Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
தோல் சுருக்கத்தை குறைக்க

அழகான தோல் வேண்டும் என்று விரும்பாதவர்களே இருக்க முடியாது. அந்தத் தோலை பாதுகாக்க என்னென்னவோ செய்கின்றனர். சிறிது சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அய்யோ போச்சே என்று கவலை அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.

தோல் சுருக்கத்தை குறைக்க அல்லது அப்படியே காணாமல் போகச் செய்ய, நிறைய தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல் சுருக்கம் மறைவதோடு, தோலுக்கு ஈரப்பதமும் கிடைக்கிறது. இதனால் இளமையாகத் தோன்றலாம்.

இதற்கான ஆராய்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை 8 வாரங்களுக்கு தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவினர் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர். வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் உள்ள லேக் மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கையான மினரல் வாட்டராகும் (நம்மூரில் கேன்களில் வைத்து கொடுக்கின்றனரே, அதுபோல டுபாக்கூர் வாட்டர் அல்ல).

இதில் உள்ள சாலிசின் செமித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. சாலிசிலிக் ஆசிடைத் தான் பெரும்பாலான ஸ்கின் கிரீம்களில் பயன்படுத்துகின்றனர் என்பது இங்கு ஒரு உபரிச் செய்தி . அதாவது, செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாகவே நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் காணமல் போகிறது.

இதில் கலந்து கொண்ட பெண்களை ஆராய்ச்சிக்கு முன்பும், பின்பும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆராய்ச்சிக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாகத் தோன்றியுள்ளனர்.

சாதாரணத் தண்ணீர் குடித்தவர்களுக்கு 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

பிறகென்ன, பக்கெட் தண்ணீரை வைத்துக் கொண்டு படபடவென்று குடித்து தோல் சுருக்கத்தை மடமடவென்று விரட்ட வேண்டியதுதானே..!

கூந்தலின் எதிரி ஈரம்

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.

குறப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிபோகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.

அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீடருட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரபிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

குளிக்கும்போது…

குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்து பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதைம் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக அலசவும்.
தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளபாகவும் இருக்கும்.

மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்கு பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம்.

குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வைங்கள். ஹேர் ட்ரையரை, முடியின் நுனிபாகத்தைவிட வேர்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதைம் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.

சீப்பு

உங்கள் தலைமுடியை பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கிய பங்குண்டு. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொட சீப்பு முலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுபதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சப்பை பயன்படுத்துவது நல்லது.

சுருட்டை முடி உள்ளவர்கள் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோபு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளபை மங்கச் செய்துவிடும்.

மசாஜ்

உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்கு பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

இயற்கை தரும் அழகு

நன்றாக மசித்த வாழைப்பழத்தை முடியில் பூசி 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு அலசவும். உலர்ந்த கூந்தல் உடையவர்கள் இதை செய்து வருவது நல்லது. ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணை ஆகியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து, தலைமுடியில் தேய்க்கவும்.

மூலக்கோளாறு புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும் பீட்ரூட்

பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.

மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.

மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு

குடற்புண்


இன்றைய அவசர உலகில் நம்மில் அநேகர் சாப்பிடக்கூட நேரம் ஒதுக்குவதில்லை. கண்ட இடங்களில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடுவது, அல்லது நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது என மாறுபட்ட உணவுப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளளோம். இதனால் அவ்வப்போது உணவு செரிமானத்திற்காக சுரக்கப்படும் அமிலம் கிரகிப்பதற்கு உணவு இல்லாமல் வயிற்றிலுள்ள சளிச்சவ்வை கிரகித்து புண்ணை ஏற்படுத்துகிறது. இதற்கு ஆங்கிலத்தில் அல்சர் என்று பெயர் வழங்கப்படுகிறது. இது பாரபட்சமின்றி பாமரர் முதல் பணக்காரர் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாகும். இதனையே சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் குன்மம் என்று அழைக்கின்றனர்.

‘குன்மம்’ என்ற சொல் குல்மம் - புதர் என்ற வடமொழிச் சொல்லின் சிதைவு.

வலி வரும்போது நோயினால் முன் பக்கம் குன்றவைக்கும் காரணத்தினால் இதனை குன்ம நோய் என்றும் கூறுவர்.

