Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

Megaupload Downloaded- டவுன்லோட் மேனேஜர்

இணையத்தில் பல தளங்கள், பைல்கள் ஸ்டோர் செய்வதற்கென செயல்படுகின்றன. இவற்றில் நம் விருப்பத்திற்கு ஏற்ப பைல்களை அப்லோட் செய்து வைத்து, அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். யு–ட்யூப் போன்ற தளங்களில், வீடியோக்களையும் அப்லோட் செய்து மகிழ்ச்சி அடையலாம். ஆனால் எந்த சாப்ட்வேர் புரோகிராமினையாவது டவுண்லோட் செய்திட வேண்டுமாயின் நாம் சில தடைகளை அல்லது தாமதங்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. விளம்பரங்களையும் சந்திக்க வேண்டி யுள்ளது. சில பைல்களை இலவசமாக டவுண்லோட் செய்கையில், குறைந்தது ஒரு நிமிடமாவது காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போது அந்த தளத்திலிருந்து நம்மைப் பற்றிய தகவல்களை அறிய, ஏதேனும் புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் பதியப்படுகிறதோ என்று பயம் ஏற்படுகிறது. இந்த சிரமங்கள் எதனையும் எதிர் கொள்ளாமல், புரோகிராம்களை டவுண்லோட் செய்திட, இணையத்தில் நமக்கு இலவசமாய் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் பெயர் Megaupload Downloader. இந்த புரோகிராம் டவுண்லோட் செய்வதற்கென உள்ள புகழ்பெற்ற தளங்களான Megaupload, Rapidshare, Sendspace, Depositfiles, 4Shared, Mediafire, ZShare, Easyshare, Uploaded.to ஆகியவற்றிலிருந்து புரோகிராம்களை இறக்க உதவுகிறது. யு–ட்யூப் போன்ற தளத்திலிருந்தும் வீடியோ பைல்களை இறக்கிப் பதிந்து கொள்ள உதவுகிறது. இந்த புரோகிராமினை http://sourceforge.net/projects /mudownloader/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துகையில் தொடக்கத்தில் சில சிரமங்கள் ஏற்படலாம். அடிப்படையில் இதன் இன்டர்பேஸ் இத்தாலிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதனை செட் செய்திடுகையில், Language என்ற பிரிவிற்குச் சென்று ஆங்கிலத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் புரோகிராம்களைப் பட்டியலிட்டு வரிசையில் வைத்து ஒவ்வொன்றாக டவுண்லோட் செய்திடும் வசதியும் இதில் உண்டு.

நாரத்தங்காயை ல்லது பழத்தை ந்தவடிவத்திலாவது உணவில் சேர்த்து வர த்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (யிற்றுப் புண்), யிற்றுப் புழு இவைநீங்கும். சியை திகரிக்கும்.

நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் ல்லது ர்க்கரைப் பாகில் ஊறவைத்து ன்கு றியபின்சீதக் ழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க ல்லபலன் தரும்.

நாரத்தை பழத்தை சாறுபிழிந்து குடித்து வர உடல் வெப்பத்தை போக்கிகுளிர்ச்சி தரும். வாந்தியையும், தாகத்தையும் ணிக்கும்.

நாரத்தங்காய் இலைகைள நரம்புநீக்கி ல்லெண்ணெய்விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்துமிளகாய், ப்பு, புளி, பெருங்காயம், றிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன்பிசைந்து சாப்பிடலாம்.

ப்படி சாப்பிட்டு வரபித்தம் குறையும்.ர்ப்ப காலத்தில் ற்படும் நா சுவையின்மை, குமட்டல், வாந்திநிற்கும். யி‌‌ன்மை குறைந்து ன்கு சிக்கும்.

பொதுவாக உணவுடன் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்துக் கொண்டால் செரியாமைபிர‌‌ச்சினை வரவே வராது.

சாப்பிட்டதும் ப்பம் ந்து கொண்டிருந்தாலும், ‌‌ஜீரணமாக நெடுநேரம் ஆனாலும் நார்த்தங்காய் ஊறுகாயை சாப்பிட்டால் உடனடி பலன்கிட்டும்.

யிற்றில் வாயுப்பிரச்சினை ற்படும்நிலையில் ஒரு ஊறுகாய் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்றுதி‌‌ண்ணால் வாயுக் கோளாறுவிரைவில்நீங்கும்.

முகச் சுருக்கம் நீங்க..

