Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

கழுகிடம் கற்றுக் கொள்வோம்!

தன்னம்பிக்கை
அதிகாரம், சுதந்திரம், மேன்மை, 360 டிகிரி தொலைநோக்குப் பார்வை என்பதால்தான் பறவைகளின் ‘சக்கரவர்த்தி’ என்ற பெருமையை பெறுகிறது கழுகு. வேட்டையாடும் யுக்தியை தன் சிறப்பியல்பாகவே பெற்றதனாலேயே, அதிகார ஆணவத்தில் இருக்கும் அமெரிக்காவின் தேசியப்பறவை என்ற அந்தஸ்தும் கழுகுக்கு கிடைத்திருக்கிறது.இத்தனை சிறப்புகள் கொண்ட கழுகிடம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய சில தலைமைப் பண்புகள் இருக்கின்றன…
பெரிதாக யோசி… தனித்து முன்னேறு…‘பலவீனமானவர்கள் எப்போதும் கூட்டத்துடன் இருக்கவே விரும்புவார்கள். ஆனால், தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் தன்னந்தனியாகவே சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள்’ என்பது பிரபலமான ஒரு பழமொழி. இந்த பழமொழியை அப்படியே பிரதிபலிக்கும் குணாதிசயம் கொண்டது கழுகு. மற்ற பறவைகள் எல்லாம் கூட்டமாகப் பறக்கக் கூடியவை. ஆனால் கழுகு மட்டும் தன்னந்தனியாக பறக்கும் பழக்கம் கொண்டது.
அதேபோல், மனதின் உயரம்… வாழ்வின் உயரம்… என்பதையும் பிரதிபலிக்கக் கூடியது கழுகு. ஆமாம்… மற்ற பறவைகளைக் காட்டிலும் அதிக உயரத்தில் பறக்கும் திறனும், குணமும் கழுகுக்கு உண்டு.
மன ஒருமைப்பாடு… துல்லியமான இலக்கு… இருக்கும் இடத்திலிருந்து 5 கி.மீட்டர் தூரம் வரை கவனம் செலுத்தக்கூடிய திறன் கழுகுக்கு உண்டு. எத்தகைய தடைகளையும் தாண்டி, தனது இரையை அடையும் வரை தனது கவனத்தை வேறு எதிலும் திசை திருப்பாத ஒருமுகத்திறனும் கழுகின் பிரத்யேக குணம்.
அஞ்சாதே… சவால்களை சாதகமாக்கு…
சற்று வேகமாக காற்று வீசத்தொடங்கினாலே, மற்ற பறவையினங்கள் மறைந்து கொள்ள மரங்களின் கிளைகளைத் தேடி ஓட ஆரம்பித்துவிடுகின்றன. ஆனால், புயலை நேசிக்கும் ஒரே பறவை கழுகுதான் என்பது ஆச்சரியமான தகவல். மேகக் கூட்டங்களைக் கண்டாலே கழுகு உற்சாகமாகிவிடும். புயல்காற்று வரப்போவதை அறிந்தவுடன் மேகங்களுக்கு மேல் கிழித்துக் கொண்டு தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு, உயரே பறக்கத் தொடங்கிவிடும்.
வெற்றியாளர்கள் சவால்களைக் கண்டு அச்சப்படுவதில்லை, மாறாக சந்தோஷப்படுகிறார்கள். தன்னைச் சூழும் சவால்களையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, வெற்றியின் சிகரத்தை தொடுகிறார்கள் என்பதை கழுகின் இந்த குணத்தில் இருந்து புரிந்துகொள்ளலாம்.
கூட்டாளியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா… அவசரம் கொள்ளாதே…
தனிப்பட்ட வாழ்க்கை அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும் தன்னுடைய கூட்டாளியை அவரின் அர்ப்பணிப்பு பண்பை சோதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை கழுகின் இணை தேடும் இயல்பிலிருந்து கற்றுக் கொள்ளலாம். மற்ற பறவைகள், விலங்குகள் போலல்லாமல், இணை சேரும் விஷயத்தை கழுகு சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை.
பெண் கழுகு, ஆண் கழுகை பார்த்தவுடன் தரை மட்டத்திலிருந்து மெதுவாகப் பறக்க ஆரம்பித்து, மிக உயர்ந்த இடத்துக்குச் சென்றவுடன் தன்னுடைய இறகு ஒன்றை கீழே உதிர்க்கும். ஆண் கழுகு அந்த இறகை தரையில் விழுவதற்கு முன் பிடித்து, பெண் கழுகிடம் மீண்டும் சேர்க்கும். அதை வாங்கி மீண்டும் கீழே போட்டுவிடும் பெண் கழுகு. ஒன்றை ஒன்று துரத்தும் இந்த போட்டி மணிக்கணக்கில் நீடிக்கும். அதன் பின்புதான் இரண்டும் ஒன்றை ஒன்று அனுமதிக்கின்றன.
வசதியை விட்டுவிடு… மேலும் வசதிகள் வசமாகும்கூட்டுக்குள் இருக்கும்போதே கழுகுக் குஞ்சுகளுக்கு போராட்ட குணம் கற்றுத்தரப்படுகிறது. கரடு முரடான கூட்டிலிருந்து விரைவில் குஞ்சுகள் வெளியேற முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே, தாய்க்கழுகு கூட்டில் இருக்கும் மென் இறகுகள் மற்றும் புல்களை நீக்கிவிடுகின்றன. சௌகரியமான இடத்தில் இருக்கும் வரை முன்னேற்றத்தை நோக்கிய நம் பயணம் இருக்காது என்பதையே கழுகின் இந்தப் பண்பு உணர்த்துகிறது.
பழையன கழிதல்… புதியன புகுதல்…
வயதான கழுகுக்கு இறகுகள் வலுவிழந்துவிடுவதால், முன்னைப்போல் வேகமாகவும், உயரமாகவும் பறக்க முடியாது. இதனால் பலவீனமாக உணரும் கழுகு, தொலை தூரத்தில் உள்ள காடுகள் அல்லது மலைப்பிரதேசங்களுக்குச் சென்று, தன் அலகுகளால் உடலெங்கும் குத்திக்கொண்டு இறகுகளை பிய்த்துவிடுகிறது.

மேலும் பாறைகளில் தன் அலகுகளையும், நகங்களையும் மோதி நீக்கிவிடுகிறது. பின்னர் புதிய இறகுகளும், நகங்களும் முளைக்கும் வரை தன்னை மறைத்துக்கொண்டு வாழ்கிறது. புதிய இறகுகள் முளைத்தவுடன், வெளியே வந்து முன்பைவிட உயரமாக பறக்க ஆரம்பிக்கிறது. நம் வாழ்க்கைக்கு உதவாத பழக்கங்களை, விடுவதற்கு கடினமாக இருந்தாலும் விட்டொழிக்க வேண்டும் என்ற நல்ல விஷயத்தை கழுகின் இந்த செயல் உணர்த்துகிறது.

வாழ்க்கை என்பது என்ன?

இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?
- உயிரோடு இருப்பதா?
- மகிழ்ச்சியாக இருப்பதா?
- பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
- தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
- வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?
- தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
- தத்துவங்களின் அணிவகுப்பா?
.... இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.
இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.
அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா...? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.

ஒரு ஜெர்மனிய பழமொழி, ``அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்'' என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.
துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.
நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?
உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.
தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.
இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.
- நம்மைவிட உடலில் பலசாலி யானை
- நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
- நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

ஒளி அகாடமி & டிரெய்னிங்க் இன்ஸ்டிட்யூட்

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையுமுடைய ஏக இறைவனின் திருப்பெயராலும், உலகினுக்கோர் அழகிய முன்மாதிரியாய் உதித்திட்ட இறைத்தூதரின் வழிகாட்டுதல் மற்றும் பிரார்த்தனையின் பொருட்டாலும்,

பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் "ஒளி அழகிய கடன் அறக்கட்டளை" வழங்கும் "ஓளி அகாடமி & டிரெய்னிங்க் இன்ஸ்டிட்யூட்" (OLI Academy and Training Institute) என்ற பெயரிலான திறந்தவெளிப் பலகலை மாணவர்களுக்கான பயிற்சி மையம் ஆரம்பமாக இருக்கிறது.

பட்டுக்கோட்டை தாலுக்காவைச் சுற்றியுள்ள அனைத்து மாணவர்களும் தங்களின் பொருளாதார வசதிக் குறைபாட்டுத் தடைகளைத் தாண்டி வந்து உயர் கல்வி பெறும் வசதிகளை ( நியாயமான பொருட் செலவிலும், மிகவும் வசதிவாய்ப்பற்றோருக்கு வட்டியில்லாத கடன் மூலம் கல்விச் செலவுக்கு உதவிசெய்தும் www.azhahiyakadan.com ) செய்து கொடுப்பது என்ற நோக்கில் துவக்கப்படும் இந்நிறுவனம் வளர்ந்து இந்திய ஆட்சிப் பணித்தேர்வுகளுக்கும் (IAS) மாணவர்களைத் தயார்படுத்தும் விதத்தில் மேலும் விரிவடைய உங்களின் ஆலோசணைகள் வரவேற்கப் படுகின்றன.

பிரபல "khan academy" போன்ற நிற்வனங்களின் பயிற்சி வகுப்புகளை இணையதள வசதியுடன் கூடிய Smart Class என்றழைக்கப்படும் தொழில் நுட்பத் திரைகள் மூலம் திறமையான பயிற்சியாளர்கள் தொலை தூரத்திலிருந்து நடத்தும் பயிற்சி வகுப்புகள் மூலமும், அனுபவமிக்க ஆசிரியர்களின் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலமும், மாணவர்கள் தாமே பயின்று கொள்ளும் மின் நூலகங்கள் மூலமும் இந்த வசதிகள் செய்து தரப்படும் வகையில் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

90% கட்டிடப் பணிகள் முடிந்து, இறைவன் உதவியால் எதிர்வரும் மார்ச்சில் (2013) வகுப்புகள் தொடங்கலாம். Vacancies exist for Trainers for: Microsoft, Java, Unix, CISCO and Networking related certification programs. Also require faculty for CA/ICWA/MBA courses. Please contact nsmsh@yahoo.com

N.S.M. Shahul Hameed
Founder, Managing Trustee, OLI Academy & Training Institute,

Post Box No.6, MADUKKUR-614903, TAMIL NADU, INDIA
Cell 00966-555995245 (KSA)
Cell 0091-8675353989 (India)

அழகிய கடன் (Goodly Loan)அன்புள்ள சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

அழகிய கடன் (Goodly Loan) www.azhahiyakadan.com உதவியில் கல்விக்கென்று உதவுவதற்கு விண்ணப்பங்கள் கீழ்கண்ட வகையில் பரிசீலிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

1. உண்மையில் விண்ணப்பதாராரின் விபரங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டு, உதவி செய்ய விரும்பும் புரவலர் (Leader/Sponsor) களின் முடிவுப்படிதான் எந்த உதவியும் அளிக்கப்படுகிறது. ஆகவே விதிமுறையென்று எதுவும் இல்லை, மனிதாபிமானமே குறி.

