Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

`ஹைவேஸ்' - பெயர் வந்தது எப்படி?


நகரங்களுக்கு இடையே பொதுமக்கள் பயன்படுத்தத்தக்க வகையில் பொதுவான சாலைகள் முதன்முதலில் ரோம் நாட்டில் அமைக்கப்பட்டன. அவை, மற்ற தனியார் அமைத்த சாலைகளை விட உயரமாகவும், சிறந்ததாகவும் இருந்தன. எனவே, பொதுச் சாலைகள் `ஹைவேஸ்' என்று அழைக்கப்பட்டன. இதே போல, `ஹை சீஸ்' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டின் கடலோரத்தை ஒட்டிய மூன்று மைல் தூர கடல் பகுதி பொதுமக்களுக்கு உரியது என்ற பொருளில், `பொதுவானது' அல்லது `பொதுமக்களுக்கு உரியது' என்று உணர்த்தும் விதத்தில் `ஹை' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பலம் தரும் பீட்ரூட் கீரை

பெரும்பாலான கிழங்கு வகைகளில் நார்சத்துக்கள் அதிகம் காணப்படுவதில்லை. வெறும் கார்போஹைட்ரேட் சத்துகள் மட்டுமே பெருமளவு காணப்படுகின்றன. அதிலும் நாம் சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான கிழங்குகள், வெறும் ருசிக்காக மட்டுமே பயன்படுகின்றன. கார்பாஹைட்ரேட் அதிகம் நிறைந்த கிழங்குகளை சிப்ஸ், வறுவல், பொரியல் என எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவதால் அதில் தங்கியுள்ள உயிர்சத்துகள் அழிந்து விடுகின்றன. கிழங்கு மற்றும் விதை வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது அத்துடன் அதன் மேல் பாகங்களான இலை, விதை மற்றும் தண்டுகளையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் காரட், முள் ளங்கி, பீட்ரூட், நூல்கோல், வெந்தயம், சீரகம், ஓமம், வெங்காயம், பூண்டு போன்றவற்றின் கீரைப் பகுதிகளையும் உணவில் சூப் அல்லது அரைத்த விழுதாக சேர்த்து பயன்படுத்தலாம். ஏனெனில் கிழங்குகளில் இல்லாத சில உயிர்சத்துக்களும், கனிமங்களும், அத்தியாவசிய உப்புகளும், நார்சத்துகளும் இந்த கீரைகளில் பெருமளவு உள்ளன. நாம் உண்ணும் கிழங்குகளில் பீட்ரூட்டின் பங்கு இன்றியமையாதது. சமையலில் ருசியையும்,உணவுகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் தருவதுடன், அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதற்கு பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டிலிருந்து சாயம் தயாரிக்கப்பட்டு, பலவிதமான உணவுப் பொருட்களும் நிறமேற்றப்படுகின்றன. பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கீனோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச்செடிகள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன. கிழங்குகளைவிட இதன் இலைகள் ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்டுள்ளன. கிழங்கு மற்றும் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் சி மற்றும் ஏராளமான வைட்டமின்களும், கனிமங்களும் காணப்படுகின்றன. இதிலுள்ள பீட்டைன் என்னும் ஆல்கலாய்டு இருதயத்தை பாதுகாப்பதுடன், போலிக் அமிலம், ஏ வைட்டமின், பி வைட்டமின்கள் மற்றும் புரொஜஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் செயல்பாட்டிற்கும் பெருமளவு உதவுகின்றன. இலை மற்றும் கிழங்குகள், சிறுநீரை நன்கு பெருக்கி, இதய வீக்கத்தை குறைக்கின்றன. பீட்ரூட்டிற்கு இனிப்பு சுவை இருந்த போதிலும் இதன் இலை மற்றும் கிழங்கு சாறானது ரத்த சர்க்கரையளவை குறைக்கின்றன. கல்லீரலின் கொழுப்பை கரைக்கின்றன. பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடாக மாற்றமடைந்து, மென்மையான சதைப்பகுதிகளை சுருங்கி, விரியச் செய்கின்றன. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது. பீட்ரூட் கிழங்குகளை உணவில் அதிகமாக உட்கொள்ளும் பொழுது தற்காலிகமாக சிறுநீர் மற்றும் மலம் சிவப்பாக செல்வதுண்டு. உணவில் உள்ள சத்து, உடலால் முழுவதும் கிரகிக்கப்பட்டதும், இந்நிலை மாறி விடுவதுண்டு. செரிமான கோளாறுகளை நீக்கி, உணவுப்பாதையில் தோன்றிய அழுகல் மற்றும் கழிவுகளை நீக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு. பூண்டு உட்கொள்ளும் பொழுது ஏற்படும் வாய் நாற்றத்தை நீக்கவும் பீட்ரூட் துண்டுகளை வாயில் போட்டு மென்று வரலாம். சாலட், பொரியல், ஜாம், ஊறுகாய், சூப் என பலவகைகளில் உட்கொள்ளப்படுகிறது. பீட்ரூட் இலை மற்றும் கிழங்கை வேகவைத்து, சூப் தயார் செய்யலாம். பீட்ரூட் இலை-2 கைப்பிடியளவு, பீட்ரூட் கிழங்கு-200 கிராம், தக்காளி-2, பெரிய வெங்காயம் அரிந்தது-2 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய்-2, சீரகம் மற்றும் சோம்பு அரைத்த கலவை-ஒரு கரண்டி, தேங்காய் துருவல்-2 மேசைக்கரண்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட் இலைகளை ஓடும் நீரில் அலசி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பீட்ரூட் கிழங்கையும் தோல் சீவி சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
வெட்டிய வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் சோம்பு, சீரக கலவை ஆகியவற்றை வதக்கி, அத்துடன் பீட்ரூட் இலை மற்றும் கிழங்கு துண்டுகளை கலந்து 500மி.லி., நீரில் போட்டு வேகவைத்து, வெந்ததும், அரைத்த தேங்காய் துருவலை கலந்து, மீண்டும் 250 மி.லி., நீர் ஊற்றி நன்கு கொதிக்கவைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை வாரம் ஒருமுறை குடித்து வர ரத்த ஓட்டம் சீராகும்; சிறுநீர் நன்கு பெருகும்; ரத்த சோகையினால் பெண்களுக்கு தோன்றும் மாதவிலக்கு தடை நீங்கும். கல்லீரல் பித்தப்பையில் தோன்றும் கற்கள் மற்றும் மண்ணீரல் வீக்கம் நீங்கும்.

