குரோம் பிரவுசரில் பி.டி.எப் படிக்கலாம்
கூகுள் தரும் குரோம் இணைய பிரவுசரில், பி.டி.எப். பைல்களைப் படிக்க கூகுள் டாக்ஸ் வசதியினையே பயன்படுத்தி வந்தோம். இதன் மூலம் படிப்பதற்கு, முதலில் குறிப்பிட்ட பி.டி.எப். பைலை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திட வேண்டும். பின் கூகுள் டாக்ஸ் பயன்படுத்திப் படிக்க வேண்டும். குரோம் பிரவுசரிலேயே பி.டி.எப். பைலைப் படிக்கும் வசதி இல்லாமல் இருந்தது. அண்மையில் இந்த வசதியினை குரோம் பிரவுசரில் கூகுள் அமைத்துள்ளது. Chrome (6.0.495.0 dev) என்ற மேம்படுத்தப்பட்ட பதிப்பில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. பிரவுசரிலேயே பி.டி.எப்.பைலைப் படிக்கலாம். எனவே கோப்பினை டவுண்லோட் செய்திட வேண்டிய அவசியம் இல்லை. டவுண்லோட் செய்திட எண்ணினால், இணையப் பக்கத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Save as…” என்பதைத் தேர்ந்தெடுத்து, கம்ப்யூட்டரில் சேவ் செய்துவிடலாம். இது ஒரு நல்ல வசதிதான். இதனால், இணையத்தில் பார்க்கும் பைலைப் படிக்க, டவுண்லோட் செய்து இன்னொரு சாப்ட்வேர் மூலம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரவுசருக் குள்ளாகவே இதனை மேற்கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை ஒரே நேரத்தில் படிக்க முடிகிறது.