2. ஆனாலும், உதவுபவர்களை விட, தேவைகள் அதிகம் வரும்போது, கீழ்கண்ட ஆலோசனைகளை அமைப்பாளன் அல்லது ஏற்பாட்டாளன் என்ற வகையில், சில யோசணைகளை முன் வைக்கிறேன்:

2.1 கவுன்ஸிலிங் மூலம் தேர்வாகி அரசு வாக்களித்துள்ள கடனுதவி மற்றும் குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு உள்ள சலுகைகள் பெற்றும், முதலாண்டு கட்டணம் தாமதிக்காமல் செலுத்தவும், அல்லது கடனுதவி போக இன்னும் தேவைப்படும் தொகையில் ஒரு பங்கை கடனாக பெற முயலுபவர்களுக்கு முன்னுரிமை.

2.2. இதுவரை ரூபாய் 20000 (after a few exceptions) -க்குமேல் யாருக்கும் கடன் அளிக்கப் பட்டதில்லை.

2.3. சாதாரண படிப்பாவது படிப்போம் என்று மானேஜ்மென்ட் கோட்டா என்றெல்லாம் சேராமல் அருகில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிக்கக்கூட வசதியில்லையே என்போருக்கும் அதிக முன்னுரிமை.

2.4. படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்த பின் திருப்பிச்செலுத்துவதில் கவனம் இருப்பவர்கள் விண்ணப்ப படிவத்தை சரியாக படித்து முழுவதும் விபரங்களை சரியாக கொடுக்க வேண்டும். இல்லையெனில், விண்ணப்பம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிடும். கடந்த ஆண்டு பலர் இதுபோன்ற விபரங்களைக் கொடுப்பதிலும், தாங்கள் வங்கிக் கடனுதவி பெற்ற அல்லது பெற முயன்ற விபரத்தையும் சரியாக தரவில்லை. இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி பின் அவர்களது விண்ணப்பங்கள் உதவிக்காக ஏற்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் அதிக விண்ணப்பங்கள் வருமாகையால், இதுபோன்ற விசாரிப்புகள் இருக்காது.

2.5. 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட பகுதியைச்சேர்ந்த மாணவ/மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படலாம்.

3. நீங்களும் உங்கள் நட்பு வலையத்துள் இருக்கக்கூடிய வசதியானவர்களிடம் இந்த அழகிய கடன் திட்டம் பற்றிக்கூறி அவர்களையும் உதவிசெய்வதில் கலந்துகொள்ளச்செய்யவும்.

4. 'அழகிய கடன் அறக்கட்டளை' என்ற பெயரில் பல ஊர்களிலும் இயங்கிவருவதாக நாம் கேள்விப்படும் அமைப்புகளுக்கும், நமது இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை எனபதையும், இந்த இயக்கத்தில் எவ்வித வசூலுக்கும் இடமில்லை, இது ஒரு தகவல் பறிமாற்றத் தளம் மட்டுமே என்பதையும் தெளிவாக எல்லோருக்கும் அறிவுருத்திவிடவும்.

அன்புடன்
அமைப்பாளர்
www.azhahiyakadan.com

மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கால் கொஞ்சம் வலிக்கிறது. வலியை உணர்கிறீர்கள். ஆயினும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் வேலையை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். வலியால் நீங்கள் சற்று அவதிப்படுவதை தெரிந்துகொண்ட குடும்பத்தினர், டாக்டரைப் பார்த்து ஆலோசனை பெறும்படி கூறுகிறார்கள்.

டாக்டரை இன்று பார்க்கிறேன்.. நாளை பார்க்கிறேன் என்று கூறி, நீங்கள் நாட்களை கடத்தினால், உங்களுக்குள்ளே அந்த வலியை `ஏற்றுக்கொள்ளும்தன்மை' உருவாகிவிடும். வலியோடு வாழ்க்கையை ஓட்ட பழகிவிடுவீர்கள்.

யோசித்துப் பாருங்கள். மேற்கண்ட ஏற்றுக்கொள்ளும் தன்மையை, ஜீரணித்துக்கொள்ளும் தன்மையை வாழ்க்கையில் பல விஷயங்களில் நீங்கள் கடைபிடித்துக்கொண்டிருப்பீர்கள். வேலை, நட்பு, உறவு என்று பல நிலைகளில் இது தொடரும். முதலில், `வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும்' என்று பிரச்சினைகளை சகித்துக்கொள்ளும் மனது பின்பு, அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, `நம்ம மட்டுந்தான் இப்படின்னு நினைச்சோம். வீட்டுக்கு வீடு வாசப்படி மாதிரி எல்லோரும் இப்படிப்பட்ட பிரச்சினைகளோடுதான் அலைந்து கொண்டிருக் கிறார்கள்' என்று தன்னைத்தானே சமாதானப்படுத்தி, அதை சகஜமான விஷயமாக எடுத்துக்கொள்ளவும் செய்யும்.

இந்த `ஏற்றுக்கொள்ளும் தன்மையும்', `தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் தன்மையும்' சில நேரங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடியது. பல நேரங்களில் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. எப்படி என்றால், நீங்கள் அவசரமாக நண்பர் ஒருவரை சந்திக்க சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது சாலையில் கொஞ்சமாக கிடந்த நீரில் ஏறிய காரால், அந்த நீர் தெறித்து உங்கள் பேண்ட்டின் ஒரு பகுதியை அழுக்காக்கிவிடுகிறது. சரி இருந்து விட்டுப்போகட்டும் என்று நீங்கள் ஏற்றுக்கொண்டு அவரை சந்திக்க போய்விடுகிறீர்கள். வீடு திரும்பி, துவைத்து சரிசெய்துவிடுகிறீர்கள். இதில் உங்கள் ஏற்றுக்கொள்ளும்தன்மை யும், தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ளும் தன்மையும் `ஓகே'தான்!

ஆனால்...

உங்கள் வீட்டின் முன் பகுதியில் கழிவு நீர் குழாயில் சிறிதளவு அடைப்பு ஏற் பட்டு விடும்போதும், உங்கள் உடலில் நோய் ஏற்பட்டிருக்கும்போதும், ஏற்றுக் கொள்ளும்தன்மையுடன் நீங்கள் ஜீர ணித்துக்கொண்டால் அது நல்லதல்ல. கழிவு நீர் பிரச்சினையை சிறிதாக இருக்கும்போதே சரிசெய்து கொள்ளா விட்டால் அது சுகாதாரத்திற்கே கெடு தலாகும். கவனிக்காமலே விடப்படும் நோய், பின்னாளில் தீராத நோய்க்கு கூட காரணமாகிவிடும். அதனால் சின்னச் சின்ன சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு விடுவதே மகிழ்ச்சியை வர வேற்கும் நல்ல வழி.

இப்போதெல்லாம் பத்து பேர் முதல் பத்தாயிரம் பேர் வரை கூடும் கருத்த ரங்கம், பயிற்சி வகுப்புகளில் `உங்களில் எத்தனை பேர் டென்ஷன் ஆகிறீர்கள்?' என்ற சாதாரண கேள்வியை கேட்டால், தயங்கித் தயங்கி முதலில் ஒருசிலர் கையை தூக்குவார்கள். அவரைப் பார்த்து இவர், இவரைப் பார்த்து அவர் என்று பின்பு ஒட்டுமொத்தமாக அனை வரும் கையை உயர்த்திவிடுவார்கள். அப்போது ஒவ்வொருவரும் `அப்பாடா இந்த கூட்டத்தில் இருக்கும் அனைவருமே நம்மைமாதிரிதான்' என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள். இது ஒரு ஆரோக்கியமற்ற நிலை. எல்லோருக்கும் இரண்டு கைகள் என்பது இயற்கை. அதுபோல், எல்லோருக்கும் டென்ஷனும் இயற்கை என்றால் ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா!

பெரும்பாலானவர்கள் தனக்கு டென்ஷன் ஏற்படும்போது, அதை தீர்க்கும் நிரந்தர வழியை தேடாமல், தற்காலிகமாக மனதை அதில் இருந்து திசைதிருப்பி, சிறிது நேரம் மனதை அமைதிப்படுத்தும் வழியைத்தான் தேடுகிறார்கள். அதனால் சினிமா பார்க்கும்போதும், ஷாப்பிங் செல்லும்போதும் குறையும் டென்ஷன் சிறிது நேரத்தில் மீண்டும் பாதை திரும்பி சம்பந்தப்பட்டவர்களிடமே வந்து சேர்ந்துவிடும்.

மனிதனுக்கு மனம்தான் அஸ்திவாரம். எல்லா விஷயங்களும் இங்குதான் ஆரம்பமாகிறது. மனிதனின் உடல் மரம் போன்றது. அதன் ஆணி வேர் மனம். மரத்தின் மேலே தெரியும் தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்கிறோம். ஆனால் ஆணிவேர் மோசமாகிக்கொண்டே இருந்தால் மரத்தின் ஏதேனும் ஒரு பகுதி இலையோ, பூவோ, காயோ, கனியோ மோசமாகிக்கொண்டே தான் இருக்கும். நாம் பல நேரங்களில் இலை இலையாகப்பார்த்து, காய்காயாகப் பார்த்து, பழம்பழமாகப்பார்த்து தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறோம். வேரை கவனிக்காவிட்டால் ஒரு நாள் மரமே (மனமே) பட்டுப்போய்விடும்.