வேர்ட் டிப்ஸ்-பைல் முன்தோற்றம்

கீழே காட்டியுள்ள சூழ்நிலையில் இதனைப் படிக்கும் நீங்கள் ஒருநாள் நிச்சயம் இருந்திருப்பீர்கள். பைலைத் தேடுவீர்கள். அதன் பெயர் நினைவில் இல்லை. வேர்ட் பைல் தான்; ஆனால் என்று என்பது கூட நினைவில் இல்லை. ஒவ்வொன்றாகத் திறந்தால், அது இல்லை, இதுவும் இல்லை என உங்களைத் திட்டிக் கொண்டே மூடி மூடித் திறக்கிறீர்கள். வெகு நேரம் கழித்தே, நீங்கள் தேடிய பைல் கிடைக்கிறது. ஆனால், இதனைத் திறந்து பார்த்து, அது இல்லை என்று ஏற்கனவே நீங்கள் மூடிய பைல் தான் அது. இந்த அனுபவம் வேர்ட் பைலில் மட்டும் இல்லை. ஆபீஸ் தொகுப்பின் அனைத்து பைல்களிலும் ஏற்படலாம். பைல் தெரியவில்லை என்பதற்காக, விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பைத் திறந்து வைத்து ஒவ்வொன்றாகத் திறந்து மூட முடியுமா? இதற்கு ஒரு சின்ன வழியை, ஆபீஸ் தொகுப்பு காட்டுகிறது. இந்த வழிக்குப் பெயர் பைல் பிரிவியூ. அதனை எப்படி வடிவமைத்து பார்ப்பது என்று பார்க்கலாம்.
முதலில் File மெனு சென்று அதில் Open விண்டோவினைத் திறக்கவும். இந்த விண்டோ கிடைத்தவுடன் நீங்கள் அதில் காட்டப்படும் பைல்களின் பட்டியலைத்தானே பார்க்கிறீர்கள். இப்போது அந்த விண்டோவின் வலது பக்க ஓரத்தில் பாருங்கள். அதில் Views என்று ஒரு பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்து திறந்தால் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Preview என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பெறவும். இப்போது விண்டோ இரு பகுதியாகப் பிரிந்து காட்டப் படுவதனைப் பார்க்கலாம். ஒரு பக்கம் பைல் பட்டியலுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் பெயர் தேர்ந்தெடுத்த நிலையில் இருக்கும். வலது பக்கம் உள்ள கட்டத்தில் அந்த பைலின் உள்ளே என்ன இருக்கிறது என்பது காட்டப்படும். இதன் முதல் பக்கம் தெரிந்தாலும் அருகே உள்ள அம்புக் குறியை அழுத்தி கீழே சென்று பைலில் உள்ளதைப் பார்க்கலாம். இதுதான் நீங்கள் தேடும் பைல் என்றால் உடனே அதனைக் கிளிக் செய்து திறந்து எடிட் செய்திடலாம்.இல்லை என்றால் கர்சரை பைல் பட்டியலில் அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அந்த பைலின் பிரிவியூ கிடைக்கும். இந்த தேடல் எளிதாகத் தெரிகிறதா? நேரம் மிச்சமாகிறதா! அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
வேர்டில் என் மற்றும் எம் டேஷ்
வேர்ட் ஆவணங்களில் சிறு இடைக்கோடுகளை பல இடங்களில் அமைக்கிறோம். ஆங்கிலத்தில் இவற்றை டேஷ் (Dash) என அழைக்கிறோம். வேர்ட் தொகுப்பில் மூன்று வகையான இடைக்கோடுகள் இருக்கின்றன. ஏன் மூன்று என்று கேட்டால், ஒவ்வொன்றையும் ஒரு பயன்பாட்டிற்கு என டெக்ஸ்ட் டைப் செய்பவர்கள் வைத்து அமைப்பார்கள். சரி, இவற்றை எப்படி அமைப்பார்கள், அவற்றை எப்படி அழைப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.
மூன்று வகையான டேஷ்களுக்கிடையே உள்ள வித்தியாசம் ( – —) அவற்றின் அகலத்தில்தான் இருக்கிறது. வேர்ட் தொகுப்பில், மைனஸ் கீயை அழுத்துகையில் ஒரு வகையான டேஷ் கிடைக்கிறது. இது சற்று குறுகலாக இருக்கும். இது ஒரு டேஷ். அடுத்ததாக சிறிது அகலம் கூடுதலான டேஷ்; இதனை என் டேஷ் என அழைக்கின்றனர். ஏனென்றால், இது என் என்ற ஆங்கில எழுத்தின் அகலத்தில் இருக்கிறது. எண்களின் வரிசையைச் சுட்டிக் காட்டுகையில் இது பயன்படுத்தப்படுகிறது. இன்னும் அகலமானது எம் டேஷ். இது எம் என்ற ஆங்கில எழுத்தின் அகலத்தில் அமைவது. இது வாக்கியங்களில், சில சொற்றொடர்களின் இடையே ஒன்றை விளக்கி எழுதுகையில் அமைக்கப்படுவது. என் டேஷ் ஒன்றை உங்கள் டெக்ஸ்ட்டில் அமைக்க, நம் லாக் அழுத்திய பின்னர், ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு, நம்பர் பேடில் 0150 அழுத்தவும். எம் டேஷ் வேண்டும் என்றால், இதே போல் கீ அழுத்தி 0151 அழுத்தவும்.
இன்னொரு வழியும் உள்ளது. நியூமெரிக் கீ பேடில் உள்ள மைனஸ் கீ பயன்படுத்தி அமைக்கும் வழி. கண்ட்ரோல் கீ அழுத்தி மைனஸ் கீயை அழுத்தினால், வேர்ட் ஒரு என் டேஷ் அமைக்கும். கண்ட்ரோல் + ஆல்ட் + மைனஸ் கீ அழுத்தினால் எம் டேஷ் கிடைக்கும். ம்...ம்... அழுத்திப் பாருங்க..

