Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

தூக்கமின்மையைப் போக்கும் `ஏரோபிக்'!

தூங்குவதற்குக் கூட நேரமில்லாமல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறம் என்றால், நேரம் இருந்தும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் மறுபுறம்.

`தூக்கம் நம்மைத் தழுவ மறுக்கிறதே?' என்ற ஏக்கம் கொண்டவர்கள், இனி தூக்கமாத்திரையை நாட வேண்டாம். தினசரி `ஏரோபிக்' பயிற்சி செய்தால் போதும், தூக்கம் அரவணைத்துக்கொள்ளும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் `நார்த்வெஸ்டர்ன் மெடிசின்' அமைப்பு இந்தச் சிறிய, ஆனால் முக்கியமான ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. தினம் தவறாமல் `ஏரோபிக்' பயிற்சி செய்வது நல்ல தூக்கம், மனநிலை, சுறுசுறுப்பை அளிக்கிறது என்கிறார்கள் இந்த அமைப்பின் விஞ்ஞானிகள்.

`இன்சோம்னியா' என்ற தூக்கக் குறைபாடு உள்ள மத்திய வயது மற்றும் முதிர் வயது நபர்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டனர். பொதுவாகவே இந்த வயதில் 50 சதவீதம் பேருக்கும் தீவிரமான தூக்கக் குறைபாடு அறிகுறி காணப்படுகிறது.

குறிப்பிட்ட நபர்களை தொடர்ந்து `ஏரோபிக்' பயிற்சி செய்ய வைக்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு மருந்து, மாத்திரையால் கிடைப்பதை விட ஆழ்ந்த, நீண்டநேர உறக்கம் ஏற்பட்டது.

இந்த ஆய்வின் முக்கிய ஆய்வாளரும், `நார்த் வெஸ்டர்ன்' அமைப்பின் தூக்கக் குறைபாட்டு ஆய்வு மைய இயக்குநருமான பைலிஸ் ஸீ, ``பெரும்பாலானோருக்கு இந்த ஆய்வு முடிவுகள் பொருந்துவதாக இருக்கின்றன'' என்கிறார்.

மற்றொரு ஆய்வாளரான கேத்தரின் ரீட், ``வயதாக வயதாக தூக்கமின்மை அதிகரிக்கிறது. மத்திய வயதில், தூக்கமானது தடாலடியாக மாற்றமடைகிறது. நமது செயல்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலம் தூக் கத்தை ஏற்படுத்தலாம் என்று நாங்கள் கண்டுபிடித்திருப்பது முக்கியமானது. நல்ல தூக்கத்துக்கு `ஏரோபிக்' எளிமையான வழி என்று தற்போது நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்'' என்கிறார்.