Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

எக்ஸெல் : ஒர்க்ஷீட் இடம் மாற்ற

எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றை உருவாக்குகையில், அதில் கையாளப்படும் பொருள் மற்றும் தன்மைக்கேற்ப நாம் ஒர்க்ஷீட்டுகளை அமைப்போம். வரிசையாக அமைந்த ஒர்க்ஷீட்டுகளைப் பார்க்கையில் சில வேளைகளில் அவை இடம் மாறி இருந்தால், அவற்றில் பணி புரிய எளிதாக இருக்குமே என்று எண்ணுவோம். இந்த ஒர்க்ஷீட்களை இடம் மாற்ற, எக்ஸெல் சில எளிய வழிகளைத் தந்துள்ளது. அவற்றைக் காணலாம்.
1.முதலில் எந்த ஒர்க்ஷீட்டின் இடத்தை மாற்ற வேண்டுமோ, அதனைத் திறந்து கொள்ளவும்.
2. பின்னர் Edit மெனுவிலிருந்து, Move or Copy Sheet என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது Move or Copy Sheet டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Before Sheet என்ற பட்டியலில், நீங்கள் தற்போது திறந்துள்ள ஒர்க்ஷீட்டிற்குப் பின் எந்த ஒர்க்ஷீட் வரவேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. ஓகே கிளிக் செய்து வெளியேறவும். ஒர்க்ஷீட்டுகள் நீங்கள் விரும்பியபடி அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. ஒர்க்ஷீட்டிற்கான டேப்பில், மவுஸின் இடது பட்டனை அழுத்திக் கொண்டு, அதனை இடது, வலதாகவும் நகர்த்தலாம். மவுஸ் பட்டனைச் சரியாக அழுத்திப் பிடித்து நகர்த்த வேண்டும். எங்கு பட்டனை விடுகிறீர்களோ, அங்கு அந்த டேப்பிற்கு உரிய ஒர்க்ஷீட் நிறுத்தப்படும்.

சேவ் செய்திடும் போல்டரை மாற்ற...

எக்ஸெல் தொகுப்பில் நாம் உருவாக்கும் பைல்கள், மாற்றப்படா நிலையில் மை டாகுமெண்ட்ஸ் என்ற போல்டரிலேயே சேவ் செய்யப்படும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் அனைத்து ஆவணங்களும் இங்குதான் சேவ் செய்யப்படும். சேவ் செய்யப்படுகையில், நாம் ட்ரைவ் மற்றும் போல்டரை மாற்றி சேவ் செய்திடலாம் என்றாலும், ஒவ்வொரு முறையும் மாற்றுவது நேரம் வீணாகும் செயலாக மாறிவிடும். இதற்குப் பதிலாக ஒவ்வொரு தொகுப்பிலும் உருவாக்கும் பைல்களை எந்த போல்டரில் சேவ் செய்திட விரும்புகிறோமோ, அந்த போல்டரை, அந்த தொகுப்பிற்கான சேவ் செய்திடும் போல்டராக, மாறா நிலையில் அமைத்திடலாம். எக்ஸெல் தொகுப்பில் இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலா.
1. மெனு பாரில் Tools–>Options என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
2.பின்னர் Options மெனுவில் “General” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு பைல்கள் சேவ் செய்யப்படும் போல்டர் குறித்த இடம் Default File Location என இருக்கும். இங்கு எந்த போல்டரை மாறா போல்டராக, எக்ஸெல் பைல்கள் சேவ் செய்திடும் போல்டராக மாற்ற விருப்பமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். பின்னர், வேறு ஒரு போல்டரைத் தேர்ந்தெடுக்க எண்ணினால், இதே வழிகளைப் பின்பற்றி மாற்றிவிடலாம்.

வாழ்க்கை இன்பத்திற்கு...!

