Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

`கிரெடிட் கார்டின்' தோற்றம்

பண்டமாற்று முறைக்குப் பின் மனிதர்கள் பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு வியாபாரிக்கும், வாடிக்கையாளருக்கும் கடன் என்பது தனிப்பட்ட முறையிலான பழக்கமாக இருந்தது. 1920-ல் முதன்முதலில் சில பெட்ரோல் நிலையங்களும், பல கிளைகளைக் கொண்ட ஓட்டல்களும் தங்கள் கிளைகளில் பயன்படுத்தத்தக்க வகையில் கடனுக்கான கார்டுகளை வெளியிட்டன.

1930-களின் இறுதியில் இவற்றில் சில, மற்றவர்களின் கார்டுகளையும் அங்கீகரிக்கத் தொடங்கின. பிறகு 1950-ல் `டைனர்ஸ் கிளப்', பணம் கொடுத்துப் பெறும் கார்டுகளை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல நிறுவனங்களில் செல்லக்கூடியவையாக அறிமுகப்படுத்தினர். விரைவிலேயே `அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' அதேபோல செய்தது. `பாங்க் அமெரிகார்டு' என்பதே பின்னர் `விசா' கார்டு என்றானது. 1959-ல் அது முதல் பாங்க் கிரெடிட் கார்டாக வெளிவந்தது. அதைத் தொடர்ந்து 1966-ல் `மாஸ்டர் கார்டு' வெளிவந்தது.