Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

இணையத்தில் பல தளங்களில் இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தளத்தில் இவற்றை வெளியிட்டுள்ளது. பல வலைமனைகளிலும் இவை இடம் பெற்றுள்ளன. ஏதேனும் ஒரு தேடுதல் சாதனம் மூலம் ஷார்ட்கட் கீ தொகுப்புகளைத் தேடினால், இந்த தளங்களின் முகவரி கிடைக்கும். இருப்பினும் அண்மையில் நான் கண்ட ஒரு தளம் இந்த வகையில் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.
அதன் முகவரி: http://www. shortcutworld.com
இந்த தளத்தில் நுழைந்தவுடன், உலகின் மிகப் பெரிய ஷார்ட்கட் கீ தொகுப்புகளின் தகவல் தளம் என்ற விளக்கத்துடன் நமக்கு இந்த தளம் கிடைக்கிறது. இதில் பயர்பாக்ஸ், குரோம், வேர்ட் 2010, எக்ஸெல், போட்டோஷாப், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஜிமெயில், ஒன் நோட் 2010, உபுண்டு டெஸ்க்டாப், வி.எல்.சி. மீடியா பிளேயர், விண்டோஸ் மீடியா பிளேயர் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களுக்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கிடைக்கின்றன. இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் இந்த பிரிவுகள் காட்டப் படுகின்றன. இவற்றில் கிளிக் செய்து, சம்பந்தப் பட்ட தளங்களைப் பெற்று, தகவல்களைப் பெறலாம்.