http://jobs. efinancialcareer s.com/Accounting _Finance/ UAE.htm | |
http://www.jobs- in-gulf-uae- bahrain-qatar- oman-dubai. linksseo. com/ | |
Welcome
Job sites (gulf)
கம்ப்யூட்டர் விசன் சின்(ட்)றோம் - Computer Vision Syndrome (CVS)
கணனி -சில விஷயங்கள்
1. இணைய இணைப்பின் வேகம் 8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.2.“Start Me Up” என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
3. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.
4. அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.
5. உங்கள் லேப்டாப் மீது தண்ணீர், காப்பி,டீ, கூல் ட்ரிங்க்ஸ் என ஏதாவது திரவும் கொட்டிவிட்டால், உடனே மின்சக்தி வரும் ப்ளக்கினை எடுத்து மின்சக்தியை நிறுத்தவும். அல்லது பேட்டரியினை வெளியே இழுக்கவும்.
6. லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.
7. கம்ப்யூட்டர் கேம்ஸ்களில், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டது The Sims என்ற கேம்.
8. உங்களையும் அறியாமல், உங்களிடம் உள்ள ஒரே நகல் உள்ள ஒரு கோப்பினைக் கம்ப்யூட்டரிலிருந்து அழித்துவிட்டால், உடனே ரெகுவா போன்ற, கோப்பு மீட்டுத் தரும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். எனவே இதனை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைப்பது நல்லது.
9.ஒரு பிரிண்டரை வெகுநாள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் திட்டமிட்டால், பிரிண்டரை வாங்கும் முன், ஒரு பக்கம் அதில் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்பதனையும் கணக்கிட்டுப் பார்க்கவும்.
10. “Hotswapping” என்பது, கம்ப்யூட்டருடன் ஒரு சாதனைத்தை இணைத்துப் பயன்படுத்திய பின்னர், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடாமல் அல்லது ரீபூட் செய்திடாமல், இணைப்பை நீக்குவதனைக் குறிக்கும்.
11. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின், சிஸ்டம் முடங்கினாலோ, மிக மெதுவாக இயங்கினாலோ, உடனே சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் மூலம், அந்த அப்ளிகேஷன் பதிந்த நாளுக்கு முன்னர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வருவதுதான் சிறந்த வழியாகும்.
12. ஒரு பிழைச் செய்தியைக் காட்டிய பின்னர், கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், அதற்கான தொழில் நுட்ப வல்லுனரை அழைக்கும் முன், அந்த பிழைச் செய்தி என்ன என்று குறித்து வைத்துக் கொள்வது சிறந்த வழி முறையாகும். முடியுமானால், அதனை செலக்ட் செய்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பேஸ்ட் செய்திடலாம். இயலாவிட்டால், அதனைப் பார்த்து எழுதிக் கொள்ளலாம். அதுவும் முடியாவிட்டால், அப்படியே அந்த பிழைச் செய்திக்கான திரையை, ஒரு இமேஜாக சேவ் செய்து, பின்னர் அதனைத் திறந்து அதில் இருப்பதைப் பார்த்து, டெக்ஸ்ட் பைலாக சேவ் செய்து வைக்கலாம்.
13. FAT16, FAT32, மற்றும் NTFS ஆகியவை வெவ்வேறு வகையான பைல் கட்டமைப்புகளாகும்.
14. விண்டோஸ் என்.டி. (Windows NT) யில் உள்ள என். டி. என்பது New Technology என்ற சொற்களைக் குறிக்கிறது.
15. 1977 ஆம் ஆண்டு,பில் கேட்ஸ் ஒருமுறை, மிக வேகமாகக் காரை ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.
16. விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா? இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss) எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ஓ ரியர் (Charles O’Rear). கலிபோர்னியாவில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.