இன்று மனித மனம் பலகீனமாக இருந்துகொண்டிருக்கிறது. அதை பலப்படுத்தும் முயற்சிகளில் நாம் இறங்காமல், கூடுதலான வேலைகளையும், எதிர்பார்ப்புகளையும் அதற்கு கொடுத்து மென்மேலும் அதை பலகீனமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நமது உடல் பலகீனமாவது தெரிந்ததும், உடனே வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வு, மருந்து என்று சிந்திக்கிறோம். ஆனால் மனதை கவனிப்பதும் இல்லை. தேவைக்கு ஓய்வு கொடுப்பதும் இல்லை. அதனால் ஆர்வமற்ற நிலையில் வேலைகளை செய்யவேண்டியதாகி விடுகிறது. வேலையை ஆர்வத்தோடு அனுபவித்து செய்தால், அதிலே மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் ஆர்வமின்றி, கடனே என்று வேலையை செய்வதால், வேறு வழியில் மகிழ்ச்சியை தேடவேண்டிய கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

`பேலன்ஸ்' செய்வது, அதாவது சமநிலையை கையாளுவதில் நமக்கு பக்குவம் குறைவு. வேலையாக இருந்தாலும், பொழுதுபோக்காக இருந்தாலும், நட்பாக இருந்தாலும், உறவாக இருந்தாலும் ஒன்று, அளவுக்கு மீறி ஆர்வம் காட்டுகிறோம். முக்கியத்துவம் கொடுக்கி றோம். நெருங்குகிறோம். இல்லாவிட்டால் அத்தனையையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு அதில் இருந்து முழுமையாக விலகி ஓடி விடுகிறோம். இதில் எல்லை என்பது நமக்கு தெரிவதில்லை.

மனதை சரி செய்தால்தான் நம்மால் எல்லையை உணர முடியும். எல்லையை உணர்ந்தால் தான் எல்லை வரை மகிழ்ச்சியை அனுபவிக்கவும், எல்லை மீறாமல் இருக்கவும் முடியும். மனதை சரிசெய்ய அதன் மீது "கவனம்'' செலுத்த வேண்டும்.

தியானம் என்பது இன்று எல்லோரும் உச்சரிக்கும் சொல். தியானம் என்றால், கவனம் என்றுதான் அர்த்தம். உங்கள் கார் மீது, செல்போன் மீது, வீட்டின் மீது, உறவினர்கள் மீது கவனம் வைத்திருக்கிறீர்கள். அதுபோல் மனதின் மீது கவனத்தை முழுமையாக விஞ் ஞான ரீதியாக செலுத்துவதுதான் தியானம்.

`நீங்கள் யாரை எல்லாம் கவனிக்கிறீர்கள்?'- என்று உங்களிடம் கேட்டால், `வீடு, மனைவி, மக்கள், அலுவலகம்.. என்று பலவற்றை அடுக்குவீர்கள். `நான் என்னையும் கவனித்துக் கொள்கிறேன்' என்றும் சொல்வீர்கள். `நான்' என்று நீங்கள் உங்கள் உடலைத்தான் சொல்வீர்கள். மனதை சொல்வதில்லை.

மனதே சரியில்லை என்ற வார்த்தை இப்போது ரொம்ப மலிந்துபோய்விட்டது. கோவிலுக்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில் மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது. இரண்டு மணி நேரம் உபன்யாசம் கேட்கிறார்கள். நிறைய நல்ல விஷயங்களை கேட்கும் அந்த நேரத்தில், மனது நன்றாக இருக்கிறது அற்புதமாக இருக்கிறது என்று கைதட்டுகிறோம். அங்கிருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே மீண்டும் பழைய குழப்பங்கள், பிரச்சினைகள், சச்சரவுகள். மீண்டும் போவோம்.. வருவோம்.. ஆனால் அங்கு வார்த்தைகளில் கிடைத்ததை, அவர் களால் வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை. ஏன் என்றால் வாழ்க்கை, குழப்பம் நிறைந்த மனதின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நாம், கவனம் செலுத்தி நம் மனதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், நம்மைச் சார்ந்த யார் மனதையும் நம்மால் கவனிக்க முடியாது. நமது மனைவி, குழந்தைகள் மனதைக்கூட கவனிக்க முடியாது.

இந்த உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் என்று சொன்னால், அது நல்ல ஆசை!

ஆனால்..

- உங்களிடம் உணவு இருந்தால்தான் அதை நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியும்.

- உங்களிடம் பணம் இருந்தால்தான் அடுத்தவர்களுக்கும் கொடுக்க முடியும்.

அதுபோல் உங்களிடம் மகிழ்ச்சி இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே நீங்கள் விரும்புகிறவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்க முடியும். அதனால் இந்த உலகம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் நீங்கள் முதலில் மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

விளக்கம்: சகோதரி ஜெயா, பிரம்மகுமாரிகள் இயக்கம்.

பைல்களின் வகைகள்
.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.

***.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.

***.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட் ஷிட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.

.ppt: விண்டோஸின் பிரிமியர் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர்.
பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம் கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபர் ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

*******htm / html: ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.

.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப் பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.
சுருக்கப்பட்ட பைல்கள்: கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.

******.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். Win Rar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.

.cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! தெரிந்து கொள்ளுங்கள்!

1. உங்கள் வங்கிக் கணக்கினைச் சரி செய்கிறோம். உங்கள் அக்கவுண்ட் எண் என்ன? இன்டர்நெட் பேங்கிங் யூசர் நேம் என்ன? இவற்றைச் சோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு இந்த லிங்க்கில் கிளிக் செய்து கொள்ளுங்கள் என்று ஐ.சி.ஐ.சி.ஐ./ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளிடமிருந்து வருவது போல் இமெயில் வந்தால், உடனே அழித்து விடுங்கள். குப்பைத் தொட்டியிலும் வைக்காதீர்கள். ஏனென்றால், பெரிய வங்கிகள் இது போல் மெயில்களை அனுப்புவதில்லை. அவற்றின் பெயரில் மெயில் அனுப்பி, லிங்க் கொடுத்துப் பின், நாம் கிளிக் செய்கையில் ஏதேனும் ஒரு வைரஸ் புரோகிராமினை இறக்கும் நாசகாரர்களின் முயற்சி இது. எனவே அவசரப்பட்டு இந்த மெயில்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள்.
2. நான் நைஜீரியா நாட்டின் பெரிய பணக்காரர் மனைவி. என் கணவர் பல்லாயிரக்கணக்கான கோடி அமெரிக்க டாலர் பேங்கில் வைத்துவிட்டு இறந்து விட்டார். இதனை எடுக்க யாராவது ஒருவரின் ஒத்துழைப்பு தேவை. நீங்கள் சம்மதித்தால், உங்கள் பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணத்தை மாற்றி, பின் எனக்குத் தாருங்கள். கமிஷனாக 10% தருகிறேன் என்று இமெயில், போன் எண் எல்லாம் கொடுத்திருப்பார்கள். பதில் கடிதம் அனுப்பினாலோ, போன் செய்தாலோ, உங்கள் போன் எண்ணை முதலில் வாங்குவார்கள். இரக்கம் வரும் வகையில் பேசி, வங்கிக் கணக்கும் வாங்குவார்கள். பின் நாம் தான் மற்றவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டி வரும். நம் வங்கிப் பணத்தை எல்லாம் மாற்றிக் கொண்டு போய்விடுவார்கள்.

3.இணைய தளங்களில் ஏதேனும் படிவத்தில் சிறு சிறு கட்டங்களில் அடிக்கடி தகவல்களை நிரப்ப வேண்டியதிருக்கும். இந்த பாக்ஸுகளுக்குள் பயணம் செய்திட மவுஸை எடுத்து கர்சரைக் கொண்டு செல்லும் வேலையெல்லாம் வேண்டாம். ஜஸ்ட் டேப் கீயைத் தட்டவும். பின் நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் ஷிப்ட் கீயுடன் டேப் கீயைத் தட்டவும்.

4.ஓர் இணைய தளத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா? இதனைப் பெரிதாக்க கண்ட்ரோல் மற்றும் ப்ளஸ் கீகளை அழுத்தலாம். சிறியதாக்க மைனஸ் கீயை இணைக்கலாம். மேக் வகைக் கம்ப்யூட்டரில் இதுவே கமாண்ட் கீயுடன் இணைந்து அழுத்தப்பட வேண்டும்.

இணைய தளத்தின் முழு அளவினையும் பெரிதாக்க கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை நகர்த்தவும். முன் புறம் அழுத்த பெரிதாகவும் பின்புறம் அழுத்த சிறிதாகவும் மாறும். மேக் கம்ப்யூட்டரில் இது முழு திரையையும் பெரிதாக்கும்.
5.உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து விண்டோக் களையும் இரு கீகளை ஒரு சேர இணைத்து அழுத்தி மறைய வைக்கலாம்; மீண்டும் அதனைப் பெறவும் செய்திடலாம். அந்த கீகள் : விண்டோஸ் கீ + எம் கீ; மற்றும் விண்டோஸ் கீ+ டி (D) கீ.

6.உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

7. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம். அன்பான வாசகத்துடன், அழகான ஒரு காட்சிக்கான லிங்க் தரப்பட்டு, அதில் கிளிக் செய்தால், உங்களுக்கென உள்ள படம் இருப்பதாகக் குறிப்பு கிடைக்கும். நம்ம ப்ரண்ட் தானே என்று அலட்சியாமாக, படத்திற்கான லிங்க்கில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.

ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்

வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.

அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர் களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.


1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற் கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம்.

இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.

2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.

3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.