முகச் சுருக்கம் நீங்க காரட் உதவுகிறது. முதலில் ஆலிவ் எண்ணெயினால் முகத்தை மஸாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தைக் கழுவாமல் ஒரு காரட் சாற்றுடன் கடலைமாவு இரண்டு ஸ்பூன் கலந்து பூசி அரைமணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் தெரியும்.
முட்டையை உடைத்து, அதனுடன் சில துணி எலுமிச்சை சாற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை சுருக்கம் விழுந்துள்ள பகுதிகள் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி உலர விடுங்கள். பிறகு கழுவி விடுங்கள்.
அடுத்து நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து பசைபோல் அதைச் செய்து தடவிக் கொள்ளுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு நன்றாக கழுவிவிடுங்கள். சுருக்கங்கள் விழுவது தள்ளிப்போகும்.
பசும்பாலில் சிறிதளவு கிளிசரின் கலந்து இரவில் படுக்கச் செல்லும்முன் முகத்தில் மேல்நோக்கி மென்மையாக மஸாஜ் செய்து பின் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறைந்துவிடும்.
ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் 1 ஸ்பூன் காரட் சாறு கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவி 15 நிமிடங்கள் நன்றாக உலர விடவும். நன்றாக உலர்ந்தது பஞ்சை வெதுவெதுப்பான நீரில் நனைத்துத் துடைக்கவும். தினமும் ஒரு முறை இவ்வாறு செய்துவர மெல்லிய முகச் சுருக்கங்கள் மறையும்.
கிளிசரினுடன் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
ஒரு கனிந்த வாழைப்பழத்துடன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி ஒரு மணிநேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். தினமும் தொடர்ந்து இம்மாதிரி செய்துவர முகச் சுருக்கங்கள் நீங்குவதோடு முகம் மென்மையாகும்.
ஒரு டீஸ்பூன் முட்டைக்கோஸ் சாறுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் உலரவிடவும். நன்றாக உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தாலும் முகச்சுருக்கம் நீங்கும்.
முகச்சுருக்கம் நீங்க பார்லர்களில் செய்யப்படும் டைட்டனிக் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். ஆக்ஸிஜன் கலந்த நைட் க்ரீமை வாங்கித் தினமும் தூங்கப் போவதற்கு முன் தடவிக் கொள்ளலாம்.
1 டீஸ்பூன் தக்காளி சாறு, 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, சில சொட்டுகள் எலுமிச்சை சாறு, பால் சிறிதுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவிட்டு கழுவ, மாசுமறுவற்ற முகத்துடன் நிறமும் முகத்திற்கு கூடுதலாகும்.
சருமம் மிருதுவாக ஆக தக்காளி சாறுடன் சிறிது பீட்ரூட் சாறு எலுமிச்சை சாறு சேர்த்து தடவவும்.
முகப்பருக்கள் மறைய 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் (பன்னீர்). கற்பூர லோஷன் டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் தண்ணீரில் கழுவி வரவும். ஒரு வாரத்திற்கு இரண்டுமுறை செய்யவும்.
முகத்தில் கருந்திட்டுக்கள் மறைய...
முகத்திற்கு போடும் பீளிச்சிங் பவுடர் & 2 டீஸ்பூன், ஹைட்ரஜன் பெராக்ஸைட் & 2 டீஸ்பூன், கிளிசரின் & 3 சொட்டு, ரோஸ்வாட்டர் & 5 சொட்டு, அமோனியா & 6 சொட்டு.
மேலே கூறிய பொருள்களில் அமோனியா தவிர எல்லாவற்றையும் ஒரு கண்ணாடி கப்பில் கலந்து கடைசியாக அமோனியா கலந்து கருந்திட்டுக்கள் இருக்கும் இடங்களில் தடவி (கண்கள் அருகில் தடவ வேண்டாம்) 20 நிமிடம் ஊறவிட்டு ஐஸ் தண்ணீரில் கழுவவும்.
ஒரு தேக்கரண்டி கசகசாவை தண்ணீருடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் 'பளிச்' என்று இருக்கும்.
வெள்ளரிக்காயை மிக்ஸியில் அடித்து அதை முகத்தில் தடவி மணி நேரம் அல்லது 1 மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
புதினா இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவைகளை வெந்நீரில் கலந்து வாரத்துகு 2 முறைகள் முகத்தில் ஆவி பிடித்தால் முகம் வசீகரமாக இருக்கும்.
இரவில் படுக்கும் முன்பு பாலாடையை மஞ்சள் கலந்து முகத்தில் தடவி விட்டு 1 மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் மிகவும் வனப்புடன் இருக்கும்.
இரவில் படுக்கும் முன் முகத்திற்கு வெண்ணெய் தடவலாம். பகலிலும் தடவலாம். ஆனால் தடவிய பிறகு வெய்யிலில் போகக்கூடாது.
எலுமிச்சை சாற்றில் பாசிப்பயற்றுமாவு கலந்து முகத்தில் தடவி வைத்து 1 மணி நேரம் கழித்த கழுவினால் முகம் நிறம் பெறும்.
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றையும் பக்குவம் செய்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால் என்றும் இளமை உணர்வுடன் இருக்கலாம்.
தினமும் தேகப்பயிற்சி செய்வதும், அளவான உணவு உட்கொள்வதும் இளமையாக இருக்க உதவுகிறது.
ஒரு டம்ளர் தேங்காய் எண்ணெய், 1 டம்ளர் தேங்காய்ப்பால், 2 கஸ்தூரி மஞ்சள்(தூளாக்கியது) கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் முகம், உடம்பில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்தவின் பாசிப்பயறு மாவினால் தேய்த்துக் குளித்தால் நல்ல நிறமாகிவிடும்.
அதிகமாக மனத்தில் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு முகச் சுருக்கம் அதிக அளவில் உண்டாகும்.
எப்போதும் இனிமையான சிந்தனைகள் இருந்தால் முகம் அழகாக இருக்கும். முகச்சுருக்கம் மறைந்துவிடும்.
முக அழகிற்கும் தோலின் பராமரிப்பிற்கும் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது பழச்சாறு குடிக்க வேணடும். பப்பாளி, வெள்ளரிக்காய் அரைத்து முகத்தில் பூசிக் கொள்வது நல்லது.
தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கவும், முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் தக்காளிச் சாற்றை முகத்தில் தடவ வேண்டும்.
குப்பை மேனி இலை, மஞ்சள், வேப்பிலை ஆகிய மூன்றையும் அரைத்து முகத்தில் தடவி வைத்து சிறிது நேரம் ஊற வைத்தபின் கழுவினால் முகத்தில் உள்ள முடி உதிர்ந்து விடும்.
தக்காளிச்சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் சமபங்கு எடுத்து கலந்து முகத்தில் முடி இருக்கும் இடத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்துக் கழுவினால் முடியின் நிறம் மாறி தோல் நிறத்தில் வந்துவிடும். நாளடைவில் இந்த முடியும் மறைந்துவிடும்.
மஞ்சள்பொடி, கடலைமாவு, பன்னீர் ஆகிய கலவையைக் குழைத்து முகத்தில் தடவி அழத்தத் தேய்க்க வேண்டும். இதுபோல் அடிக்கடி செய்து வந்தால் முகத்தில் உள்ள முடி அறவே நீங்கிவிடும்.
முகத்தை முதலில் வெந்நீரில் கழுவிய பின் உடனே குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு பாசிப்பயற்றுமாவில் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து முகத்தில் தடவி மணிநேரம் ஊறுவைத்துக் கழுவினால் பருக்கள் மறைந்துவிடும்.
ஒரு தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் நன்றாகக் கலக்கி, முகத்தில் தேய்த்து மணி நேரம் கழித்து கழுவினால் முகப்பரு மறையும்.
கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு(முழு பயறு), சீயக்காய், வேப்பிலை இவற்றை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கால் கிலோ, கால் கிலோவாக அரைத்து சோப்புக்குப் பதில் இவற்றை பயன்படுத்துங்கள். மேனி பொலிவுறும். தோல் வியாதிகள் அண்டாது. அதிகமாக அரைத்து வைத்தால் மாவில் பூச்சிகள் வந்துவிடும்.
முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக உடையவர்கள் எலுமிச்சம் பழச்சாறு, ஒரு ஸ்பூன் தேன், கடலை மாவு கலந்த பேஸ்டை உபயோகிக்கலாம்.
நாள் முழுவதும் நம் முகத்தில் மேக்கப் இருப்பது நல்லது அல்ல. முகம் சிறிது நேரமாவது இயற்கை காற்றை சுவாசிக்குமாறு விடவேண்டும். அதுவே முகம் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க பன்னீரில் சிறிதளவு கிளிசரின் கலந்து முகத்தில் தினசரி தடவி வரவேண்டும். தொடர்ந்து இப்படி செய்தால் சுருக்கம் மறைந்துவிடும்.
ஒவ்வொருநாளும் காலை வெறும் வயிற்றில் எலுமிச்சம் பழச்சாறு வெந்நீரில் பிழிந்து சாப்பிட்டு வந்தால் சரும எழில் நன்கு பிரகாசமானதாக இருக்கும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்துள்ள காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட வேண்டும் இதனால் முகமும் பொலிவு பெறும்.
சில பெண்களுக்கு முகத்தில் ரோமங்கள் காணப்படும். இது பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். தேவையில்லாத இடத்தில் உள்ள ரோமங்களை நீக்க தேய்த்து குளிக்க உதவும் மஞ்சளை பூசி வந்தால் ரோமங்கள் அகன்றுவிடும்.
வெள்ளைத்தேன் மெழுகு (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) கொதிக்கும் நீரில் போட்டு அது உருகியதும் அதனுடன் பாதாம் எண்ணெய் ரோஸ் வாட்டர் கலந்தால் அற்புதமான க்ளென்ஸிங் க்ரீம் தயார். இதை முகத்தில் பூசிவர அழுக்கு, தூசி, எண்ணெய்ப் பசை நீங்கி அழகு மிளிரும்.
ஆரஞ்சுத்தோல், புதினா இலை, துளசி இலை எல்லாமே கைப்பிடி அளவு எடுத்து, சுத்தம் செய்து நிழலில் காய வைத்து, பொடியாக அரைக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் பன்னீர் விட்டு குழைத்த முகத்திற்கு பேக் போல் போட்டு வந்தால் தனி பளபளப்பு கிடைக்கும்.
ஓட்சை ஊற வைத்து கையால் மசித்து முகத்தில் தடவிக் கொண்டு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ, முகம் பளிச் பளிச் ஆகிவிடும்.
எலுமிச்சம் பழச்சாறு, பப்பாளி மற்றும் அன்னாசிப் பழச்சாறு இவை மூன்றுக்கும் சருமத்தோலை பளபளபாக்கும் தன்மை உண்டு. இச்சாறுகளை முகத்தில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் ஊறியபின் முகத்தைக் கழுவிவிட்டால் முகம் பளபளப்புடன் திகழும்.
வெய்யிலில் அலைந்து திரிபவர்கள் முகம் கறுத்து விடும். இந்தக் கருமையை போக்க எளிய வழி வெள்ளரிச்சாறு, தக்காளி ஜூஸ் இரண்டையும் புளித்த தயிரில் கலந்து கருமை படர்ந்துள்ள இடத்தில் பூசுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.
பச்சைப் பயற்றை அரைத்து மாவாக்கி அதனுடன் சலித்து எடுத்த கோதுமைத் தவிட்டைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும்போது அதைத் தேய்த்துக் குளித்தால் தோலில் இருக்கிற கரும்புள்ளிகள் மாறித்தோல் பளபளவென்று ஜொலிக்கும்.
புளித்தண்ணீரில் 2 சொட்டு தேன் கலந்து முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடங்களுக்கு பிறகு பயத்தம் மாவை தடவிக் கொண்டு முகத்தை அலம்பி உலர்ந்த டவலினால் துடைத்துவிட்டால் முகம் பளபளக்கும்.
வெள்ளரிக்காய் வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும். அவ்விலையை எடுத்து முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கொள்ளவும். முக ஈரம் காய்ந்த பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவவும்.
வெயிலில் சென்றுவிட்டு வந்தால் தோலின் நிறம் கறுத்துக் காணப்படும். இந்த கருமையை போக்க பார்லியை நன்கு பொடி (பௌடர்) செய்து கொள்ளவும். சிறிது பொடியுடன் எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து கிரீம் பதத்திற்குக் குழைக்கவும். இந்த குழைவை வெயிலில் கறுத்த இடங்களில் தடவி, பதினைந்து நிமிடங்கள் ஊறவிடவும். ஊறுகின்ற தருணத்தில் நாமே கை, முகம் போன்ற வெயில் பட்டஇடங்களைத் தேய்த்துக் கொள்ளலாம். பின்பு சோப்பு அல்லாமல் பயற்றம் மாவு அல்லது கடலைமாவு கொண்டு குளிர்ந்த நீரால் கழுவலாம்.
வெள்ளரிச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு இரண்டையும் சமபங்கு எடுத்துக் கொண்டு சிறிது கஸ்தூரி மஞ்சளுடன் குழைத்தக் கொள்ளவும். இந்தக் கூழை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் ஊற விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். கழுவும் பொழுது இரண்டு கைகளாலும் முகத்தை நீரால் அடித்துக் கழுவவும். இம்முறையினால் சருமம் மிருதுவாக இருக்கும். மேலும் பரு வராது. கரும்புள்ளிகள் இருக்காது.
முல்தானிமெட்டி அல்லது சந்தனப்பொடியை பன்னீருடன் குழைக்கவும். இந்தக்கூழை முகத்தில் தடவி நன்கு காயவிடவும். காய்ந்தவுடன் சருமம் 'வரவர' என்று இருக்கும். அப்படிக் காயும் சமயத்தில் பேசவோ, சிரிக்கவோ, முகத்தைக் கோணல் செய்து கொள்ளவோ கூடாது. ஏனெனில், தோலின் அசைவுகளுக்கேற்ப சருமத்தில் சுருக்கங்கள் விழ வாய்ப்பு உண்டு. நன்கு காயந்தபின், குளிர்ந்த நீர் கொண்டு இரு கைகளாலும் அடித்துக் கழுவவும்.
வெள்ளரிக்காய் சாறு ஒரு தேக்கரண்டி, தக்காளி சாறு ஒரு தேக்கரண்டி, காரட் சாறு ஒரு தேக்கரண்டி, தயிர் ஒரு தேக்கரண்டி, கடலைமாவு ஒரு தேக்கரண்டி சேர்த்து குழைத்துப் பூசி வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
சுமார் 20 ரோஜாப்பூ இதழ்களை மோர், எலுமிச்சைச்சாறு கலவையில் சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து பிறகு 4 பாதாம் பருப்பை எடுத்து அத்துடன் சேர்த்து அரைத்து பேரெக்ஸ் (திணீக்ஷீமீஜ்) கால் தேக்கரண்டி, கிளிசரின் அரை தேக்கரண்டி கலந்து முகம், கை கால்களில் தேய்த்து வந்தால் முகம் வெண்மை நிறமடையும். இது ஒரு மைல்ட் பிளீச்சிங் முறையாகும்.
ஆரஞ்சுத் தோல்களைக் காய வைத்து நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். இந்தப் பொடியில், ஒரு ஸ்பூன் கடலைமாவு ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு ஸ்பூன் சேர்த்து பன்னீர் விட்டு குழைத்து முகத்திற்கு மாஸ்க் போல் வாரம் ஒரு முறை பூசி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் முகத்திற்கு புதுப்பொலிவு கிடைக்கும்.
பாதாம் பருப்பு ஒன்றுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து மையாக அரைத்து முகம், கழுத்தில் பூசி ஊறவைத்துக் குளிக்கலாம்.
ஒரு ஸ்பூன் ஓட்மீல், 1 டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, 1 டீஸ்பூன் அரிசிமாவு, 2 டீஸ்பூன் ஆரஞ்சுச்சாறு கலந்து முகத்தில் தேய்த்து வரலாம்.
எலுமிச்சைச்சாறு, மஞ்சள்பொடி கலவையை தினந்தோறும் குளிப்பதற்கு முன் முகம், கழுத்து, கைகளில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
50 கிராம் வெங்காயச்சாறு, 125 கிராம் ரோஸ்வாட்டர், இரண்டு சொட்டு வாசனைத் திரவியம், 25 கிராம் பாதாம் எண்ணெய், 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எல்லாவற்றையும் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு முகம், கழுத்து கைகளில் தேய்த்து குளிக்கலாம். கழுத்தில் தோன்றும் கோடுகளைப் போக்கும்.
தூய்மையான சந்தனம், கடுக்காய் 4 அல்லது கசகசா இரண்டு டேபிஸ்ஸ்பூன், பாதாம் பருப்பு இவைகளால் தயாரித்த கலவையின் ஃபேஸ் பேக்ஆக பயன்படுத்தலாம்.
கடைகளில் ஃபேஸ் மாஸ்க் பொடி விற்கும். அதை வாங்கி ஒரு ஸ்பூன் மாஸ்க் பொடியில் சிறிது வெள்ளரி, காரட், தயிர் சேர்த்துக் குழைத்து பூசி 20 நிமிடங்கள் ஊறினதும் கழுவிவந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். வாரத்திற்கு ஒருமுறை செய்தால்போதும்.
வெள்ளரிச்சாறு, புதினாச்சாறு கலந்து முகம், கைகளில் தேயத்து வரலாம்.
குளிர்க்காலத்தில் படுக்கும் முன் முகத்தில் மாயிஸ் சரைஸர் (விஷீவீstuக்ஷீவீsமீக்ஷீ) பூசுவது நல்லது.
முட்டைக்கோஸ், முள்ளங்கிச் சாறுகளும் முகத்தை பளிச்சென்றதாக்க உதவும்.
வெளியில் கிளம்பும் முன் ஒரு பத்து நிமிடம் தயிரில் வீட்&ஜாம் அல்லது ஓட்மீல் கலந்து சுழல் வட்டமாகத் தேய்த்து பத்துநிமிடம் கழித்து கழுவி விட்டு மேக்அப் போட்டால் முகம் அழுக்கு நீங்க பளிச் என்று இருக்கும்.
தோலின் நிறம் அதிகரிக்க வாரத்தில் ஏதேனும் ஒருநாள் மட்டும் எதுவும் சாப்பிடாமல் இரண்டு டம்ளர் தேன் சேர்த்த எலுமிச்சைச்சாறு, ஒரு டம்ளர் பச்சைக் காய்களின் சாறு, இரண்டு டம்ளர் மோர், ஒரு இளநீர் இவற்றை மட்டும் பருக வேண்டும்.
நிறம் மட்டாக இருப்பவர்கள் தெடர்ந்து ப்யூட்டி பார்லரிங் ஃபேசியல் செய்து கொண்டால் பளிச்சென்ற நிறம் கிடைக்கும்.
தினமும் இரவு படுக்கும் முன் 'க்ளென்ஸர்' உபயோகித்து முகத்தை சுத்தம் செய்துவிட்டு முகத்தில் லேசாக 'மாயிஸ்சரைஸர்' தடவிக்கொண்டு படுப்பது நல்லது.
தயிரில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூளைக் கலந்து முகத்தில் நன்றாகத் தேய்த்து பதினைந்து நிமிடம் ஊறவைத்து முகத்தைக் கழுவி விடுங்கள்.
பிரிட்ஜ் இருந்தால் இளநீர் சிறிது ஸ்டாக் செய்து சிறிது இளநீர், பால், சந்தனம் கலந்து குழைத்து தேய்த்த 20 நிமிடம் ஊறியதும் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
முள்ளங்கி, கேரட் சாற்றினைத் தேய்த்து ஊற வைத்தால் வந்தால் முகம் ப்ளீச் செய்யப்பட்டது போல் நிறமாக மாறும்.
பசும்பாலில் சில துளிகள் கிளசரின் கலந்து தேய்த்து ஊறினதும் பாசிப்பருப்புப் பொடி கொண்டு தேய்த்து முகம் கழுவி வரலாம்.
சில துளிகள் தேனுடன் பாலாடை சேர்த்து மெல்ல மேல் நோக்கித் தேய்த்து வரலாம்.
புதினாச் சாற்றையும் முட்டைக்கோஸ் சாற்றையும் கலந்து அதில் சிறிது கடலைமாவைக் குழைத்துப் பூசி குளித்து வரலாம்.
இரவு படுக்கும் முன் கடுகெண்ணெய், ஆலிவ் ஆயில் இரண்டையும் சம அளவு கலந்து உள்ளங்கையல் ஊற்றி (ஒரு ஸ்பூன் அளவு) இரண்டு கைகளாலும் முகம், கழுத்தில் தேய்த்து காலையில் கடலை மாவு, பயத்தம் மாவு கலந்து தேய்த்துக் கழுவலாம்.
முடிந்தவரை பச்சையாக காரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், வெள்ளரி, தக்காளி சாப்பிடுங்கள். கீரை, பழங்கள் சாப்பிடுங்கள். சீனி சேர்க்காத எலுமிச்சைச் சாறு குடியுங்கள்.
வாரம் ஒருமுறை ஆலிவ் ஆயில் அல்லது சிறிது பாலேடு எடுத்து முகத்தில் மென்மையாக சுழல் வட்டமாகத் தேய்த்து, 10 நிமிடம் ஊறின பின் ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து முகத்தை அதில் காட்டி ஆவிபிடித்தபின் ஏதேனும் ஒரு ஹெர்பல் பேஸ் பேக்கினை குழைத்து முகம், கழுத்தில் பூசி 20 நிமிடம் ஆனதும் முகம் கழுவி விட்டால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

