Welcome
உங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பின் மூலம் தொழில் ரீதியான ஓர் இணைய தளம், தளப் பெயர், இமெயில் வசதி மற்றும் அதனைத் தாங்கி இயக்கும் வசதி என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் பெறலாம். இவை அனைத்துமே இலவசம் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதனைப் பெற நீங்கள் முதலில் அணுக வேண்டிய தள முகவரி http://officelive.com/enus/. தளத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள "Create a Free Website" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். உடன் இதில் பதிவு (Sign In) செய்திட செய்தி கிடைக்கும். அனைத்தும் பதிவு செய்து உறுதியானவுடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் மெயின் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு தான் உங்களுக்குத் தேவையான இமெயில் வசதி, தளப் பெயர், தள வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறலாம். நீங்களே உங்கள் தளத்தினை வடிவமைக்கலாம். அதற்கான டூல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இங்கு சென்று இந்த டூல்களைப் பற்றித் தெரிந்த பின்பே, இணையதளம் ஒன்றினை வடிவமைப்பது எவ்வளவு எளிது என்று அறிந்து கொள்ளலாம்."Design Site" லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இரண்டு விண்டோக்கள் திறக்கப்படும். ஒரு விண்டோவில் வெப்சைட் மேனேஜர் பக்கம் கிடைக்கிறது. இன்னொன்றில் வெப் டிசைன் டூல்கள் தரப்படுகின்றன. இதற்குக் கீழாக ஹோம் பேஜ் ஒன்று தரப்பட்டு நீங்கள் எடிட் செய்வதற்கு ரெடியாக இருக்கும். அதிலேயே உங்கள் தளத்திற்கான "About Us" மற்றும் "Contact Us" தயாராக இருப்பதனைக் காணலாம். இதன் பின்னர், அதில் தரப்பட்டுள்ள எளிதான யூசர் இன்டர்பேஸ் மூலம் தளத்தினை வடிவமைக்கலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் தரும் ஷேர் பாய்ண்ட் பயன்படுத்தியவர்களுக்கு இது இன்னும் எளிதாகத் தோன்றும்.தளத்தின் ஹெடர் டெக்ஸ்ட்டை விரும்பியபடி மாற்றலாம். அதற்கான பாப் அப் விண்டோக்கள் அடுத்தடுத்து கிடைக்கின்றன. டெக்ஸ்ட்டை நமக்கேற்ற வகையில் பார்மட் செய்திடலாம். இதில் நம் இலச்சினையைச் சேர்த்து அமைக்கலாம். எளிதான டூல்களும், வழி நடத்தும் குறிப்புகளும் இணைந்து நம் இணைய பக்கத்தினை எளிதாக உருவாக்க உதவுகின்றன. மேலும் இது இலவசம் என்பது கூடுதல் சிறப்பாகும். எதற்கும் ஒருமுறை சென்று பார்த்து பயன்படுத்திப் பாருக்கள்.
"ஓய்வு நேரத்தின் உண்மையான பிரச்சினையே, உங்கள் ஓய்வு நேரத்தினை மற்றவர்கள் அபகரித்துக்கொள்ளாமல் பார்த்துக் கொள்வதே!'' என்றார் மேலை நாட்டு அறிஞர் ஆர்தர் லேசி.
உங்கள் பொன்னான நேரத்தைச் சீரமைத்து உங்கள் நிறைவேறாத ஆசைக்கனவுகளை நனவாக்கிட சிறிதளவு முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டால் போதும்.
இதோ அதற்கான சுலபமான யோசனைகள்:
* உங்கள் அன்றாட வாழ்வை ஆக்கிரமிக்கும் செயல்கள் எவை எவை என்பதை பட்டியலிடுங்கள். அவற்றில் சில முக்கியமற்ற செயல்களுக்கு நேரம் ஒதுக்குவதை நீக்கி விடுங்கள்.
* உங்கள் அன்றாட வாழ்வின் அத்தியாவசிய தேவைகள் என்னென்ன என்பதை பட்டியலி டுங்கள். நீங்கள் விரும்பும் ஆசைக்கனவுகள் என்னென்ன என்பதையும் பட்டியலி டுங்கள்.
* தொலைக்காட்சி முன் அதிகநேரம் இருப்பது, வெட்டியாக ஊர் சுற்றுவது போன்ற காலத்தை விரயமாக்கும் செயல்கள் உங்களிடம் காண பட்டால் அவற்றை ஒதுக்கிவிட்டு அந்தநேரத் தை உங்கள் லட்சிய வழிகளுக்கு பயன்படுத் துங்கள்.
* உங்களால் செய்ய முடியாமல் சிதறிக் கிடக்கும் செயல்களை ஒருங்கிணையுங்கள். 2 அல்லது 3 நாட்கள் இழுத்தடிக்கும் வேலை களை ஒரே நாளில் செய்து முடித்து காலத்தைச் சேமிக்க சற்று சிந்திங்கள். தகவல் தொடர்புகளை வளர்த் தால் அதிக அளவு நேரத்தைச் சேமிக்கலாம். அதேநேரம் ஈமெயில் உங்களை நாள்முழுக்க ஆக்கிரமித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* பிறரிடமிருந்து வரும் அத்தியாவசிய வேண்டுகோள்களைத் தவிர, பிறவற்றிற்கு முடியாது என்று கூறும் பழக்கத்தை உருவாக்குங்கள். அனைத்து வேண்டுகோள்களுக்கும் முடியும் என்று கூறினால் உங்களுக்கு ஓய்வு நேரம் என்பதே கிடைக்காது.