உற்சாகம் தரும் மெல்லோட்டம்-(Jogging
ஓய்வு, உறக்கம், உடற்பயிற்சி இவை மூன்றும் மனிதனுக்கு அவசியத் தேவையாகும். ஆனால் அவை அளவோடு இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி மனிதனை என்றும் புத்துணர்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கச் செய்யும் மருந்தாகும். இன்றைய கால கட்டத்தில் இளம் வயதில் உடற்பயிற்சியின்றி இருந்தவர்கள், 40 வயதை கடந்தாலே நோயின் பிடிக்கு ஆளாகின்றனர். நோயில்லா பெருவாழ்வு பெற உடற்பயிற்சி அவசியமாகும்.
தேங்கிய குட்டை நீர் சாக்கடையாக மாறிவிடும். ஓடாத இயந்திரம் பழுதாகிவிடும். உபயோகமில்லா இரும்பு ஆயுதங்களில் துரு ஏறிவிடும். உழைக்காத, உடற்பயிற்சி செய்யாத உடலும் உருக் குலைந்துவிடும்.
பொதுவாக சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்றவை உலகெங்கிலும் உள்ள மக்களால் ஆண், பெண் பாகுபாடின்றி மேற்கொள்ளப்படுகிறது.
உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்
· உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
· நம் உடலின் உறுப்புகளும், நரம்புகளும் புத்துணர்வடையும்.
· தசைகள் நன்கு சுருங்கி விரிவடைவதால் உடல் பலமடையும்.
· உண்ட உணவு எளிதில் சீரணமடையும். அதன் சத்துக்கள் முழுவதும் உடலில் சீராக பரவும்.
· இதயம் பலப்படும்.
உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி தேவை இல்லை. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.
நல்ல காற்றோட்டம் நிறைந்த பகுதியில் அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் முன் மலம், சிறுநீர் இரண்டையும் வெளியேற்றி விடவேண்டும்.
மெல்லோட்டம்
மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள். விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.
இந்த மெல்லோட்டத்தை ஆண் பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.
பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.
மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்
· மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.
· நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
· இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.
· உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.
· இதயத் தசைகள் வலுவாக்குகிறது.
· இதயம் சுருங்கி விரியும்போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.
· இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது.
· உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.
· எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.
· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
· என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.
· முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.
மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.
ஃபைல் ப்ராப்பர்ட்டீஸ்
பைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்து விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். சில கோப்புகளின் தன்மைகளை, கூறுகளைக் காணும்போதுதான், இதனை இப்படி அமைத்திருக்கலாமே என்று எண்ணலாம். எடுத்துக் காட்டாக, இதன் அளவை இன்னும் குறைத்திருக்கலாமே என்று சிந்திக்கலாம். அல்லது வேறு பார்மட்டில் சேவ் செய்திருக்கலாமே என்று திட்டமிடலாம். அப்படியானால், கம்ப்யூட்டர் நம்மிடம், இந்த பைலை இப்படிப்பட்ட கூறுகளுடன் சேவ் செய்யப் போகிறேன் என்று கேட்டால் எவ்வளவு வசதியாகவும், நன்றாகவும் இருக்கும். இந்த வசதியைக் கம்ப்யூட்டர் நமக்குத் தருகிறது. வேர்ட் தொகுப்பில் இதனை மேற்கொள்ளலாம். அந்த வழிகளைப் பார்ப்போம்.
Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் Save அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் Prompt for Document Properties என்ற இடத்திற்கு நேராக டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஒவ்வொரு டாகுமெண்ட் சேவ் செய்திடுகையிலும் உருவாகப் போகும் பைல் குறித்த பிராபர்ட்டீஸ் டீடெய்ல்ஸ் கிடைக்கும்.