எலிகளை விழுங்கும் செடி கண்டுபிடிப்பு !

மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை, விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த செடியின் இலைகள், உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
செடி, கொடிகள் அடங்கிய தாவரங்கள் சுத்தமான சைவம்தான். அவைகளுக்கு உணவே, சூரிய ஒளி, தண்ணீர், உரங்கள் தான். அதுவும் வேர்கள், இலைகள் மூலம் உணவை கிரகித்துக் கொள்ளும். ஆனால், அசைவ உணவை சாப்பிடும் தாவரம் பற்றிய தகவல் இப்போது தான் வெளியே வந்துள்ளது.
பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ராபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப் பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போதுதான், இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்த போதுதான், இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இது குறித்து மெக்பெர்சன் கூறியதாவது:
இந்த கண்டுபிடிப்பு மிக, மிக முக்கியமானது. 21ம் நூற்றாண்டு வரை, இப்படி ஒரு தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான். இயற்கை உலகின் அதிசயம், அழகைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள மிகவும் பாடுபட்டவர் சர்.டேவிட் அட்டன்பரோ. எனவே, அவர் பெயரிலேயே இந்த தாவரத்தை அழைக்க முடிவு செய்துள்ளோம். இனி, இந்த தாவரம், "நேபன்தஸ் அட்டன்பரோகி' என அழைக்கப்படும். இந்த தாவரம் சிவப்பு, பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம் வரை வளரும். விக்டோரிய மலை சரிவுகளில் பெரும் புதர்களுக்கு மத்தியில் மட்டுமே இந்த செடி வளர்கிறது.
இந்த செடியின் இலைகள் தான், அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் எலி போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது. இலையில் சுரக்கும் ஒருவித வழுவழுப்பான என்சைம்களில் இருந்து எலிகள் தப்ப முடியாது. பின்னர், அந்த என்சைம்களே எலிகளை கொன்று விடுகிறது. எலிகள் மட்டுமல்ல, பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம் கபளீகரம் செய்து விடும். தாவர இயலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது.
— இவ்வாறு மெக்பெர்சன் கூறினார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழக தாவர இயல் முன்னாள் பேராசிரியர் இவர். 2007 முதல் இந்த தாவரம் பற்றி ஆராய்ச்சிகளை மேற் கொண்டுள்ளார். தன் ஆராய்ச்சியில், மாமிச தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டுபிடித்த பின்னர், சமீபத்தில் இந்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்தார்

சுருள் முடியை மெயின்டெய்ன் செய்ய...

* உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?

சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள்.

* 'வாட்டர் பேஸ்டு மேக்கப்' போட்டுக் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள்.

* சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள்உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.

*உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் அடங்காப் பிடாரியாக இருக்கிறதா?

இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.

ஹைப்போ அலர்ஜெனிக் சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த ஆரம்பியுங்கள். தவிர வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ரைஸரை தொடர்ந்து யூஸ் செய்யுங்கள்.

உங்கள் சருமத்தில் முகச் சுருக்கம் விழுந்து விட்டதா?

டோன்ட் வொர்ரி.... முகத்திலும், கழுத்திலும் தேனை அப்ளை செய்து வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்து விடுங்கள். தொடர்ந்து இப்படியே செய்து வர உங்களுடைய சரும ஈரப்பதத்தை, தேன் žர் செய்து சரும சுருக்கத்துக்கு குட்பை சொல்லிவிடும்.

* டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபேஷ’யல் செய்தால், அவர்கள் சருமம் இன்னும் வறண்டு போய்விடும். இந்தப் பிரச்சனை உங்களுக்கு இருக்கிறதா?

கெமிக்கல் ஃபேஷ’யலை அவாய்டு செய்து விட்டு, அதற்குப் பதில் பாலில் அரிசி மாவைக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லும் ரிமூவாகும். சருமமும் டிரை ஆகாது.

* உங்களுடைய புருவமும், கண் இமையும் அடர்த்தியாக இல்லையா?

கவலையை விடுங்கள். விட்டமின் 'ஈ' ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் ஏதோவொன்றைத் தொடர்ந்து புருவத்திலும், கண் இமைகளிலும் தடவி வாருங்கள் போதும். ஆனால் உங்கள் புருவமும், கண் இமைகளும் மெல்லியதாக இருப்பது பரம்பரையாக வருவதென்றால், இந்த ஆயில் ட்ரீட்மெண்ட் அதிகம் சக்ஸஸ் ஆகாது.