* உங்கள் அலுவலக அலுவல்கள் அனைத்தையும் நீங்கள் ஒருவரே செய்ய நினைக்கும் பழக்கத்தை மாற்றி உங்கள் பணியாளர்களிடமும் சிலவற்றை ஒப்படைத்துச் செய்துமுடிக்கச் சொல்லுங்கள்.
* மாலை வேளைகளில் உங்கள் குழந்தைகளிடம் விளையாடி அன்றாட பாடங்களைச் சொல்லிக் கொடுப்பது, பொழுதுபோக்காக பூங்காக்களில் உல்லாசமாக உலா வருவது, நீங்கள் விரும்பும் பயனுள்ள புத்தகங்களை படிப்பது போன்றவற்றில் முழுமனதுடன் ஈடுபடுங்கள்.
இவ்வாறு செய்வதால் நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தை ஓய்வுக்கும், மகிழ்ச்சிக்கும் ஒதுக்கி நீங்கள் ஆனந்தமாய் வாழலாம்.
பயர்பாக்ஸ் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
இணையத்தில் எளிதாகவும், வேகமாகவும் உலா வர கீழே தரப்பட்டுள்ள சுருக்கு வழிகள் நமக்கு அதிகம் பயன்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நம் இணையப் பயணத்தில் நேரம் மிச்சமாவதுடன், நம் உழைப்பும் தேவையற்ற வகையில் செலவாகாது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.Alt + Left Arrow: இணைய தளம் ஒன்றை பின்பக்கமாகத் தள்ளுகிறது. அதாவது குறிப்பிட்ட தளத்திற்கு முன் உள்ள பக்கத்திற்கு உங்களை மாற்றுகிறது.Alt + Right Arrow: மேலே கூறியதன் மாற்றாகச் செயல்படும்F5: அப்போதைய டேப், பிரேம் மற்றும் இணைய தளத்தினைப் புதுப்பிக்கும்F11: அப்போதைய இணைய தளத்தினை முழுத் திரையில் காட்ட உதவும். மீண்டும் பழைய நிலைக்குக் காட்டவும் இதனைப் பயன்படுத்தலாம்.Esc: இறக்கப்படும் ஓர் இணைய தளத்தினை நிறுத்திவிடலாம்.Ctrl + ( or +): இந்த கீ இணைப்பில், பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தின் டெக்ஸ்ட் எழுத்துக்கள் அளவு பெரியதாகலாம், சிறியதாகலாம்.Ctrl + Enter: இணைய தள முகவரி ஒன்றின் பெயர் மட்டும் கொடுத்து, இவற்றைத் தட்டினால் முழுவதுமாகக் கிடைக்கும். (.com என்பதில் முடியும் தளப் பெயர் மட்டும்) எடுத்துக்காட்டாக, http://www.google.com என்பதற்கு google என டைப் செய்து, இந்த கீகளை அழுத்தவும்.
Shift + Enter: மேலே சொன்னபடி ".net" என முடியும் தளங்களுக்கு இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும் .Ctrl + Shift + Enter: மேலே குறிப்பிட்டுள்ளபடி ".org" என முடியும் தளங்களுக்கு இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்.Ctrl + Shift + Del: இந்த கீகளைப் பயன்படுத்தி Clear Data என்ற விண்டோவினைத் திறந்து, நம் பெர்சனல் டேட்டாக்களை நீக்கலாம்.Ctrl + D: அப்போது பயன்பாட்டில் உள்ள தளத்திற்கான புக் மார்க் ஒன்றை ஏற்படுத்தும்.Ctrl + I: இருக்கின்ற அனைத்து புக்மார்க்குகளையும் காட்டும்.Ctrl + J: டவுண்லோட் விண்டோவினைக் காட்டும்.Ctrl + N: புதிய பிரவுசர் விண்டோவினைத் திறக்கும்.Ctrl + P: அப்போதைய இணையப் பக்கத்தினை அச்சிட.Ctrl + T: புதிய டேப் ஒன்று திறக்கப்படும்.Ctrl + F4 or Ctrl +W: அப்போதைய டேப்பினை அப்போதைக்கு மூடும்.Ctrl + Shift + T: அப்போது மூடப்பட்ட டேப்பில் இருந்த விண்டோவினைத் திறக்கும்.Ctrl + Tab: திறக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டேப்கள் வழியாகச் செல்ல இவை உதவும்.Spacebar: இணையதளப் பக்கத்தில் கீழாக ஒரு பக்கம் செல்ல இந்த கீகள் பயன்படுத்தப்படுகின்றன.Shift + Spacebar: இணையதளப் பக்கம் ஒன்று மேலாகச் செல்லும்.Alt + Down arrow: டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்த அல்லது கீழ்விரி மெனுவில் தந்த டெக்ஸ்ட் அனைத்தையும் காட்டும்.