பிராபர்ட்டீஸ் பிரிவில் யார் டாகுமெண்ட்டை உருவாக்கினார்கள் என்று உங்களைப் பற்றிய தகவல்கள் பதியப்படும். இது வேண்டாம் என்று நினைத்தால் அவை பதியப்படாமல் இருக்கும் வகையில் செட் செய்து கொள்ளலாம். Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்து பின் Security டேபை அழுத்தவும். இதில் Remove personal information from the properties on save என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் டிக் செய்து ஓகே அழுத்தி வெளியேறவும். இதே போல நீங்கள் ஒரு பைலைப் பார்த்த விஷயம் கம்ப்யூட்டரில் My Recent Documents என்பதில் இருக்கும் அல்லவா? இங்கும் நீங்கள் பைலைப் பார்த்த விஷயம் பதியப்படக் கூடாது என எண்ணினால் டாகுமெண்ட்டைத் திறந்து பின் Ctrl + O அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் கிடைக்கும் கட்டங்களில்
My Recent Documents அழுத்தவும். பின் கிடைக்கும் விண்டோவில் வலது பக்கம் Tools எனத் தெரியும் இடத்தில் அழுத்தி கீழ் விரியும் விண்டோவில் Clear Documents History என்பதில் டிக் ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
அப்போதைய ஹிஸ்டரியை நீக்க
பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரினை நீங்களும் பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் அதில் பார்த்த இணைய தள முகவரிகளை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில் இதனை இரு வழிகளில் மேற்கொள்ளலாம். முதலாவதாக பிரைவேட் பிரவுசிங் என்னும் தற்போதைய வசதி மூலம், நாம் செல்லும் தளங்களின் முகவரிகள் பிரவுசரில் பதியப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இன்னொரு வழி, ஹிஸ்டரியில் பதிந்துள்ள முகவரிகளை அழிப்பது. ஆனால் அன்றைக்கு, அந்த பயன்படுத்துதலில், நீங்கள் கண்ட தளங்களை எப்படி நீக்குவது?பயர்பாக்ஸ் பிரவுசரில் நீங்கள் அப்போது மேற்கொண்ட தளங்கள் குறித்த தகவல்களை மட்டும் நீக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதி தரப்பட்டுள்ளதனைப் பலர் அறியாமல் உள்ளனர். CtrlShiftDel அழுத்துவதன் மூலம், அப்போது பயன்படுத்திய தளங்களை நீக்கும் வசதி கிடைக்கிறது. அல்லது Tools > Clear Recent History எனச் சென்று இந்த வசதியினைப் பெறலாம். இந்த வழிகள் மூலம் கிடைக்கும் விண்டோவில், நீக்கப்படக் கூடிய அனைத்து தகவல் வகைகளும் கிடைக்கின்றன. இந்த தகவல்களின் மேலாகக் காட்டப்படும் நேரம், நம் வேலையை எளிதாக்குகிறது. இந்த மெனுவினைக் கீழாக இழுத்தால், கடந்த ஒரு மணி நேரத்தில், இரண்டு அல்லது நான்கு மணி நேரங்களில் என, நேரத்தினைக் கணக்கிட்டு, பார்த்த தளங்களை அழிக்கலாம்.
வயிற்றுப்போக்கில் பல வகை உண்டு!