4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.
டென்ட்' துணியில் இருந்து பிறந்த ஜீன்ஸ்!
ஆஸ்கார் லெவி ஸ்ட்ராஸ் என்பவர் 1849-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு வந்தார். சுரங்கத்தில் தங்கம் தோண்டும் பணி பரபரப்பாக நடைபெற்ற காலம் அது. சுரங்கத் தொழிலாளர்களின் கால்சட்டைகள் வெகு சீக்கிரமே கிழிந்து விடுவதை அவர் கவனித்தார். உறுதியான ஒரு துணியில் பேன்ட் தைத்துக் கொடுத்தால்தான் இவர்களுக்குச் சரிப்படும் என்று அவர் நினைத்தார். டென்ட் அமைக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியின் மீதத்தைக் கொண்டு ஒரு பேன்ட் தைத்தார். சுரங்கத் தொழிலாளர்களுக்கு அது பிடித்துப் போய்விடவே, ஆர்டர்கள் குவிந்தன. ஸ்ட்ராஸ், பிரான்சில் இருந்து `நீம்' என்றழைக்கப்பட்ட கனத்த துணியை வாங்கித் தைத்தார். அதுவே `டெனிம்' என்று பெயர் மாற்றம் பெற்று உலகெங்கும் பரவியது.
`ஜீன்ஸ்'களில் தற்போது காணப்படும் `ரிவிட்' உங்களுக்குப் பிடிக்கும் என்றால், நீங்கள் அல்கலி ஐக் என்ற கவனக்குறைவான சுரங்கத் தொழிலாளிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர், சுரங்கத் தொழிலுக்கான உபகரணங்களை ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் வைத்து விடுவார். அதனால் பாக்கெட்டுகள் அடிக்கடி கிழிந்து போகும்.
அல்கலியின் கிழிந்த பாக்கெட்டுகளை தைத்துத் தைத்துச் சலித்துப் போன அவரது தையல்காரர் என்ன செய்தார் தெரியுமா? அல்கலியை ஒரு கொல்லரிடம் அழைத்துப் போனார். அவரது பாக்கெட்டுகளில் `ரிவிட்' அடித்து விடும்படி வேடிக்கையாகச் சொன்னார்.
`இது ரொம்ப நல்ல யோசனையாயிருக்கே!' என்று அதைப் பார்த்து வியந்த லெவி ஸ்ட்ராஸ், எல்லா ஜீன்ஸ்களிலும் `ரிவிட்' அடிக்கத் தொடங்கி விட்டார்.
2011- நிறுவனங்கள் தரப்போவது என்ன ?
புத்தாண்டில் கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்று எல்லாரும் கணித்துள்ளனர். பலர் தொழில் நுட்பத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் பல எதிர்பார்ப்புகளைச் சொல்லி வருகின்றனர். நாம் இத்துறையில் இயங்கும் நிறுவனங்கள் வாரியாக, அவை என்ன திட்டமிட்டுள்ளன, அவற்றிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.ஆப்பிள்: 2010 ஆம் ஆண்டில் மிகவும் வெற்றிகரமாக, புத்தம் புதிய மல்ட்டி டச் டேப்ளட் பிசியினை அறிமுகப்படுத்தி, பல லட்சக் கணக்கில் அதனை விற்று சாதனை படைத்தது ஆப்பிள் நிறுவனம். இனி அந்த வெற்றியைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டியது இந்த நிறுவனத்திற்கு அவசியமாகிறது. மேலும் இதே டேப்ளட் பிசி சந்தையில் பல புதிய நிறுவனங்கள் வந்து மொய்க்க இருப்பதால், போட்டியும் மிகக் கடுமையானதாக இருக்கும். ஐ-பேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பை புதிய வசதிகளுடன் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இதற்கு உள்ளது. தன் ஐ-போனை மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து விற்பனைக்குக் கொண்டு வரலாம். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, தன் புதிய மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஆப்பிள் லயன் (Lion) என்ற பெயரில் கொண்டு வரும். இதனால் மேக் கம்ப்யூட்டரின் விலை அதிகமாகும். இதில் ஐ-பேடில் உள்ள சில வசதிகளை இணைக்க ஆப்பிள் முயற்சித்து வருகிறது.அடுத்து ஆப்பிள் இன்னும் வலுவாக ஊன்றாத இரு பிரிவுகளில், இந்த ஆண்டில் செயல்படும் எனத் தெரிகிறது. அவை - கிளவ்ட் கம்ப்யூட்டிங் மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங். இவற்றை அடுத்து வெளி நாடுகளில் விற்பனை செய்து வரும் ஆப்பிள் டிவியை, இன்னும் மலிவான விலையில் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் கொண்டு செல்ல, ஆப்பிள் முயற்சிக்கும்.கூகுள்: தேடல் பிரிவில் தனக்கு நிகர் இல்லை என இயங்கும் கூகுள், தற்போது பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதன் முக்கிய போட்டியாளரான, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சினுக்குத் தன் வாடிக்கையாளர்கள் சென்றுவிடாமல் இருக்க, பல புதிய வசதிகளைத் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பெரிய வெற்றியை அடைந்தாலும், ஐபோன் சாப்ட்வேர் போல நகாசு வேலைகளைத் தருவதாய் இல்லை. டேப்ளட் பிசிக்கான ஆண்ட்ராய்ட் பதிப்பு ஐ-பேட் சாதனத்திற்குச் சவால் விடுவதாய் அமையலாம்.2011ல் கூகுள், பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் தன் நிலையை உறுதிப்படுத்தலாம். கிளவ்ட் கம்ப்யூட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் படி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு பிரவுசராக வலுப்பெறலாம். பயனாளர்கள் இதன் மூலம் இணைய சர்வரில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்துவார்கள். தங்கள் பைல்களைக் கூட, கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இணையத்தில் சர்வரில் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்துவார்கள். இந்தப் பணிகளுக்கெல்லாம் உதவிடும் வகையில், கூகுள் நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாற்றத்தினைக் கொண்டு வரும்.இதே போல இதுவரை தீவிரமாக இறங்காத, சோஷியல் நெட்வொர்க்கிங் பிரிவிலும், கூகுள் இந்த ஆண்டில் தடம் பதிக்கலாம். கூகுள் டிவியிலும் கவனத்தைச் செலுத்தி, இன்டர்நெட்டினை, டிவியில் நம் வீட்டு ஹாலுக்குக் கொண்டு வரலாம்.மைக்ரோசாப்ட்: சாப்ட்வேர் பிரிவில் சக்கரவர்த்தியாகத் திகழும் மைக்ரோசாப்ட், இன்னும் வாடிக்கையாளர் களை எல்லாப் பிரிவுகளிலும் தன் வசம் வைத்துள்ளது. விண்டோஸ், ஆபீஸ் மற்றும் எக்ஸ் பாக்ஸ் இதற்கு எடுத்துக் காட்டுக்களாகும். ஆனால் இரண்டு பிரிவுகளில், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசி, மற்ற நிறுவனங்களிடமிருந்து சவால்களை எதிர் கொண்டுள்ளது. விண்டோஸ் போன் 7 சிறப்பான சிஸ்டமாக இருந்தாலும், போட்டியைச் சமாளிக்கும் அளவிற்கு விரிவாக இல்லை.பேஸ்புக் மற்றும் ட்விட்டர்: சோஷியல் நெட்வொர்க்கிங் பிரிவில் இந்த இரட்டையர்கள், 2010 ஆம் ஆண்டில் சிறப்பான முன்னேற்றத்தினைப் பெற்றனர். இந்த ஆண்டிலும் சவால்களைச் சந்தித்துப் பல புதிய பரிமாணங்களைத் தங்கள் சேவையில் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

நீங்கள் 30 வயதை கடந்தவரா? அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறீர்களா: அவசியம் படியுங்கள்...

வீட்டிற்கு வீடு சர்க்கரை நோய் இருக்கிறது. இன்னும் 15 ஆண்டுகளில் 30 கோடிபேருக்கு இந்நோய் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இன்று 25 வயது, 30 வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர்.

இதற்கான காரணங்கள் குறித்து, மதுரை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் சங்குமணி கூறியதாவது : குடும்பத்தினரில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்களால் இதை தடுக்க முடியும். அதிக உடல் எடை, உழைப்பின்மை, ரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு சத்து, கர்ப்ப கால சர்க்கரை நோய், அதிக எடையுடன் குழந்தை பிறப்பு, சினைப்பை சம்பந்தப்பட்ட நோய், தொப்பை வயிறு ஆகியவற்றால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தினமும் 4 கி.மீ., வரை "வாக்கிங்' செல்ல வேண்டும். இதனால் ரத்தஅழுத்தம் சீராகிறது. ரத்தகொழுப்பு சத்து குறைகிறது. இதய ரத்தநாளங்கள் மற்றும் கால், கை ரத்தநாளங்கள் விரிவடைகின்றன. உடல் எடை குறைகிறது. மூளைக்கு செல்லும் ரத்தஓட்டத்தை அதிகரிக்கிறது.

"வாக்கிங்' செல்லும்போது கவனிக்க வேண்டியவை: சரியான ஷூ அல்லது செருப்பு அணிதல், தனது வயது ஒத்த ஒருவருடன் செல்வது, சிறிது சிறிதாக "வாக்கிங்' நேரத்தை அதிகரிப்பது உடலுக்கு நல்லது. உடல்நலம் இல்லாதபோது உடற்பயிற்சி செய்யக்கூடாது. உடல் பருமன் உள்ளவர்கள் 10 சதவீத எடையை குறைக்கும்போது, சர்க்கரை நோய் வருவதற்குரிய வாய்ப்பு 60 சதவீதமாக குறைகிறது. முதற்கட்டமாக, உடற்பயிற்சி செய்யும்போது 5லிருந்து 10 நிமிடம் மெதுவாக நடந்து உடல் உறுப்புகளை பயிற்சி செய்ய தயார்படுத்த வேண்டும். இதற்கு "வார்ம்-அப் பிரீயட்' என்பர். இரண்டாம் கட்ட உடற்பயிற்சியில், 30 நிமிடம் மித வேகம் அல்லது அதிக வேகத்துடன் நடக்கலாம்; சைக்கிள் ஓட்டலாம், நீச்சல் பயிற்சி செய்யலாம். மூன்றாம் கட்டத்தில், 10 நிமிடம் மெதுவான பயிற்சி செய்யும்போது நாடித்துடிப்பு சீராகிறது. இதை "கூல்டவுண் பிரீயட்' என்பர்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்: நார்ச்சத்து அதிகமுள்ள கீரை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த காய்கறி மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்கவும். காலை உணவை தவிர்த்துவிட்டு, மதிய உணவை அளவுக்கு அதிகமாக எடுத்தாலோ, மதிய உணவை தவிர்த்துவிட்டு இரவு உணவை அதிகமாக எடுத்தாலோ சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகம்.

