டாப் கம்ப்யூட்டரைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா? இணைய உலா மேற்கொள்ள, நெட்புக் கம்ப்யூட்டர்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்டதாக அமையும். ஆனால் ஸ்மார்ட் போன்கள், நெட்புக் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதலாகப் பயன்களைத் தரும். இவை எப்போதும் இணையத் தொடர்பினை மேற்கொள்ளத் தயாராய் இருக்கும். எனவே இதற்கு ஸ்மார்ட் போன் தான் சிறந்தது.
6.சமுதாயத் தளங்கள் தொடர்பு: சோஷியல் நெட்வொர்க் என்னும் இணையத் தொடர்புகளை மேற்கொள்வது, தற்போது பெரும்பாலோரால் மேற்கொள்ளப்படும் தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. தங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டு, நிகழ்வுகளை அவ்வப்போது மேம்படுத்த, இந்த சமுதாய தளங்கள் உதவுகின்றன. இந்த வகையில் ட்விட்டர், பேஸ்புக், லிங்க்டு இன் மற்றும் போர் ஸ்குயர் போன்ற தளங்கள் இயங்குகின்றன. இதற்கு மிகவும் உதவுவதும் பயன்படுவதும் ஸ்மார்ட் போன்களாகும். லேப்டாப் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விரைவாக விரித்து இயக்குவதில் இதில் பின்வாங்குகின்றன. ஆனால் போட்டோக்களை அனுப்ப, அவற்றை எடிட் செய்திட, ரியல் டைம் சேட் செய்திட, ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும் நெட்புக் கம்ப்யூட்டர்களே கை கொடுக்கின்றன. எனவே இந்த தேவைகளுக்கும் நெட்புக் கம்ப்யூட்டர்களே நமக்குச் சிறந்த சாதனமாக உள்ளன.
மேலே கூறப்பட்ட தேவைகள் அனைத்துமே பலருக்கு இருக்கலாம். எந்த வகை தேவைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கணக்கிட்டு அதற்கான சாதனத்தை வாங்குவதே சிறந்தது.
கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம்,இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ.பி.சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.
உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயானிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது.
பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன. இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் எத்தகைய நன்மைகளை அளிக்கின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
இதயம் வலுவான தசைகளால் ஆன விசை அமைப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதயம் நன்கு செயல்பட வேண்டும் என்றால், தமனிகளின் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ரத்தம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுவாக இருந்து இதயத்தை நன்றாக இயங்க வைக்க முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க ஒருவரின் வயது உடல் அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப உடற்பயிற்சிறைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்பதைப் பார்க்கும் முன்பு உடலுக்கு எந்த வகையில் அவை உதவுகின்றன என்பதைப் பார்த்தவிடலாம்.
உடற்பயிற்சியின் பயன்கள்.
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது, ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. இந்த இக்கட்டான நிலையை ஈடுகட்டும் வகையில் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க மாற்று ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்தக் குழாய்களை இணை ரத்தக்குழாய்கள் (Collateral Circulation) என்று சொல்வார்கள்.
அதெல்லாம் சரிதான். உடற்பயிற்சிக்கும் இந்த இணை ரத்தக் குழாய்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது.
இந்த இணை ரத்தக் குழாய்கள் இதயம் உருவாகும்போதே உருவாகிவிடுகின்றன. ஆனால் முக்கியமான வேலைகளை முதன்மை ரத்தக் குழாய்களே முழுநேரமும் செய்துவிடுவதால் இணை ரத்தக் குழாய்கள் செயலற்றுத்தான் காணப்படும். அவசர காலத்தில் தானே நமது சேவை தேவை என்ற அலட்சியத்தில் இவை அளவில் சுருங்கியும், வளைந்தும், நெளிந்தும் காணப்படும். அந்த நிலையில் திடீரென முதன்மை ரத்தக் குழாய்கள் செயலற்றுப் போகும்போது இவை விழிப்படைந்து வேலை செய்ய சற்று நேரம் பிடிக்கும்.
ஆனால் இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது, இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு, மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத் தமனிகள் முழுமையாக அடைபட்டு இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான். அன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்குகின்றன. அதோடு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது.
இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை அதிக அழுத்தத்துடன் வரும் ரத்தமானது ஓரளவுக்கு அகற்றுகிறது. இதன் மூலமாக மாரடைப்புக்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதயத் தமனி நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும்.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சரிவர இயங்க வேண்டும் என்றால் தேவையான உயிர்வளி, சத்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். ரத்தத்தின் மூலமாகவே இவை செல்களைப் போய்ச் சேருகின்றன. அன்றாடம் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகமாக்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு ரத்தக் குழார்களை விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடவும் துணைபுரிகின்றன.
இதயத்துக்கு ஏற்ற உடற்பயிற்சிகள்
உடலின் உயிர்வளித் தேவையைப் பெருக்கும் உடற்பயிற்சிகளை உயிர் வளி பெருக்கும் உடற்பயிற்சிகள் (Aerobic Exercise) என்று சொல்வதுண்டு.
இத்தகைய உடற்பயிற்சிகளின் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான உயிர்வளியைப் பன்மடங்காக பெருக்க முடியும். இதனால் இதயமானது தனக்குத் தேவையான ரத்தத்தையும், சத்துகளையும் பெற முடியும்.
பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (Jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உல் அமைப்பு, ஓய்வு நேரம், உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
நடைப்பயிற்சி
நடைப்பயிற்சியில் Trekking, Leiú§re Walking, Race Walking, Power Malking என பலவகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு எந்த வகைப் பயிற்சி ஒத்துவருகிறதோ அதைத் தொடர்ச்சியாகச் செய்து வர வேண்டும்.
மற்ற வகையான உடற்கயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும். இப்பயிற்சியை மேற்கொள்ள ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும்.
எளிமையான உடற்பயிற்சியாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் நன்மைகள் பல. அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் எடையைக் குறைக்க துணை புரிவதோடு தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. மேலும் இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
நடைப்பயிற்சியில் ஏற்படும் முழுப்பயனைப் பெற வேண்டும் என்றால், தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்றாடம் நடக்கும் தூரத்தைப் படிப்படியாக உடலின் ஆற்றலுக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும். நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது நடக்கும் இதயத் துடிப்பின் அளவானது நிமிடத்துக்கு 100&க்கு மேல் இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் 10,000 காலடிகள் (Sˆepv) நடக்க வேண்டும் என இதய மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாம் அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே.
நடைப்பயிற்சியின் அவசியத்தை இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லியும் சிலர், நடப்பதற்கு எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என புலம்புவார்கள். அவர்களுக்கு சில அறிவுரைகள்...
நீங்கள் டி.வி.பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்றால் டி.வி. சேனல்களை மாற்ற ரிமோட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எழுந்து சென்று நேரிடையாக மாற்றலாம்.
காய்கறி மார்க்கெட்டுக்கும், பலசரக்குக் கடைக்கும் செல்ல இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்.
உங்கள் அலுவலகம், மூன்றாவது அல்லது நான்காவது மாடியில் இருந்தால் லிஃப்ட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாடிப்படிகளில் ஏறிச் செல்லலாம்.
நீங்கள் அலுவலகத்துக்கு பஸ்ஸில் செல்பவராக இருந்தால் அலுவலகத்தில் இருந்து பஸ்ஸில் வீட்டுக்குத் திரும்பி வரும்போது இரண்டு ஸ்டாப்புக்கு முன்னால் இறங்கி நடந்து வாருங்கள்.
நீங்கள் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் பழக்கம் உடையவர் என்றால் கோயிலில் பிரகாரங்களை நன்கு சுற்றி வாருங்கள்.
மெல்லோட்டம்
மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள். உடலுக்கு ஏற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப்பயிற்சியும் மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள் தங்களை மாரடைப்பில் இருந்து காத்துக்கொள்ள தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கிறார்கள்.
மெல்லோட்டத்தின் பயன்கள்
இதயமானது சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவானது சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.
இதய ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் வலுவாக்குகிறது.
ரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.
ரத்தமிகு அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவானது அதிகமாவதால், இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால், மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.
மெல்லோட்டத்துக்கான விதிமுறைகள்
விதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.
நம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.
மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.
மெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.
சைக்கிள் பயிற்சி
இதயத்துக்கு உகந்த, உயிர்வளியைப் பெருக்கும் உடற்பயிற்சிகளில் சிறந்தது சைக்கிள் பயிற்சி. இது, குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த எளிமையான உடற்பயிற்சியாகும்.