வாழ்நாளில் ஒரு முறையாவது வயிற்றுப்போக்கு தொந்தரவால் நாம் அவதிப்படுவோம். கடுமையான இதிலிருந்து உடனே வெளியே வர வேண்டுமென அனைவரும் நினைத்தாலும், துரதிருஷ்ட வசமாக, ஒரே மாத்திரையில் இது குணமாவதில்லை.ஏனெனில், வயிற்றுப்போக்கு ஏற் படுவதற்கு ஒரே காரணம் இருப்பதில்லை. எனவே, ஒரே சிகிச்சையில் குணப்படுத்தி விட முடியாது. உணவு ஒவ்வாமை, உணவு விஷமாதல், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று, வயிற்றில் ஒட்டுண்ணிகள் பரவுதல் ஆகியவை காரணமாக அமை கின்றன. உணவு விஷமாவது, அதிகளவில் ஏற்படும் பாதிப்பு. விஷமாகிப் போன உணவைச் சாப்பிட்ட இரண்டு முதல் 34 மணி நேரத்திற்குள், கடுமையான பாதிப்பு துவங்கி விடும். பொதுவாக அந்த உணவு சாப்பிட்ட அனைவருக்கும், வயிற்றுப் போக்கு ஏற்படும். 48 மணி நேரத்தில் தானாகவே சரியாகி விடும். ஆன்ட்டிபயாடிக் தேவையில்லை. கடல் உணவு, செயற்கை நிறமி ஏற்றப்பட்ட உணவு வகைகளால், ஒவ்வாமை ஏற்படலாம். குழந்தைகளில் சிலருக்கு பால் சாப்பிடுவது ஒவ்வாமை யாகி விடும். இதை அந்த குழந்தையோ, அதன் பெற்றோரோ கண்டுபிடிப்பர். அந்த உணவைத் தவிர்த்து விட்டால், வயிற்றுப் போக்கு நின்று விடும். வைரஸ் தொற்றால் ஏற்படும் வயிற்றுப் போக்கின் போது, நீராகவே வெளி யேறும். லேசான காய்ச்சல் ஏற்படலாம். உடலில் நீர் சத்தை அதிகரித்தால், தானாகவே சரியாகி விடும். ஆறு மணி நேரத்திற்கு மேல் சிறுநீரே வெளியேறாமல், காய்ச்சல், வாந்தி, நினைவு தப்புதல், கடும் வயிற்று வலி, வயிற்றுப்போக்குடன் ரத்தம் வெளி யேறுதல், 48 மணி நேரத்திற்கும் மேலாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மருத்துவ ரிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது கூட, ஆன்ட்டிபயாடிக் மருந்து உட்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை. சீதபேதி (டிசென்டரி, வயிற்றுக் கடுப்பு)க்கும், பேதி (டயரியா, வயிற்றுப் போக்கு)க்கும் வித்தியாசம் உண்டு. சீதபேதி என்பது, வயிற்றுப் போக்குடன் ரத்தமும், மலத்தில் சளியும் கலந்து வரும். காய்ச்சலும் இருக்கும். "ஜியார்டியாசிஸ்' என்ற வகை வயிற்றுப்போக்கின்போது, வயிறு உப்புசம் ஆகிவிடும். வயிற்று வலி, பிரட்டல், வாயு பிரிதல், தண்ணீராக மலம் வெளியேறுதல், அதிக நாற்றம் எடுத்தல் ஆகியவை ஏற்படும். "அமீபியாசிஸ்' என்ற வகை வயிற்றுப் போக்கு, வெகு தாமதமாகவே பாதிப்பை உண்டாக்கும். அடி வயிற்றில் வலியுடன், மலத்தில், ரத்தமும், சளியும் கலந்து வரும். இரண்டு வகை நோயுமே, சிகிச்சை அளிக்காவிட்டால், பல வாரங்கள் தொடரும்.
பேதி ஏற்பட்டால், முதல் 48 மணி நேரத்திற்கு தண்ணீர், எலக்ட்ரோலைட் போன்றவை உட்கொண்ட படி இருக்க வேண்டும். வயிற்றிலிருந்து எவ்வளவு நீர் வெளியேறுகிறது, அதை ஈடு செய்யும் வகையில் தண்ணீர் பருக வேண்டும். சிறுநீர் செல்வதும் தடைபடக் கூடாது; அதன் நிறத்தையும் கண்காணிக்க வேண்டும்.
