Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator) என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம். http://www.montpellierinformatique.com/predator/en/index.php?n=Main. DownloadFree என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பிரிடேட்டர் புரோகிராமின் ஸிப் பைலை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் இதனை விரித்து, உங்கள் சி ட்ரைவில் இதனைப் பதிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.பி. ட்ரைவில் இதனைப் பதிய வேண்டாம். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான்.

இனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும்.

கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்து செல்லலாமே என நாம் நினைக்கலாம். விண்டோஸ் கீ + எல் கீயை அழுத்தினால், லாக் செய்திடலாமே என்ற எண்ணம் ஓடலாம். இதனையும் பயன்படுத்தலாம். இங்கு நீங்கள் மீண்டும் இயக்க பாஸ்வேர்டினை டைப் செய்திட வேண்டும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், தொல்லைதான். ஆனால் பிரிடேட்டர் ஒரு சாவி போலவே செயல்படுகிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கினை கம்ப்யூட்டர் வீட்டின் சாவி போலப் பயன்படுத்தலாம்.


பல் போனால் சொல் போச்சு என்று சொல்வார்கள். உண்மைதான்... வாயில் வரிசையாக பற்கள் இல்லாவிட்டால், சுத்தமான பேச்சு வராது. அதேபோல், முக அழகை பேணிக்காப்பதிலும் பற்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பற்கள் விழ ஆரம்பித்துவிட்டால் அழகும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட ஆரம்பித்துவிடும்.

சிலர் வாயைத் திறந்தாலே கப்பென்று ஒரு வாடை அடிக்கும். அவர்கள் சரியாக பல் துலக்காததுதான் அதற்கு காரணம். பற்களை முறையாக பராமரிக்காவிட்டால், பல் சொத்தையாவதோடு பல நோய்களும் அடிக்கடி வந்து தொல்லை செய்யும்.

அதனால், பற்களை தகுந்த முறையில் பேணிக்காப்பது அவசியமாகிறது. அதற்கு என்ன செய்யலாம்?

குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்கவும், சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும்.

சிலருக்கு சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் அவர்களது முக அமைப்பே மாறிவிடும். குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்கு முக்கிய காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடைறாக இருப்பதால் பற்கள் தங்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன. அதனால், 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

நம்மில் பலர் பல் துலக்கும்போது இன்னொரு பெரிய தவறையும் தெரியாமல் செய்துவிடுகிறோம். அதாவது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறந்துவிடுகிறோம்.

ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளிகளில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. குழந்தை பருவத்தில் இருந்தே, பல் ஈறுகளுக்கு இடையிலும் சுத்தம் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தால் பிற்காலத்தில் ஏற்படும் அவதியை தவிர்க்கலாம்.