குன்மம் ஏற்பட காரணங்களாக சொல்லப் படுபவை

· நேரத்திற்கு சாப்பிடாமல் இருத்தல்

· அவசர அவசரமாக சாப்பிடுவது

· அடிக்கடி கோபம் கொள்ளுதல்

· மந்தத்தை ஏற்படுத்தும் பொருட்களை அடிக்கடி உண்பது.

· அதிக பட்டினி இருத்தல்

· குறைவான தூக்கம், மற்றும் இரவில் அதிக நேரம் கண் விழித்து வேலை செய்வது.

· மன அழுத்தம்

· புகை பிடித்தல், அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கம், போதைப் பொருட்களை உபயோகித்தல்

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தோன்றும் குறிகுணங்கள்

இந்த வியாதியில் விசேஷமான ஒரு அறிகுறி வயிற்றில் புரளும் ஒரு கட்டி போன்று பின்னல் முடிச்சாகும்.

செரியாமை, வயிற்றில் எரிச்சல், வாந்தி, உடல் வன்மை குறைதல், தேகம் மெலிதல், மனம் குன்றல் ஆகிய அறிகுறிகள் காணப்படும்.

· பசியின்மை, உணவின் மீது வெறுப்பு, குமட்டல், ஏப்பம், வாயில் நீருறல், வாந்தி, புளியேப்பம்.

· வயிறு எந்த நேரமும் அல்லது உணவு உண்ணும் முன் வரை வலித்தல் அல்லது எரிதல்.

· உண்ட உணவு செரியாமல் இருத்தல்

· வயிறு உப்பலாக இருத்தல்

· அடிக்கடி வாந்தி உண்டாதல்

· புளித்த ஏப்பத்துடன் ஒருவித எரிச்சலுடன் வாயு வெளியேறும்.

· எதிலும் ஆர்வம் குறைந்து உடல் சோர்வாக காணப்படும்.

· வாயுக் கோளாறு அதிகப்படும்.

குன்னமத்தின் மூலகாரணம்

இந்த நோயை மேல்நாட்டவர் Dyspepsia (ஜீரண கோளாறு) Chronic gastritis (வயிற்று வேக்காடு) , Gastric ulcer (வயிற்று புண்), Duodenal ulcer (க்ரஹனிப்புண்), Gastric tumor (வயிற்றுக் கட்டி) என பல பெயரிட்டு அழைக்கின்றனர். இதற்கு சரியான மூல காரணத்தை மேல்நாட்டு வைத்திய நூல்களில் கூறப்படவும் இல்லை, கண்டுபிடிக்கப்படவும் இல்லை.

பொதுவாக வயிற்று நீர்ச் சுரப்பு அதிகமாவதாலும், குறைவதாலும் இந்த வியாதி ஏற்படுகிறதென்றும், அவ்விதச் சுரப்பு அதிகமாதல், குறைதல் இவைகளுக்கு நிச்சயமான காரணம் கண்டுபிடிக்கப் படவில்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் இதற்கான காரணங்கள் பல விளக்கப்பட்டுள்ளன. இந்த நோய்க்கு காரணம் வயிறு மற்ற அவயங்களின் உள்பாகம் வறண்டு போவதேயாகும். வறட்சியினால் உள்புறத்தில் வலியும் கரடுமுரடான முடிச்சுக்களும், புண்களும் உண்டாவது சாதாரணம். இப்படி வறட்சி ஏற்படுவதற்கு காரணம் வறண்ட உணவுகளை அதாவது நெய், எண்ணெய் கொழுப்புத் திரவங்கள் சம்பந்தப்படாத உணவுகளை அடிக்கடி, அதிகமாக உண்பதும், பசி வேளைகளில் சாப்பிடாமல் பசியை அடக்குவதும், உடம்பில் வறட்சியைக் கொடுக்கக்கூடிய வேலைகளைச் செய்வதும், அப்படிப்பட்ட சீதோஷ்ணங்களில் அதிகமாக பழகுவதும், உடம்பில் குளிர்ச்சி உண்டாவதற்கான பழக்கங்களாகிய எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் போன்ற பழங்கங்களை கடைப் பிடிக்காமல் இருப்பதும், சரீரம் பலவீனமாக இருக்கும்போது வாயு பதார்த்தங்களை அதிகமாக உண்பதும் ஆகும். மல மூத்திர வேகங்களை அடக்குவதும், மூலச்சூடும் குன்மத்திற்கு முக்கிய காரணமாகும். ஆதலால் இந்த நோய்க்கு ஆதாரம் வறட்சி, வாய்வு, வாதம், அக்னி பலத்தின் சமமின்மை. இவை நான்கும் ஒன்றுக்கொன்று ஆதாரமானவை. ஆகையால் இந்த நோய்க்கு சிகிச்சை செய்வதற்கு முதலில் செய்ய வேண்டியது உடம்பில் குளிர்ச்சி உண்டாக்கும் உணவு வகைகளை உண்பதும், லகுவான ஆகாரத்தை உண்பதும் மேலும், வாயுவைச் சமன்படுத்தக்கூடிய உணவுகளையும், மருந்துகளையும் உட்கொள்வதே ஆகும்.