தொப்பைக்கு தேவை "குட்பை' தொப்பை பல நோய்களுக்கு காரணமாகிறது. அதில் உள்ள கொழுப்பு செல்கள், சுரக்கும் ஹார்மோன்கள் சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது. மது, சிகரெட்டை நிறுத்த வேண்டும். இவை இன்சுலின் சுரப்பை குறைப்பதுடன் அதன் செயல்திறனையும் குறைத்துவிடுகிறது. ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் பழக்கம் இருந்தால் நிச்சயமாக நிறுத்திவிட வேண்டும். அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், கோபப்படுதலை குறைத்து யோகா பயிற்சி செய்தால் சர்க்கரை நோயை தடுக்கலாம். வடை, சோமாஸ், காரா சேவு, மிக்சர் போன்ற உணவுகளில் அதிக கொழுப்புச்சத்தும், கலோரியும் உள்ளது. இந்த உணவுகளை குறைப்பதன்மூலம் சர்க்கரை நோயை தடுக்கலாம். வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யலாம். அப்பார்ட்மென்ட் என்றால், "லிப்ட்'டிற்கு பதில், மாடி படிகள் வழியாக செல்லலாம். இவ்வாறு கூறினார்.

3ஜி தரும் பயன்கள்

பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் முதல் நமக்கு 3ஜி சேவை பல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு உள்ளது. தகவல் பரிமாற்றத்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப்படுவதே அதன் அடிப்படையான ஒரு செயல்பாடாகும். 3ஜி இதனைத் தருவதுடன், மிகத் தெளிவான ஒலி பரிமாற்றத்தையும் தருகிறது. மேலும் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் பரிமாற்றத்தை 3ஜி மூலம் மேற்கொள்ள முடியும். இந்தியாவில் அண்மைக் காலத்தில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமுதாய இணைய தள சேவைத் தளங்களால், டேட்டா பரிமாறப்படுவது அதிகரித்துள்ளது. அதே போல ப்ளிக்கர் மற்றும் யு–ட்யூப் போன்ற தளங்களால், வீடியோ, இமேஜ் தகவல்களும் பரிமாறப் பட்டு வருகின்றன. இவற்றுக்கு இன்னொரு காரணம், டாட்டா டொகோமோவில் தொடங்கி பல தொலைதொடர்பு நிறுவனங்கள், மிகக் குறைவான கட்டணத்தில் டேட்டா பரிமாறிக் கொள்வதற்கு அளித்து வரும் திட்டங்களாகும்.
பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடங்கி வைத்த 3ஜி சேவையினை, இனி பல தனியார் நிறுவனங்கள் தர இருக்கின்றன. 3ஜி சேவையில் பலப் பல புதிய தொழில் நுட்ப மாற்றங்களையும் பயன்பாடுகளையும் காண இருக்கிறோம். ஏற்கனவே முதன்மையான பயன்பாடுகளை இந்த மலரில் குறிப்பிட்டு எழுதி உள்ளோம். இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்.
1. லைவ் டிவி – கூடவே வரும் செய்திகள்: 3ஜி மூலம் மொபைல் போனில், ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடப்படுவதை லைவ்வாக, எங்கு சென்றாலும் பார்த்துக் கொண்டே செல்லலாம். அதே போல, டிவி ஒன்றை நாடித்தான், செய்திகளைப் பெற வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பப் படுவதனை, மொபைல் மூலம் பெறலாம்.
2. இமெயில் மற்றும் பைல் பெறுதல்: 3ஜி மூலம் நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகளை மொபைல் போன் வழியாக, எந்த நேரத்திலும் பெற முடியும். அதே போல அனுப்பவும் முடியும். நமக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பைல்களையும் இதே போலப் பெற முடியும். நாம் தயாரித்து வைத்துள்ள ஆவணங்களில், எந்த நேரத்திலும் எடிட் செய்து மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
3. மொபைல் ஒரு முனையமாக: மொபைல் போனை இனி ஒரு ஆன்லைன் டெர்மினல் போலப் பயன்படுத்த 3ஜி வழி தருகிறது. திடீரென நமக்குக் கிடைத்து வரும் இன்டர்நெட் இணைப்பு செயல்படாமல் போகும்போது, மொபைல் போனை நம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து, இணைய மோடம் போலப் பயன்படுத்தலாம். இதனால் எந்த நேரத்திலும் சூழ்நிலையிலும் நமக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும்.
4. வீடியோ ஸ்ட்ரீமிங்: நாம் நண்பர்களுடனும், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோ பைல்களை, எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப, காண முடியும். வேகமான பரிமாற்றத்தை 3ஜி மூலம் பெற முடியும். இவற்றைப் பதிந்து கொள்வதற்கும் 3ஜி உதவிடும்.
5. இணைய வழி அழைப்புகள் – வி.ஓ.ஐ.பி. (Voice Over Internet Protocol (VOIP): மிகப் பெரிய அளவில் பேண்ட்வித் எனப்படும் தகவல் பரிமாற்றத்திற்கான அலைவரிசையை, 3ஜி தருகிறது. ஏற்கனவே நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வரும் ஸ்கைப் போன்ற புரோகிராம்கள் மூலம், குறைந்த கட்டணத்தில் நம்மால் நம் நண்பர்களுடன், அவர்கள் எங்கிருந்தாலும் பேச முடியும். வீடியோ வழி உரையாடலையும் மேற்கொள்ள முடியும்.
6. அதிக வேகத்தில் கூடுதல் தகவல்: பல வேளைகளில் நாம் பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்து, பின்னர் படிக்கிறோம். அதிகமாக ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள், அதில் உள்ள லிங்க்ஸ் தரும் இணைப்புகளை இதே போல்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஜி.பி.ஆர்.எஸ். வழங்கும் வேகம் மிக மிகக் குறைவாக உள்ளதால் இவ்வாறு செயல்படுகிறோம். 3ஜி மூலம் இந்தக் குறை நிவர்த்தி ஆகும். வேகமாக டேட்டா கிடைப்பதால், லிங்க் இணைக்கும் அந்த வேளையிலேயே பைல்களைக் காண முடியும்.
7. துல்லிய ஒலி அனுபவம்: சிக்னல் கிடைக்கல, வாய்ஸ் விட்டு விட்டு வருது, பேசறது ஜாம் ஆகுது – போன்ற உரையாடல்களை நாம் 3ஜியில் சந்திக்க மாட்டோம். மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் ஒருவர் பேசுவதை இதன் மூலம் நாம் பெற முடியும். உங்கள் குழந்தையின் மழலையை, நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பக்கத்தில் இருந்து பேசுவது போலக் கேட்டு ரசிக்கலாம். மொத்தத்தில், இதுவரை தொழில் நுட்ப நீண்டநாள் கனவாக இருந்த 3ஜி சேவை, இப்போது கையில் வந்துவிட்டது. சிறிய வணிகர்கள் இதன் சேவையினை முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் வர்த்தகத்தினை மேம்படுத்தலாம். இன்னும் இன்டர்நெட் நுழையாத கிராமங்களில் உள்ள மக்கள், 3ஜி மூலம் அதனைப் பெறலாம். வலைமனைகளை இணையத்தில் உருவாக்கி செயல்பட்டு வருபவர்கள், இடைஇடையே இணைப்பு அறுந்து போகும் இன்டர்நெட்டை விட்டு, 3ஜி சேவை மூலம் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
பல துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு, 3ஜி ஒரு வரப்பிரசாதமாகக் கிடைத்துள்ளது. அனைவரும் இதனைப் பயன்படுத்தி நம்மையும் நாட்டையும் வளப்படுத்துவோம்.

சர்க்கரையை கண்டுபிடிக்க நவீன பரிசோதனை

சர்க்கரையை கண்டுபிடிக்க நவீன பரிசோதனை hba1c அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரத்தத்தில் கடந்த மூன்று மாத காலமாக ஏறி இறங்கும் சர்க்கரையின் சராசரி அளவுகோல். இது எப்படி கண்டறியப்படுகிறது என்றால், நம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களிலிருந்து பிரித்தெடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. hba1c இதுவரை ஒருவருக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா? இல்லையா என்று கண்டறிய செய்யப்பட்டு வந்தது. இப்போது இதே பரிசோதனை ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்க சர்க்கரை நோய் கழக ஆய்வில் சர்வதேச சர்க்கரை நோய் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.


பயன்கள்: எந்த நேரம் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒரே ரத்த பரிசோதனை மூலம் சர்க்கரை உள்ளதா? இல்லையா என்று கண்டறிய முடியும். இரண்டு அல்லது மூன்று வேளை ரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த பரிசோதனை முடிவு 6.5 சதவீதத்துக்கு மேல் இருந்தால் சர்க்கரை உள்ளது என்று உறுதி செய்யலாம். 6 முதல் 6.5 சதவீதம் வரை இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 6 சதவீதத்துக்கு கீழ் இருந்தால், சர்க்கரை இல்லை என்று கூறலாம். சர்க்கரை அளவு உண்ணும் உணவை பொருத்து மாறுபடும். பரிசோதனைக்கு முன் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும் சர்க்கரை அதிகமாக காட்டும். இதை வைத்து கொண்டு ஒருவருக்கு சர்க்கரை உள்ளது என்று தீர்மானம் செய்யக் கூடாது. இதனால் தான் இந்த புதிய பரிசோதனை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பரிசோதனை அதிநவீன கருவிகளாக பயோரேட் d-10 அல்லது immunoturbidometry முறைகளில் செய்யப்பட வேண்டும். சாதாரண முறையில் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.


உணவு முறை: நார்சத்து நிறைந்த உணவு. உதாரணம்: நான்கு இட்லி சாப்பிடுவதற்கு பதில் மூன்று இட்லி, ஒரு கப் காய்கறி பொரியல், ஒரு கப் கூட்டு, ஒரு கப் சுண்டல், காய்கறி சாலட், பழ சாலட் சாப்பிடுவதால், சாப்பிட்ட பின் சர்க்கரை 240 மி.கி.,லிருந்து 170 மி.கி., குறைந்துள்ளது. இந்த உணவு முறையே நமது ரிசார்ட் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. காய்கறி சேர்த்து சாப்பிடுவது இட்லி ஜீரணமாகும் தன்மை குறைந்து சர்க்கரை மெதுவாக ஏறுகிறது. நார்சத்து குறைந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசி நல்லதல்ல. இந்த மாதிரி உணவு சாப்பிட்டால், குறைவான அளவு இன்சுலின் இருந்தாலும் சர்க்கரை ஏறாது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, இன்சுலின் வேலை செய்யும் திறன் அதிகம். இதனால் உடலில் குறைந்த அளவு இன்சுலின் இருந்தாலும் அது முழுமையாக திறமையாக பணி செய்ய முடியும். இன்சுலின் தசைகளுக்குள் உள்ளே குளுகோஸ் செல்ல உதவுகிறது மற்றும் தசைகளுக்குள் சென்ற குளுகோஸை சக்தியாக மாற்றுவது இன்சுலினின் முக்கிய பணி. சுரக்கும் இன்சுலின் 30 - 40 சதவீதம் தசைகளில் தான் வேலை செய்கிறது. இதற்கு உடற்பயிற்சி அவசியம்.