`உங்கள் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுவையாக அமைய வேண்டுமா? நீங்கள் உங்கள் வாழ்வில் யாரையாவது மிக முக்கிய முன்னோடி மனிதராக கருதி, அவரை பின்பற்றி வாழ விரும்புகிறீர்களா? அந்த முக்கியமான மனிதர் வேறு யாருமல்ல அது நீங்கம் தான்! இதை நீங்கள் உணர்ந்தீர்களானால், உங்கள்வாழ்க்கை சுகமாக அமையும்' என்கிறார், முற்போக்குச் சிந்தனையாளர் சித்ரா ஜா. தொடர்ந்து அவரது சிந்தனைக் கருவூலங்கம் உங்கள் கவனத்திற்கு...
`நான் நல்லவனா?' -இந்தக் கேள்வியை உங்களுக்குள்ளே அடிக்கடி கேட்டுக் கொள்ளுங்கள்.`உங்களுக்குள் இருக்கும் சுயநலம் தான் உங்களை உங்களிடமிருந்தே தூரமாக்குகிறது!' என்பதை நீங்கள் விடையாகக் கொண்டால், அந்த எண்ணம் உங்களை முதிர்ச்சியுற்ற பண்பாளனாக பரிமளிக்கச் செய்யும். எந்த ஒரு அர்த்தமற்ற பொருளையும் பிறரிடமிருந்து எதிர்பார்த்து நிற்கும் எண்ணத்தை மாற்றி அமையுங்கள்! இலவசம் இனிது என்ற சிந்தனை உங்களை இன்னொருவரை நம்பி வாழும் நிலைக்குத் தள்ளிவிடும்.
சிலர் தங்களால் முடிகிற காரியத்தை செய்ய முயலாமல் நொண்டிச்சாக்கு சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவ்வாறே உங்களிடமும் எந்த ஒரு காரியத்திற்கும் நொண்டிச்சாக்கு சொல்லும் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடுங்கள்!
வாழ்க்கை போக்கில் சில தடைகள் உங்களை மேற்கொள்ள பார்க்கலாம். தடைகளைத்தாண்டி வாழ்க்கையை முன்நடத்திச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த ஏதாவது ஒரு சிறு குற்றத்திற்காக உங்கம் மனதை வீணாக அலட்டிக்கொள்ளாமல் சுதந்திரமாக செயல்படுங்கள்.
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டு மனதை வருத்திக் கொண்டிருக்காதீர்கள்.
உங்கம் முயற்சி அல்லது முயலாமை குறித்து அதிகநேரம் சிந்தித்து காலவிரயம் செய்யாதீர்கள்.
`ஒரு காரியத்தை செய்து முடித்தபிறகு `அதை அப்படிச் செய்திருக்கலாமே... இதை இப்படிச் செய்திருக்கலாமே..!' என்று மாறிமாறி சிந்தித்து, குழம்பிக் கொண்டிருக்காதீர்கள்.
உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் அதன் விளைவுக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்பதில் தெளிவாயிருங்கள். ஏதேனும் தவறு நேர்ந்தால் நீங்களே பொறுபேற்றுக் கொள்ளுங்கள். பிறர் மீது பழிபோடும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
உங்கள் வாழ்வில் உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நல்ல சந்தர்பத்தையும் நழுவ விடாமல், அதனை முழுமையாக பயன்படுத்துங்கள்.
கடந்த கால சிந்தனைகளில் அதிக நேரம் ஆழ்ந்து விடாமல் நடப்பு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவை நல்லபடியாக நடப்பதற்கு, முழுக்கவனத்துடன் செயல்படுங்கள்.
முன்னேற்றம் பற்றியே எப்போதும் சிந்திங்கள். சிலநேரங்களில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைக் கண்டு ஒருபோதும் பின்னோக்கி போய்விடாதீர்கள்.
அறிந்தோ, அறியாமலோ யாருக்கேனும் உங்களால் சிறு தீங்கு நடந்திருந்து அதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்தால், அதை உடனே கேட்டு விடுங்கள். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போடாதீர்கள்.
உங்கம் வாழ்வில் நிகழும் எல்லா செயல்களுக்கும் நீங்கள்தான் காரணம் என்பதை பகுத்துணர்ந்து கொள்ளுங்கள். பிறர்மீது பழிபோடுவது முட்டாள்தனமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சந்தேகம் ஏற்படுகிற காரியங்களில் `நாம் செய்வது சரிதானா? சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறோமா?' என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

படுக்கையில் சிறுநீர்...!

சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு. அதற்கு 3 காரணங்கள் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.

1. மரபு ரீதியானது,

2. ஹார்மோன் மாற்றங்கள்,

3. கவலை மற்றும் பயம்.

இவை தவிர சிறுநீர் பை சரிவர வளர்ச்சி அடையாததாலும் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்க வாய்ப்பிருக்கிறது.
தடுப்பது எப்படி?
* படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக குழந்தைகளை அடிக்கவோ, திட்டவோ கூடாது.
* குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக பேச வேண்டும். பயம், கவலை ஏற்பட காரணங்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு நம்பிக்கையூட்டுங்கள்.
* இரவில் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் மற்றும் திரவ உணவுகள் கொடுபதையும் நிறுத்துங்கள்.
* 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் படுக்கையில் சிறுநீரை உறிஞ்சும் துண்டுகளை விரிக்கலாம்.
* குழந்தையின் படுக்கையை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் மாற்று ஏற்பாடுகளை செய்வது அவர்கள் நிம்மதியாக உறங்க உதவும்.
* தூங்கச் செல்லும் முன் சிறுநீர் கழித்து விட்டு வந்து படுக்கச் சொல்லலாம்.
* குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்திருந்தால் அந்த நேரத்திற்கு எழுப்பி கழிவறைக்கு கொண்டு சென்று விடலாம்.

கடலில் மேயும் பசுக்கள்


டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை பற்றி தெரிந்துள்ள நாம், தமிழக கடற்பகுதியில் வாழும் மற்றுமொரு அரிய கடல்வாழ் பாலூட்டியான கடல் பசுக்களை பற்றி அதிகம் அறிந்துகொள்ளவில்லை என்றே சொல்லலாம். இதற்கு காரணம் டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை போல இல்லாமல் கடல் பசுக்கள் மனிதர்களுக்கு சாதாரணமாக தென்படுவதில்லை. ஆங்கிலத்தில் டுகோங் (ஈஞிகீச்ஙூகீ) என்று அழைக்கபடும். இவை தமிழகத்தில் கோடியக்கரை முதல் தூத்துக்குடி வரை உள்ள ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணபடுகின்றன. மீனவர்கள் இதை `ஆவுரியா' என்று அழைக்கின்றார்கள். இவை வேகமாக நீந்தத் தெரியாத அப்பாவிகள்.

