Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

வேர்ட் : டேபிள் டேட்டா டெக்ஸ்ட் ஆக

வேர்ட் தொகுப்பில் மிகத் திறனுடைய டேபிள் எடிட்டர் ஒன்று இணைந்து செயலாற்றுகிறது. இதன் மூலம் தான் நாம், டேபிள்களை உருவாக்கவும், பலவகை டேட்டாக்களுடன் அமைக்கவும் முடிகிறது. சில வேளைகளில் நாம் டேபிளில் டேட்டாவை அமைத்த பின்னர், அவற்றை சாதாரண டெக்ஸ்ட் ஆக மாற்ற விரும்பலாம். இதனை எப்படி உருவாக்குவது என்று இங்கு பார்க்கலாம்.
1. எந்த டேபிளில் உள்ள டேட்டாவினை டெக்ஸ்ட் ஆக மாற்ற வேண்டுமோ, அந்த டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
2. நீங்கள் இன்னும் பழைய வேர்ட் 97 பயன்படுத்துபவராக இருந்தால், டேபிள் மெனுவில் Convert Table to Text என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து இதனை மேற்கொள்ளலாம். அதன் பின்னர் வந்த பதிப்புகள் எனில், டேபிள் மெனுவிலிருந்து Convert என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் கிடைக்கும் மெனுவில் Table to Text என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது Convert Table to Text என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த டேபிளில், நெட்டு வரிசைகளில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த கேரக்டர் (கால்புள்ளி, பாரா குறியீடு, டேப், சிறிய இடைக்கோடு) கொண்டு டெக்ஸ்ட் பிரித்து அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4.பின்னர் ஓகே கிளிக் செய்தால், டேபிளில் உள்ள டேட்டா, நீங்கள் தேர்ந்தெடுத்த குறியீடு கொண்டு பிரிக்கப்பட்ட டெக்ஸ்ட்டாக அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.