* செலவே இல்லாத ஈஸ’ ஸ்க்ரப்பர் வேண்டுமா உங்களுக்கு?

பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை 'நற நற'வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.

* 'ட்ரை ஸ்கின்' உள்ள எனக்கு எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத 'வெஜிடபிள் ஃபேஸ்பேக்' இருக்கிறதா என்று கேட்பவரா நீங்கள்?

பீட்ருட்டை வேக வைத்து மசித்து, இத்துடன் ஓட்ஸ் மீலைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து விடுங்கள். ட்ரை ஸ்கின்னும் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

அஜினோ மோட்டோ....நல்லதா கெட்டதா?

மனிதனைத் தவிர உயிரினங்கள் அனைத்தும் உணவை உயிர்வாழ்வதற்கான ஆதாரப் பழக்கமாக மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் மனிதன் மட்டுமே சுவைக்காகவும், சுகத்துக்காகவும் உணவருந்தும் பழக்கம் உள்ளவனாக இருக்கிறான்.

இந்த பழக்கம் நவீன உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பெரும் சந்தையாக்கி இருப்பதால், சுவையின் பெயரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வினோதப் பண்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodium glutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக் குள்ளும் புகுந்துவிட்டது.

கண்ணைக் கவரும் வண்ணங்களில், வித்தியாசமான நறுமணத்துடன் சந்தைக்கு வரும் எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை வாங்கிக் குவிக்கும் நமது மக்கள், அஜினோ மோட்டோவுக்கும் அடிமையாக இருப்பதில் வியப்பில்லை.

பிரியாணி, ஃபிரைடு ரைஸ், சாம்பார், ரசம் போன்ற எதுவாக இருந்தாலும், ஒரு ஸ்பூன் அஜினோ மோட்டோ சேருங்கள்.. சாப்பிட அடம்பிடிக்கும் உங்கள் குழந்தைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று பாருங்கள் என்ற விளம்பரங்களுடன் சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த அஜினோமோட்டோ விற்பனை, இப்போது பெட்டிக்கடைகள் வரை சக்கைப்போடு போடுகிறது.

அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக்கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்வலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது என்ற சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அப்போதுதான் அஜினோ மோட்டோவின் இன்னொரு முகம் பொதுமக்களுக்கு தெரியத் தொடங்கியது.

அஜினோமோட்டோ தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏஜெண்டுகள், அஜினோ மோட்டோவைப் பயன் படுத்தும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் என அனைவருக்கும் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் இதுகுறித்து கீழ்க்கண்ட விளக்கத்தை அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அளித்தனர்.

எங்கள் நிறுவனம் கண்டுபிடித்த இந்த சோடியம் குளுட்மேட் தொண்ணூற்று எட்டு ஆண்டுகளாக இருபத்து மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அஜினோமோட்டோ என்ற பெயரில் இதனை விற்பனை செய்து வருகிறோம். வேறு பல நிறுவனங்களும் வெவ்வேறு பெயர்களில் இதனை விற்பனை செய்து வருகின்றன.

சீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் சேய்து இந்தியா முழுவதும் விற்கிறோம்.

அஜினோமோட்டோவால் தலைவலி, வாந்தி, உடல் அசதி, கழுத்துப்பிடிப்பு, மூச்சுத் திணறல் வரும் என்ற தவறான தகவல் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உலா வந்தது. அதன்பிறகு நடந்த ஆய்வில் அது தவறான கூற்று எனத் தெரிய வந்தது. அஜினோமோட்டோவால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆராய்ச்சிக் கழகம் சான்றிதழ் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இது பாதுகாப்பானது என அங்கீகரித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம். இது நம் உடலில் உள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது. நாங்கள் ஆண்டுக்குப் பதினெட்டு லட்சம் டன் சோடியம் குளுட்மேட்டை உற்பத்தி செய்து, அதை எழுபதாயிரம் கோடி டாலருக்கு விற்று வருகிறோம். இதே அளவுக்கு கலப்பட சோடியம் குளுட்மேட் விற்பனையும் நடைபெறுகிறது. கடைகளில் கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது. இந்த கலப்பட சோடியம் குளுட்மேட்டை தடுத்தாலே தற்போது எழுந்துள்ள சர்ச்சை ஓய்ந்துவிடும் என்று அவர்கள் விளக்கம் கூறியிருந்தனர்.

போலி உணவுப் பொருட்களையும் மாத்திரை மருந்துகளையும் கண்டறிவதே குதிரைக்கொம்பாக இருக்கும்போது, போலி வேதிப் பொருட்களை கண்டறிவது சுலபமான வேலையா என்ன ?

விஷத்தன்மை

இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.

மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப் பட்டுள்ளது.

ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்

அஜினோ மோட்டேவைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம். ஆனால் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள். இது குறித்து எச்சரிக்கும் மருத்துவ ஆய்வாளர்கள்.

புதிது புதிதாக கண்டுபிடித்து சுற்றுச் சூழலிலும், உணவிலும் கலக்கும் பெரும்பாலான வேதிப் பொருட்களை நமது கல்லீரலில் செயல்படும் பி 450 என்னும் நொதிப் பொருட்கள் விஷ முறிவு செய்து நம்மைக் காப்பாற்றுகின்றன. ஆயினும் சில வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் இந்த பி 450 நொதிகள் திணறுகின்றன. குறிப்பாகச் செயற்கை நிறமிகளும் அஜினோ மோட்டோ போன்ற சுவையூட்டிகளும் பி 450 நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன.

சோடியம் குளுட்மேட்டை உணவில் கலந்து சாப்பிடுவதால் தலைவலி, வாந்தி வருவதாக எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்து எச்சரித்தனர். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது என்ற அமெரிக்க அரசு தடை விதித்தது.

இந்த நிலையில், அஜினோமோட்டோ நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு முன் அமர்க்களமாக இந்த சோடியம் குளுட்மேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பால், பால் சேர்க்கப்பட்ட பொருள்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் அஜினோமோட்டோ நிறுவனம் இங்கு அடியெடுத்து வைக்க இந்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த பொருள் விளம்பரப்படுத்தப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

பரவலான விளம்பரங்கள் மூலமும் வீடு வீடாக சென்று விற்பனை செய்வதாலும் தற்போது பலரும் இந்த நச்சுப் பொருளை சமையலில் ஒரு சுவையூட்டியாகச் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரிய உணவகங்களில் வழங்கப்படும் சூப்களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோமோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் டேஸ்ட் பவுடர் என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.

இதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.

மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது.

ஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை மறைத்து அஞீஞீஞுஞீ ஞூடூச்திணிதணூண் என்று மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.

குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளாக மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோமோட்டோ தன் கரங்களை இன்னும் அகலமாக நீட்டிக்கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.

சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர். குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக்கொடுப்பர்.

சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை. பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டோ வால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவைத் தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள். பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் நடக்க முடியாத அளவுக்கு குண்டாக மாறிவிடுகிறார்கள்.

பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களை சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

பெற்றோர்களே ! குழந்தைகளே இயற்கையான உப்பு நம்மிடம் இருக்க இந்த அஜினோமோட்டோ என்ற ஆபத்து தேவையா?

தயவு செய்து சிந்தித்துப் பாருங்களேன்..

இதற்கான ஆதாரங்கள்

Sharon fowler, University of Texas, USA
Jock – Samvels – NOHA Board member Lecture on “The dangers and hidder sowiees of processed free glutmatic acid”
Dr. Olney, 5w Brain lesions, Obesity and other disturbences in mice treated with MSG
Mr.Ka He, Department of Nutrition School of public health,
University of Carolina.
Dr. Betty Maritimi, Georgic, Asinomoto, Aspartame & Brain
Tumors Recipe of Death.