அமெரிக்காவில், பால் டட்லி ஒயிட் என்ற மருத்துவர் சைக்கிள் பயிற்சியில் ஒரு மிகப்பெரிய புரட்சியைச் செய்திருக்கிறார். உடல் நலத்துக்கான சைக்கிள் பயிற்சி (Cycling for Health) என்ற நல இயக்கத்தைத் தொடங்கியதோடு அல்லாமல், இந்த இயக்கத்தின் விளைவாக, அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் கார்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும் இவர் காரணமாக இருந்தார்.
அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் அங்கு வரும் மக்கள் பயன்படுத்துவதற்காக சைக்கிள்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் தங்களுடைய உடல் நலத்தைப் பேணுவதற்காகப் பல மணிநேரம் இயற்கையான சூழலில், திறந்த வெளியில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது வழக்கமாகும்.
பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் சைக்கிள் பயிற்சியைப் பல வகையான நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். உடல் பருமன், ரத்தமிகு அழுத்த நோய், குடல் இறக்கம், மூட்டுச்சிதைவு நோய், வாதக் காய்ச்சல் நோய், முதுகுத் தண்டுவடம் நழுவுதல், கால் பெரு நரம்பு அழற்சி போன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையில், சைக்கிள் பயிற்சியையும் ஒரு முக்கியமான அம்சமாக வைத்திருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் சைக்கிள் பயிற்சியை ஒருவகையான மருத்துவமுறையாகக் கையாள்கிறார்கள். சிலவகையான நோயாளிகளுக்கு அவர்கள் தங்கள் உடல் நலத்தை மீண்டும் பெற சைக்கிள் பயிற்சியைப் பரிந்துரைக்கிறார்கள். மேலும் நீண்டநாள்களாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் வலுவிழந்த தசைகள் மீண்டும் உயிர்பெற, சைக்கிள் பயிற்சியை அளிக்கின்றனர்.
ஹாலந்து நாட்டில் உள்ள பள்ளிகளில் சைக்கிள் பயிற்சியை விளையாட்டுக் கல்வியில் ஒரு பாடமாக வைத்துள்ளனர். தினமும் பள்ளி நேரத்தில் மாணவ& மாணவிகள் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இத்தகைய முயற்சியின் காரணமாக நடல் நலக்குறைவால் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ& மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகச் சொல்கின்றனர்.
அன்றாடம் சிலமணி நேரம் மேற்கொள்ளும் சைக்கிள் பயிற்சியானது, இதயத் தசைகளை நன்கு வலுவாக்குவதோடு அல்லாமல், இதயத் தசைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைப் பன்மடங்கு அதிகமாக்குகிறது என்கிறார் பால் டட்லி ஒயிட்.
நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சயாலும் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.
நீச்சல், முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும்.
உடல் ஊனமுற்றவர்களுக்குக்கூட இது மிகச்சிறந்த உடற்பயிற்சி.
உடலை வலுவாக்கவும், கிடைத்த வலுவைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகிறது.
நீச்சல் பயிற்சி, உடலில் உள்ள பலவகையான உள் உறுப்புகளுக்கும் நரம்பு அமைப்புகளுக்கும் வலுவை அளிக்கிறது.
குறைந்த காலத்தில் உடலில் உள்ள பலவகையான தசைகளுக்கு நல்ல வலுவை அளிக்கிறது.
உடலின் தேவையற்ற, அதிகமான எடையைக் குறைக்க துணை புரிகிறது.
நீச்சல் பயிற்சியின்போது நீர் உடலுக்கு இயற்கையின் தடுப்பாற்றலை அளிக்கிறது.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும்.
நீச்சலானது உள்ளத்துக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாத மனப்பக்குவத்தையும், எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்யும் மனப்பக்குவத்தையும் அளிக்கிறது.
நீச்சல் பயிற்சியின் சிறப்புகள்
நீச்சல், கவலையை மறக்க மிகச்சிறந்த மருந்தாகும். ஏனென்றால், நீந்தும்போது கவனம் முழுவதும் நீச்சலில் ஒரு முகப்படுவதால், மனிதன் தன்னுடைய கவலையை மறக்க நீச்சல் துணைபுரிகிறது.
நீச்சல், முதுகெலும்புப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்பெறச் செய்வதோடு, முதுகெலும்பு அமைப்புகளை வலுப்படுத்த துணைபுரிகிறது.
