Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

கண்ணீர்க் கால்வாய்...!

சிலர் அழுதால்... கண்ணீர் ஆறாக ஓடும். அவ்வளவு கண்ணீர் உடலுக்குள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா...

கண்ணீர் தினமும் உற்பத்தியாகிறது. ஆனால் தினமும் வெளியேறுவதில்லை. அது கண்களை சுத்தபடுத்துகிறது. எஞ்சிய கண்ணீர் எங்கே செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? முக்குதான் கண்ணீர் செல்லும் கால்வாயாகும். சாதாரண நேரங்களில் குறைந்த அளவில் கண்ணீர் முக்கின் வழியாக வழிந்து ஆவியாகி விடுவதால் தெரிவதில்லை. துக்க வீட்டில் பெண்கள் அழும்போது அடிக்கடி முக்கை பிடித்துக் கொள்வதை பார்த்திருக்கலாம். அப்போது முக்கின் வழியாக வருவது கண்ணீரின் ஒரு பகுதிதான். கண்களுக்கு முக்குடன் இணைப்பு துவாரங்கள் இருக்கின்றன. இது கண்ணீரோடை போல செயல்படுகிறது.