கடல் பசுக்களுக்கும்- டால்பின்களுக்கு இடையே உள்ள முக்கிய வித்தியாசம் முதுகு துடுப்பாகும். டால்பின்களுக்கு இருப்பதுபோல் கடல் பசுக்களுக்கு முதுகு துடுப்புகள் இல்லை. இவை கடலின் மேற்பரப்பில் டால்பின்களை போல் டைவ் அடிபதில்லை. மூக்கை மட்டும் வெளியே நீட்டி காற்றை சுவாசிக்கின்றன. எனவே எளிதில் மீனவர்களின் கண்களுக்கு கூட கடல் பசுக்கள் தட்டுபடுவதில்லை. குணத்திலும் டால்பின்களை விட மிகவும் சாதுவான தன்மை கொண்டவை. இவற்றின் உடல் பழுப்பு வண்ணத்தில், சுமார் மூன்று மீட்டர் நீளம் வரை இருக்கும். உலகின் சுமார் 40-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல நாடுகளில் கடல் பசுக்கள் வாழ்வதாக ஆராய்ச்சி முலம் தெரியவந்துள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால், கடலில் இருக்கும் பாலூட்டி வகைகளிலேயே தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய முழு வெஜிடேரியன் கடல் பசுக்கள் தான்.
நம் ஊரில் மாடுகள் மேய்வது போல், கடல் பசுக்கள் கடல் அடியில் வளரும் புல்வகை களை மேய்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக, கடல் புற்களின் வேர்களில் அதிக அளவு ஊட்டச் சத்துக்கள் இருப்பதால், அவற்றை வேருடன் பிடுங்கி அப்படியே சாப்பிடுவதில் கடல் பசுக்கம் கில்லாடிகள். கடந்த வருடம், தாய்லாந்து கடற்பகுதியில் கடலுக்கு அடியில் பயணிக்கும்போது கடல் பசுக்கள் மேய்ந்த தடங்களை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது.
`நம் ஊரில் வயலில் மாடுமேய்ந்த தடத்தை பார்பதை போலவே இருகின்றதே' என்று எண்ணி வியந்தேன். எனக்கு தாய்லாந்தில் உள்ள `திராங்' என்ற ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆச்சரியமான செய்தி என்னவென்றால், அங்கு உள்ள நகரின் முக்கியமான பகுதியில், அரசியல் தலைவர்களுக்கு சிலை வைப்பது போல கடல்பசுக் களுக்கு சிலை வைக்கபட்டுள்ளது. அந்த நகரின் நினைவாக ஏதாவது பொருட்கள் வாங்க சென்றால் கடல்பசுக்களின் சிறிய பொம்மைகளையே விதவிதமாகத் தருகிறார்கள். அங்குள்ள மக்களிடம் கடல் பசுக்களை பற்றிய விழிப்புணர்வும், அவற்றை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைய இருக்கிறது.
கடல் பசுக்கள் மனிதர்களை போலவே நீண்ட ஆயுள் கொண்டவை. அவற்றின் பற்களில் உள்ள வளையங்களை கொண்டு வயதை கணிக்க முடியும். உதாரணமாக, ஒரு பெண் கடல் பசுவின் பல்லை ஆய்வு செய்தபோது, அதன் வயது 73 என்று தெரிந்திருக்கிறது. பத்து முதல் பதினைந்து வயதிற்கு பிறகே இவை குட்டி போடும் பருவத்தை அடைகின்றன. குட்டிகள் பொதுவாக 13 மாதங்கள் தாயின் வயிற்றில் வளர்கின்றன.
ஒருமுறை ஒரு குட்டி மட்டுமே போடும் கடல் பசுக்கள் அடுத்தடுத்த குட்டிகளை போட 3 முதல் 7 வருடம் வரை எடுத்து கொள்கின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கடல் பசுக்கம் வேகமாக தங்கள் இனத்தை பெருக்குவதில்லை. இந்த இயல்பான குணமே இவற்றின் அழிவுக்கும் காரணமாக அமைந்து விட்டது. சுற்றுசூழல் மாசுபாடு, வேட்டை யாடுதல் போன்ற மனித நடவடிக்கைகளால் வேகமாக அழிந்து வரும் கடல் பசுக்கள், அதற்கு ஈடான வேகத்தில் இனபெருக்கம் செய்வதில்லை. எனவே உலக இயற்கை வளங்களை பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு , கடல் பசுக்களை அழியும் தருவாயில் உள்ள விலங்குகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்திய அரசும் கடல் பசுக்களை வேட்டையாடுவதையோ, உணவுக்காக அதன் இறைச்சியை விற்பதையோ தடை செய்துள்ளது.
கடல் பசுக்களின் இறைச்சி அசைவ பிரியர்களுக்கு பிடித்ததாக இருப்பதால், இந்தியா உட்பட சுமார் 31 நாடுகளில் இவை பல காலமாகவே வேட்டையாடபட்டு வருகின் றன. நம் பகுதி மீனவர்கள் பொதுவாக கடல் பசுக்களை வேட்டையாடச் செல்வதில்லை. ஆனால் மீன்களுக்காக கடலில் போடபடும் வலைகளில் சில சமயம் கடல் பசுக்கள் வந்து சிக்கி கொள்ளும்போது அவை பிடிக்கபடு கின்றன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத் தி, தமிழக கடற்பகுதியில் கடல் பசுக்கள் வாழும் இடங்கள் பாதுகாக்க வேண்டும். மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதி முழுவதும் ஏற்கனவே பாதுகாக்க பட்டுள்ளது. அதை போல பாக் ஜலசந்தி (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை) பகுதிகளில் உள்ள கடற்பசுக்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர் சிகிச்சை...

கோமளங் கூடு மருந்து , நலங்கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து நாமள வாத மருந்து, நம்மை
நாமறியும்படி நண்ணு மருந்து - வள்ளலார்
மனம் எவருடனும் இணைவதைப் போல் நீரும் எதனுடனும் இணையும் கரையும். அவைகளின் தன்மைகளைப் பெறும் கலரைப் பெறும். நம் உடலில் முக்கால் பங்கு நீரே உள்ளது. உலகின் அளவும் அதுவே. நீர் நமது தினசரி தேவைகளில் ஒன்று. குறைந்தது 3 முதல் 3,5000 லிட்டர் குடிநீர் நமது நாட்டில் ஒரு நபருக்கு தேவை.

1. காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மறுத்து மாற்றாக சுத்தமான குடிநீ¢ர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும். சரியாகிவிடும். மலச்சிக்கல் நீங்கும்.
2. அடிக்கடி நீரில் முகம் கழுவ மன அழுத்தம் விலகும். புதிய சுறுசுறுப்பு வரும். முகம் கழுவிய பின் துணயால் துடைக்கக்கூடாது. அப்படியே விட வேண்டும்.
3. ஈரத்துணி பட்டி நெற்றியில் அடிக்கடி போடலாம். அதனால் தலை பாரம், மூளைச்சுடு, மனஉளைச்சல், மனசோர்வு கணிசமாகக் குறையும். புத்துணர்ச்சி தோன்றும். இது உறுதி. வயிற்றிலும் போடலாம்.
4. காலை மாலை இருநேரம் குளியல் எடுக்கலாம். சாதாக்குளியலை விட ஷவர்பாத், அருவி, மழைக்குளியல் மிக நல்லது. மன அழுத்தம் உடன் சீர்படும்.
5. இடுப்புக் குளியல் தொட்டியிலும், முதுகுத் தண்டு தொட்டியிலும், ஜெட் குளியலிலும் தினமும் அல்லது வாரம் இருமுறை குளித்திடலாம்.
இத்தொட்டிகளை வாங்கி வீடுகளில் அல்லது இயற்கை மருத்துவ முகாம்களில், இயற்கை மருத்துவ மனைகளில் இத்தொட்டிகள் கிடைக்கும். 20 முதல் 30 நிமிடம் குளித்திட வேண்டும்.
6. கடல் குளியல், குளக் குளியல், நீச்சல் குளியல்கள் அனைத்தும் மன அழுத்தம் சீர்பட எளிய குளியல் முறைகள்.
7. மன அழுத்தம், மன உளைச்சல், மன குழப்பம், கோபம், சினம், எரிச்சல், மன பொருமல், நிலையற்ற மனம் உள்ளவர்கள் தம்மிடம் எப்போதும் எங்கும் குடிநீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சினம், கோபம் தொடங்கும் சமயமே குடிநீர் குடித்து மட்டுப்படுத்தலாம்.
குடிதண்ணீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்தும மாயமாக்கும். இது உண்மை.
நமது உடலில் அச்சமயம் அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் ஏற்படும். உருவாகும் அமிலங்களையும் உடம்பில், இரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே நீரை நாம் சிறப்பாக, சரியாக, நன்றாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம்.
8. மலச்சிக்கல்: பல மணி நேரம் பஸ், ரயில் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள சூழல், பணி, தவறான அமில உணவுகள் மிகுதல் மூலம் மலச்சிக்கல், மலக்கட்டு, மலம் கெட்டிப்படுதல் இறுகுதல் உண்டாகும் சமயம் உடல் இரத்தம் அமிலமாகி, அசுத்தமாகி உடலில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு திசுக்கள், காந்தசக்தி தறி கெடும் சமயம் மன அழுத்தம் மாறுபாடு அடைகிறது. வேறுபாடு அடைகிறது. எரிச்சல், கோபம், சினம் உச்சநிலையை எட்டுகிறது. அச்சமயம்.
1. காலையில் குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் குடிக்கலாம்.
2. இரவில் கனி உணவுகள் மட்டும் சாப்பிடலாம். தோலுடன் சாப்பிட்டுப் பழக வேண்டும்.
3. சில உடற்பயிற்சிகள், யோகா செய்யலாம்.
4. இடுப்புக் குளியல், வயிற்றில் மண்பட்டி, வயிற்று ஈரத்துணி பட்டி எடுக்கலாம்.
5. இரவில் 5 கிராம் ( 1 டீஸ்பூன்) அளவில் திரிபலா பொடி, அல்லது கடுக்காய் பொடி, அல்லது நிலவாரைப் பாடி,அல்லது முருங்கைக்கீரைப் பொடியை நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட இருவேளையில் மலக்கட்டு விலகும்.
6. இவை ஐந்தும் செய்ய இயலாமல் செய்தும் பலன் இல்லாதவர்கள் மட்டும் அஹிம்சை எனிமா எனப்படும் கருவி மூலம் 200 முதல் 300 மி.லிவரை நல்ல சுத்த நீரை மலவாய், குடல் மூலம் ஏற்றினால் இரு நிமிடங்களில் திரும்ப நீருடன் கெட்டி மலம் இளகி வெளியேறும். தேவைப்படும் சமயம் மட்டும் எனிமாக் கருவியை பயன்படுத்தலாம். தினமும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எனவே நீரை சரியாகப் பயன்படுத்தும் கலையை அறிந்தாலே நமது மன அழுத்தம் பாதி குறைந்துவிடும். விலகி விடும்.
அதுபோல் உண்மைப் பசியை அறிவதற்கும் நீர் நல்ல நண்பனாக வழிகாட்டியாக, டெஸ்டராக உள்ளது.
உடலில் பசி ஏற்படும் சமயம், பசி நரம்புகள் சுண்டப்படும் சமயம் 50 முதல் 60 மி.லிட்டர். அரை டம்ளர் நீர் அருந்திடும் சமயம் குறைந்தது 15 நிமிடமாவது உச்சப் பசி ஏற்படவில்லை எனில் அது பொய் பசியே.
நீர் அருந்திய ஐந்து நிமிடத்திற்குள் உச்சப் பசி தோன்றிய அது உண்மைப் பசி எனலாம்.
அதேபோல் உணவிற்கு முன் பிரார்த்தனை அவசியம் அரக்கப் பரக்க ஐந்து நிமிடத்தில் சாப்பிடக்கூடாது. உணவிற்கு முன் ஆசமனம் எனப்படும் ஒரு மடக்கு நீரை கையில் ஊற்றி உறிஞ்சிட பசியின் தன்மை, உடலின் காந்தை சமப்பட்டு ஜீரணம் மேம்படும் தன் மயமாதல் சிறப்படையும்.
உணவுடன், உணவு முடித்தவுடன் நீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.
உணவு முடித்து 30 நிமிடம் கழித்தக் குடிக்கும் நீர் நல்ல பலனைத் தரும்.
"வாய் பிடியாத மருந்து மத
வாதமும் பித்தமும் மாய்க்கு மருந்து
நோய் பொடியாக்கு மருந்து அன்பர்.
நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து
- வள்ளலார்.

