Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?


உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 - 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?
இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா.
மாரடைப்பு என்றால் என்ன?
ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.
சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.
இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.
மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?
காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை.
கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் - புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய்.
கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் - வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை.
இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்?
மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.
சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு' என்று பெயர்.
இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்: பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.
சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு "ஆஞ்சைனா' என்று பெயர்.
நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி. மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.
டைனோசர்கள் அழிந்தது விண்கற்களாலா?


டைனோசர்கள் பற்றிய செய்திகள் எப்போதுமே ஆர்வத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. சாதாரண மக்களையும் `டைனோசர்களை'ப் பற்றி அறிய வைத்த

திலும், அவற்றைப் பற்றி ஆர்வம் கொள்ள வைத்ததிலும் ஸ்பீல்பெர்க்கின் `ஜுராசிக் பார்க்' படத்துக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இந்தப் படத்துக்குப் பிறகு, உலகம் முழுவதும் டைனோசர்கள் பற்றி பேச்சாகவே இருந்தது.

பூமியில் சுமார் 1300 வகையான `ஊர்வன' இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், டைனோசர். ஒரு காலத்தில் இது பூமியின் முக்கிய உயிரினமாகத் திகழ்ந்தது. இவ்வளவு பெரிய உயிரினம் எப்படி அழிந்துபோனது என்பது இன்றைக்கும் புதிராக உள்ளது.

ஏறக்குறைய 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உலவித் திரிந்திருக்கின்றன டைனோசர்கள். அப்போது இவைதான் பூமியின் மிகப் பெரிய உயிரினங்கள். மிக அதிகமான எடை, மாறிவந்த காலச்சூழலால் டைனோசர்கள் மடிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது.
ஆனால் 1980-ல் லூயிஸ் அல்வரேஸ் என்ற புவி ஆராய்ச்சியாளர் ஓர் ஆய்வு செய்தார். அதன்படி, 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான நில அடுக்குகளில் `இரிடியம்' என்ற தனிமம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பூமியில் மிக அரிதாகக் காணப்படும் தனிமம். விண்கற்களில் இந்தத் தனிமம் அதிகமாக உள்ளது. எனவே, பூமியில் விழுந்த விண்கல்லில் இருந்து இரிடியம் வந்திருக்கக்கூடும் என்று லூயிஸ் கூறினார்.

அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், பல மைல் அகலம் கொண்ட ஒரு ராட்சத விண்கல், பூமியில் மோதியிருக்கலாம், அந்த மோதலால் டைனோசர்கள் அழிவைச் சந்தித்திருக்கக்கூடும் என்று லூயிஸ் தெரிவிக்கிறார். ஆனால் இன்றைய பறவைகள், டைனோசர்களில் இருந்து பரிணமித்தவைதான். எனவே ஒரு விண்கல் மோதலால் டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்துபோயின என்பதை ஏற்க முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

ஆக, டைனோசர்களின் அழிவு குறித்த புதிர் முற்றிலுமாக விடுபடவில்லை என்பதே உண்மை.

தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்'!

தூங்குவதற்குக் கூட நேரமில்லாமல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறம் என்றால், நேரம் இருந்தும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் மறுபுறம்.

`தூக்கம் நம்மைத் தழுவ மறுக்கிறதே?' என்ற ஏக்கம் கொண்டவர்கள், இனி தூக்கமாத்திரையை நாட வேண்டாம். தினசரி `ஏரோபிக்' பயிற்சி செய்தால் போதும், தூக்கம் அரவணைத்துக்கொள்ளும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் `நார்த்வெஸ்டர்ன் மெடிசின்' அமைப்பு இந்தச் சிறிய, ஆனால் முக்கியமான ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. தினம் தவறாமல் `ஏரோபிக்' பயிற்சி செய்வது நல்ல தூக்கம், மனநிலை, சுறுசுறுப்பை அளிக்கிறது என்கிறார்கள் இந்த அமைப்பின் விஞ்ஞானிகள்.

`இன்சோம்னியா' என்ற தூக்கக் குறைபாடு உள்ள மத்திய வயது மற்றும் முதிர் வயது நபர்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டனர். பொதுவாகவே இந்த வயதில் 50 சதவீதம் பேருக்கும் தீவிரமான தூக்கக் குறைபாடு அறிகுறி காணப்படுகிறது.

குறிப்பிட்ட நபர்களை தொடர்ந்து `ஏரோபிக்' பயிற்சி செய்ய வைக்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு மருந்து, மாத்திரையால் கிடைப்பதை விட ஆழ்ந்த, நீண்டநேர உறக்கம் ஏற்பட்டது.

இந்த ஆய்வின் முக்கிய ஆய்வாளரும், `நார்த் வெஸ்டர்ன்' அமைப்பின் தூக்கக் குறைபாட்டு ஆய்வு மைய இயக்குநருமான பைலிஸ் ஸீ, ``பெரும்பாலானோருக்கு இந்த ஆய்வு முடிவுகள் பொருந்துவதாக இருக்கின்றன'' என்கிறார்.

