Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

52 வயது வரை வாழ்ந்த மனித குரங்கு

"புகை பிடித்தால் உடல் நலனுக்கு தீங்கு...' என, சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றிருக்கும். அதை யாரும் கண்டு கொள்வதே இல்லை. ஊதித் தள்ளுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதற்கு காரணம், புகைத்தால் பெரிய அளவில் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படாது என்பதுதான். இதை நிரூபித்துள்ளது ஒரு மனித குரங்கு. தென் ஆப்ரிக்க நாட்டில் பிலோம்பென்டின் என்ற ஊரில், ஒரு மிருககாட்சி சாலை உள்ளது. இங்கு கூண்டில் அடைத்து, வளர்க்கப்பட்ட மனித குரங்கின் பெயர் சார்லி. இந்த குரங்கிற்கு ஒரு மோசமான பழக்கம் உண்டு. அது, எப்போதும் சிகரெட் பிடிப்பதுதான். சமீபத்தில், தன் 52வது வயதில் இந்த குரங்கு மரணமடைந்தது.
கூண்டில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் மனித குரங்குகள், வழக்கமாக 40 வயதில் இறந்து விடும். இந்த குரங்கோ, கூடுதலாக 12 ஆண்டுகள் வரை உயிருடன் இருந்து, இயற்கையான முறையில் மரணமடைந்துள்ளது.
மிருககாட்சி சாலையில் மிகவும் விரும்பப்பட்ட மிருகம் சார்லி. காரணம், அது புகைக்கும் அழகைப் பார்ப்பதற்காகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குவிவர். சில ஆண்டுகளுக்கு முன்பு, மிருககாட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்கள் தூக்கி எறியும் சிகரெட்களை இந்த குரங்கு எடுத்து புகைக்க ஆரம்பித்தது. பின்னர், அதுவே இதற்கு பழக்கமானது. இந்த மிருககாட்சி சாலையின் உயர் அதிகாரி டாரில்பார்னசிடம் இந்த குரங்கு பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது: இதே மிருககாட்சி சாலையில் நான் 15 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். சார்லி குரங்கு தினமும் ஐந்து முறை சிகரெட் பிடிக்கும். மிருககாட்சி சாலை ஊழியர்கள் யாராவது பார்த்தால் உடனே, சிகரெட்டை மறைத்து வைத்துக் கொள்ளும். கூண்டுக்கு வெளியே யாராவது சிகரெட் பிடிப்பதைப் பார்த்தால் அவர்களிடம் சிகரெட் கேட்டு கெஞ்சும். அவர்கள் தூக்கி எறியும் சிகரெட்டை கேட்ச் பிடித்து, மறைவான இடத்தில் அமர்ந்து ஊதித் தள்ளும். — இவ்வாறு அவர் கூறினார். சார்லி குரங்கு, மத்திய ஆப்ரிக்க காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டது. சிம்பன்சி வகையைச் சேர்ந்த இந்த குரங்கு இனத்தில் இருந்துதான் மனித இனம் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.