- டாக்டர் சேகர்,

அச்சிடுகையில் எழுத்தின் அளவைப் பெரிதாக்க.அச்சிட விரும்பும் டெக்ஸ்ட்டின் எழுத்தளவினை அதிகப்படுத்துவதும் குறைப்பதுவும் பல வழிகளில் மேற்கொள்ளலாம். இது ஒவ்வொரு புரோகிராமிற்கும் ஒரு மாதிரியாக இருக்கும். பிரிண்டர் ஒன்றை இந்த அளவில் தான் அது எழுத்துக்களை அச்சிட வேண்டும் என வரையறை செய்திட முடியாது.

முதலில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். திரையில் காணப்படும் எழுத்து அளவும், அதனை அச்சிடும் போது தாளில் கிடைக்கும் எழுத்து அச்சின் அளவும் ஒரே மாதிரியாக இருக்காது. மானிட்டர் திரையில் மிக எளிதாக, எழுத்தின் அளவினை மாற்றிப் பார்க்கலாம். ஆனால் இதனால் அது அச்சிடப் படுகையில் மாறி அச்சாகாது. எடுத்துக் காட்டாக, ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை, மேலும் கீழுமாகச் சுழற்றினால், மானிட்டர் காட்சித் தோற்றத்தில் எழுத்தின் அளவு அதிகமாகவும் குறைவாகவும் தோன்றும். ஆனால் புரோகிராமில் செட் செய்தபடி தான் அச்சில் எழுத்தின் அளவு இருக்கும்.
இமெயில் கடிதங்களைத் தான், நம்மில் பெரும்பாலானவர்கள், பெரிய எழுத்துக்களில் அச்சிட விரும்புவார்கள். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.
ஜிமெயில் கடிதம் ஒன்றை பயர்பாக்ஸ் பிரவுசரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனைச் சற்று பெரிய அளவிலான எழுத்துக்களில் அச்செடுக்க விரும்புகிறீர்கள்.
1.முதலில் எந்த மெயிலை அச்செடுக்க விரும்புகிறீர்களோ, அதனைத் திறக்கவும்.
2. இமெயிலின் வலது பக்கத்தில் உள்ள Print all என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. அப்போது எழும்பி வரும் பாப் அப் கட்டத்தில் Cancel என்பதில் கிளிக்கிடவும்.
4. இனி உங்கள் திரையில் மேலாக உள்ள File மெனு சென்று கிளிக் செய்திடவும்.
5. அடுத்து கீழாக இறங்கி வந்து, Print Preview என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் இமெயில் அச்சில் எப்படி இருக்கும் என்று ஒரு முன் தோற்றத்தினைக் காட்டும்.
6. அந்தப் பக்கத்தின் மேலாக Scale என்னும் சொல்லுக்கு அடுத்ததாக ஒரு கீழ்விரி பெட்டிக்கான அடையாளம் இருக்கும். எழுத்துக்களின் அளவைப் பெரிதாக்க, இதில் 100% என்பதற்கும் மேலாக எதனையாவது தேர்ந்தெடுக்கவும். இப்போது Print Preview காட்சி தானாகப் பெரிய எழுத்துக்களில் தோற்றமளிக்கும். இது நீங்கள் தேர்ந்தெடுத்த சதவிகிதத்திற்கு ஏற்றபடி இருக்கும்.
7. அடுத்து எந்த பக்கங்களை அச்சிட வேண்டும் என முடிவு செய்து பின்னர், பிரிண்ட் பாக்ஸில் கீழாக உள்ள ஓகே பட்டனைக் கிளிக் செய்திடவும்.
அச்செடுத்து முடித்த பின்னர், 100%மேலாக அமைத்ததனை மீண்டும் 100%என அமைத்துவிட்டு வெளியேறவும். இல்லை எனில், மற்ற மெயில்களும் அதே அதிகப்படுத்தப்பட்ட அளவில் அச்சிடப்படும்.
இதே பயர்பாக்ஸ் பிரவுசரில், இணைய தளப் பக்கத்தினை எப்படி கூடுதலான அளவில் எழுத்துக்களைக் கொண்டதாக அச்செடுப்பது எனப் பார்க்கலாம்.
1. நீங்கள் திறந்துள்ள இணையப் பக்கத்தின் மேலாக உள்ள பைல் மெனுவில் கிளிக் செய்திடவும்.
2. Page Setup என்பது வரை சென்று கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கும் பெட்டியில், Scale என்ற சொல்லினை அடுத்து உள்ள பெட்டியில் 100க்கும் மேலாக உள்ள ஒரு எண்ணைத் தரவும்.
4. இந்த மாற்றத்தை அமல்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். இது எழுத்தின் அளவை மட்டுமின்றி, இணையப் பக்கத்தில் உள்ள அனைத்தின் அளவையும் அதே அளவில் சீராக அதிகப்படுத்தும்.
5. உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அச்சிடப்படும் அனைத்து இணையப் பக்கங்களிலும் இந்த மாற்றம் ஏற்படுவதனைப் பார்க்கலாம்.
திரையில் காணப்படும் தோற்றத்தில் ஏற்படுத்தப்படும் அளவு மாற்றத்திற்கேற்ப அச்சிடப்படுவதும் நடக்கும். நீங்கள் ஏதேனும் டைப்பிங் புரோகிராம்(வேர்ட் அல்லது எக்ஸெல் போன்ற புரோகிராம்கள்) பயன்படுத்துகையில் இந்த மாற்றம் ஏற்படும். எழுத்துக்களின் அளவை அச்சிடுவதற்கு முன் மாற்றலாம். ஆவணத்தின் குறிப்பிட்ட பகுதியை வேறு ஒரு அளவில் வேண்டும் என விரும்பினாலும், அந்த பகுதியை மட்டும் மாற்றிப் பின் அச்சிடலாம். ஆனால் இந்த மாற்றங்கள், அவற்றை மேற்கொண்ட டெக்ஸ்ட்டுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டு அச்சாகும். அடுத்து புதிய பக்கம் ஒன்றைத் திறந்து அமைத்தாலோ, அல்லது வேறு ஒரு டாகுமெண்ட் அமைத்தாலோ, அதில் இந்த மாற்றம் ஏற்றப்படாது. எனவே முன்பே சொல்லியபடி, அச்சிடும் வழிகள் எல்லாம் அந்த அந்த புரோகிராமின் வரையறைக்கு உட்பட்டன ஆகும்.

எதிர்கால நவீன சிகிச்சைகள்

இன்று உலக மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது எய்ட்ஸ். அடுத்து இதய நோய்கள். அதிலும் குறிப்பாக மாரடைப்பு. இவை தவிர, புற்றுநோய் உள்ளிட்ட எத்தனையோவிதமான நோய்களில் எய்ட்ஸ் தவிர மற்ற அனைத்துக்கும் ஏதோ ஒரு வகையில் பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.

இதய நோய்களுக்கான அடிப்படை விஷயம்:
இதயத் திசுக்கள் பல்வேறு பரம்பரைக் காரணங்களால் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு இதயம் பாதிக்கப்படுவதறகு மரபணுக்கள் காரணமாக இருக்கின்றன. அதேபோல், புகை, மது, மிகை ரத்த அழுத்தம், நீரிழிவு, நுண்கிருமிகள், கொலஸ்ட்ரால் போன்ற பல காரணங்கறாலும் இதயம் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு இதய பாதிக்கப்படும் போது, ஆக்ஸிஜனும், போதுமான சத்தும் கிடைக்காமல் இதய செல்கள் நலிவடைந்து பிறகு செயலிழந்துவிடுகின்றன. இதுதான் இதய நோய்களின் அடிப்படை விஷயம். இப்படிப்பட்ட பலவகையான இதய நோய்களுக்கும் எத்தனையோ வகையான சிகிச்சைகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, மக்களுடைய உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை நடைமுறைகள் போன்றவற்றால் புதுப்புது இதய நோய்கள் உருவாகின்றன. அவற்றைத் தொடர்ந்து அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆக, என்றென்றும் இதய நோய்கள் துறை 'புதுப்பிக்கப்பட்டு' வருகிறது.அந்த வகையில், மரபணு சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை போன்ற நவீன சிகிச்சை முறைகள் தற்போது பரிசோதனை முறையைக் கடந்து கிட்டத்தட்ட செயல்வடிவம் பெறும் நிலையில் இருக்கின்றன. இவற்றை இதய நோய்களுக்கான எதிர்கால நவீன சிகிச்சை முறைகள் என்று சொல்லலாம். அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1. ஸ்டெம் செல் சிகிச்சை
2. மரபணு சிகிச்சை
முதல் வகையான ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், நலிவடைந்த இதய செல்களை சீராக்க முடியும். அதேசமயம், மரபணு சிகிச்சையின் மூலம் செயல்படாத, நலிவடையாத இதய செல்களையும் பாதுகாக்க முடியும்.