கடல் நீரிலும், ஆற்று நீரிலும் இயற்கையாகப் பொதிந்திருக்கும் அயனிகள, உடலுக்கு நன்மை அளிப்பதாக மருத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர்.
நீச்சல், உடலில் உள்ள மேற்புறத் தசைகளுக்கு மட்டுமின்றி உடலின் கிழ்ப்புறப் பகுதியில் உள்ள தசைகளுக்கும் ஒரே சமயத்தில் நல்ல பயிற்சியைத் தரக்கூடியது.
இதயத் தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் உதவி செய்கிறது.
1.கிரிட் – ஐ எப்போதும் பயன்படுத்துங்கள்: கிரிட் என்பது நெடுவிலும் படுக்கையாகவும் நம் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் கோடுகள் ஆகும். இந்த கோடுகளுக்கு அருகே எந்த பொருளை/படத்தை வைத்தாலும் கோடுகள் அருகே பொருட்கள் இழுக்கப்படும். ஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது போல செயல்படும். இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல் திரையின் குறுக்கே கண்ட இடத்திற்குச் செல்லும். இந்நிலையில் சீர் செய்திட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
முதலில் கிரிட் கோடுகளைக் காட்டவும் மறைக்கவும் உள்ள பட்டனைத் (Show/Hide Grid) தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட் (Standard) டூல் பாரில் உள்ளது. அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9 (Shift + F9) பட்டனைத் தட்டவும். தற்காலிகமாக கிரிட்–ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் ஆல்ட் பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது.
2. கைட் லைன்களின் (Guidelines) உதவி: ஆப்ஜெக்ட் ஒன்று நெட்டு வரிசையிலோ அல்லது படுக்கைவசத்திலோ அமர வைக்க வேண்டும் என்றால் ஸ்கிரீனில் கோடுகளை ஏற்படுத்தி பயன்படுத்துங்கள். இதற்கு Alt + F9 கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும். உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும். இந்த கோடுகளின் உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின் நீங்கள் எப்போது Alt + F9 அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும். இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். இது உங்களுக்குப் போதவில்லையா? கண்ட்ரோல் (Ctrl) அழுத்தி எந்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை என்றால் அதனை எப்படி நீக்குவது? மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே விட்டுவிடவும்.
நீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம். மவுஸ் பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது தெரியுமா? நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப் பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண் குறிக்கிறது. இந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்கினால் நீங்கள் எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும் என்றால் இழுக்கும்போது ஷிப்ட் (Shift) கீயை அழுத்தவும். எடுத்துக்காட்டாக ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக் கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில் உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.
3. கிரிட் மற்றும் கைட்லைன் செட் செய்யும் வழி: Ctrl + G கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும், கிடைக்காதபடியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் ஆல்ட் கீ அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம்.
4. துல்லிதமான அளவில் அமைத்திட: ஆப்ஜெக்ட் ஒன்றை, மிகத் துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு அல்லது நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல வேண்டுமோ அதற்கான ஆரோ கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால் ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ (Ctrl) அழுத்தி சம்பந்தப்பட்ட ஆரோ கீயினை அழுத்தவும்.
5. ஆப்ஜெக்டை இரு திசையில் வேகமாக நகர்த்த: ஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட் (குடடிஞூt) கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல மாறுபக்கத்திலும் செய்ய முடியாது.
போனஸ் டிப்ஸ்: ஆப்ஜெக்ட் ஒன்றை இழுக்கையில் அதனை இன்னொரு காப்பியும் செய்திட வேண்டும் என்றால் இtணூடூ கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டுமென்றால் Ctrl மற்றும் Shift கீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.
இந்த தொகுப்புகளைப் பயன்படுத்த அனுமதி பெறுவதுடன், 25 ஜிபி ஆன்லைன் ஸ்பேஸ் ஒவ்வொருவருக்கும் தரப்படுகிறது. ஆபீஸ் 2010 தொகுப்பிற்கு இணையான ஒரு சாதனம் இது என்றும், கம்ப்யூட்டர், போன் மற்றும் பிரவுசர் வழியாக யாரும் இதனைப் பயன்படுத்தலாம் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
ஆபீஸ் தொகுப்புகளில் ஒன்றில் உருவாக்கப்பட்ட பைல்கள் எதனையும், இந்த இணைய தொகுப்பிலும் எடிட் செய்து சேவ் செய்து பயன்படுத்தலாம். நம் கம்ப்யூட்டர்களிலும் பதிந்து வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய பைல் பழைய ஆபீஸ் பதிப்புகளில் உருவாக்கப் பட்டிருந்தாலும், அந்த பதிப்புக்கான எடிட்டிங் வசதியை, இந்த ஆன்லைன் ஆபீஸ் தொகுப்பு தருகிறது. இணையத்தில் இவ்வாறு செயல்படுவதால், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர், டாகுமெண்ட் அல்லது பைல் ஒன்றை எடிட் செய்திடலாம்.