வேர்டில் படுக்கைக் கோடுகள்

வேர்ட் தொகுப்பில், ஆவணங்களில் படுக்கைக் கோடுகள் தயாரிப்பதற்கு, எந்த கீகளைச் சிலமுறை அழுத்தினால் போதும், கோடுகள் தயாராகிவிடும் என இந்த பிரிவில் எழுதி இருக்கிறோம். மீண்டும் அவற்றை இங்கு நினைவு படுத்தலாம்.
1. மூன்று முறை ஹைபன் கீ அழுத்தி என்டர் செய்தால், அழுத்தமில்லாத நீள கோடு கிடைக்கும்.
2. மூன்று முறை அண்டர் ஸ்கோர் எனப்படும் 0க்கு அடுத்த கீயினை அழுத்தி, என்டர் செய்தால், சற்று அழுத்தமான நீளக் கோடு கிடைக்கும்.
3. மூன்று ஆஸ்டெரிஸ்க் ( ஷிப்ட்+3 எண்ணுக்கான கீ ) கீ அழுத்தி என்டர் தட்டினால், புள்ளிகள் வைத்த கோடு கிடைக்கும்.
4. டில்டே (கீ போர்டில் முதல் கீ ஷிப்ட் கீயுடன்) மூன்று முறை அழுத்தி என்டர் அழுத்த, நெளிவு கோடு கிடைக்கும்.
5. ஈக்குவல் என்னும் சமம் என்பதற்கான கீ (பேக் ஸ்பேஸ் கீக்கு முந்தைய கீ, ஷிப்ட் கீயுடன்) மூன்று முறை அழுத்தி, என்டர் அழுத்த, சிறிய அளவிலான இரட்டைக் கோடு கிடைக்கும்.
இது போல கோடுகள் அமைவது, வேர்ட் தொகுப்பில் மாறா நிலையில் நமக்குத் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு இந்த கோடு, தானாக அமைவது பிடிக்காது.
ஏனென்றால், சிறிய அளவில் ஏழே ஏழு ஹைபன்களை அடுத்து அடுத்து போட விரும்பினால், போட முடியாது. அது வேர்டால், தானாக முழு நீளக் கோடாக மாற்றிவிடும்.
அப்படியானல் என்ன செய்திடலாம்? வேர்ட் தொகுப்பில் இதனை நிறுத்துவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. வேர்ட் 2003 தொகுப்பில்:
டூல்ஸ் மெனுவிலிருந்து ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் AutoFormat As You Type என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக் கவும். பின்னர் Apply As You Type என்ற பிரிவில் Border Lines என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
2. வேர்ட் 2007:
முதலில் ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடுக. அதன்பின் AutoCorrect Options என்ற பிரிவில், AutoCorrect Options என்பதில் கிளிக் ஏற்படுத்தவும்.
பின்னர் AutoFormat As You Type என்ற டேப்பில், Apply As You Type என்ற பிரிவில் Border Lines என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
3. வேர்ட் 2010 தொகுப்பில்:
File டேப்பில் Help என்பதன் கீழ் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
இதன் பின், கிடைக்கும் பிரிவுகளில், இடது பக்கம் கிடைக்கும் பிரிவுகளில், Proofing என்பதில் கிளிக் செய்திடவும். அதன்பின் AutoCorrect Options என்ற பிரிவில், AutoCorrect Options என்பதில் கிளிக் ஏற்படுத்தவும்.
பின்னர் AutoFormat As You Type என்ற டேப்பில், Apply As You Type என்ற பிரிவில் Border Lines என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டாகுமெண்ட்டில் வெப் டெக்ஸ்ட் ஒட்ட
இணைய தளத்திலிருந்து டெக்ஸ்ட் எடுத்து வேர்டில் ஒட்டுகையில் நமக்குத் தேவையில்லாத பார்மட்டிங், பாண்ட் மற்றும் டெக்ஸ்ட் அருகே உள்ள சிறிய விளம்பரக் கட்டங்கள் ஆகியவையும் ஒட்டப்படும். இது பல வேளைகளில் எரிச்சல் தரும் விஷயம் ஆகும். ஏனென்றால் நாம் டெக்ஸ்ட் மட்டும் வைத்துக் கொள்ள விருப்பப்பட்டால் தேவையற்ற இந்த அனைத்து சங்கதிகளையும் ஒவ்வொன்றாக நீக்க வேண்டியுள்ளது. இதனால் காலம் விரயமாகிறது. இதற்குப் பதிலாக Edit மெனு சென்று அதில் Paste Special என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து மீண்டும் அதில் Unformatted Text கிளிக் செய்து அதன் பின் வெப் சைட்டிலிருந்து காப்பி செய்ததை பேஸ்ட் செய்தால் நீங்கள் திட்டமிடுகிற மாதிரி வெறும் டெக்ஸ்ட் மட்டும் நமக்குக் கிடைக்கும்.

மனது : வலி நல்லது!

நீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா?


'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்!'

'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்?'

'எனக்கு மட்டும் ஏன் இப்படி ஓர் அப்பா-அம்மா?'

'என்னைப் புரிந்துகொள்ள ஏன் இந்த உலகத்தில் ஒருவர்கூட இல்லை?'

'என் எதிர்காலத்துக்கு எந்தவிதத்திலும் பயன் தராத விஷயங்களை ஏன் பள்ளியி லும் கல்லூரியிலும் நான் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்?'

'என்னை ஏன் இவ்வளவு அசிங்கமாகப் படைத்திருக்கிறான் இறைவன்?'

'நான் ஏன் நார்மலாக இல்லை?'

மூன்று கேள்விகளுக்கேனும் 'ஆம்' என்பது உங்கள் பதிலாக இருந்தால், சந்தேகமே வேண்டாம்... நீங்கள் நார்மலாகத்தான் இருக்கிறீர்கள்!

