"Peace be with you."
"And peace be with you as well."
Welcome
கம்ப்யூட்டருக்கும் புதியவரா ? - Save மற்றும் Save as என்ன வேறுபாடு ?
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள பல்வேறு பயன்பாட்டு சாப்ட்வேர் தொகுப் புகளில் பைல் மெனுவில் நாம் காணும் இரு வேறு பயன்பாடுகள் Save மற்றும் Save ஆகும். இரண்டுமே ஒரு பைலை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாப்பி டிஸ்க்கில் நாம் தயாரித்துக் கொண் டிருக்கும் பைலை பதிவு செய்கின்றன? அப்படியானால் இரண்டு பயன்பாட்டிற்கும் வேறுபாடு இல்லையா? ஒரே பயன்பாட் டிற்கு ஏன் இரண்டு வெவ்வேறு கட்டளை கள் என நீங்கள் எண்ணலாம்? இரண்டு கட்டளைகளும் பைலைப் பதிந்தாலும் இரண்டின் செயல் பாட்டில் சற்று வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் Save கட்டளை பயன் படுத்தும்போது அப்போது பயன் பாட்டில் உருவாக்கப்படும் பைல் அதே பெயரில் சேமிக்கப்படுகிறது. அந்த பைலுக்கு அதற்கு முன் பெயர் கொடுக்க வில்லை என்றால் பெயர் கொடுக்குமாறு கம்ப்யூட்டர் கேட்கும். பெயர் கொடுத்தவுடன் அது பதிவு செய்யப்படும். மீண்டும் அதே பைலில் பணியாற்றுகையில் Save கட்டளை கொடுத்தால் அதே பெயரில் சேவ் ஆகும். புதிய பெயர் கொடு என்றெல்லாம் கம்ப்யூட்டர் உங்களைக் கேட்காது. ஆனால் Save As கட்டளை கொடுக்கையில் அந்த பைலை ஒரு புதிய பைல் போன்று மற்றொரு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம். அதாவது ஒரு டாகுமெண்ட்டில் எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். ஆனால் அந்த மாற்றத்துடன் உள்ள ஆவணத்தை வேறு ஒரு பெயரில் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் அப்போது Save As என்ற கட்டளை கொடுத்து சேமிக்கலாம். இவ்வாறு சேமித்த பின் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் சென்று பைல் டைரக்டரியைப் பார்த்தால் உங்கள் பைல் முந்தைய பெயரிலும் புதிய பெயரிலுமாக இரண்டு இருக்கும்.