Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

வேர்ட் டிப்ஸ்-ஹைலைட்டிங் கலர்:

அச்சில் உள்ள ஆவணங் களைப் பயன்படுத்து கையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக் கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். மெனு பாரில் உள்ள ஐகான்களிடையே என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
டாகுமெண்ட்டில் குரல் வழிகாட்டி:
வேர்டில் டாகுமெண்ட் அமைக்கையில், வழிகாட்டும் வகையில், உங்கள் பேச்சு அங்கே இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அவ்வாறு அமைத்திட, வேர்ட் வழி தருகிறது. பொதுவாக, ஆவணங்களில், ஆங்காங்கே குறிப்புகளைத் தனியாக அமைக்க, வேறு எழுத்து வகையில், அடைப்புக் குறிகளுக்குள் அவற்றை அமைப்போம். இங்கே நம் குரல் ஒலியிலேயே அவற்றை அமைக்கலாம். இதனை ஏற்படுத்த, உங்கள் கம்ப்யூட்டரில் மைக் இணைக்கப்பட்டு, இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதனை எப்படி அமைப்பது என்று இங்கு பார்க்கலாம்.
1. எங்கு இந்த ஒலி வழிகாட்டியினை அமைக்க வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. Insert மெனுவில் இருந்து Object என்பதனைத் தேர்ந் தெடுக்கவும். இப்போது உங்களுக்கு ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸ் (Object dialog box) கிடைக்கும்.
3. இந்த விண்டோவில் Create New என்ற டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. ஆப்ஜெக்ட் டைப் பட்டியலில், ஒலிக்கான ஐட்டம் ஒன்று கிடைக்கும். இது Sound அல்லது Wave Sound என இருக்கலாம். இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Display as Icon என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
5. பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.
6. இனி,சவுண்ட் ரெகார்டர் என்னும் விண்டோஸ் துணை சாதன விண்டோ கிடைக்கும்.
இந்த விண்டோ, சவுண்ட் ஆப்ஜெக்ட் இன் (Sound Object in) என்ற பெயருடன் பைல் பெயரைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். இந்த சவுண்ட் ரெகார்டரைப் பயன்படுத்தி, உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும், மைக் மூலம், நீங்கள் என்ன கூறவேண்டுமோ, அதனைக் கூறி முடிக்கவும்.சவுண்ட் ரெகார்டர் விண்டோவினைப் பின் மூடவும்.
அடுத்து உங்கள் டாகுமெண்ட்டை, அப்டேட் செய்திடவா என்று ஒரு ஆப்ஷன் கேட்கப்படும். இதற்கு Yes என்று கிளிக் செய்திடவும். உங்கள் டாகுமெண்ட்டில், எந்த இடத்தில் இந்த சவுண்ட் பைல் செருகப்பட்டுள்ளதோ, அந்த இடத்தில், ஸ்பீக்கர் ஐகான் ஒன்று காட்டப்படும்.
ஆவணத்தைப் படிப்பவர்கள், இந்த ஐகானில் இருமுறை கிளிக் செய்தால், உடன் சவுண்ட் பைல் இயக்கப்படும். கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கரில் இது ஒலிக்கும். இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் இயக்கிக் கேட்கலாம்.