பதின் பருவத்தில் இப்படியான எண்ணங்கள் அலைக்கழிப்பதுதான் அந்தப் பருவத்தின் இயல் பான மனநிலை என்கிறார் ஆண்ட்ரு மேத்யூஸ். உலகின் 96 சதவிகித டீனேஜ் பருவத்தினர் தங்கள் தோற்றம், உடல் அமைப்பில் திருப்தியற்று இருக்கிறார்களாம். இதுபோலவேதான் நண்பர்கள், பெற்றோர்கள், காதலன்/காதலி ஆகியோருடனான உறவுகளையும் குழப்பிக்கொண்டு, எப்போதும் ஒருவித அவஸ்தை மனநிலையிலேயே இருக்கிறார் கள். அப்படியானவர்களுக்கு, தன் புத்தகம்மூலம் தோள் தட்டும் தோழனாக டிப்ஸ் தருகிறார் ஆண்ட்ரு. மிக எளிமையான ஆங்கிலம், குட்டிக் குட்டிப் படங்கள் மூலம் பெரிய உண்மைகளை எளிதில் புரியவைக்கிறார்.

வாழ்க்கை ஏன் கசக்கிறது?

உங்களையும் அறியாமல் நாக்கைக் கடித்துக் கொள்கிறீர்கள். வலிக்கிறது! கொதிக்கும் தேநீர் என்று தெரியாமல் ஒரு வாய் குடித்துவிடு கிறீர்கள். சுள்ளென்று சுடுகிறது. பென்சில் சீவும் போது, விரலை பிளேடு வெட்டிவிடுகிறது. ரத்தம் வெளியேறி எரிகிறது. இவை எல்லாம் உடலை வருத்தும் காயங்கள். அந்தக் காயங்கள் ஏற்படுத் தும் வலி, 'ஏதோ தப்பு. நீ செய்துகொண்டு இருக் கும் விஷயத்தை மேற்கொண்டு தொடராமல் இருப்பது நல்லது!' என்று உணர்த்தும் சமிக்ஞை.

'வலி' என்ற ஒரு அலாரம் இல்லாவிட்டால், என்ன நடக்கும்? ரத்தம் வர வர... நாக்கைக் கடித்துக்கொண்டே இருப்பீர்கள். வாய் பொத்துப்போன பிறகும் அந்தத் தேநீரைக் குடித்துக்கொண்டே இருப்பீர்கள். ரத்தம் வழிந்த பிறகும் நிறுத்தாமல், பென்சிலை கூராக்கிக்கொண்டு இருப்பீர்கள். இதே லாஜிக்தான் மனதை வருத்தும் காயங்களுக்கும்!

உங்கள் மனதை ஏதோ ஒரு நடவடிக்கை அல்லது சம்பவம் வருத்துமானால், அதைத் தொடராதீர்கள். மேலும் மேலும் அதனால் நீங்கள் கஷ்டப்படாமல் இருக்கத்தான், அந்தச் சம்பவம் உங்கள் மனதில் ஒரு வலியை ஏற்படுத்துகிறது. பிறகு ஏன் அதைத் தொடர வேண்டும்? உள்ளுக்குள் சோகமாக உணர்ந்தால், நீங்கள் யோசிக்கும் விதத்தையே மாற்றிக்கொள்ளுங்கள். மற்றவர் மீது பொறாமைகொள்ளும்போதோ, கேலி கிண்டல் செய்து மற்றவரைக் காயப்படுத்தும்போதோ, நமது சந்தோஷத்துக்காக அடுத்தவரை எதிர்பார்த்திருக்கும்போதோ, பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளும்போதோ... நமது மனது வலிக்கும். அலாரம் அடித்துவிட்டது. விழித்துக்கொள்ளுங்கள்!

படம் பார்த்து, பாடம் படிக்கலாமா?

'ஒருவன் நாயிடம் இருந்து தப்பிக்க முற்படுகிறான். அவனுடைய சட்டையின் நுனிப் பகுதியை நாய் கடித்து இழுத்திருக்கிறது. கோபமாக இருக்கும் அந்த நாய்க்கு வாலும் ஒரு காலும் வெள்ளை நிறம். ஒரு காது சிவப்பு நிறம். அவனுடைய சட்டையில் சிவப்பு மற்றும் வெள் ளைக் கோடுகள். ஒற்றைக் காலில் நிற்கிறான்அவன்!'

இதைப் படித்துக் கிரகித்து அந்தக் காட்சியைக் கற்பனை செய்ய உங்களுக்கு 20 நொடிகளேனும் பிடிக்கும். அதுவே, இந்தப் படத்தைப் பாருங்கள்...

சட்டென்று, பச்சக்கென்று மனதில் பதிந்துவிட்டதா? பல காலமாகச் சொல்லி வருவதுதான். வார்த்தைகளைக் காட்டிலும் ஒரு ஓவியம் அல்லது கார்ட்டூன் நம் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிடும்.

'20-07-1969 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல் ஆளாகக் கால் பதித்தார்' என்று மனனம் செய்து மறந்துபோவதைக் காட்டிலும், இப்படி நீங்களாக ஒரு கார்ட்டுன் வரைந்தால்... எப்படி இருக்கும்?

அந்தத் தேதி உங்களுக்கு மறக்கவே மறக்காது!

ஏமாற்றங்களை ஏமாற்றுவது எப்படி?

எவ்வளவுதான் 'அலர்ட்' ஆக இருந்தாலும், பல சமயங்களில் எல்லோரும் ஏமாற்றத்துக்கு உள்ளாவார்கள். நமது முறை வரும்போது பஸ் பாஸ் கவுன்ட்டரில் 'உணவு இடைவேளை' என்று போர்டு விழுவது, அத்தனை பேர் தப்பும் தவறுமாகச் செய்து இருக்கும்போது நமது ரெக்கார்ட் நோட் குளறுபடிகளை மட்டும் புரொஃபஸர் கண்டுபிடித்துத் திட்டுவது, மனதுக்குப் பிடித்தவளிடம் காதலைச் சொன்னதும், 'என்னை உனக்குப் பிடிக்காதுன்னு நினைச்சேன். அதான் போன மாசம் அருண் புரபோஸ் பண்ணப்போ, 'ஓ.கே' சொல்லிட்டேன்!' என்று அவள் கண்ணைக் கசக்குவது. சிறிதும் பெரிதுமாகத் தினமும் நம்மை ஏமாற்றங்கள் கடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்?

