Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

அழகு குறிப்புகள்

கோடைக் காலம் முடிந்துவிட்டது. ஆனால் வெயிலின் கோரப் பிடி இன்னும் குறையவில்லை, வரும் காலத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். இதனால் சருமம் வறட்சி காணும். இக்காலங்களில் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

முகக்கறுப்பு மாற

பாதாம் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு விட்டு குழைத்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி இவற்றை நிழலில் உலர்த்தி தனித்தனியாக பொடியாக்கி அதில் சம அளவு எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகக்கறுப்பு மாறும்.

பப்பாளி பழச்சாறு எடுத்து அதை காய்ச்சாத பசும் பால் விட்டு அல்லது தயிர் விட்டு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள முகச் சுருக்கம், கருமை நீங்கும்.

நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் சிறிதளவு மைதா மாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் கருமை மாறி பளபளப்பாக இருக்கும்.

முகப்பரு மாற

புதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மாறுவதுடன் முகம் பளபளக்கும்.

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சிவப்பு சந்தனக் கட்டையை நீரில் உரைத்து முகத்தில் பூசி காலையில் கழுவி வர முகப்பரு, பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், தழும்புகள் மாறும்.

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் புதினா சாறு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒற்றடம் கொடுத்தால் முகம் பளபளக்கும்.

சருமம் மெருகேற

வறட்சியான சருமம் கொண்ட பெண்கள் தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் கலந்து அதில் பயிற்றம் மாவு சேர்த்து சருமம் எங்கும் பூசி 20 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் குளித்து வந்தால் சரும வறட்சி நீங்கி சருமம் மெருகேறும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடித்து அதில் பால் சேர்த்து நன்கு குழைத்து மேனி எங்கும் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் சருமம் பளபளக்கும்.

முகச் சுருக்கம் நீங்க

பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகச் சுருக்கம் நீங்கும்.

வீடியோ பார்மட்கள்

உங்களிடன் ஒரு எம்பி3 ஆடியோ பைல் இருந்தால், அநேகமாக அனைத்து ஆடியோ பிளேயரும் அதனை இயக்கும். அதே போல ஜேபெக் வடிவில் உள்ள பட பைலை எந்த பிக்சர் வியூவர் பைலும் இயக்கிக் காட்டும்.
ஆனால் . avi, .mpeg, , போன்ற வீடியோ பைல் இருந்தால், அனைத்து வீடியோ பிளேயரும் அவற்றை இயக்கும் என்று உறுதியாகக் கூற இயலாது. இன்னும் சொல்லப் போனால், இவை எல்லாம் வீடியோ பார்மட் இல்லை. டேட்டாவினை மற்ற பார்மட்களில் கொண்டுள்ளன என்று சொல்லலாம். இந்த பைல் வகைகள் எல்லாம், ஆடியோவினை ஒரு பார்மட்டிலும், வீடியோவினை இன்னொரு பார்மட்டிலும் (கோடெக்) கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, ஒரு ஏ.வி.ஐ.பைல் (.avi),), மோஷன் ஜேபெக் வீடியோ மற்றும் பி.சி.எம். டியோ பார்மட்களைக் கொண்டிருக்கலாம். இன்னொரு பைலில் எக்ஸ்விட் எம்பெக் 4 வீடியோ பார்மட்டும் IMAADPCM பார்மட்டில் ஆடியோவும் இருக்கலாம். வேடிக்கையாக ருக்கிறதா? மேலும் படியுங்கள்.
இதனால் தான் ஒரு .avi பைல், விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கப்படலாம். இன்னொரு பிளேயர், பைலில் உள்ள ஆடியோவினை மட்டும் இயக்கும்; வீடியோ கிடைக்காது; அல்லது மாற்றாகவும் இருக்கலாம். சில பிளேயர் ஒரு பைலில் உள்ள எதனையும் இயக்காமல் இருக்கலாம்.
ஒரு வீடியோ பைல் எந்த வகை கோடெக் பார்மட்டினைக் கொண்டுள்ளது என்பதனை எப்படி அறிவது? வெளிப்படையான ஒரு வழி உள்ளது. பைலின் மேலாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து, கிடைக்கும் விண்டோவில் டீடெய்ல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுத்து பார்ப்பது. இங்கே, வீடியோவின் நீளம், ரெசல்யூசன், வீடியோ மற்றும் ஆடியோ பிட் ரேட் ஆகிய தகவல் கிடைக்கும். ஆனால் மிக முக்கியமான கோடெக் குறித்த தகவல் இருக்காது அல்லது கிடைக்காது. இந்த தகவல் தானே, ஒரு வீடியோ பிளேயரை இயக்க தேவையானது. பின் ஏன் மைக்ரோசாப்ட் சிஸ்டம் அதனைக் காட்ட மறுக்கிறது? கண்ணா மூச்சி விளையாட்டு ஏன்?
எப்படியோ? விண்டோஸ் வீடியோ பைலுக்கான கோடெக் குறித்து வாய் திறக்க மறுக்கிறது என்பதால், நமக்கு இதனை அறிய ஒரு தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவையாய் உள்ளது. நான் அறிந்த வகையில் ஒரு சிறந்த புரோகிராம் AVI Codec என்பதாகும். இது மிக எளிமையானது மட்டுமின்றி இலவசமானதும் கூட. இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்த பின்னர், எந்த பார்மட்டில் உள்ள வீடியோ பைலிலும், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அதன் மீது ரைட் கிளிக் செய்து AVIcodec: detailed informationஎன்பதனைத் தேர்ந்தெடுத்து, அதனை புரோகி ராமிற்குள் லோட் செய்திடும்படி செய்திடலாம். ஏற்கனவே ஏதேனும் கோடெக் புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தால், இது பலனளிக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட பைலை, புரோகிராமிற்குள் ட்ராப் செய்து கொண்டு வரலாம்.
இவற்றையும் மீறி கூடுதல் கோடெக் பைல் தேவை எனில், , WindowS Essentials Codec Pack தொகுப்பினை டவுண்லோட் செய்திட வேண்டும்.

ரத்த அழுத்தமா ? கூலா தண்ணீர் குடிங்க
நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர்.

தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,"ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது" என்றனர்.