இதன் யூசர் இன்டர்பேஸ் மிகவும் எளிமையாகவும், நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் செயல்படுவது போல அனுபவத்தினைத் தருவதாகவும் உள்ளது. இந்த இணைய ஆபீஸ் தொகுப்பு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் மட்டும் இயங்கும் என எண்ண வேண்டாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களிலும் மிக நன்றாக இது இயங்குகிறது. ஆனால் ஒரே ஒரு குறை. ஆபீஸ் புரோகிராமில் எடிட் பட்டன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே செயல்படுகிறது. புதிதாக வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்புடன் முழுமையாக இணைந்து செயல்படும் வகையில், இந்த இணைய தொகுப்பும் இருக்கின்றது.
இனி, என் கம்ப்யூட்டரில் ஆபீஸ் தொகுப்பு இல்லை என்று யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. இணையத் தொடர்பு மட்டும் இருந்தால் போதும். இணைய வெளியிலேயே, ஆபீஸ் தொகுப்பினைப் பெற்று இயக்கலாம். பைல்களை உருவாக்கலாம். மற்றவர்களுடன் சேர்ந்து எடிட் செய்து சீர் படுத்தலாம். Office Web Apps என அழைக்கப்படும் இதனைப் பெற http://office.live.com// என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். முதலில் உங்களுக்கு விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இல்லையேல் உடனே உருவாக்கிக் கொண்டு பின் இதற்குச் செல்லவும்.
இந்த பிரச்னைக்குத் தீர்வாக சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஒன்றாக டச் பிரீஸ் (Touch Freeze) உள்ளது. இது ஒரு எளிய, இலவச புரோகிராம் Windows NT/2000/XP/ Vista/7 ஆகிய அனைத்து சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை டவுண்லோட் செய்து, லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிந்துவிட்டால் போதும். எந்த செட்டிங்ஸ் வேலைகளையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. விண்டோஸ் இயங்கத் தொடங்கியவுடன் தானாக இயங்கி, நமக்கு டச்பேடினால் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளும். இயங்குவதற்கு 768 கேபி அளவே மெமரி எடுத்துக் கொள்கிறது. டெக்ஸ்ட்டை கீ போர்டில் டைப் செய்கையில், டச்பேட் இயக்கத்தினை முடக்கி வைக்கிறது.இந்த புரோகிராம் இல்லாமலும் டச் பேட் இயக்கத்தினை நிறுத்தலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் இதற்கென கண்ட்ரோல் பேனல் சென்று, மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ் ஐகானைக் கிளிக் செய்து டிவைஸ் செலக்ட் (Device Select) டேப் தேர்ந்தெடுத்து, "Disable Touch Pad when USB Pointing Device is present" என்பதில் டிக் அடையாளத்தை மேற்கொள்ள வேண்டும். இது சற்று சுற்று வழி. மேலும் டச் பேட் வேண்டும் எனில் மீண்டும் சென்று மாற்ற வேண்டும்.
மாற்றாக எப்போதும் டச் பேட் வேண்டாம் எனில், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் டச் பேட் செட்டிங்ஸ் சென்று "Disable Device" என்பதனை இயக்கி வைக்கலாம். மீண்டும் வேண்டும் என்று விரும்பும்போது, ஒவ்வொரு முறையும் சென்று இயக்க வேண்டும். டெல், எச்.பி, சோனி வயோ ஆகிய நிறுவனங்கள் தரும் லேப்டாப் கம்ப்யூட்டரின் சில மாடல்களில் டச் பேடினை முடக்க சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்தே தரப்படுகின்றன. டச் பேட் செட்டிங்ஸ் சென்று இவற்றைக் கண்டு இயக்கலாம். ஏசர் லேப்டாப்பின் சில மாடல்களில் Fn+F7 என்ற கீகளை அழுத்தினால், டச் பேட் முடக்கப்படும். பின் மீண்டும் தேவை என்றால், மீண்டும் இந்த கீகளை அழுத்தி இயக்கத்தினைத் தொடக்கி வைக்கலாம். இந்த சுற்று வேலைகளை எல்லாம் டச் பேட் பிரீஸ் தவிர்க்கிறது. இந்த இலவச புரோகிராமினை டவுண்லோட் செய்திட http://code.google.com /p/touchfreeze/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
நாம் நினைக்கும்போது நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு குறிப்பது, குளியல் முறைக்கு மாறானது மட்டுமல்ல, அதனால் எந்தப் பயனும் கிடையாது.
எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்போல, எப்படிக் குளிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.
நாம் தினந்தோறும் குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அதிகாலையில் குளிக்க வேண்டும். அதுதான் நல்லது. நதியிலும், நீர் நிலையிலும் குளித்தால் நன்மை உண்டு. நதியும் நீர் நிலையும் இல்லாத நகர வாசிகள் 8'ஜ்3' என்னும் அளவுடைய நீர்த் தொட்டியில் நீரைவிட்டு அதில் குளிக்க வேண்டும். சித்திரை வைகாசி மாதங்களில் சூரியன் உதயமாகி (5 நாழிகை) மணிக்குள் குளிக்க வேண்டும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சூரிய உதயத்துக்குப் பின் (4 நாழிகை) மணிக்குள் குளிக்கவேண்டும். மார்கழி, தைமாதங்களில் (2 நாழிகை) மணிக்குள்ளும் மாசி, பங்குனி மாதங்களில் (3 நாழிகை) மணிக்குள்ளும் குளிக்க வேண்டும்.
நோயற்ற வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் இவ்வாறு குளித்துவந்தால், உடல் நலம் பெற்று வாழ்வார்கள். குளிக்கும்போது, எண்ணெயைப் பாதத்தில் தேய்த்துக் கொண்டு குளித்தால், கண்களில் உள்ள குறைபாடுகள் நீங்கும். கண்களில் எண்ணெய் விட்டுக் கொண்டு குளித்தால், காதுகளில் உள்ள குறைபாடுகள் நீங்கும். தலைக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு குளித்தால், உடம்பிலுள்ள அனைத்துக் குற்றங்களும் நீங்கும். குளிக்கும்போது, இரண்டு மூன்று மாவிலைக் கொத்துகளை வேகும் அளவுக்குக் காய்ச்சி ஆற வைத்து, அந்த நீரை குளியல் தொட்டியில் ஊற்றி, தண்ணீர் ஊற்றி அதில் அமர்ந்து குளித்தால், உடலுக்குத் தேவையான நன்மைகள் தானே கிடைக்கும். குளிக்கும் போது, தண்ணீரை முதலில் தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். தலையில் ஊற்றும் தண்ணீல் உடல் முழுவதும் நனையுமாறு ஊற்றிக் குளிக்க வேண்டும் இது, குளிக்க வேண்டியமுறை. இதைச் செய்ய முடியாது. இதைச் செய்ய முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் நலமாக வாழ முடியாது.
நடை! நடை! நடை!
வைகறை துயில் எழு என்ற சொல்லைக் கேட்கும்போதே மனத்துக்குள் ஒரு கசப்பு. அதிகாலை தூக்கத்தானே சுகமானது. அந்தச் சுகத்தையும் கெடுத்துவிட்டால்? காலையில் எழுந்திரு! பயிற்சி செய்! யோகாசனஞ் செய்! என்று, ஊரெங்கும் உபதேச மொழிகளே உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எத்தனை பேர் அதை கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நடைப்பயிற்சி செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நள்ளிரவில் வீட்டுக்கு வந்து விடியும் முன்னே எழுந்து வேலைக்குப் போகின்றவர்களால் எப்படி நடைப்பயிற்சி செய்ய முடியும்? உள்ளம் செய்யும் தவத்தைப்போல உடல் செச்யும் தவம் நடைப்பயிற்சி! நடைப் பயிற்சி செய்யச் செய்ய உடல் உறுதி பெறும். உள்ளுறுப்புகளின் இயக்கம் சீராகும். நடைப் பயிற்சி செய்பவர்களுக்கு உடம்பு சுமையாகத் தோன்றாது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். எப்போது எல்லா நேரத்திலும் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. நடைப்பயிற்சிக்கும் விதி இருக்கிறது. அதற்குரிய நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் நல்ல பயன் உண்டாகும். நடை பயிற்சி செய்தால் உடல் எடை குறையும். இளைஞர், முதியவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாரும் நடைப் பயிற்சி செய்யலாம்.'எப்போதெல்லாம் நடைபயிற்சி செய்யலாம்?’ என்பது பொதுவாக எழுப்பப்படுகிற கேள்வி. சூரிய உதயத்துக்கு முன்பும் சூரிய மறைவுக்குப் பின்பும் நடைப்பயிற்சி செய்தால், உடலின் உள்ளுறுப்புகள் சீராக இயங்கும். புத்துணர்வு பெறும்.