பெண்களின் அழகில் முக்கிய இடம் வகிப்பது காந்தமாக இழுக்கும் அவர்கள் கண்கள்தான். கண்களைப் பாடாத கவிகளும் உண்டோ? கண்கள் பளபளப்பாக மின்னினால் 'என்ன சந்தோஷமா இருக்கே போலிருக்கு' என்போம். அதுவே சோர்ந்து கிடந்தால் 'உடம்புக்கு சரியில்லையா?' என்போம். இப்படி உடலின் ஆரோக்கியத்தை படம் பிடித்துக் காட்டும் பிரதான கண்ணாடியாகவும் நம் கண்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதைப் பற்றி பார்க்கலாம்.
கண்களுக்கு அதிக சோர்வு கொடுப்பது, கண்ணைக் கூசுச்செய்யும் ஒளியை நேரடியாகப் பார்ப்பது, பறந்து வரும் தூ தும்புகள் மற்றும் அதிகப்படியான புகை ஆகியவை அழகான கண்களுக்கு எதிரிகளாகும்.
எழுவது, படிப்பது, தைப்பது போன்ற கண்களுக்கு அதிக வேலை கொடுக்கும் வேலைகளைச் செய்யும் முன் எதிரே இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கும் அளவுக்கு ஒளி இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். அப்படியிருந்தால் மட்டுமே வேலையைத் தொடங்குகள்.
வெயில் காலத்தின் சுட்டெரிக்கும் ஒளிக்கீற்றுகள் கண்களுக்கு மிகுந்த பாதிப்பு கொடுக்கும். அந்த சமயத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துவிடுங்கள். அல்லது நல்ல தரமான கறுப்பு கண்ணாடி அணிந்து செல்லுங்கள்.
கண் சோர்வு மற்றும் எரிச்சலைப் போக்க கண்களை மூடி அமைதியாக ஓய்வெடுப்பதைவிட சிறந்த மருந்து கிடையாது.
சோர்வைப் போக்க மற்றும் ஒரு எளிய வழி உண்டு. முழங்கைகளை மேஜையில் ஊன்றி வாட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கைகளை குழிவாக கப் வடிவில் செய்து இரண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். தலையின் மொத்த எடையும் கைகளில் விழும்படியாக தலையை குனிந்து முன்னுக்கு கொண்டு வாருங்கள். இப்படி செய்வதால் கழுத்துத் தசைகளுக்கும் ஓய்வு கிடைக்கும். குறைந்தது பத்து நிமிடங்களுக்கு இதே நிலையில் இருங்கள். தினசரி இதுபோல பலமுறை செய்யலாம்.
கீழ்ப்பாதி உள்ளக்க்ளையில் கண்களை லேசாக அழுத்த வேண்டும். முழுமையான இருட்டு வரும் வரை இதுபோல தொடர்ந்து செய்ய வேண்டும். சோர்வைப் போக்க இது இன்னொரு வழி.
தூக்கம் இல்லாத கண்கள் செந்நிறமாக இருப்பதோடு சோர்வாகவும் காட்சியளிக்கும். நாள் ஒன்றுக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்கி கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். வயதாகி விட்டதை முதலில் உணர்த்துவத கண்கள் தான். உடலில் உண்டாகும் கோளாறுகளை படம் பிடித்துக் காட்டும் முக்கியக் கருவியும் கண்கள்தான். அதனால் கண்களைச் சுற்றி கருவட்டம், சுருக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
கண்களுக்கு கீழ் உண்டாகும் கருவளையங்கள் தற்காலிகமானவைதான். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் சாப்பிட்டு சரியாக ஓய்வெடுத்தால் வந்த வழியே மறைந்து போய்விடும்.
நம் உடலிலேயே கண்களின் கீழ் இருகும் மிருதுவான தோல் பகுதியில் மட்டும்தான் வியர்வை சுரப்பிகள் கிடையாது.
சில பெண்கள் இரவு படுக்கும்போது கனமான க்ரிமோ, மாயிஸ்சரைசரோ தடவிக்கொண்டு படுப்பது வழக்கம். அப்படி செய்பவர்கள் கண்களைச் சுற்றியிருக்கும் மிருதுவான தோல் பகுதியில் க்ரீம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற க்ரீம்களில் இருக்கும் எண்ணெய்¢த் தன்மை அந்த மிருதுவான தோல் பகுதிகளில் பட்டு அதை விரிவடையச் செய்யும். காலையில் எழும்போது கண்களின் கீழ் வீங்கியது போல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
கரும்புள்ளிகளையும், பருக்களையும் போக்கும் ஆய்ன்ட்மெண்டுகள், ஃபேஸ் பேக் போன்ற எந்தப் பொருளும் இந்த மிருது பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றில் இருக்கும் உலர் தன்மை அந்தப் பகுதியிலிருக்கும் தோல் பகுதியை அதிகமக சுருங்கச் செய்து வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தைக் கொடுத்துவிடும்.
ஊட்டங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கமே கண்களின் ஆரோக்கியத்துக்கான மூலப் பொருளாகும். வைட்டமின் ஏ கண்ணுக்கான பிரத்யேக வைட்டமின், கேரட், பசலைக்கீரை, வெண்ணெய், ஆட்டு ஈரல், மீன், மீன் எண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் இது அதிகமுள்ளது.
தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடித்து வந்தால் கண்களின் பளபளப்புத் தன்மை குறையாமல் இருக்கும்.

கண்களை மின்னல் போல் மின்னச் செய்ய இதோ சில எளிய வீட்டு ட்ரீட்மெண்டுகள்:
1. சிறிய துண்டு வெள்ளரிக்காயைத் துருவிக் கொள்ளுங்கள். அதிலிருக்கும் ஜூஸைப் பிழிந்தெடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துவிடுங்கள். இரண்டு பெரிய துண்டு பஞ்சை வெள்ளரி ஜூஸிலோ, பன்னீரிலோ நனைத்து லேசாகப் பிழிந்து மூடிய கண்கள் மேல் வைத்து விடுங்கள். எந்த விஷயம் பற்றியும் சிந்திக்காமல் குறைந்து பத்து நிமிடம் படுத்துக் கொள்ளுங்கள். நாளொன்றுக்கு இதுபோல இரண்டு முறை செய்யலாம். இது கண்களின் சோர்வைப் போக்குவதோடு கண்களைச் சுற்றிய கரும் பகுதிகளை நாளடைவில் மறையச் செய்யும்.
2. கறுப்பு டீ தயாரித்துக் கொள்ளுங்கள். அது குளிர்ந்ததும் அதில் பஞ்சை நனைத்துப் பிழிந்து கண்களின் மேல் வையுங்கள்.
3. புதினா சாற்றை கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை சுற்றிய கருவளையங்கள் நாளாடைவில் மறையும்.

அழகு குறிப்புகள்

கோடைக் காலம் முடிந்துவிட்டது. ஆனால் வெயிலின் கோரப் பிடி இன்னும் குறையவில்லை, வரும் காலத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். இதனால் சருமம் வறட்சி காணும். இக்காலங்களில் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

முகக்கறுப்பு மாற

பாதாம் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு விட்டு குழைத்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி இவற்றை நிழலில் உலர்த்தி தனித்தனியாக பொடியாக்கி அதில் சம அளவு எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகக்கறுப்பு மாறும்.

பப்பாளி பழச்சாறு எடுத்து அதை காய்ச்சாத பசும் பால் விட்டு அல்லது தயிர் விட்டு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள முகச் சுருக்கம், கருமை நீங்கும்.

நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் சிறிதளவு மைதா மாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் கருமை மாறி பளபளப்பாக இருக்கும்.

முகப்பரு மாற

புதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மாறுவதுடன் முகம் பளபளக்கும்.

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சிவப்பு சந்தனக் கட்டையை நீரில் உரைத்து முகத்தில் பூசி காலையில் கழுவி வர முகப்பரு, பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், தழும்புகள் மாறும்.

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் புதினா சாறு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒற்றடம் கொடுத்தால் முகம் பளபளக்கும்.

சருமம் மெருகேற

வறட்சியான சருமம் கொண்ட பெண்கள் தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் கலந்து அதில் பயிற்றம் மாவு சேர்த்து சருமம் எங்கும் பூசி 20 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் குளித்து வந்தால் சரும வறட்சி நீங்கி சருமம் மெருகேறும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடித்து அதில் பால் சேர்த்து நன்கு குழைத்து மேனி எங்கும் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் சருமம் பளபளக்கும்.

முகச் சுருக்கம் நீங்க

பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகச் சுருக்கம் நீங்கும்.

வீடியோ பார்மட்கள்

உங்களிடன் ஒரு எம்பி3 ஆடியோ பைல் இருந்தால், அநேகமாக அனைத்து ஆடியோ பிளேயரும் அதனை இயக்கும். அதே போல ஜேபெக் வடிவில் உள்ள பட பைலை எந்த பிக்சர் வியூவர் பைலும் இயக்கிக் காட்டும்.
ஆனால் . avi, .mpeg, , போன்ற வீடியோ பைல் இருந்தால், அனைத்து வீடியோ பிளேயரும் அவற்றை இயக்கும் என்று உறுதியாகக் கூற இயலாது. இன்னும் சொல்லப் போனால், இவை எல்லாம் வீடியோ பார்மட் இல்லை. டேட்டாவினை மற்ற பார்மட்களில் கொண்டுள்ளன என்று சொல்லலாம். இந்த பைல் வகைகள் எல்லாம், ஆடியோவினை ஒரு பார்மட்டிலும், வீடியோவினை இன்னொரு பார்மட்டிலும் (கோடெக்) கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, ஒரு ஏ.வி.ஐ.பைல் (.avi),), மோஷன் ஜேபெக் வீடியோ மற்றும் பி.சி.எம். டியோ பார்மட்களைக் கொண்டிருக்கலாம். இன்னொரு பைலில் எக்ஸ்விட் எம்பெக் 4 வீடியோ பார்மட்டும் IMAADPCM பார்மட்டில் ஆடியோவும் இருக்கலாம். வேடிக்கையாக ருக்கிறதா? மேலும் படியுங்கள்.
இதனால் தான் ஒரு .avi பைல், விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கப்படலாம். இன்னொரு பிளேயர், பைலில் உள்ள ஆடியோவினை மட்டும் இயக்கும்; வீடியோ கிடைக்காது; அல்லது மாற்றாகவும் இருக்கலாம். சில பிளேயர் ஒரு பைலில் உள்ள எதனையும் இயக்காமல் இருக்கலாம்.
ஒரு வீடியோ பைல் எந்த வகை கோடெக் பார்மட்டினைக் கொண்டுள்ளது என்பதனை எப்படி அறிவது? வெளிப்படையான ஒரு வழி உள்ளது. பைலின் மேலாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து, கிடைக்கும் விண்டோவில் டீடெய்ல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுத்து பார்ப்பது. இங்கே, வீடியோவின் நீளம், ரெசல்யூசன், வீடியோ மற்றும் ஆடியோ பிட் ரேட் ஆகிய தகவல் கிடைக்கும். ஆனால் மிக முக்கியமான கோடெக் குறித்த தகவல் இருக்காது அல்லது கிடைக்காது. இந்த தகவல் தானே, ஒரு வீடியோ பிளேயரை இயக்க தேவையானது. பின் ஏன் மைக்ரோசாப்ட் சிஸ்டம் அதனைக் காட்ட மறுக்கிறது? கண்ணா மூச்சி விளையாட்டு ஏன்?
எப்படியோ? விண்டோஸ் வீடியோ பைலுக்கான கோடெக் குறித்து வாய் திறக்க மறுக்கிறது என்பதால், நமக்கு இதனை அறிய ஒரு தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவையாய் உள்ளது. நான் அறிந்த வகையில் ஒரு சிறந்த புரோகிராம் AVI Codec என்பதாகும். இது மிக எளிமையானது மட்டுமின்றி இலவசமானதும் கூட. இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்த பின்னர், எந்த பார்மட்டில் உள்ள வீடியோ பைலிலும், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அதன் மீது ரைட் கிளிக் செய்து AVIcodec: detailed informationஎன்பதனைத் தேர்ந்தெடுத்து, அதனை புரோகி ராமிற்குள் லோட் செய்திடும்படி செய்திடலாம். ஏற்கனவே ஏதேனும் கோடெக் புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தால், இது பலனளிக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட பைலை, புரோகிராமிற்குள் ட்ராப் செய்து கொண்டு வரலாம்.
இவற்றையும் மீறி கூடுதல் கோடெக் பைல் தேவை எனில், , WindowS Essentials Codec Pack தொகுப்பினை டவுண்லோட் செய்திட வேண்டும்.