"வெஸ்டர்ன் டாய்லெட்'டை பயன்படுத்த தெரியுமா?

"வெஸ்டர்ன் டாய்லெட்' பற்றி, அதை உபயோகிக்கும் முறைபற்றி, 99 சதவீதம் மக்கள் அறியாமல் இருப்பது குறித்த கவலை, ஒரு ஆய்வு செய்ய என்னைத் தூண்டியது. 120 பேரிடம் நடத்தினேன். நான் அறிந்த, ஆராய்ந்த வீடுகளில், "வெஸ்டர்ன் டாய்லெட்' வைத்திருக்கும் அத்தனை பேருமே, அதை உபயோகிக்கும் முறைபற்றி அறியாமல் இருந்தது அதிர்ச்சியே!
"வெஸ்டர்ன் டாய்லெட்'டில், மூன்று பகுதிகள் உண்டு. கோப்பை, வளையம், தட்டு (மூடி).
சிறுநீர் மட்டும் கழிப்பவர்கள், வளையம் மற்றும் தட்டு இரண்டையும் தூக்கிவிட்டுத் தான் சிறுநீர் கழிக்க வேண்டும். மூடியை மட்டும் தூக்கி சிறுநீர் கழித்தால், அடுத்து வருபவர் மலங்கழிக்க வளையத்தின் மேல் உட்காரும் போது, முந்தையவரின் சிதறிய சிறுநீர், பின்னவரின் உடலில் பட ஏதுவாகிறது. மலம் கழிப்பவர்கள், தட்டை மட்டும் தூக்கி, வளையத்தின் மேல் அமர வேண்டும் என்பது பலரும் அறிந்ததே. முதலில், "ப்ளஷ்' செய்துவிட்டு, மலம் சென்ற பின், இறுதியில், மீண்டும், "ப்ளஷ்' செய்ய வேண்டும். கோப்பை, எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும். கோப்பையில் உள்ள நீரில், மலத் துகள்கள் மிதந்து கொண்டிருக்கக் கூடாது. "ப்ளஷ்' செய்த பின்னும் மலத் துகள்கள் மிதந்து கொண்டிருந்தால், வாளியில் தண்ணீர் எடுத்து வேகமாக ஊற்றினால், எல்லா கசடுகளும் உள்ளே தள்ளப்பட்டு, தேங்கி இருக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கும். கோப்பைக்கு வலது பக்கத்தில், "ஹாண்ட் ஷவர்' இருக்குமாறு அமைப்பது நலம். டிஷ்யூ பேப்பரின் உபயோகத்தை நாம் எள்ளி நகையாடுகிறோம். மலம் கழித்தபின், "டிஷ்யூ' பேப்பரில் துடைத்து விட்டு, தண்ணீர் விட்டு கழுவினால், கை அதிகமாக மாசுபடுதல் தவிர்க்கப்பட்டு, தண்ணீர் செலவும், நோய்க் கிருமிகள் பரவுதலும் தடுக்கப்படுகிறது.
அது எத்தனை சுலபமானது, சுகாதாரமானது, வசதியானது என்பதை, அதை உபயோகப்படுத்திப் பார்த்தால் தான் புரியும். 'டிஷ்யூ பேப்பரும்,' அதன், "ஹோல்டரும்,' கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது அவசியம். தினமும் காலையும், இரவும், "ஹேண்ட் ஷவரைக்' கொண்டு, தட்டின் அடிப்பாகத்தையும், வளையத்தின் அடிப்பாகத்தையும் சுத்தம் செய்தால், ஏதேனும் பூச்சிகள் ஒளிந்திருந்தாலும், கண்டு அகற்றி விடலாம். அமெரிக்க விமான நிலையத்தில் ஒரு பெண், கழிவறையில் மர்மமான முறையில் மயக்கமுற, வளையத்தின் அடியில் இருந்த பூச்சி கடித்தது தான் காரணம் என செய்தித்தாள்களில் படித்திருப்பீர்களே! மலச்சிக்கல், ஹெர்னியா இருப்பவர்கள், "வெஸ்டர்ன் டாய்லெட்'டை உபயோகிக்காமல் இருப்பது நலம். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முடக்குவாதம், மூட்டு வலி இருப்பவர்களுக்கு, "வெஸ்டர்ன் டாய்லெட்' ஒரு வரப்பிரசாதம். சிறு வயதிலிருந்தே சாதாரண கழிப்பறையை உபயோகிப்பவர்களுக்கு, முழங்கால் வலி ஏற்படுவது குறைவு என மருத்துவ ஆய்வு கூறுகிறது!

கோபத்தை கையாள எளிய வழிகள்...


1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.
2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.
3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்
4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.
7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.
8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.
9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.
11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.
12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.
13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

பன்றிக் காய்ச்சல் வராமல் தவிர்ப்பது எப்படி?