மற்றொரு ஆய்வாளரான கேத்தரின் ரீட், ``வயதாக வயதாக தூக்கமின்மை அதிகரிக்கிறது. மத்திய வயதில், தூக்கமானது தடாலடியாக மாற்றமடைகிறது. நமது செயல்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலம் தூக் கத்தை ஏற்படுத்தலாம் என்று நாங்கள் கண்டுபிடித்திருப்பது முக்கியமானது. நல்ல தூக்கத்துக்கு `ஏரோபிக்' எளிமையான வழி என்று தற்போது நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்'' என்கிறார்.

நானா மெயில் அனுப்பினேன்?

திடீரென உங்கள் நண்பர்கள் போன் செய்து, உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, தேவையற்ற மெயில்கள் வந்துள்ளதாகவும், அது போல அனுப்ப வேண்டாம் என்றும் சொல்வார்கள். விபரம் தெரிந்த நபர்கள், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிலிருந்து, நீங்கள் அனுப்பாமலேயே சில மெயில்கள் வருவதாகக் குற்றம் சாட்டுவார்கள். கனிவுள்ளவர்களோ, இது போல வருகின்றன; உன் கம்ப்யூட்டரை வைரஸ் மற்றும் ஸ்பேம் மெயில், மால்வேர் புரோகிராம் செக் செய்திடச் சொல்வார்கள்.
இது போன்ற சூழ்நிலையில் என்ன நடக்கிறது? என்று நீங்கள் விழிப்பீர்கள். ஏனென்றால், நண்பர்கள் குறிப்பிடும் அந்த மெயில் எல்லாம், உறுதியாக நீங்கள் அனுப்பவில்லை என்று தெரியும். ஏன் அது உங்கள் கம்ப்யூட்டரால் கூட அனுப்பப்பட்டிருக்காது. உங்கள் நண்பர்கள் வட்டத்தில் ஒருவரின் கம்ப்யூட்டர் ஸ்பேம் மெயில் அல்லது வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராமினால் பாதிக்கப்பட்டு, அது உங்கள் இமெயில் அக்கவுண்ட் மூலமாக இந்த ஸ்பேம் மெயில்களை, அட்ரஸ் புக்கில் உள்ள அனைவருக்கு இதனை அனுப்பி இருக்கலாம். அல்லது நீங்கள் அறியாத ஒரு நபர், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினையே ஹைஜாக் செய்திருக்கலாம். இதற்கான தீர்வு என்ன? முதலில் உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினை நீங்கள் அணுகித் திறந்து பார்க்க முடிகிறது என்றால், அதன் பாஸ்வேர்டை உடனே இன்னும் கடுமையான பாஸ்வேர்டாக மாற்றவும். உங்களால் உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினை, வழக்கமான பாஸ்வேர்ட் பயன்படுத்தித் திறக்க முடியவில்லை என்றால், உங்கள் இமெயில் அக்கவுண்ட் ஹைஜாக் செய்யப்பட்டுள்ளது என்று பொருள். யாரோ ஒருவர், உங்கள் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்து, பாஸ்வேர்டினை மாற்றி, இது போல ஸ்பேம் மெயில்களுக்கெனப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஒரு சிலர், இது போல இமெயில் ஹைஜாக் செய்த பின்னர், அதன் இமெயிலுக்கு உரியவர் பெயரில், அவரின் உற்ற நண்பருக்கு, தான் டில்லி வந்து மாட்டிக் கொண்டதாகவும், பணம் தேவை எனக்கூறி ஏதேனும் ஒரு அக்கவுண்ட் எண்ணுக்கு பணம் அனுப்ப வேண்டிக் கொள்வார். இதில் அனைத்துமே ஏமாற்று வேலையாக இருக்கும். இது போல இமெயில்கள் ஹைஜாக் செய்யப்படுகையில், உடனே உங்களுக்கு இமெயில் சேவையினை வழங்குபவரைத் தொடர்பு கொண்டு, உடனடியாக உங்கள் அக்கவுண்ட்டினை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்ளவும்.
இலவசமாக இமெயில் தரும் பிரபல நிறுவனங்கள் எனில், அவர்கள் தளத்தில் இதற்கான வழி தரப்பட்டிருக்கும். சில பிரபல இமெயில் அக்கவுண்ட்டில் இது போல ஏற்பட்டால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.
ஜிமெயில் – http://mail.google.com/support/bin/ answer.py?hl=en&answer=50270
யாஹூ: http://help.yahoo.com/l/us/yahoo/ abuse/issues/issues-713223.html
ஹாட்மெயில்: http://windowslivehelp.com/ solution.aspx?solutionid=1fe6ed3e-eef6-4c57-933f-f3c408f1c5c1
ஆனால், பாஸ்வேர்ட் கொடுத்து அக்கவுண்ட்டில் நுழைய முடியும் என்றால், அந்த அக்கவுண்ட் ஹைஜாக் செய்யப்படவில்லை; ஆனால் உங்களுடைய பாஸ்வேர்டினைப் பயன்படுத்தி யாரோ விளையாடுகிறார்கள் என்று பொருள். உடனே மேலே குறிப்பிட்டபடி, பாஸ்வேர்டினை மாற்றவும்.