ஸ்டெம் செல் எனப்து மிகவும் அடிப்படையான மனித செல்லாகும். அதிலிருந்துதான் உடல் உறுப்புக்கான அனைத்து செல்களுமே உருவாகின்றன.ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது உண்டாகும் கருத்தரித்த செல்தான் ஸ்டெம் செல்லாகப் பிரிந்து, உடலில் ஒவ்வொரு உறுப்புகளையும் உருவாக்குகிறது.இத்தகைய ஸ்டெம் செல்கள் உடலில் பல இடங்களிலும் காணப்படும். இந்த செல்களைத் தனியே பிரித்தெடுத்து, அவற்றை நேரடியாக இதயத்தில் செலுத்துவதன் மூலமாகவோ அல்லது இதய ரத்தக் குழாய் வழியாக செலுத்துவதன் மூலமாகவோ, நலிவடைந்த பாதிக்கப்பட்ட செல்களுக்குப் பதிலாக புதிய செல்களை உற்பத்தி செய்து இதயத்தைச் சீராக்கும்.எலும்பு மஜ்ஜை, தசைப்பகுதி மற்றும் சிசுவின் வளர்ச்சிப் பருவத்தில் இருந்தோ இத்தகைய ஸ்டெம் செல்கள் அதிக அளவில் பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

மரபணு சிகிச்சையில், மரபணுக்களை உடலில் செலுத்தும்போது, பரம்பரைக் காரணங்களால் பாதிக்கப்பட்ட மரபணுவோடு அவை சேர்த்து அவற்றைச் சீராக்குகின்றன.இந்தப் புதிய மரபணுவின் உத்தரவுப்படி, இதயத்தில் பாதிக்கப்படாத, நலிவடையாத இதய செல்கள் தூண்டப்பட்டு அவை வேலை செய்யும் விதமாக மாற்றப்படும்.இப்படி, மரபணுக்களை உடலில் செலுத்துவதற்கு வைரஸ் நுண்கிருமிகள்தான் ஊடகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், மரபணுக்கள் மிகவும் நுட்பமான உயிர்ப்பொருள் என்பதால், அவற்றைக் கடத்திச் செல்ல வைரஸ் போன்ற மிகவும் நுட்பமான உயிரினகளையே பயன்படுத்தவேண்டி இருக்கிறது.அதேசமயம், இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் வைரஸ் நுண்கிருமிகளால் புதிய நோய் ஏற்படாமலும் தடுக்க வேண்டும். அதற்காக, அடினோ வைரஸ், ரீட்ரோ வைரஸ், லென்டீ வைரஸ் போன்ற வைரஸ்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.இந்த இரண்டு நவீன சிகிச்சை முறைகளும் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தால், இதய நோய்கள் மட்டுமல்ல வேறு பல சிக்கலான நோய்களுக்கும் பெரிய தீர்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உலக இதய தினம்:
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'உலக இதய தினமாக'க் கடைப்பிடிக்கப்படுகிறது.இன்றைய தினம், உலகம் முழுவதும் சிறப்பு மருத்துவ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இதய நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் மருத்துவர்களே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலும், அதில் மக்களே அதிகமாகக் கலந்துகொள்கிறார்கள்.
இதய நோய்கள் குறித்த கருத்தரங்குகள், விழிப்புணர்வு பிரசார பேரணிகள், கூட்டங்கள் போன்றவை நடத்தப்படுகின்றன. இதில கலந்துகொள்ளும் மக்கள், இதய நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுகிறார்கள். மேலும், இதய நோய் வராமல் தடுக்கும் முறைகளையும், உணவு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் இதயத்தை வலுவாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் அறிந்து கொள்கிறார்கள்.தவிர, இதய நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன? அவற்றின் சிறப்புகள் என்னென்ன? என்பது போன்ற தகவல்களைத் தெரிந்து தங்களுக்கு உள்ள பாதிப்புகளுக்கு ஏற்ற மருத்துவச் சிகிச்சையை அவர்களே தேர்வு செய்யும் 'வசதியும்' அவர்களுக்குக் கிடைக்கிறது.

பல இடங்களில் 'இலவச இதய மருந்துச் சிகிச்சை முகாம்' நடத்தப்படும். அதில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு இலவச இதய ஆலோசனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்படும். பண வசதி இல்லாதவர்கள், இந்த முகாம்களுக்கு வந்து நிவாரணம் பெற முடியும்

மருந்து... மாத்திரை... உணவு!

சில நோய்களுக்கான மருந்துகளை சாப்பிடும் காலகட்டத்தில் மிகுந்த ஆரோக்கியம் தருவதாக நம்பும் உணவு வகைகளைக்கூட சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் எதிர்விளைவுகள் ஏற்பட்டு விடும்.

* தொற்றுநோயின் பாதிப்பிற்காக `ஆன்டிபயாடிக்' மருந்துகள் சாப்பிடுவோர், பாலையும், `யோகர்ட்' உள்ளிட்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இறைச்சியையும் ஒதுக்கி விடலாம்.

* வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு'களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். இதனால் வயிற்றுப் போக்கு இன்னும் மோசமாகி விடும்!

* ஒவ்வாமைக்காக மருந்து சாப்பிடும்போது, நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்ளும்போது, கால்சியம் செறிந்த உணவுகள், முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ் போன்ற உணவுகளை தவிர்த்திடுங்கள். வேறு வழியின்றி சாப்பிடுவதாக இருந்தாலும், தைராய்டு மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

* நீங்கள் வலிநிவாரணி மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும்.

* மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம்.

* மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம்.

பயர்பாக்ஸ் டேப் நகர்த்த ஷார்ட்கட் கீகள்

பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகமான தளங்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில், சில குறிப்பிட்ட டேப்கள் அடுத்தடுத்து இருந்தால், நமக்கு வசதியாக இருக்கும் என எண்ணுவோம். எடுத்துக் காட்டாக, கூகுள் ரீடர் தளத்தில் ஒரு கட்டுரையைத் தேர்ந்தெடுத்துப் படித்துக் கொண்டிருக்கலாம். இதற்கான தளம் இடது மூலையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே நேரத்தில் நீங்கள் உங்களின் வலைமனை (பிளாக்) ஒன்றைத் திறந்து எழுதிக் கொண்டிருக்கலாம். இதற்கான டேப் வலது மூலையில் இருக்கலாம். ஆனால் நீங்கள் இந்த இரண்டு தளங்களும் அடுத்தடுத்து இருந்தால், பயன்படுத்த எளிது என்று எண்ணுகிறீர்கள். கூகுள் ரீடரில் விஷயத்தைப் படித்து, அதனை உங்கள் கருத்துக்களுடன், உங்கள் வலைமனையில் உடனுக்குடன் அமைக்க விரும்பலாம். இதற்கென டேப்களை மாற்றி அமைத்திட சில வழிகளை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
பொதுவாக, எந்த டேப்பினை நகர்த்த விரும்புகிறோமோ, அதில் கிளிக் செய்து, இழுத்து நகர்த்தி வைக்கலாம். இன்னொரு வழியும் உள்ளது. எந்த டேப்பினை மாற்ற விரும்புகிறோமோ, அதன் இடத்தினை எண் அறிந்து, கண்ட்ரோல் + அந்த எண் அழுத்த, அது தேர்ந்தெடுக்கப்படும். ஆனால் ஒன்பதுக்கும் மேற்பட்ட டேப்கள் திறந்திருக்கையில், இது சற்று வேலை வாங்கும் விஷயமாக இருக்கும். மானிட்டரில், ஒரு பேனா அல்லது பென்சில் முனையைக் கொண்டு ஒன்று, இரண்டு என எண்ண வேண்டும். இது ஒரு பழைய முறை ஆகும்.
இதற்கான ஒரு எளிய வழியை புதியதாக வந்துள்ள ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இதன் மூலம் பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ள டேப்களை எளிதாக நகர்த்தலாம். இதன் பெயர் Move Tabs . இதனைப் பெற https://addons.mozilla.org/en-US/firefox/addon/220875/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இந்த எக்ஸ்டென்ஷன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்த பின்னர், டேப்களின் இடத்தை எளிதாக மாற்றலாம். அதற்குக் கீழ்க்கண்ட ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தலாம். டேப்களை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இந்த கீகளைப் பயன்படுத்தவும். பயன்படுத்துகையில் அந்த டேப் எந்த இடத்திற்குச் செல்கிறது என்று கவனத்தில் கொள்ளவும்.
Control + Shift + Home: தேர்ந்தெடுக்கப்பட்ட டேப்பினை இடது ஓரத்திற்குக் கொண்டு செல்கிறது.
Control + Shift+ End: தேர்ந்தெடுக்கப்பட்ட டேப்பினை வலது ஓரத்திற்குக் கொண்டு செல்கிறது.
Control + Shift+ Page Up:தேர்ந்தெடுக்கப் பட்ட டேப்பினை இடது பக்கம் ஒரு இடம் நகர்த்துகிறது.
Control + Shift + Page Down:தேர்ந்தெடுக்கப் பட்ட டேப்பினை வலது பக்கம் ஒரு இடம் நகர்த்துகிறது. இந்த ஷார்ட்கட் கீகள், டேப்களை நகர்த்த எளிய வழியைத் தருவதனை, இதனைப் பயன்படுத்து கையில் உணர்வீர்கள். இதில் ஒரு ட்ரிக் பார்ப்போமா! நீங்கள் 15 டேப்களைத் திறந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் 3 ஆவது டேப்பில் இருக்கிறீர்கள். அதிலிருந்து 14 ஆவது டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். இது ஏறத்தாழ வலது மூலை அருகே இருக்கலாம். டேப் பாரில் உள்ள அம்புக்குறி கீகளை அழுத்தி, ஒவ்வொரு தளமாகச் செல்லாமல், முதலில் Control + Shift + End அழுத்தவும். பின்னர், Control + Shift + Tab அழுத்தவும். இப்போது நீங்கள் விரும்பிய இடத்தில் இருப்பீர்கள்.
போனஸ் டிப்ஸ்:
சில கூடுதல் ஷார்ட்கட் கீகளை நினைவு படுத்திக் கொள்ளலாமா!
1. அனைத்து பிரவுசரிலும் செயல்படும் ஷார்ட்கட் கீகள்:
பின்னணியில் புதிய டேப்பில் தளங்களைத் திறக்க –– கண்ட்ரோல் + கிளிக் ctrl+click
2. முன்னணியில் புதிய டேப்பில் தளங்களைத் திறக்க –கண்ட்ரோல் + ஷிப்ட்+கிளிக் ctrl+shift+click
3. முன்னணியில் புதிய டேப் ஒன்றைத் திறக்க – கண்ட்ரோல் + mi ctrl+t
4. டேப்களுக்கிடையே செல்ல: ctrl+tab/ctrl+shift+tab
5. அனைத்து டேப்களையும் மூட : ctrl+tab/ctrl+shift+tab
6.மற்ற டேப்களை மட்டும் மூட: ctrl+alt+f4
பயர்பாக்ஸ் பிரவுசரில் மட்டும்:
1. குறிப்பிட்ட பிரவுசருக்குச் செல்ல: கண்ட்ரோல் + அந்த தளத்தின் டேப் உள்ள நிலை. கண்ட்ரோல் + அந்த எண். எடுத்துக்காட்டாக, நான்காவதாக உள்ள டேப்பிற்குச் செல்ல வேண்டும் எனில், ctrl+4.
இதில் ஒன்பது டேப்கள் இருந்தால் மட்டுமே இந்த ஷார்ட்கட் கீ செயல்படும்.
2. அப்போதைய டேப்பினை மட்டும் மூடிட ctrl+w
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7க்கானவை:
1. அட்ரஸ் பாரிலிருந்து புதிய டேப் ஒன்றைத் திறக்க: ஆல்ட் + என்டர்
2.டூல் பார் சர்ச் பாக்ஸிலிருந்து புதிய டேப் ஒன்றைத் திறக்க: ஆல்ட் + என்டர்
3. டேப்களுக்கான தளங்களின் சிறிய படத் தோற்றம் பெற: கண்ட்ரோல் + க்யூ
4. இதிலும் கண்ட்ரோல் + டேப் எண் கொடுத்துத் திறக்கலாம். ஆனால் இதில் 8 தளங்களுக்கு மட்டுமே செயல்படும்.
மவுஸ் ஷார்ட்கட் கீகள்
லிங்க் ஒன்றில் நடுவே உள்ள மவுஸ் பட்டன் அல்லது ஸ்குரோல் வீல் கிளிக் செய்தால், பின்புலத்தில் திறக்கப்படும். காலியாக உள்ள டேப் வரிசை காலி இடத்தில் கிளிக் செய்திட புதிய டேப் ஒன்று திறக்கப்படும்.
டேப்பில் நடுவே உள்ள பட்டனைக் கிளிக் செய்தால், டேப் மூடப்படும்.