இன்ப்ளுயென்சா என்றழைக்கப்படுவது சாதாரண குளிர் காய்ச்சல் தான். வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய் இது. ஒவ்வொரு ஆண்டும் இது ஏற்பட்டாலும், ஆண்டுக்கு ஆண்டு சற்றே வித்தியாசப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த வைரஸ் உருமாற்றம் பெற்று, அதிக வீரியம் அடைகிறது. அப்போது வேகமாகப் பரவி, உலகளவில் தொற்று ஏற்பட்டு, அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. கடந்த ஆண்டு, எச்1என்1 வைரஸ் தொற்று ஏற்பட்டதே; அது, இது போல் உருவானது தான். பறவைகள், பன்றிகளிடம் தோன்றிய இந்த தொற்று, ஒன்று என்ற நிலையிலிருந்து, அதிவேகமாகப் பரவும் தொற்றாக, எட்டாம் நிலைக்கு முன்னேறி விட்டது என, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டம் பரவும் அதிதீவிரமான வைரசாக இது உருமாறி விட்டது என, இந்த மையம் அறிவித்தது. இந்த மையம் அச்சம் கொண்டதற்கேற்ப, எச்1என்1 வைரஸ் உலகம் முழுவதும் பரவி விட்டது.
தொற்று பரவும் பூகோள அமைப்பின் மையப் பகுதியில் இந்தியா உள்ளது. எனவே, இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்த தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. பன்றிக் கறி சாப்பிட்டாலோ, பன்றிகளைத் தொடுவதன் மூலமோ இந்த நோய் வருவது இல்லை. ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாக இந்நோய் பரவுகிறது.
இருமல், தும்மல், எச்சில் துப்புதல் ஆகிய செயல்களின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. ஒரு தும்மலுக்கு 40 நீர் துளிகள் வெளிவருவதால், அதிலிருந்து தொற்று பரவுகிறது. இந்த துளிகள், தரைகளில், சுவர்களில், கதவுகளில், கைப்பிடிகளில், காசுகளில் என, மனிதன் பயன்படுத்தும் அனைத்து பகுதிகளிலும் படர்கிறது. கையைச் சுத்தம் செய்யாவிட்டால், ஒருவர் கையிலிருந்து அடுத்தவருக்குப் பரவி விடுகிறது.
அதிக சூடு மற்றும் புற ஊதாக் கதிர்கள், 5 முதல் 15 நிமிடத்தில் இந்த வைரசை அழிக்கின்றன. ஆனால், சளியுடன் கலந்து வெளியாகும் இந்தக் கிருமி, 48 மணி நேரம் வரை உயிர் வாழும். அதிக மக்கள் புழங்கும் இடங்கள், காற்று குறைவான இடங்கள், வெயில் படாத இடங்களில், இந்தக் கிருமி வேகமாகப் பரவும். தொற்று ஏற்பட்டிருக்கும் ஒருவரின் அருகில் செல்லும் மற்றொருவருக்கு, 2 - 3 நாட்களில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படத் துவங்கும்.
சாதா சளி போல உருவாகும் இந்தத் தொற்று, சோர்வு, காய்ச்சல், தலைவலி, மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவந்து தண்ணீர் வழிதல், தசைகளில் வலி ஆகியவற்றுடன் தீவிரமடையும். அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களுக்கு, எட்டு நாட்கள் இது தொடரும். அதன் பிறகு, முற்றிலுமாக குணமடைந்து விடும். நோயை பரிசோதனை செய்து கண்டறிய வேண்டும். சாதா குளிர் காய்ச்சலுக்கும், எச்1என்1 காய்ச்சலுக்கும் அறிகுறிகள் ஒன்றே. தொண்டை மற்றும் மூக்கில் உள்ள திரவங்கள் வழித்தெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பரிசோதனைக் கூடங்களில் இந்த பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். இந்தக் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்க மருந்துகள் கொடுக்கப்படும். கடும் காய்ச்சல் ஏற்பட்டால், பாரசிட்டமால் 500 மி.கி., மாத்திரை போடலாம். ஆனால், நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை தான் இம்மாத்திரை போடலாம். அதற்கும் குறைவான இடைவெளியில் போடக் கூடாது. ப்ரூபென் போன்ற வலி நிவாரணிகளும் போட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் கொடுக்கவே கூடாது. கொடுத்தால், அதி பயங்கரமான ரேயஸ் சிண்ட்ரோம் என்ற பாதிப்பை ஏற்படுத்தி விடும். உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆசெல்டாமிவிர் (டாமிப்ளூ), ஜானாமிவிர் (ரெலென்சா) போன்ற குறிப்பிட்ட மருந்துகளும் இதற்கு உள்ளன. சரியான சிகிச்சை முறை என்பது, பாதிப்பு ஏற்பட்ட 48 மணி நேரத்தில் துவங்குவது தான். அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்க முடியுமே தவிர, தொடர்ந்து இந்த மருந்துகள் உட்கொள்ளும் போது, இந்த மருந்துகளுக்கு வைரஸ் கட்டுப்படாத நிலை ஏற்படும். மருந்து உட்கொண்டால், நிமோனியா, நுரையீரல் தொடர்பான நோய்களைத் தவிர்க்கலாம்.
எந்த மருந்தையுமே, டாக்டரின் பரிந்துரை இன்றி சாப்பிடக் கூடாது. நோய் வருமுன் தடுக்கும் வகையில் இந்த மருந்தை உட்கொள்ளலாம் என்று கருதலாகாது. தொற்று இருந்தால் மட்டுமே, இந்த மருந்து பலன் தரும். குழந்தைகள், 65 வயதைக் கடந்த முதியோர், கர்ப்பிணிகள், சிகரெட் புகைப்பவர்கள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், எச்.ஐ.வி., தொற்று உள்ளவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த தொற்று ஏற்பட்டால், அதிக சிக்கல் உண்டாகும்.
பாதிப்பு அதிகமானால், மாரடைப்பு, ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் செய லிழத்தல் ஆகியவை ஏற்படும். பல்லுறுப்பு செயலிழத்தல் ஏற்பட்டு, நுரையீரல் முற்றிலும் செயலிழந்து போகும்.
குளிர் காய்ச்சலை தடுத்து, அது பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
* நோயாளிகளை பார்த்த உடன், கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பணத்தை கையாண்ட பிறகு, ஒவ்வொரு முறையும் கை கழுவ வேண்டும்.
* கதவின் கைப்பிடிகளை, கிருமிநாசினி மூலம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
* வெளியில் செல்லும் போது, முகமூடி அணிய வேண்டும்.
* இருமல், தும்மல் ஏற்படும் போது, கைக்குட்டையால் மூக்கை, வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
* வெளியிடங்களில் எச்சில் துப்புவதை அறவே தவிர்க்க வேண்டும். எச்1என்1 வைரஸ் நோய் தடுப்பு மருந்து உள்ளது. ஊசி வகை, மூக்கில் ஸ்பிரே போட்டுக் கொள்ளும் வகை ஆகியன உள்ளன. 2 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு, மூக்கு வழியே ஸ்பிரே செய்யலாம். 6 மாதக் குழந்தைகளுக்கு ஊசி மருந்தே போட வேண்டும். இரண்டுமே, சிறந்த வகைகள் தான்.
மூக்கு வழியே போடப்படும் தடுப்பு மருந்தால், பயன்கள் அதிகம். மூக்கில் உள்ள சளியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கிருமிகளும் அழிய வாய்ப்பு ஏற்படும். தடுப்பு மருந்து போட்டாலும், சிலருக்கு தொற்று ஏற்படலாம். ஆனால், அது குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்தும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த தொற்று, ஏப்ரல் மாதம் வரை தென்படும். எனவே, நோய் தடுப்பு மருந்து போட்டுக் கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இன்னொரு பூமி' இருக்குமா?

இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது.

நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மெக்சிகோ அருகே விழுந்த ஒரு விண்கல்லில் சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கிரகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலைகளிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் ண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள `உர்சா மேஜர்' என்ற நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

`இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது' என்கிறார், டெப்ரா பிசர்.

வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !

நேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழிகள் :

1.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது.

2. முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல !

3. உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் !

4. முடியாது என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் : நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் ! இது உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்.

5. காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் : ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.

6. போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் : ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது உளவியல்.

7. எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் : உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால், குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்.

8.மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் : மின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர் : அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.

9. தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து விடுங்கள்: இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும்.

10. செயல்பட அதிக நேரம் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்: ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும். வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே.

வேர்டில் டூல் பார்களை அமைக்கும் வழிகள்

கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளிலும் டூல்பார்கள் தரப்படுகின்றன. டூல்பார்களில், நாம் மேற்கொள்ளும் வேலைகளுக்கான டூல் ஐகான்கள் வரிசையாக அமைக்கப் படுகின்றன. இதன் மூலம், இந்த ஐகான்கள் மீது ஒரு கிளிக் செய்து, பின் கிடைக்கும் மெனுக்களில், விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, நான்கு ஐந்து கிளிக்குகளில், ஒரு வேலையை நம்மால் முடிக்க முடியும். எடுத்துக் காட்டாக, எம்.எஸ். வேர்ட் தொகுப்பில், சில கிளிக்குகளில், ஒரு சொல்லை, அல்லது சொற்கள் அடங்கிய தொகுதியை, அழுத்தமாகவோ, சாய்வாகவோ, அடிக்கோடிட்டோ அமைக்க முடியும். பார்மட் மெனு தேர்ந்தெடுத்து, பாண்ட் செலக்ட் செய்து, அதன் பின் போல்டு அல்லது மற்றவற்றின் மீது கிளிக் செய்து மேற்கொள்ளும் பணியினை, ஒரு சில கிளிக் மூலம் மேற்கொள்ளலாம்.
வேர்டில் இது போல நிறைய டூல்கள் உள்ளன. இவற்றை எப்படி டூல்பார்களில் அமைத்து இயக்கலாம் என்பதனை இங்கு பார்க்கலாம். இங்கு பலரும் தற்போது பயன்படுத்தி வரும் வேர்ட் 2003 தொகுப்பிற்கான உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை இதற்கு முன் வந்த தொகுப்புகளுக்கும் உதவும். சில குறிப்புகள் வேர்ட் 2007க்கும் தரப்பட்டுள்ளன.
1.எந்த டூல்பார்கள் திரையில் வேண்டும்?
இதற்கான விடை இது சரி அல்லது தவறு என்று கூற முடியாது. எந்த டூல்பார்கள் என்பது, ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்தே அமையும். அனைத்து டூல்பார்களையும் திரையின் மேலாக அமைத்துக் கொண்டால், பின்னர், டெக்ஸ்ட் அமைக்க மிக மிகக் குறைந்த இடமே கிடைக்கும். ஏற்கனவே எந்த டூல்பார்கள் திரையில் காட்டப்பட்டுள்ளன என்று அறிய, மெனு பாரில் View அழுத்தி, கர்சரை Toolbars என்பதில் கொண்டு சென்றால், அருகே ஒரு மெனு விரிந்து, அதில் திரையில் உள்ள டூல்பார்கள் அனைத்தும் டிக் அடையாளத்துடன் காட்டப்படும். கூடுதலாக ஒரு டூல் பார் வேண்டும் என்றால், அந்த பிரிவில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் போதும். தேவையற்றவை என்று கருதும் டூல்களில் டிக் அடையாளத்தை எடுத்துவிட்டால், அவை மறைக்கப்பட்டுவிடும்.
2. டூல் பார்களைத் தனித்தனியே காட்ட:
இந்த மெனுவில் இரண்டு டூல் பார்களில் டிக் அடையாளம் கொண்டிருந்து, ஆனால் மேலாக ஒரு டூல் பார் மட்டுமே காட்டப்பட்டிருந்தால், இரண்டும் ஒன்றாக அடுத்தடுத்து இணைப்பாகக் காட்டப் பட்டிருப்பதனைக் காணலாம். இந்த டூல்பார்கள், தனித்தனியாகத்தான் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால்,Tools மெனுவிலிருந்து Customize என்பதில் கிளிக் செய்திடவும். (அல்லது View மெனு சென்று, Toolbars தேர்ந்தெடுத்து, அதன்பின் Customize என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ஏதேனும் ஒரு டூல்பாரில் ரைட் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் மெனுவில், Customize தேர்ந்தெடுக்கவும்.) பின்னர் Options டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Show Standard and Formatting Toolbars on two rows” என்று இருப்பதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். பின்னர் Close என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