1. 'எனக்கு மட்டும் ஏன் இப்படி எப்போதும் கெட்டதாகவே நடக்கிறது?' என்று உள்ளுக்குள் புழுங்குவேன்! - இப்படி நினைத்து சுய பச்சாதாபத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம், அந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்கான எந்த ஓர் உருப்படியான செயலிலும் உங்கள் மனம் கவனம் செலுத்தாது!

2. 'அது எனது தப்பு அல்ல!' என்று பழியை அடுத்தவர் மீது சுமத்துவதும் ஒரு விதத் தப்பிக்கும் மனோநிலைதான். அது உங்கள் தப்பாக இல்லாவிட்டாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தானே!

3. 'இதில் இருந்து நான் என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?' என்று உங்களுக்குள் நீங்கள் கேட்டுக்கொண்டால்... சபாஷ்! இதுதான் மேற்கொண்டு அதுபோன்ற ஒரு தவறு நிகழாமல் தடுக்கும் மனோநிலை.

நமது ஒவ்வொரு ஏமாற்றமும், கல் மேல் விழும் உளி செதுக்கல் என்று நினைத்துக்கொண்டால், நம்மை நாமே செதுக்கி எடுக்கலாம். தண்டிக்கப்படுவதற்காக, நாம் இந்த உலகத்தில் அவதரிக்கவில்லை என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்!

தேங்க்ஸ் : யூத்ஃபுல் விகடன்

நெல்லிக்காய்

உலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில பருப்பு வகைகள் எப்படி நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைப் போன்றே நெல்லிக்காய், நார்த்தங்காய், தேசிக்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய், பூண்டு போன்றவையும் மிகவும் பலன் தரக்கூடிய இயற்கையின் படைப்புகளாக நமது அன்றாட சமையலில் சேர்க்கக் கூடிய உணவு வகைகளாகும்.

நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அரி நெல்லிக்காய் எனப்படும் நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைக்காலம் முழுவதும் தரக்கூடியது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய், இருவகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே பச்சையாகச் சாப்பிடக்கூடியதாகும். எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும்.

அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் வெப்பத்தைக் குறைத்து மூளைக்குக் குளிர்ச்சியும் ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தரக்கூடியதாகும். கோடைக்காலங்களில் நமக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணக் கோளாறு ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் நல்ல மருந்தாகும். எனவே நெல்லிக்காயை எந்த விதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

சிறுவயதில் நெல்லிக்காய் பறிக்கத் தோப்புக்குச் செல்வதும், பாடசாலைகளின் வெளியே விற்கப்படும் தின்பண்டக் கடைகளில் கமர்கட், கச்சான், பஞ்சுமிட்டாய், மாங்காய் பத்தை, இலந்தைப்பழம், முந்திரிப்பழம் மற்றும் அரி நெல்லிக்காய், பொறி கடலை ஆகியவற்றை இளம் சிறார்கள் ஆவலுடன் வாங்கி உண்டு மகிழ்வது நமது நாட்டில் வாடிக்கை தானே! அதுவும் நெல்லிக்காய் சீசனில், நம் வீட்டுப் பெண்மணிகள் இவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து ஊறுகாய், சட்னி, பச்சடி போன்றவற்றையும் வடகம் தயாரிப்பதும் வழக்கம் தானே !

நெல்லிக்காய் எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவக் குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும் ஈறுகளும் பலப்படுவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும். கணைச்சூட்டால் அவதியுறும் குழந்தைகளுக்கு நெல்லிக்காயைச் சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும். உடல் அசதி மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத்தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்குண்டு. இரத்த உறைவால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாகப் பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேசியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

உணவு செரிமானமின்மைக்கு எப்படிப் பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவி புரிகிறது. நெல்லிக்காயைப் பதப்படுத்தித் தலையில் தேய்த்துக் குளிக்கவும் நெல்லிக்காய்த் தைலம் மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்த விதத் தொல்லையுமின்றி குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உணர்வுடன் மக்கள் இதுபோன்ற அரிய இயற்கை உணவு வகைகளை அடிக்கடி நமது உணவு வகைகளில் பக்குவமாகப் பயன்படுத்தினால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகி, நோய் வருமுன் காக்கவும், வந்தபின் முறையான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல்லாண்டு காலம் வாழ ஏதுவாகும்.

இயற்கை அளித்துள்ள அனைத்து உணவு வகைகளிலும் பிரதான இடம் கொண்டவை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் கனிவகைகளே. நமது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருக்கவும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும், தெம்பையும் அளித்து நீண்ட ஆயுளை அளித்து வளமாய் வாழ வைக்கின்றன. இயற்கை அளித்துள்ள இத்தகைய உணவு வகைகளையும், அவற்றின் பயன்களையும் முக்கியமாக அவற்றிலிருந்து நாம் பெறக்கூடிய மருத்துவப் பயன்களையும் எளிதாய்ப் புரிந்து அறிந்து வாழ்க்கை வாழ்வதற்கே என்ற குறிக்கோளை அடைவதற்கே. அதிலும் நமக்குத் தகுந்தவாறு எளிதாகக் கிடைக்கின்ற உணவுப் பொருட்களைப் பற்றியே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். பிறர் நலனில் அக்கறைகொண்டு, எனது இயற்கை மருத்துவ முறைகளால் பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை அளித்தும் ஆலோசனைகள் வழங்கியும் சேவை புரிவதின் மூலம் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

நன்றி : இனிய திசைகள் – சமுதாய மேம்பாட்டு மாத இதழ்

அக்டோபர் 2010

ரோஜா காதல்

* சிவப்பு ரோஜாக்கள் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும். மரியாதை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தவும் இந்த ரோஜாக்கள் உதவும். ஆழ்மனதில் இருக்கும் அழகையும் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை சிவப்பு ரோஜாக்களுக்கு உண்டு.

* இளஞ்சிவப்பு ரோஜாவை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழங்கலாம். பாராட்டுவதற்கும், வாழ்த்து கூறவும், நட்பு பாராட்டுவதற்கும் ஏற்றது `பிங்க்` ரோஜா.

