Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
நட்பின் சுவடுகள் எங்கே???

நட்பின் சுவடுகள்
எங்கே
இன்று???

மனம் மட்டும் ஆட்சி
செய்யும்
படிக்கும் காலத்தில்
இருந்தது நட்பு என்று
வலிசுமக்கும்
மனம் பதிலளிக்கையில்

பணம் மட்டும் ஆட்சி
செய்வதால் தான்
சிதறி போனது
நட்புக்கால சுவடுகள் என்று
சொல்லாமல் சொல்கிறது
இன்றைய சூழல்...

நண்பர்களையும்
நல்ல உள்ளங்களையும்
தேடிய காலங்கள் போய்
இன்று
பணங்களையும்
பணத்திற்கான வழிகளையும்
தேடி ஓடுகிறது ஒரு கூட்டம்...

நேரில் பார்த்து
நெடுநேரம் பேசி
நட்பை வளர்த்தவர்கள்
இன்று
முகமும், ஒலியும் அற்ற மின்னன்சலில்
வளர்க்கிறார்கள் நட்பை...
அதிகமாய் ஒலி என்று பார்த்தால்
அது குறுன்செய்தி வரும் ஓசை மட்டுமே...

வாழ்வீர்க்கு தேவை பணம் மட்டும் அல்ல
நல்ல மணங்களும் தான்....
நல்ல மனங்களின் நட்பை பெற்றவனே
உலகில் ஜெயித்தவன்...செல்வந்தான்...

உண்மையில்,
பணங்கள் பேசுவதில்லை
மணங்கள் செல்லரிப்பதில்லை....
ஆனால் இன்று செல்லரித்து போனது
பணங்களை மட்டும் தேடும் சில படுப்பாதக மணங்கள்....

தங்களின் சுவடுகளையே தொலைத்தவர்களிடம்
நட்பின் சுவடுகளை எப்படி எதிர்பார்ப்பது....??
மன்னிக்கட்டும் நல்ல உள்ளங்கள்
நட்பை மறந்த நாகரிக மனிதர்களை..