தொடர் அழுகை

குழந்தைகள் பிறந்தவுடன் நன்றாக வேகமாக அழ வேண்டும். அப்போதுதான், முதன்முறையாக தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசிக்க முடியும். உடலும் சிவப்பு நிறமாக மாறும்.
குழந்தையின் முதல் அழுகை என்பது தன்னுடைய சுவாச முறையைத் தொடங்குவதற்காகவே இயற்கை ஏற்படுத்தியது. ஆனால், இந்த இயற்கையான நடவடிக்கைக்கு மாறாக வேறு பல காரணங்களால் குழந்தை அழலாம். அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டு சிகிச்சை அளித்தால், ஒருவேளை குழந்தைக்கு வேறு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.
சில காரணங்களை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். பசிக்கும்போது அழலாம். வயிற்றில் இருந்து காற்று வெளியேறும் போது அழலாம். துணியால் உடல் மூடப்படாமல் கதகதப்பு இல்லாமல் இருந்தால் அழலாம்.
சில குழந்தைகள், விளக்கை அணைத்தால் அழத் தொடங்கும். சில குழந்தைகள், விளக்கைப் போட்டால் அழும். எல்லாக் குழந்தைகளும், கை கால்கள் மற்றும் கழுத்துப் பகுதியை கெட்டியாக அழுத்திப் பிடித்தால் அழும்.
வேறு காரணங்கள்
கைக்குழந்தைகள்
பசி
தாகம்
வயிற்றில் காற்று
அரிப்பு
வயிற்று வலி
ஈரமான துணி
அதிக சத்தம்
மாட்டுப்பால் அலர்ஜி
பல் முளைக்கும் போது
சிறுநீர் கழிக்கும்போது
தனிமை
இவை தவிர,
1. நோய்த் தொற்று
2. தலைவலி
3. காது வலி
4. குடல் இறக்கம்
5. விறை முறுக்குதல்
6. குடல் அடைப்பு
போன்ற காரணங்களாலும் குழந்தை அழலாம்.
சிறுவர்கள்
1. ஆளுமை
2. பாதுகாப்பு இல்லாமை
3., பழக்கம்
4. பசி
5. களைப்பு
6. நோய்
7. மருந்துகள் ஏதாவது
8. அலர்ஜி
சிகிச்சை
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். பாலுக்காகத்தான் அழுகிறது என்றால், பால் கொடுத்தால் அழுகை நின்று விடும். குழந்தையைப் படுக்க வைத்திருக்கும் துணி நனைந்திருப்பதால் குழந்தை அழுகிறது என்றால், அந்தத் துணியை மாற்றிவிட்டால் அழுகை நின்றுவிடும்.
காது வலி போன்றவை இருந்தால், மருத்துவரிடம் காட்டி மருந்துபோட்டால் அழுகை நின்றுவிடும்.

காணாமல் போகும் கிரெடிட் கார்டு மோகம்!

2003-ம் ஆண்டில் அந்த அலை எழுந்தது. ஒட்டுமொத்த நாட்டையும் அந்த அலை பெருவேகமாக அடித்துச் சென்றது. இந்திய நடுத்தர வர்க்கம், தங்கள் கனவுகளை உடனடியாக நனவாக்க வந்த வரமாக நினைத்த `கிரெடிட் கார்டு' அலை பற்றித்தான் நாம் கூறுகிறோம்.

அது இப்போது பழைய கதை. `பிளாஸ்டிக் மணி' மீதான மக்களின் கவர்ச்சி வெகுவாக மறைந்துவிட்டது. அப்படித்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ரிசர்வ் வங்கி இதழில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், இந்திய வாடிக்கையாளர்களிடையே `கிரெடிட் கார்டு' பயன்பாடு வெகுவாகக் குறைந்து வருவது தெரிகிறது.

கடந்த 2005- 2006-ல் இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சமாக இருந்தது. அது 2007- 2008-ம் ஆண்டில் 2 கோடியே 75 லட்சமாக எகிறியது. அது 2008- 2009-ம் ஆண்டில் 2 கோடியே 46 லட்சமாகக் குறைந்தது. தொடர்ந்து வந்த 2009- 2010 ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. தற்போது கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை, 1 கோடியே 83 லட்சம்தான்.

ஆனால் `டெபிட் கார்டுகள்' விஷயத்தில் இந்த நிலைமை இல்லை. 2005- 2006-ல் இநதியச் சந்தையில் புழக்கத்தில் இருந்த `டெபிட் கார்டுகளின்' எண்ணிக்கை 4 கோடியே 98 லட்சம்தான். 2007- 2008-ல் இரு மடங்குக்கும் மேலாக உயர்ந்து 10 கோடியே 24 லட்சம் ஆனது. 2009- 2010 ஆண்டிலோ 18 கோடியே 14 லட்சம் ஆகியிருக்கிறது.

ஆக, வாடிக்கையாளர்கள் இடையே ஆரம்பகட்ட `கிரெடிட் கார்டு' மோகம் மறைந்து, அவர்கள் `டெபிட் கார்டு'க்கு மாறி வருவது தெளிவாகத் தெரிகிறது.

2005- 2008 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் வங்கிகள் கிரெடிட் கார்டுகளை அள்ளி வழங்கின. தொடர்ந்து வந்த பொருளாதார மந்தநிலையும், கிரெடிட் கார்டு விஷயத்தில் தவறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பும், வங்கிகளை எச்சரிக்கையாகச் செயல்படச் செய்திருக்கின்றன.

`பிளாஸ்டிக் பண' பயன்பாடு குறித்த வாடிக்கையாளரின் மனோபாவமும் மாறியிருக்கிறது. இது ஒரு `பேன்சி ஐட்டம்' அல்ல, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தவேண்டிய சீரியசான பணம் செலுத்தும் முறை என்று எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள் என இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் கொட்டும் ஏடிஎம்

இருபத்துநான்கு மணி நேரமும் பணம் எடுக்க, இப்போது, தெருவுக்கு தெரு ஏ.டி.எம்.,கள் வந்து விட்டன. தானியங்கி பணம் வழங்கும் இந்த இயந்திரங்கள் மக்களுக்கு மிகவும் வசதியாக உள்ளன. "ஏ.டி.எம்.,மில் பணம் மட்டுமே வழங்க வேண்டுமா? தங்கத்தை வழங்கினால் என்ன?' என யோசித்தது ஒரு நிறுவனம். உடனே, தங்கம் வழங்கும் ஏ.டி.எம்., இயந்திரத்தையும் நிறுவி விட்டது. ஆனால், இது இந்தியாவில் அல்ல. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகர ஓட்டல் ஒன்றில் இந்த ஏ.டி.எம்., நிறுவப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்.,மில் நீங்கள் தங்கம் வாங்க கார்டை செருக வேண்டாம். அதற்கு பதில், பணத்தை போட வேண்டும். பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப ஒன்று, ஐந்து அல்லது பத்து கிராம் எடையுள்ள தங்க பார்கள் வந்து விழும். தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி வரும். எனவே, இந்த இயந்திரமும் தங்கத்தின் விலையை பத்து நிமிடங்களுக்கு, ஒரு முறை சரி செய்து கொள்ளும். "எக்ஸ் ஓரியன்ட் லக்ஸ் ஏ.ஜி.,' என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தாமஸ் ஜிஸ்லர் என்பவர், இந்த இயந்திரத்தை மாட்ரிட் நகரில் வெஸ்டின் பேலஸ் என்ற ஓட்டலில் நிறுவியுள்ளார். "விழாக்களின் போது பரிசாக கொடுக்க தங்க நாணயங்களை வாங்க கடைகளுக்கு செல்வதை தவிர்க்க, இந்த இயந்திரத்தை நிறுவி உள்ளோம். மிக குறைந்த பணத்திற்கு கூட சிறிய நாணயத்தை இந்த இயந்திரம் மூலம் வாங்கலாம்!' என தாமஸ் கூறியுள்ளார். இந்தியாவிலும் இந்த இயந்திரத்தை பொருத்தி விட்டால், நகைக்கடைகளில் கூட்டத்தை குறைக்கலாம்.

நகங்களும் நலம் சொல்லும்

நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

* நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங் களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவ தோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.

* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.

* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.

* சமையல் அறை, கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா போன்ற ரசாயனங் களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

* தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும் கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.

* பசை, தண்ணீரில் கலந்து உபயோ கிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.

* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சு களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.

* நகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே. நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.

* நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்ப மாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மை தான்.

வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்தஓட்டம் கிடைக்க உதவுகிறது.

* நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.

நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் `மானிட்டர்' போலவும் செயல்படும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு இவற்றைக் கண்டுபிடிக்கலாம். நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு...

* நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்டு நோய் போன்றவற்றின் அறிகுறி யாகவும் இது கருதப்படுகிறது.

* நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் ரையீரல் நோய்கள் வரலாம்.

* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.

* நகங்கள் வெளிறி இருந்தால் ரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.

* நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.

* கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.

* நீலநிறமாக மாறிவிட்டால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.

* நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.

* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துக் கொள்வது நலம்.