* மெலிதான இளம்சிவப்பு ரோஜாக்கள் அழகை வெளிப்படுத்தக் கூடியது. கருணை, மகிழ்ச்சி, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த சிறந்தது இந்த ரோஜாக்கள்.

* அடர்ந்த `பிங்க்' நிற ரோஜா நன்றி தெரிவிக்க கொடுக்கப்பட வேண்டியது.

* இளம்நீல நிற ரோஜா, முதல் பார்வையில் இதயத்தை கொள்ளை கொண்டவருக்கு கொடுக்கப்பட்டால் அவரது அன்பை மேலும் பெருக்கித்தரும்.

* வெள்ளை ரோஜா உயிரில் கலந்த தூய காதலை வெளிப்படுத்த வழங்கப்படுவதாகும். திருமணம் நிச்சயமான சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கலாம். பயபக்தி, பணிவைக் காட்டவும் வெள்ளை ரோஜா பொருத்தமானது. குற்றமற்றவன் என்பதைச் சொல்லவும் வெள்ளை ரோஜா ஏற்றது.

* நட்பு, மகிழ்ச்சி, பெருமிதம், சுதந்திரம் போன்றவற்றில் உங்களுக்கு இருக்கும் அக்க றையை வெளிக்காட்ட மஞ்சள் ரோஜா பொருத்த மானது.

* பவள நிற ரோஜா உங்கள் விருப்பங்களை உங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு உணர்த்த ஏற்றது.

* இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த `பீச்' நிற ரோஜா தன்னடக்கத்தை காட்டும்.

* ஆரஞ்சு நிற ரோஜாவை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வழங்கலாம். கவர்ச்சியாய் தோன்ற விரும்புபவர்களும் இந்நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம்.

* சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்களை பாராட்டுத் தெரிவிக்க வழங்கலாம்.

* மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரோஜாக்களை இணைத்து கொடுப்பது எண்ணங்களை ஈர்த்து மனதை உருக வைக்கும்.

* எளிய காதல் தூதுவன் ரோஜாப் பூக்கள்தான். ஒற்றை ரோஜா உறுதியான காதலைச் சொல்லும். இரட்டை ரோஜா அல்லது இரட்டை நிறம் கலந்த ரோஜா, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்கும் பொருளில் கொடுப்ப தாகும். இனிய அழைப்புகளுக்கும் இரட்டை ரோஜா வழங்கலாம்.

* வெளிர்நிற ரோஜாக்கள் எல்லாம் நட்பை வெளிப்படுத்துவன. 12 ரோஜாக்கள் சேர்ந்த மலர்ச்செண்டு (பொக்கே) நன்றி தெரிவிக்கவும், 25 ரோஜாக்களின் இணைப்பு வாழ்த்துச் சொல்ல வும், 50 ரோஜாக்கள் சேர்ந்தது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தவும் ஏற்றது.

* மலர்ந்திருக்கும் நேரங்களில் மனிதர்களை மகிழச் செய்யும் பண்பு மலர்களுக்கே உரியது. அன்பையும், காதலையும் இதமாகச் சொல்லும் ரோஜாக்களை உங்கள் இதயம் கவர்ந்தவர்களுக்கு கொடுங்கள்!

52 வயது வரை வாழ்ந்த மனித குரங்கு

"புகை பிடித்தால் உடல் நலனுக்கு தீங்கு...' என, சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றிருக்கும். அதை யாரும் கண்டு கொள்வதே இல்லை. ஊதித் தள்ளுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதற்கு காரணம், புகைத்தால் பெரிய அளவில் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படாது என்பதுதான். இதை நிரூபித்துள்ளது ஒரு மனித குரங்கு. தென் ஆப்ரிக்க நாட்டில் பிலோம்பென்டின் என்ற ஊரில், ஒரு மிருககாட்சி சாலை உள்ளது. இங்கு கூண்டில் அடைத்து, வளர்க்கப்பட்ட மனித குரங்கின் பெயர் சார்லி. இந்த குரங்கிற்கு ஒரு மோசமான பழக்கம் உண்டு. அது, எப்போதும் சிகரெட் பிடிப்பதுதான். சமீபத்தில், தன் 52வது வயதில் இந்த குரங்கு மரணமடைந்தது.
கூண்டில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் மனித குரங்குகள், வழக்கமாக 40 வயதில் இறந்து விடும். இந்த குரங்கோ, கூடுதலாக 12 ஆண்டுகள் வரை உயிருடன் இருந்து, இயற்கையான முறையில் மரணமடைந்துள்ளது.
மிருககாட்சி சாலையில் மிகவும் விரும்பப்பட்ட மிருகம் சார்லி. காரணம், அது புகைக்கும் அழகைப் பார்ப்பதற்காகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குவிவர். சில ஆண்டுகளுக்கு முன்பு, மிருககாட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்கள் தூக்கி எறியும் சிகரெட்களை இந்த குரங்கு எடுத்து புகைக்க ஆரம்பித்தது. பின்னர், அதுவே இதற்கு பழக்கமானது. இந்த மிருககாட்சி சாலையின் உயர் அதிகாரி டாரில்பார்னசிடம் இந்த குரங்கு பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது: இதே மிருககாட்சி சாலையில் நான் 15 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். சார்லி குரங்கு தினமும் ஐந்து முறை சிகரெட் பிடிக்கும். மிருககாட்சி சாலை ஊழியர்கள் யாராவது பார்த்தால் உடனே, சிகரெட்டை மறைத்து வைத்துக் கொள்ளும். கூண்டுக்கு வெளியே யாராவது சிகரெட் பிடிப்பதைப் பார்த்தால் அவர்களிடம் சிகரெட் கேட்டு கெஞ்சும். அவர்கள் தூக்கி எறியும் சிகரெட்டை கேட்ச் பிடித்து, மறைவான இடத்தில் அமர்ந்து ஊதித் தள்ளும். — இவ்வாறு அவர் கூறினார். சார்லி குரங்கு, மத்திய ஆப்ரிக்க காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டது. சிம்பன்சி வகையைச் சேர்ந்த இந்த குரங்கு இனத்தில் இருந்துதான் மனித இனம் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்

பென் ட்ரைவ் என்பது இப்பொழுது கணினி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருள் இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணினியில் பதியவோ உபயோகபடுத்த படுகிறது. இந்த பென்ட்ரைவ்கள் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணினிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. இதிலிருந்து நம் பென்ட்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்களை கீழே கொடுத்துள்ளேன்.