ரத்த அழுத்தமா ? கூலா தண்ணீர் குடிங்க
நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர்.

தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,"ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது" என்றனர்.

சில சாஃப்ட்வேர் ரகசியங்கள்

உங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பல சாப்ட்வேர் தொகுப்புகளில், பல சொல்லப்படாத சுருக்கு வழிகள் தரப்பட்டுள்ளன. அது பிரவுசராக இருந்தாலும், அப்ளிகேஷன் தொகுப்புகளாக இருந்தாலும், அவற்றில் நாம் அறியாத, அடிக்கடி பயன்படுத்தாத, பல வழிகள் மறைந்துள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவது நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அதிகமாக்கும்.

விண்டோஸ் கீ: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் அதி வேகத்தில் இயங்கினாலும், சில கீகளைப் பயன்படுத்தி, இன்னும் அதனைக் கூடுதல் வேகத்தில் இயக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பயன்படுத்தி, செயல்பாடுகளை மேற்கொண்டு பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.
சிஸ்டம் தகவல்கள் அறிய: உங்களுடைய சிஸ்டம் குறித்த தகவல்களை உடனே அறிய, Windows மற்றும் Pause கீகளை அழுத்துங்கள். உடன் சிஸ்டம் குறித்த சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்.


டாஸ்க்பார் அப்ளிகேஷன்ஸ்: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளி கேஷன் தொகுப்புகளை, டாஸ்க்பாரில் போட்டு வைக்கவும். இதனால் ஒரு மவுஸ் கிளிக்கிலேயே, அப்ளிகேஷன்களை இயக்க நிலையில் பெறலாம். இதனால் பல மவுஸ் கிளிக்குகள் மிச்சமாகும். டாஸ்க் பாரில் போட்டு வைத்த பின், விண்டோஸ் கீயுடன் ஏதேனும் ஒரு எண்ணுக்கான கீயினை இணைத்து அழுத்தவும். இப்போது, டாஸ்க் பாரில் அந்த எண்ணுக்குரிய இடத்தில் எந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அந்த புரோகிராம் இயக்கப்பட்டு நமக்குக் கிடைக்கும். ஒரு புரஜக்டரை இணைக்கும் போதோ, அல்லது உங்களுடைய லேப்டாப் கம்ப்யூட்டரை, வெளியே உள்ள ஒரு டிஸ்பிளே சாதனத்துடன் இணைத்துக் காட்டவிரும்பும்போதோ, விண்டோஸ் கீயுடன் ப்பி (Windows+P) கீகளை அழுத்தவும்.
ஏதேனும் ஒரு அப்ளிகேஷனை இயக்கநிலைக்குக் கொண்டு வர, விண்டோஸ் கீ அழுத்தி, அதில் உள்ள ரன் பாக்ஸில், அதற்கான கட்டளைப் (பெரும்பாலும் அதன் சுருக்கப்பெயர்) பெயரைத் தந்தால் போதும்.

ரன் டயலாக் பாக்ஸைப் பெற விண்டோஸ் + ஆர் கீயினை அழுத்தவும்.

தானாக அப்டேட்: விண்டோஸ் அப்டேட் வசதியைப் பயன்படுத்துகையில், அது உங்கள் கம்ப்யூட்டரை உடனடியாக ரீஸ்டார்ட் செய்திடக் கட்டாயப்படுத்தும். அப்போதுதான், அப்டேட் செய்யப்பட்ட வசதிகள், உங்களுக்குக் கிடைக்கும். அப்போது, நீங்கள் சேவ் செய்யப்படாத வேலை ஏதேனும் மேற்கொண்டிருந் தால், அது வீணாகும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, கண்ட்ரோல் பேனலில், Windows Update திறக்கவும். இதில் Change Settings என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில் Download updates but let me choose whether to install them என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டருக்குச் செல்ல, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, பின் அந்த போல்டர் இருக்கும் டைரக்டரி சென்று, அந்த போல்டரை மவுஸால் தேடி, கிளிக் செய்து பெறுகிறீர்களா? அதற்குப் பதிலாக, விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக அந்த போல்டரைத் திறந்த நிலையில் இருந்தால், நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? அப்படியும் செட் செய்திடலாம். உங்களுடைய டாஸ்க் பாரில் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்பதில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் என்பதனத் தேர்ந்தெ டுக்கவும். இதில் உள்ள டார்கெட் பீல்டில், ‘%windir%\explorer.exe’என்ற இடத்தில் ஒரு ஸ்பேஸ் விட்டு பைலுக்கான பாத் அமைக்கவும். அது ‘%windir%\explorer.exe C:\Users\yourusername\ என அமையலாம். இவ்வாறு அமைத்த பின்னர், விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக நீங்கள் விரும்பும் போல்டரைத் திறந்து,நீங்கள் வேலை செய்திடத் தயாராகக் காட்டும்.

போல்டர் வியூ: எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப் படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (ஈஞுஞூச்தடூt) போல்டராக அமைந்துவிடும்.
டச்பேட்: இது குறித்து சென்ற இதழில் குறிப்புகள் தரப்பட்டன. லேப்டாப் பயன்படுத்து பவர்கள், தாங்கள் கீ போர்டில் வேலை செய்திடுகையில், டச் பேடில் விரல்களோ, உள்ளங்கையோ பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறித் தொந்தரவு தரும். இதனை நீக்க டச் பிரீஸ் (Touch Freeze) என்ற சிறிய புரேகிர õமினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.


யு.எஸ்.பி. கார்ட் விலக்கல்: யு.எஸ்.பி. போர்ட்டில், பல சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறோம். பிளாஷ் ட்ரைவ், டேட்டா கார்ட், கேமரா போன்ற அனைத்தும் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் இன்று வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவற்றை போர்ட்டிலிருந்து, மீள விலக்கும்போது அதற்கான Safely Remove Hardwareஐகானைக் கிளிக் செய்து மெசேஜ் கிடைத்த பின்னரே எடுக்க வேண்டியுள்ளது. பொறுமை இன்றி, எடுக்கும்போது, சிஸ்டம் அந்த சாதனத்தின் ட்ரைவில் ஏதேனும் எழுதிக் கொண்டிருந்தால், பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, விரைவில் ட்ரைவ் மற்றும் பிற சாதனங்களை விலக்க ஒரு தீர்வு உள்ளது. இதற்கான செட்டிங்ஸில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். விண்டோஸ் எக்ஸ்புளோரரில் மெமரி கார்டிற்கான ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் (Properties) ) தேர்ந்தெடுக்கவும். இப்போது காட்டப்படும் விண்டோவில் ஹார்ட்வேர் (Hardware) என்னும் டேப்பில் கிளிக் செய்து இங்கு மெமரி கார்ட் ரீடரைத் தேர்ந்தெடுக்கவும். இங்கும் உள்ள மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties)தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் பாலிசீஸ் (Policies)டேப்பில் கிளிக் செய்திடவும். பாலிசீஸ் காட்டப்படும் முன் சேஞ்ச் செட்டிங்ஸ் Change Settings) பட்டனைக் கிளிக் செய்திட வேண்டி இருக்கலாம். இனி உள்ள விண்டோவில் Download updates but let me choose whether to install themஎன்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும். இனி Safely Remove Hardware உங்களுக்குத் தேவை இருக்காது.

மீண்டும் குயிக் லாஞ்ச் பார்: விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் அறிமுகப் படுத்தினாலும், பழைய சில பயனுள்ள விஷயங்களை விட்டுவிட்டது. அதில் ஒன்று குயிக் லாஞ்ச் பார். அதிர்ஷ்டவசமாக, இதனை மீண்டும் இதில் கொண்டு வருவது மிக எளிதான ஒரு வழியாக உள்ளது. டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Lock the taskbar என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின் மீண்டும் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New toolbarஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் %appdata%\Microsoft\Internet Explorer\Quick Launchஎன்ற பைல் பாத் என்பதற்கான இடத்தில் டைப் செய்திடவும். பின்னர் இதில் வலது பக்கம் உள்ள அம்புக் குறி பட்டனில் கிளிக் செய்து, அந்த போல்டருக்குச் செல்லவும்.குயிக் லாஞ்ச் மீண்டும் செயல்பாட்டிற்குக் கிடைக்கும்.
""கவனத்திற்கு'' இணையத்தில்
ஸ்பேஸ் பார் (Spacebar) – இணைய தளத்தில் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம்
ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (ShiftSpacebar)– இணைய தளத்தில் ஒரு பக்கம் மேலாகச் செல்லலாம்.
கண்ட்ரோல் + எப் (Ctrl+F) : சொல்ல் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க பயன்படும் விண்டோ திறக்கப்படும்.
ஆல்ட்+என் (AltN) இணைய தளத்தில் கண்ட்ரோல் + எப் அழுத்தி சொல் தேடுகையில் அந்த சொல்லின் அடுத்த நிகழ்வினைக் காண
கண்ட்ரோல்+டி (Ctrl+D) : புக்மார்க் பக்கத்திற்குச் செல்லலாம்
கண்ட்ரோல் + ட்டி (Ctrl+T) : புதிய டேப் திறக்கப்படும்
கண்ட்ரோல் + கே (Ctrl+K): சர்ச் பாக்ஸுக்குச் செல்ல
கண்ட்ரோல் +எல் (Ctrl+L): அட்ரஸ் பாக்ஸுக்குக் கர்சரைக் கொண்டு செல்ல
கண்ட்ரோல் + (Ctrl+ +) : டெக்ஸ்ட் அளவை அதிகரிக்க
கண்ட்ரோல் + – (Ctrl+ –): டெக்ஸ்ட் அளவினைக் குறைக்க
கண்ட்ரோல் + டபிள்யூ (Ctrl+ W)டேபினை மூட G¨ 5 (F5) : பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மீண்டும் லோட் ஆகும்.
ஆல்ட் + ஹோம் (AltHome): ஹோம் பேஜ் செல்லலாம்.
""கவனத்திற்கு''
குயிக் லாஞ்ச் (Quick Launch) டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன் படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.