டீ, இளநீர், எலுமிச்சை பழச்சாறு, மோர் ஆகியவை பருகலாம். "ஓரல் ரீஹைட் ரேஷன் சொல்யூஷனை' (ஓ.ஆர்.எஸ்.,) வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு டீஸ்பூன் சால்ட், எட்டு டீஸ்பூன் சர்க்கரை, கொதிக்க வைத்த குடிநீர் 1,000 மி.லி., ஆகியவை கலந்து குடிக்க வேண்டும். மருந்து கடைகளிலும், பாக்கெட் வடிவில் ஓ.ஆர்.எஸ்., கிடைக்கும். பாட்டிலில் கிடைப்பவை சற்று விலை அதிகமாக இருக்கும். பாக்கெட்டை வாங்கும் போது, அதில் குறிப்பிட்டுள்ள படி, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை, சரியான அளவு கலக்க வேண்டும். பாக்கெட்டில் உள்ள பொடியைப் போட்டு, தண்ணீரை கொதிக்க வைக்கக் கூடாது. அப்படி கொதிக்க வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் குறைந்து, சர்க்கரை பயனற்றதாகி விடும். இந்த தண்ணீர் குடிப்பது, வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தாது. உடலில் நீர் சத்து குறையாமல் மட்டுமே பாதுகாக்கும். ஓ.ஆர்.எஸ்.,க்கு பதிலாக, அரிசியும், பருப்பும் சம அளவில் கலந்து, பிரெஷர் குக்கரில் வேக வைத்து, நன்கு மசித்து, உப்பு கலந்து, மீண்டும் கஞ்சி போலக் குழைத்து வேக வைக்க வைத்து சாப்பிடலாம். கஞ்சி பதத்தில் தான் சாப்பிட வேண்டும். இறுகிய பதத்தில் அல்ல. இதனுடன் இடையிடையே வாழைப் பழம் சாப்பிடலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி மேட் பழச்சாறுகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த, "லோமோடில்' அல்லது "லோமோபென்' மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. அவை குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் நல்லதல்ல. வயிறு உப்புசம் ஏற்படும். சிலர் "என்ட்ரோக்வினால்' அடங்கிய மருந்துகள் வாங்கி சாப்பிடுகின்றனர். இவை, தடை செய்யப்பட்ட மருந்துகள். இதுவும் இல்லையெனில், "லாக்ஸ்' என்ற பெயருடன் கூடிய, "சிப்ளோக்சோப்ளாக்ஸ், கேடிப்ளாக்ஸ்' மருந்துகளோ, டிரை மீதோப்ரிம் அடங்கிய மருந்துகளான, செப்ட்ரான் அல்லது மெட்ரோனிடே சோல் மருந்துகளோ வாங்கி சாப்பிடு கின்றனர்.
இவை, வயிற்றுப்போக்கை சரி செய்யாது. அதை வயிற்றிலேயே தங்க வைத்து விடும். இதனால், வயிற்றில் கிருமிகள் பல்கிப் பெருகி, "சூப்பர் பக்' உருவாகக் காரணமாகி விடும். டாக்டரின் ஆலோசனை இன்றி, இந்த மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கை தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால் போதும். அவை:
* வெளி இடங்களில் விற்கப்படும், ஈக்கள் மொய்த்த தின்பண்டங்கள், கையுறை அணியாமல் எடுத்துக் கொடுக்கப்படும் உணவுப் பொருட் களைச் சாப்பிடக் கூடாது.
* பழச்சாறு குடிக்கும் போது, சாறு தயாரிக்க பயன்படும் ஜூசர் கருவி சுத்தமானதாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அதில் போடப் படும் ஐஸ் துண்டு, சுத்தமான தண்ணீரில் தயாரிக்கப்பட்டதா என் பதையும் உறுதி செய்ய வேண்டும்.
* வேக வைக்காத உணவை சாப்பிடக் கூடாது.
* சுத்தமில்லாத பாத்திரத்தில் சமைத்த உணவுகள், சாப்பிடும் தட்டு, தண்ணீர் குடிக்க பயன்படும் தம்ளர் ஆகியவை சரியாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை வெளியில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மிக சூடாக இருக்கும் உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
* வெளியில் செல்லும் போது, மினரல் வாட்டரோ, மிக சூடாக உள்ள டீயோ, காபியோ தான் குடிக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில், ஒரு நிமிடம் வரை நன்கு கொதித்த தண்ணீரைக் குடிக்கலாம்.