1. USB WRITE PROTECTOR :

இந்த மென்பொருள் உங்களுடைய பென்ட்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால் உங்கள் பென்ட்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ட்ரைவ்களை கண்டறிய முடியவில்லை. இந்த மென்பொருள் மிக சிறிய அளவே(190KB) உடையது.


2. USB FIREWALL :
பென்ட்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். USBயில் இருந்து கணினிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன் படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணினியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும். ஏதேனும் வைரஸ் உங்கள் கணினியில் புக முயற்சிக்கும் போது இந்த இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. நன்றாக வேலை செய்கிறது.


3. PANDA USB VACCINATION TOOL :
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf பைலை முற்றிலுமாக தடைசெய்கிறது. உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கபடுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சார்ட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

4. USB GUARDIAN :
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான பைலை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.


மேலே கூறிய நான்கு மென்பொருட்களும் உங்கள் பென்ட்ரைவை பாதுகாக்க உதவுகின்றன. தரவிறக்கி கொள்ளுங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
Join Only-for-tamil
நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை கூட பெரும்பாலும் வாக்குவாதத்தாலும், கடுஞ்சொற்களை பேசுவதாலும் வளர்ந்து பெரும் பிரச்சினையாகி விடுகிறது. அதனால், பிரச்சினை வரும் என்று தெரிந்த உடனே மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டுவிட பழகிக் கொண்டால், அவை தானாகவே தீர்ந்து விடும். சில பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே நல்லது.

இன்பத்தை எப்படி எதிர்பார்க்கிறோமோ, அதேபோல் துன்பத்தையும் எதிர்பார்த்தால் பிரச்சினை நேரத்தில் அதன் பாதிப்பு நமக்கு பெரிதாகத் தெரியாது. பலதரப்பட்ட மனிதர்களுக்கு இடையே நாம் வாழ்வதால் தான் பிரச்சினைகள் வருகின்றன. அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல. அவை எல்லாம் சாதாரணமானவை. எல்லோருக்கும் வரக்கூடிய பொதுவான விஷயம் தான். இப்படி நினைக்கும் போது `விரக்தி’ ஏற்படாது.

பலகீனமாக உள்ளவர்களுக்கு எளிதில் கோபம் வந்து விடும். அதனால் அவர்களின் சிந்தனை தடைப் பட்டு உணர்ச்சி அதிகரித்து விடுகிறது. உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து போவதால் தான் தவறு நடக்கிறது. கூடவே, கொலை, தற்கொலை போன்ற கொடுமைகளும் நடக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் நிலைகளில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். பிறரை பற்றி ஏக்கப் படாமல், நாம் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்போம். பல நேரங்களில் நாம் பிறரை பற்றி ஆராய்ச்சி செய்வதாலேயே நமது நேரமும், சக்தியும் வீணாகிறது. நம்மை பற்றி சிந்தித்து ஒழுங்காக நடந்து கொண்டாலே போதும். மனம் சமநிலைக்கு வந்து விடும்.

`பிறர் நம்மைத் தவறாக பேசிவிடுவார்களோ’ என்று கவலைப் பட வேண்டிய தேவையில்லை. நாம் எதைச் செய்தாலும் குறை சொல்வதற்கும் நிறையப் பேர் இருக்கிறார்கள். நாம் செய்வது உலகநியதிக்குட்பட்டு மனதுக்கும் பிடித்திருந்தால் தயங்காமல் செய்யலாம்.

நேற்று சோதனைகளை சந்தித்தவர் இன்று இன்பத்தை அனுபவிப்பார். எனவே, வீணாக கவலைப் பட்டு மனதையும், உடலையும் வருத்தாதீர்கள். நாம் கவலைப் படுவதால் பிரச்சினை அதிகமாகுமே தவிர தீராது. தோல்வியும், வெற்றியும் நிரந்தரமானதல்ல என்ற எண்ணம் வந்தாலே போதும். நம் மனம் சமநிலைக்கு வந்து விடும்.

நமக்கு வரும் கவலைகளில் 99 சதவீதம் நியாயமற்ற கற்பனைகளால் தான் வருகின்றன. இவை நம் கற்பனைகளை வளர்க்கவே செய்யும். பிரச்சினையைத் தீர்க்கத் தெரியாதவர்கள் அதை உள்ளேயே வைத்துக் கொண்டு கவலையாக்கிக் கொள்கின்றனர். வெளிச்சம் உள்ள இடத்தில் இருட்டிற்கு இடமில்லை. அதுபோல் இன்பத்தையும் வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக எடுத்துக் கொண்டால் மனம் நிறைந்து விடும். அதனால், அதற்கு மேல் மனதில் இடம் இல்லாததால் துன்பமும், அதனால் வரக்கூடிய எண்ணங்களும் வருவதில்லை.

இணையப் பக்கங்களை பி.டி.எப். ஆக மாற்ற...