பயன்படுத்த மட்டும் கட்டணம் : அடோப்

போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் தொகுப்பிற்குப் பெயர் பெற்ற அடோப் நிறுவனம், தன் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை வழங்குகிறது. இதன் படி, மாதக் கட்டணம் செலுத்துவதன் மூலமும், பயன்படுத்தப்படும் எண்ணிக்கைக் கேற்ப பணம் செலுத்துவதன் மூலமும் ஒருவர் இந்நிறுவனத்தின் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். அண்மையில் கொல்கத்தாவில் அடோப் சி.எஸ். 5 தொகுப்பினை வர்த்தக ரீதியாக வெளியிட்டுப் பேசிய அடோப் மார்க்கட்டிங் பிரிவு தலைவர் இதனைத் தெரிவித்தார்.

பயன்படுத்தும் அளவிற்கு கட்டணம் என்பது, இணைய அடிப்படையில் மேற்கொள்ளப்படும். ஒருவர் இணையம் மூலமாக இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறாரோ அதற்கேற்ற அளவில் பணம் செலுத்த வேண்டும். மணிக்கணக்கு அல்லது வேறு அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். சந்தா அடிப்படையில் பணம் செலுத்துபவர்கள் குறிப்பிட்ட காலம் வரை, சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். அதன்பின், உரிமத்தினை நீட்டிக்கவில்லை என்றால் பயன்படுத்த இயலாது.

அண்மையில் அடோப் வெளியிட்ட அடோப் கிரியேட்டிவ் சூட் 5ல், வடிவமைப்பிற்குத் தேவையான பல வழக்கமான பல அப்ளிகேஷன் களுடன், புதிய அப்ளிகேஷன் களும் தரப்பட்டுள்ளன. அடோப் பிளாஷ் கேடலிஸ்ட், போட்டோ ஷாப், இன் டிசைன் ஆகியவை புதிய சில தொகுப்புகளாகும். இவற்றில் 250க்கும் மேற்பட்ட வசதிகள் கிடைக்கின்றன.

மனநோய் ஒரு சமூக வியாதி. ஆடையை கிழித்துக் கொண்டு அலைபவர்கள் மட்டும் மனநோயாளிகள் அல்ல. ஆசைகள் நிறைவேறாதவர்கள், விருப்பங்களை அடக்கிக் கொண்டவர்கள், அடக்கபடுபவர்கள் என எல்லோரும் எப்போதாவது மனநோய் அறிகுறிகளை வெளிபடுத்துவார்கள்.

சமுதாயத்தில் ஏற்ற இறக்கங்கள் பின்பற்றப்படும்வரை மனவியாதிகள் இருக்கும் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உளவியலின் தந்தையாக போற்றபடும் சிக்மட் பிராய்டு, `பண்பாட்டு உணர்ச்சியால் (பாலின) உணர்வை கட்டுபடுத்துவதும் மனநோய் பாதிப்புக்கு காரணம்' என்று கூறினார். மனிதன் ஒரு இன்பம் விரும்பி. அவனுக்கு துன்பம் பிடிக்காது. ஆனால் இன்பமும் துன்பமும் மனதால் வருகிறது என்பதை உணராதபோது அவன் சுயநிலை இழக்கிறான். உளவியல் பாதிப்பு வெளிபடத் தொடங்குகிறது. மற்றவர்களால் மனநோயாளி என ஒதுக்கபடுகிறான். உடல் திடகாத்திரமாக இருந்தும் மனம் திடமாக இல்லாவிட்டால் அவனை சமுகம் மனிதனாகக் கருதாது.

மனவியாதியும் மற்ற வியாதிகள்போல குணபடுத்தக் கூடியதே. ஆனால் சமுகம், பாதிக்கபட்டவருடன் அவரது குடும்பத்தையே ஒதுக் குவதால் யாரும் துணிந்து மனநல சிகிச்சையை முதலிலேயே நாடுவதில்லை. சிந்தனை, உணர்ச்சி, பண்பியல் இவற்றின் குறைபாடுகளே மன நோயின் அறிகுறிகளாகும். வழக்கத்துக்கு மாறாக பேசுவது, சொன்னதையே சொல்வது சிந்தனை குழப்ப அறிகுறிகளாகும். கல்வி அறிவிற்கும், கலாச்சாரத்திற்கும் பொருந்தாத முடநம்பிக்கை, அச்சம் காரணமாக எழும் தேவையற்ற பயம், நம்பிக்கை, இயல்பான உணர்வுகள் அடங்காமல் வெளி படுவது மனநோய் வெளிபாடுகளாகும்.கடவுள் தோன்றுவதாகவும், ஏதோ ஒலி கேட்பதாகவும், வாசனை வருவதாகவும், யாரோ தங்களை தொட்டுத் துன்புறுத்துவதாகவும் கூறுவதும் சில அறிகுறிகள் தாம். ஞாபகசக்தி குறைவதும், தூக்கம் குறைவதும் மன பாதிப்புகளின் வெளிபாடுகளே. அறிகுறிகளை சரியாக கவனிக்காவிட்டால் மனநோய் முதிர்கிறது. இதில் எண்ணம் தொடர்பான முதிர்ந்த மனநோய்கள் இருவகைபடும். அவை: முளை பாதிப்பது, முளை பாதிக்காத மனம் சார்ந்த பாதிப்பு.

இதன் முதல்கட்டமாக மனச் சிதைவு ஏற்படுகிறது. குழந்தைகளிடம் அதிக எதிர்பார்பை காட்டுவதால் குமர பருவ மனச்சிதைவு உண்டாகிறது. இளமையில் விரைப்பு சார்ந்த மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது. பகை, வெறுப்பு, அலட்சியம், அகம்பாவ எண்ணம் கொண்டவர்களுக்கு பின்னாளில் சந்தேகம் சார்ந்த மனச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மனநலக் குறைவு உடல் நோய்களையும் தோற்றுவிக்கும். ஏனெனில் மனமும், உடலும் இணைபுள்ளவை. உடலில் நோய் ஏற்பட்டால் கோபம், எரிச்சல், சோர்வு போன்ற மன பாதிப்புகள் வெளிபடும். அதுபோல மனஅதிர்ச்சி ஏற்படும்போது வியர்வை, நடுக்கம் போன்ற உடல்பாதிப்புகள் ஏற்படும்.

எனவே உளவியல் மாற்றங்களால் சில வியாதிகளும் தோன்றும். உணர்வு கொந்தளிப்பால் ஆஸ்துமா, குடற்புண் உள்ளிட்ட ஜீரண மண்டல வியாதிகள் ஏற்படும். பயம், நாணம், கோபம் போன்ற உணர்வு அடக்கத்தால் தோல் வியாதி, ரத்த அழுத்தமும், சுரப்பிகளில் பாதிப்பும் ஏற்படுகிறது. பயம், அதிர்ச்சி போன்றவற்றால் முளை நாளங்கள் பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகள் தோன்றலாம். முளையில் ஏற்படும் பலவித நோய்களாலும் மனநோய் உருவாகும். ஜன்னி நோய் ஒரு வித பிதற்ற நிலை மனவியாதியே. மதுபழக்கம், நாளமில்லாச் சுரப்பிகளின் பாதிப்பு இதற்கு காரணமாகும். சிலருக்கு நினைவுகள் அடிக்கடி மாறுவதால் மனக்குழப்பம் ஏற்படலாம். ரத்த ஓட்டம் குறைவு, முளையில் உருவாகும் கட்டியால் நாள்பட்ட முளைபாதிப்பு நோய் ஏற்படலாம். இதனால் மனம் ஆற்றல் இழந்துபோகும். உணர்ச்சி வசப்படுவதால் பலவித வலிப்பு நோய்கள் ஏற்படுகின்றன. இதை மருந்துகளால் குணபடுத்தலாம்.

ஜன்னி, மனக்குழப்பம், வலிப்பு இவற்றுக்கு மதுபழக்கம் மற்றும் பழக்கவழக்கங்களே முக்கிய காரணம். ஒருவர் நலமாக இருக்க வேண்டுமென்றால் அவரது குழந்தை பருவம் சரியாக அமைந்திருக்க வேண்டும். குழந்தைகள் நோயற்ற நிலையில் சாப்பிட மறுத்தால் மனபாதிப்பாக இருக்கும். கவன ஈர்ப்புக்காக அல்லது, எதிர்ப்புக்காக, பயத்தால் உண்ண மறுத்து அடம் பிடிக்கலாம்.

மிரட்டும் கனவுகளால் தூக்கம் இழப்பது, தூக்கத்தில் சிறுர் கழிப்பது போன்றவற்றுக்கு மன பாதிப்புகளே காரணம். திக்கிபேசுவது மனநோய் இல்லை. ஆனால் அதனால் மனஇறுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மனவளர்ச்சி மற்றும் சூழ்நிலைக் குறைபாடுகள் குழந்தைகளின் கற்றல் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பின்னாளில் வேறு மனநோய்களை தோற்றுவிக்கலாம். பொய், களவு, சண்டைக்குச் செல்லுதல், தீ வைத்தல் போன்றவற்றில் ஈடுபடும் குழந்தைகள் சமுக விரோதிகளாக வளரும் ஆபத்து உண்டு. இதற்கு காரணம் மனபாதிப்புகளே. இவர்கள் புத்திசாலிகளாகக் காணப்படுவார்கள். ஆனாலும் தாங்கள் விரும்பியதை அடைவதிலேயே குறியாக இருப்பார்கள். பாரம்பரியம், சுற்றுச்சூழல், முளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் அவர்கள் பாதிக்கபட காரணமாக அமைகின்றன.

குழந்தை பருவ ஏக்கங்கள், கோபங்கள், பெற்றோரின் கண்டிப்பு ஒருவரை மதுபழக்கத்திற்கு அடிமையாக்கலாம். மது மன நிலையை மாற்றுவதால் மனநோய் தோன்றும். ஒவ்வொரு மனநோயாளிக்கும் மிகவும் தேவையானது ஒரு நண்பனே என்கிறார் உளவியல் நிபுணர் கிளிபோர்டு பியர்ஸ். இக்காலத்தில் மனநோய்களுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. வீரிய மருந்து மாத்திரைகள் மதம் பிடித்தவர்போல் இருக்கும் நோயாளியை கட்டுபடுத்த உதவுகிறது. மின்அதிர்ச்சி முறை மற்றொரு முக்கியமான சிகிச்சையாகும். மருத்துவர்கள் செர்லெட்டி, பினி இருவரும் 1938-ல் இம்முறையை அறி முகபடுத்தினர். அதிக பாதிப்புள்ளவர்களுக்கு முளை அறுவைச் சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதுதவிர பேச்சு வழியில் மனபகுப்பு மருத்துவம், மனோவசிய சிகிச்சை, நடத்தை மாற்று மருத்துவம் போன்றவையும் உள்ளன.