டூல்பாரில் தேவைப்படாததை நீக்கவும், புதியனவற்றை இணைக்கவும் என்ன செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம். ஒவ்வொரு டூல்பாரின் வலது பக்கத்திலும், ஒரு சிறிய கீழ் விரி அம்புக்குறி இருக்கும். இதனை அழுத்தினால், இரண்டு ஆப்ஷன்ஸ் கிடைக்கும். மவுஸ் கர்சரை Add or Remove பட்டன் மீது கொண்டு செல்லவும். பின்னர் எந்த டூல் பார் மீது செயல்பட வேண்டுமோ அதன் மீது கொண்டு செல்லவும். (எ.கா. Standard ) இப்போது அந்த டூல் பாருக்குரிய அனைத்து பட்டன்களும் காட்டப்படும். இந்த பட்டியலில் ஏற்கனவே காட்டப்பட்ட டூல் பார்களில், டிக் அடையாளம் இருக்கும். இவற்றின் மீது கிளிக் செய்தால், அவை டூல்பாரிலிருந்து நீக்கப்படும். இல்லாதவற்றின் மீது டிக் செய்தால், அவை மேலே இணைக்கப் பட்டுக் காட்டப்படும். எந்த டூல்பாரையும், ஏற்கனவே அது இருந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், பட்டியலின் கீழாக உள்ள Reset Toolbar என்பதில் கிளிக் செய்திடவும்.
3. புதிய டூல்பார்களை அமைக்கும் வழிகள்
நாமாகச் சில டூல்பார்களை இத்தொகுப்புகளில் உருவாக்கலாம். இதில் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் கட்டளைகளை அமைக்கலாம். அல்லது மற்ற டூல்பார்களில் இல்லாத கட்டளை களுக்கான டூல்பாரையும் அமைக்கலாம்.
இதற்கு நீளமாக மெனு பாரினை ஒட்டி உள்ள ஒரு டூல்பாரின் வலது பக்கம் தரப்பட்டிருக்கும், கீழ் நோக்கிய அம்புக் குறியை அழுத்தவும். இதில் Show Button on One Row , Add or Remove ஆப்ஷன்கள் தரப்பட்டி ருக்கும். இதில் Add or Remove பிரிவில் கர்சரைக் கொண்டு சென்று, பின்னர் அங்கு கிடைக்கும் கஸ்டமைஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Toolbars டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பாக்ஸில் New என்பதில் கிளிக் செய்திடவும். நியூ டூல் பார் பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் அமைக்க இருக்கும் புதிய டூல்பாருக்கான பெயர் ஒன்றைத் தரவும். நீங்கள் அமைக்கும் இந்த பெயர், வியூ மெனுவில் டூல்பார் துணை மெனுவில் காட்டப்படும் என்பதால், புரிந்து கொள்ளும் வகையில் அந்த பெயரினை அமைக்கவும். இதில் Make Toolbar available to: என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த டூல்பார் அனைத்து டாகுமெண்ட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், இதில் Normal ® என்பதைத் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது Commands என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், இடது பக்கம் Categories என்னும் பிரிவு இருக்கும். இதில் பைல் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வலது பக்கம் பைல் மெனு கட்டளைகளைக் காட்டும். இன்னும் கூடுதலான கட்டளைகளைப் பார்க்க வேண்டும் என்றால், இந்த பட்டியலில் கீழே சென்று, All commands என்பதனைப் பார்க்கவும். இப்போது எந்த பைல் கட்டளையை நீங்கள் அடிக்கடி பயன்படுத்து கிறீர்களோ, அந்த கட்டளையை, மவுஸ் கர்சரால் பிடித்து அழுத்தியவாறே, புதிய டூல்பாருக்குக் கொண்டு வரவும். இவ்வாறு அழுத்தப்படுகையில் கர்சர் ஒரு பெருக்கல் குறியாகத் தோற்றமளிக்கும். பின்னர், இதனைப் புதிய டூல்பாரில் இடுகையில், அது + அடையாளமாக மாறும். இங்கு வந்த பின் மவுஸ் பட்டனை விட்டுவிடவும். இந்த கட்டளை டூல் பாரில் காட்டப்படும்.
அனைத்து கட்டளைகளுக்கும் ஐகான்கள் இருப்பதில்லை. இல்லாத கட்டளைகளை புதிய டூல்பாரில் இணைக்கும் போது, பெயர் ஒன்று காட்டப்படும். இந்த லேபிளை, ஐகானாக மாற்றவும் முடியும். அதற்கு அந்த பட்டனில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Default ஸ்டைல் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த லேபிள் மறைந்து, ஒரு பட்டன் காட்டப்படும். இந்த பட்டன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Change Button Image என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பட்டியலில் இமேஜ் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஐகானாக அமைக்கவும்.
ஐகானுக்குப் பதிலாக, உங்களுக்கு லேபிள் தான் வேண்டும் என்றால், ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, இமேஜ் அண்ட் டெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்தால் Image and Text காட்டப்படும். இதனை இங்கு தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இவ்வாறு புதிய டூல்பாருக்கான கட்டளை மட்டும் ஐகான் +டெக்ஸ்ட் அமைத்த பின்னர், கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் உள்ள குளோஸ் பட்டனை அழுத்தி வெளியேறவும். மீண்டும் டூல்பார்களை எடிட் செய்திட வேண்டும் என்றால், மேலே காட்டியபடி மெனு மற்றும் பட்டியல்களைப் பெற்று, டூல்பார்களை நீக்கலாம், இணைக்கலாம் மற்றும் எடிட் செய்திடலாம்.