சூரிய உதயத்துக்குப் பின்பும் சூரிய மறைவுக்கு முன்பும் நடைப் பயிற்சி செய்தால் அது தசைப்பகுதியை மட்டுமே வலுவாக்கும். சூரிய உதயத்துக்கு முன்பு நடைப்பயற்சி செய்பவர்கள் கற்கள் பதிந்த பாதைகளில் அல்லது கற்கள் நிறைந்த பாதைகளில் நடக்க வேண்டும். சூரிய மறைவுக்குப் பின்பு நடைப்பயிற்சி செய்பவர்கள் புல்தரையில் அல்லது புற்கள் நிறைந்த வெளிகளில் நடக்க வேண்டும். கற்கள் நிறைந்துள்ள பாதைகளில் நடக்கும்போது காலின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள பதின்மூன்று வர்மப் புள்ளிகள் அமுக்கப்படுகின்றன. அதனால், உறக்கத்துக்குப்பின் செயல்பட வேண்டிய மிகமிக முக்கியமான உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்படத் தூண்டப்படுகின்றன. பகல் முழுவதும் பணியாற்றிவிட்டு ஓய்வெடுக்க வேண்டிய உறுப்புகளை மீண்டும் தூண்டக் கூடாது என்பதனால், சூரிய மறைவுக்குப் பின் புற்களின் மீது நடந்தால், வர்மப் புள்ளிகளுக்கு ஒத்தடம் இடப்படுவதுபோல அமைதி கிடைக்கும். உள்ளுறுப்புகளுக்கு அமைதி கிடைத்தால், இரவுப் பொழுது இனிமையானதாக இருக்கும்.
அவ்வாறு அல்லாமல், வெயிலில் நடைப்பயிற்சி செய்தால், நடைப்பயிற்சி உடற்பயிச்சியாக, உடம்பின் வெளிப்புறத்திலுள்ள தசைகள் நரம்புகளுக்குக் கொடுக்கப்படுகின்ற பயிற்சியாகவே இருக்கும். வெயிலில் செய்யப்படுகின்ற பயிற்சியினால் உடம்பிலுள்ள கொழுப்புச் சத்து குறையும். கலோரிகள் அதிகம் தேவைப்படும். உடல் எடை குறையும். மனத்தளர்ச்சி உண்டாகும். பயிற்சிக்குப்பின் ஓய்வும் தேவைப்படும். நடந்து செல்பவர்கள், சூரியன் தலைக்கு மேலே உச்சியில் இருக்கும் போது, தன்னுடைய நிழலின் நீளம் ஒரு அடி அளவு இருக்கும்போது, வெயிலில் நடக்க கூடாது. அதேபோல், ஈரமான மண்ணில் நடக்கக் கூடாது! அதனால், நோய்க்கிருமிகள் பாதத்தில் படிந்து நோயை உருவாக்கலாம்.
உணவு உண்ணும்முறை
உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப்பயன்படுகின்றன.
உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு & ரத்தப் பெருகச் செய்கிறது. இனிப்பு & தசை வளர்க்கிறது. புளிப்பு & கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு & எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது.
கசப்பு & நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு & உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது.
உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
துவர்ப்பு : உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
இனிப்பு : மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும்.
பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.
புளிப்பு : அணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது னீளவுக்கு னீதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
காரம் : பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.
கசப்பு : பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.
உவர்ப்பு : அனைவரும் வரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பி, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும். இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும்.
ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது.
கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்தட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது. எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்டபின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது. உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்பம் குறைபாடுகளுக்குஏற்ப மனம் இருக்கும். நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.
'உண்பது நாழி’ என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழக்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். சில போதில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போதில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.