திடீர் மரணம் ஏற்படுவது ஏன்..?

எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் மரணம் ஏற்படும். வயது மூப்பு, விபத்து, தொடர் நோய் ஆகிய காரணங்களால் மரணம் ஏற்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், எந்த நோயும் இல்லாமல், நோய்க்கான அறிகுறிகளும் இல்லாமல், திடீரென சிலர் மரணம் அடைகின்றனர். இதற்கு "திடீர் இளவயது மரணம்' (சடன் அடல்ட் டெத்) என மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர்.
தென் கிழக்கு ஆசியாவில் வசிக்கும் மக்களிடையே இது போன்ற மரணங்கள் சகஜமாக உள்ளன. நாட்டு பாடல்களில் கூட இது கூறப்பட்டுள்ளது. "பங்குன்குட்' என்று பிலிப்பைனிலும், "போக்குரி' என ஜப்பானிலும், "லாய் தாய்' என தாய்லாந்திலும் இந்த மரணத்தை அழைக்கின்றனர். சிலர் "தோஷம்' என அழைக்கின்றனர். இது போன்ற மரணம் சம்பவிக்கும் வீடுகளில், பெண் எடுக்கவும் தயங்கும் பழக்கமும் உண்டு.
திடீரென மரணம் ஏற்படுவது, பெண்களை விட, ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. 32 வயதில் மரணமடைபவர்கள் அதிகம் பேர். இரவு தூங்கச் சென்று, விடிவதற்குள் மரணம் அடைவது தான், இது போன்ற மரணங்களுக்கான அறிகுறி.
மரணம் அடைந்தவருக்கு அருகில் படுத்திருப்பவர், திடீரென ஒரு அழுகுரலையோ, கத்துவது போன்ற சத்தத்தையோ கேட்டதாகக் கூறுவர். இது சூனியம், மாந்திரிகம், சாபம் என அவரவர் நம்பிக்கைகளை பொறுத்து கூறப்படுகிறது. இது போன்ற மரணங்களில், ஐந்து சதவீதத்தினரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் போது, இதயத்துடிப்பில் லேசான மாறுதல் இருந்ததற்கான அடையா ளம் மட்டும் தெரியும். இளவயது மரணம் என்பதாலும், ஆரோக்கியமான உடல் என்பதாலும் டாக்டர்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இதயத் துடிப்புக்கு தேவையான மின்சக்தியில் மாற்றம் ஏற்படுவதற்கு, பாதிப்படைந்த மரபணு தான் காரணம். இதனால் தான் சில குடும்பங்களில், இத்தகைய மரணங்கள் பரம்பரையாக ஏற்படுகின்றன. தூங்கும் போது, நம் இதயம் துடிப்பது சற்று குறைகிறது. இது அளவுக்கு அதிகமாக குறைவதற்கான காரணம், மின்சக்தி மாறுபாடு தான். குறையும் இதயத்துடிப்பு, இறுதியில் நின்று விடுகிறது. இதனால் தான் இத்தகைய மரணங்கள், பெரும்பாலும் இரவு நேரத்தில் ஏற்படுகின்றன.

இத்தகைய பாரம்பரிய மரணங்கள் கொண்ட குடும்ப உறுப்பினர்களிடையே, குழந்தை பருவத்திலோ, விடலை பருவத்திலோ இதற்கான அறிகுறிகள் எதுவுமே தெரிவதில்லை. உடற்பயிற்சி செய்யும் போது, தங்களுடைய இதயம் வெகு வேகமாக அடித்து கொள்கிறதென்று பெற்றோரிடம் கூறுவர்; மயங்கி விழுவர்; திடீரென தலை சுற்றும். எனினும், உடல் ஆரோக்கியமாக இருப்பதால், பெற்றோரும், மருத்துவர்களும், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அதே போல் சாதாரண நிலையில், இவர்களிடம் எடுக்கப்படும் இ.சி.ஜி.,யும் சாதாரணமாகவே இருக்கும். உடற்பயிற்சி செய்த சில நொடிகளில் இ.சி.ஜி., எடுக்கும் போது மட்டும் வேறுபாடு தெரியும். எனினும், இது போன்று மரணம் அடைந்த 60 சதவீதத்தினரிடையே, மேலே சொன்ன அறிகுறிகள் கூட காணப்பட்டதில்லை. ஜீவாவும் இதில் அடக்கம். ஆரோக்கியமான நபர், படபடப்பான சூழ்நிலையில் அல்லது உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுகிறாரா, இவரது குடும்பத்தில் திடீர் மரணமோ, நோய் வாய்ப்படாத குழந்தையின் திடீர் மரணமோ ஏற்பட்டுள்ளதா, உடற்பயிற்சிக்கு பின், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். எனினும், இ.சி.ஜி.,யில் ஏற்படும் மாறுபாடை வைத்தே, திடீர் மரணம் சம்பவிக்குமென கூறி விட முடியாது. திடீர் மரணம் ஏற்பட்ட சிலரின் உடலை பரிசோதித்த போது, அவர்கள் அதுவரை கண்டறியாத ஒரு பாதிப்பு உடலில் இருப்பது தெரிந்தது.
இதய ரத்தக்குழாயில் கொழுப்பு அடைத்திருப்பது, படிமானம் ஏற்பட்டிருப்பது ஆகியவை, இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை துண்டித்திருக்கும் அல்லது தாமதப்படுத்திருக்கும். இதனால், மாரடைப்பு நோய் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கும். சிலருக்கு ரத்தக் குழாய்களே வேறு இடங்களில் மாறி வளர்ந்திருக்கும். பிறப்பிலேயே, "அயோடிக் ஸ்டெனோசிஸ்' நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஓடி ஆடும் இளவயதில், இவர்களின் இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவில் எந்த மாறுபாடும் தெரியாது. திடீரென மரணம் ஏற்படும் போது தான், இந்த குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.
"கார்டியோமயோபதி' என்ற நோயாலும் இதய தசைகள் பாதிக்கபட்டிருக்கலாம். இதுவும் சிலருக்கு பரம்பரையாகவே ஏற்படும். தசைகள் செயல் குறைந்த நிலையிலோ, பெரிய அளவிலோ காணப்படும். இதனால் சீரான இதயத்துடிப்பு இன்றியோ, இதயத்தின் சிக்கலான பகுதிகளுக்கு போதுமான அளவு ரத்த சப்ளையோ இல்லாமல் போகும். சில வைரஸ் தொற்றுக்கள் கூட, இதய தசைகளை பாதிப்படைய செய்யும், "மயோகார்டிடிஸ்' என்றழைக்கப்படும் இந்த தொற்றால், இதயத்திற்கான மின் சப்ளை சீராக இல்லாமல் போய் மரணத்தை ஏற்படுத்தும். டெர்பெனாடைன் மருந்தோ அல்லது கோகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களோ கூட, இதயத்துடிப்பை தாறுமாறாக ஏற்றி, உயிருக்கு உலை வைத்து விடும்.
எல்லாவித திடீர் மரணத்தையும், முன்கூட்டியே தடுக்க முடியாது. வாழ்க்கையின் தவிர்க்க முடியாத விதி என்று கூட இதைக் கருதி கொள்ளலாம். எனினும், குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் மயக்கம், நாடித்துடிப்பு அதிகரித்து வியர்த்தல், மூச்சுத் திணறலை தொடர்ந்து மயக்கம் ஆகியவற்றை பெற்றோர் கவனிக்க வேண்டும். இதே போன்று குடும்பத்தில் மற்ற யாருக்காவது அறிகுறிகள் இருந்து அவர்கள் திடீர் மரணம் அடைந்துள்ளனரா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மயோகார்டிடிஸ், இ.சி.ஜி.,யில் மாறுபாடு, கார்டியோமயோபதி போன்றவற்றுக்கு சிகிச்சை முறைகள் உள்ளன. பிறப்பிலேயே உள்ள சில வகையான இதயக்கோளாறுகளுக்கு, அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. நொறுக்குத் தீனி சாப்பிட்டு கொண்டே, நீண்ட நேரம் அமர்ந்து "டிவி' பார்ப்பதால் ஏற்படும் கொழுப்பு படிமானங்களை, தினமும் ஒருமணி நேர உடற்பயிற்சி செய்வதன் மூலம் தவிர்க்கலாம். பெற்றோர் தான் இதற்கு உதாரணமாக அமைய வேண்டும். பெற்றோர் உடற்பயிற்சியில் ஈடுபடாமல், "டிவி' பார்த்து கொண்டே குழந்தைகளிடம் "உடற்பயிற்சி செய்...' என்று சொன்னால், குழந்தைகள் அவர்கள் அறிவுரையை பின்பற்ற மாட்டார்கள்

நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator) என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம். http://www.montpellierinformatique.com/predator/en/index.php?n=Main. DownloadFree என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பிரிடேட்டர் புரோகிராமின் ஸிப் பைலை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் இதனை விரித்து, உங்கள் சி ட்ரைவில் இதனைப் பதிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.பி. ட்ரைவில் இதனைப் பதிய வேண்டாம். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான்.

இனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும்.

கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்து செல்லலாமே என நாம் நினைக்கலாம். விண்டோஸ் கீ + எல் கீயை அழுத்தினால், லாக் செய்திடலாமே என்ற எண்ணம் ஓடலாம். இதனையும் பயன்படுத்தலாம். இங்கு நீங்கள் மீண்டும் இயக்க பாஸ்வேர்டினை டைப் செய்திட வேண்டும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், தொல்லைதான். ஆனால் பிரிடேட்டர் ஒரு சாவி போலவே செயல்படுகிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கினை கம்ப்யூட்டர் வீட்டின் சாவி போலப் பயன்படுத்தலாம்.