* கைவசம், "டிங்ச்சர் அயோடின்' எடுத்துச் சென்றால், அதில் 2 சதவீத அளவில், ஐந்து சொட்டை எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்து, அரை மணி நேரம் சென்ற பின் குடிக்கலாம்.
* காலரா பாதித்த பகுதிகளுக்கு சென்றால், பல் துலக்க பயன்படுத்தப்படும் தண்ணீரால் கூட, அந்த தொற்று ஏற்பட்டு விடலாம். எனவே, பல் துலக்க, குளிக்கக் கூட, நல்ல தண்ணீரை பயன்படுத்துவது நல்லது.
குளோனிங் பசுக்களின் பால்
குளோனிங் முறையில் உயிர்களை உருவாக்க ஒரு புறம் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதே நேரத்தில், குளோனிங் முறையில் படைக்கப்படும் உயிரினங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தும் வருகிறது. குளோனிங் மூலம் படைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களின் பால், பிரிட்டனில் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ரகசியமாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நம்ம ஊரில் வீடுகளில் மாடுகளை வளர்ப்பது போல், பிரிட்டனில் மாடுகளை வளர்க்க முடியாது. ஊருக்கு வெளியே, பெரிய பண்ணைகளில் தான் மாடுகளை வளர்க்க முடியும். தொழிற்சாலைகள் போல் காட்சி தரும் மாட்டுப் பண்ணைகளில் பல வித மாடுகள் வளர்க்கப்படும். அங்கிருந்தே பால், மாமிசம் போன்றவை நகருக்குள் அனுப்பப்படும். கடந்த 2006ம் ஆண்டு, பிரிட்டனில் முதல் குளோனிங் பசு மாடு உருவாக்கப்பட்டது. "துண்டி பேரடைஸ்' என அழைக்கப்பட்ட அந்த பசு ஷூரோப்ஷையர் என்ற ஊரில் உள்ள பண்ணையில் பிறந்தது.பிரிட்டனில் பல பண்ணைகளில் குளோனிங் பசு மாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பசு மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால், நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. "இது குளோனிங் பசுவிடம் இருந்து பெறப்பட்ட பால்...' என எந்த முத்திரையும் இன்றி, அந்த பால் விற்பனை செய்யப்படுகிறது. குளோனிங் பசுக்களின் பால், இறைச்சிகளை விற்பனை செய்ய தனி சட்டம் எதுவும் பிரிட்டனில் இல்லை. எனவே, உடனடியாக அதற்கான தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என, மிருக வதை தடுப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். "குளோனிங் அல்லது குளோனிங் வாரிசு பசுக்களின் மூலம் கிடைக்கும் உணவு பொருட்கள், மனித உடல் நலனுக்கு ஏற்றதா என இன்னும் ஆய்வு செய்யப்பட வில்லை. குளோனிங் மூலம் உருவாக்கப்படும் மிருகங்களுக்கு உறுப்பு குறைபாடுகள், ஆரோக்கியமில்லாத உடல், வலி ஆகியவை உள்ளன. எனவே, குளோனிங் மிருகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்...' என, மிருக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு குளோனிங் மிருகங்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும், பிரிட்டன் விவசாயிகள் அது பற்றி கவலைப்பட வில்லை. "குளோனிங் பசுக்கள் மிகவும் பெரிதாக உள்ளன. அதன் மூலம் அதிக அளவு பால் கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கு நல்லதுதானே. அதை ஏன் எதிர்க்க வேண்டும்?' என்கின்றனர் அவர்கள். "குளோனிங் மிருகங்கள் மூலம் உணவின் தரம் அதிகரிக்கும்!' என, விவசாயிகளுக்கு ஆதரவாக விஞ்ஞானிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.