பல வேளைகளில், நாம் பார்க்கும் இணையப் பக்கங்களை, அவை தரும் தகவல்களுக்காக, சேவ் செய்திட விரும்புவோம். அனைத்து பிரவுசர்களும் இதற்கான வசதியைத் தருகின்றன. பிரவுசரின் எடிட் மெனுவில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில்,சேவ் அல்லது சேவ் அஸ் தேர்ந்தெடுத்து பைலை பதிந்திடலாம். ஆனால், இது எச்.டி.எம்.எல். பைலாகத்தான் பதியப்படும். அவ்வாறு பதிவது நமக்கு உகந்ததாக இருக்காது. ஏனென்றால், தேவையற்ற பல விஷயங்களுடன், பைல்களுடன் அந்த பைல் பதிவாகும். ஒரு டாகுமெண்டாகப் பதிவாகாது. ஆனால், இதனையே ஒரு பி.டி.எப். பைலாகப் பதிந்தால், ஒரே பைலாக அனைத்து தகவல்கள் மற்றும் ஆப்ஜெக்ட்களுடன் கூடிய பைல் ஒன்று கிடைக்கும். இதனை மற்றவர்கள் பெற்றுப் பயன்படுத்துவதும் எளிதாகும்.
சரி, இணைய தளப் பக்கத்தினை எப்படி பி.டி.எப். பைலாக மாற்றுவது? இதற்கு உதவிடும் வகையில் கிடைப்பது Joliprint bookmarklet என்னும் புரோகிராமாகும். புக்மார்க்குகள் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களிலும் இது இயங்கும். புக்மார்க்லெட் என்பதுவும் ஒருவகை புக்மார்க் தான். புக்மார்க்குகள் அனைத்தும் ஏதேனும் ஒரு இணைய தளத்தின் சுருக்கு வழிகளாக அமையும். ஆனால் இந்த புக்மார்க்லெட் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகள் அமைந்ததாக இருக்கும். இவை இயக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட இணைய தளத்துடன் இணைந்து இயங்கும். தானாகவே இணைய தளத்தினை ஒரு பிடிஎப் பைலாக மாற்றும். இந்த புக்மார்க்லெட்டில் கிளிக் செய்துவிட்டு, அது மாற்றப்பட்டு கிடைப்பதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம். இதன் இயக்கத்தின் இன்னொரு சிறப்பு என்னவெனில், இணையப் பக்கத்தில் உள்ள தேவையற்ற மெனு, விளம்பரங்களை இது தானாகவே நீக்கிவிடுகிறது. பார்மட்டிங், லிங்க்ஸ், கட்டுரைக்கான படங்கள் ஆகியவற்றை மட்டும் தக்கவைத்துக் கொள்கிறது. கட்டுரையினை இரண்டு பத்திகளாக அமைத்துத் தருகிறது. இந்த புரோகிராம் இயங்கும்போது, கம்ப்யூட்டருடன் இணைந்த இன்டர்நெட் இணைப்பு இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஜாலி பிரிண்ட் புரோகிராமினை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. ஜாலிபிரிண்ட் இணைய தளத்தில் இதன் ஐகானைக் கிளிக் செய்து, இழுத்து புக்மார்க்காக அமைத்துவிட்டால் போதும். பின் தேவைப்படுகையில், இந்த புக்மார்க்கில் கிளிக் செய்து, இணைய தளங்களை பிடிஎப் பைலாக மாற்றலாம்.
இந்த ஜாலிபிரிண்ட் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:
http://joliprint.com/bookmarkinstructions/

பேஸ்புக் தரும் புதிய குரூப் வசதி


சென்ற அக்டோபர் 7 அன்று பேஸ்புக் தளத்தில் புதிய குரூப் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இந்த தளத்தில் கிடைக்கும் குரூப்ஸ் வசதியைப் போலின்றி, சில தனிப்பட்ட சிறப்பு வசதிகள் கொண்டது. ஒரு சிறிய குழுவாக, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்ட குழுவினை அமைத்து அரட்டை அடிக்க, போட்டோக்கள் மற்றும் பைல்களைப் பகிர்ந்து கொள்ள, மின்னஞ்சல்களை குழு உறுப்பினர் களுக்குள் அனுப்பிக் கொள்ள இது வசதி அளிக்கிறது. இந்தக் குழு உறுப்பினர்களுக்குள் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியும். எப்படி இது ஏற்கனவே உள்ள பெரிய அளவிலான குழுக்களில் இருந்து வேறுபட்டு ள்ளது என்று இங்கு பார்க்கலாம்.
1. எப்படி தொடங்குவது? வழக்கமான பேஸ்புக் குரூப் லிங்க், அதன் தளத்தில் இடது பிரிவில் கிடைக்கும். புதிய குரூப்ஸ் (New groups) செல்ல இங்கு லிங்க் கிடைக்காது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணையப் பக்க முகவரி at http://www.facebook.com/groups. இங்கு சென்ற வுடன், புதிய குரூப்ஸ் தொடங்க Create Group என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் குடும்ப உறவினர்கள் அல்லது நண்பர்களுக்காக எனில் அதற்கேற்றார்போல் இந்த குழுவிற்குப் பெயரிடவும். வர்த்தக நோக்கு எனில் அதனை மையப்படுத்தி பெயர் அமைக்கவும். அடுத்து பேஸ்புக் தளத்தில் பதிந்த, நீங்கள் விரும்பும் நண்பர்களின் அல்லது உறவினர்களின் பெயர்களை டைப் செய்திடவும். இந்த குழுவிற்கான ஐகானையும் இங்கு மாற்றலாம். தொடர்ந்து இந்த குழுவில் இடப்படும் செய்திகள், தகவல்கள் யாருக் கெல்லாம் தெரியப் படலாம் என்பது குறித்தும் இங்கு செட் செய்திடலாம். அனைத்தும் முடித்த பின்னர், Create என்பதில் கிளிக் செய்து குழு அமைத்திடும் பணியை முடிக்கலாம்.
2.குரூப் அரட்டை: அடுத்த வசதி குழுவின் அரட்டை வசதி. இங்கு அரட்டையில் ஈடுபடும்போது, ஈடுபடும் இருவருக்கு மட்டும் அது தெரியாது. குழுவில் உள்ள அனைவரும் அரட்டையைத் தெரிந்து கொள்ளலாம். குரூப் பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள “Chat with Group” என்பதில் கிளிக் செய்து அரட்டையைத் தொடங்கலாம்.
3. ஆவணங்கள் பகிர்ந்து கொள்ளல்: இந்த குழுவின் இன்னொரு சிறப்பு இதில் ஆவணங்களை உருவாக்குதல். இதில் உருவாக்கப்படும் ஆவணங்களை, குழு உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தலாம். எடிட் செய்திடலாம்.
4.குழுவிற்கான மின்னஞ்சல் முகவரி: குழுவின் உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள, இந்த குழு மட்டும் பயன்படுத்த ஒரு மின்னஞ்சல் முகவரியினை அமைக்கலாம். இதனை உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. குரூப்பில் மின்னஞ்சல் செய்திகள் அனைத்தும் அனைவரும் படிக்கும்படி அமைக்கப்படும்.
5. இமெயில் அறிவிப்புகள்: இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களும் தங்களுக்கு எவை எல்லாம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதனை எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ளலாம்.