Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
நேரமும் ஓய்வும் நிறைய கிடைக்க...!
"ஓய்வு நேரத்தின் உண்மையான பிரச்சினையே, உங்கள் ஓய்வு நேரத்தினை மற்றவர்கள் அபகரித்துக்கொள்ளாமல் பார்த்துக் கொள்வதே!'' என்றார் மேலை நாட்டு அறிஞர் ஆர்தர் லேசி.
உங்கள் பொன்னான நேரத்தைச் சீரமைத்து உங்கள் நிறைவேறாத ஆசைக்கனவுகளை நனவாக்கிட சிறிதளவு முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டால் போதும்.
இதோ அதற்கான சுலபமான யோசனைகள்:
* உங்கள் அன்றாட வாழ்வை ஆக்கிரமிக்கும் செயல்கள் எவை எவை என்பதை பட்டியலிடுங்கள். அவற்றில் சில முக்கியமற்ற செயல்களுக்கு நேரம் ஒதுக்குவதை நீக்கி விடுங்கள்.
* உங்கள் அன்றாட வாழ்வின் அத்தியாவசிய தேவைகள் என்னென்ன என்பதை பட்டியலி டுங்கள். நீங்கள் விரும்பும் ஆசைக்கனவுகள் என்னென்ன என்பதையும் பட்டியலி டுங்கள்.
* தொலைக்காட்சி முன் அதிகநேரம் இருப்பது, வெட்டியாக ஊர் சுற்றுவது போன்ற காலத்தை விரயமாக்கும் செயல்கள் உங்களிடம் காண பட்டால் அவற்றை ஒதுக்கிவிட்டு அந்தநேரத் தை உங்கள் லட்சிய வழிகளுக்கு பயன்படுத் துங்கள்.
* உங்களால் செய்ய முடியாமல் சிதறிக் கிடக்கும் செயல்களை ஒருங்கிணையுங்கள். 2 அல்லது 3 நாட்கள் இழுத்தடிக்கும் வேலை களை ஒரே நாளில் செய்து முடித்து காலத்தைச் சேமிக்க சற்று சிந்திங்கள். தகவல் தொடர்புகளை வளர்த் தால் அதிக அளவு நேரத்தைச் சேமிக்கலாம். அதேநேரம் ஈமெயில் உங்களை நாள்முழுக்க ஆக்கிரமித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* பிறரிடமிருந்து வரும் அத்தியாவசிய வேண்டுகோள்களைத் தவிர, பிறவற்றிற்கு முடியாது என்று கூறும் பழக்கத்தை உருவாக்குங்கள். அனைத்து வேண்டுகோள்களுக்கும் முடியும் என்று கூறினால் உங்களுக்கு ஓய்வு நேரம் என்பதே கிடைக்காது.
* உங்கள் அலுவலக அலுவல்கள் அனைத்தையும் நீங்கள் ஒருவரே செய்ய நினைக்கும் பழக்கத்தை மாற்றி உங்கள் பணியாளர்களிடமும் சிலவற்றை ஒப்படைத்துச் செய்துமுடிக்கச் சொல்லுங்கள்.
* மாலை வேளைகளில் உங்கள் குழந்தைகளிடம் விளையாடி அன்றாட பாடங்களைச் சொல்லிக் கொடுப்பது, பொழுதுபோக்காக பூங்காக்களில் உல்லாசமாக உலா வருவது, நீங்கள் விரும்பும் பயனுள்ள புத்தகங்களை படிப்பது போன்றவற்றில் முழுமனதுடன் ஈடுபடுங்கள்.
இவ்வாறு செய்வதால் நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தை ஓய்வுக்கும், மகிழ்ச்சிக்கும் ஒதுக்கி நீங்கள் ஆனந்தமாய் வாழலாம்.