குன்மத்தின் வகைகள்

சித்தர்கள் குன்மத்தை 8 வகைகளாக பிரித்துள்ளனர்.

1. வாத குன்மம்

2. பித்த குன்மம்

3. கப குன்மம்

4. வாயு குன்மம்

5. எரி குன்மம்

6. சன்னி குன்மம்

7. சக்தி குன்மம்

8. வலி குன்மம்

யூகி முனி வைத்திய சிந்தாமணி என்ற நூலில் இந்த எட்டு வகை குன்மத்தை விளக்கும் வகையில் பாடல்கள் உள்ளன. அவற்றிலிருந்து நாம் அறிவது

வாத குன்மத்தில் நடை பலம் குறைந்து காணப்படும். உடல் கனக்கும். உறக்கம் உண்டாகும். ஆகாரம் செல்லாது. மலம் இருகும். நாவறட்சி ஏற்படும், தலைவலி ஏற்படும்.

பித்த குன்மத்தில் முகம் மஞ்சள் நிறமாக காணப்படும். உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். மயக்கம் மற்றும் மூர்ச்சை அடிக்கடி உண்டாகும். கை கால் ஓச்சல் இருந்துகொண்டே இருக்கும். வாந்தி ஏற்படலாம். மலம் கடினப்பட்டு கழிக்க நேரிடும். நெஞ்சில் கோழை கட்டும். தாகம் அதிகமாக இருக்கும். சிறுநீர் சிவந்திருக்கும்.

கப குன்மத்தில் இளைப்பு உண்டாகி பலஹீனம் ஏற்படும். இரைப்பு மற்றும் நடுக்கம் ஏற்படும். ஆகாரம் செல்லாது. வாயில் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். நெஞ்சில் புகைச்சல் இருக்கும். தலைசுற்றல் மற்றும் தலைபாரம் இருக்கும். வாயு குன்மத்தில் உடல் உலர்ந்து காணப்படும். கை கால் ஓய்ச்சல் இருக்கும். பலஹீனமாக இருப்பார்கள். வயிறு உப்பும், அடிவயிற்றில் பந்து போல் புரள்வது தெரியும். சாப்பிட்ட ஆகாரம் சரியானபடி சீரணிக்காது. வயிறு எப்போதும் பளுவாக காணப்படும்.

எரிகுன்மத்தில் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படும். இளைக்கவும் செய்யும். வயிற்றில் எரிச்சல், குமட்டல் மற்றும் வயிறு உப்பிக் கொண்டிருக்கும். புளித்த ஏப்பம் எடுக்கும். ஆகாரம் சரிவர சாப்பிட முடியாது. வயிற்று போக்கு ஏற்படும். வாயில் நீர் ஊறும். தலைவலி, தலைச் சுற்றல், மயிர்க்காலில் வியர்வை மற்றும் இருமல் காணப்படும். அக்னி குன்மத்தில் அடி வயிற்றில் இரைச்சல் கேட்கும். மயக்கம் மற்றும் திடுக்கிடல் ஏற்படும். வயிற்றில் உஷ்ணம் ஏற்பட்டு, வயிற்றுப் போக்கு உண்டாகும். நெஞ்சில் புகைச்சல் ஏற்படும். மூச்சுக்காற்று தங்கி எழும்பும்.

சக்தி குன்மத்தில் நடை குறையும். பலஹீனம் ஏற்படும். அடிக்கடி மயக்கம் உண்டாகும். சிறு நரம்புகள் புடைத்துக் காணப்படும். ருசி தெரியாது. வாந்தி உண்டாகும். சிறு சிறு வலிகள் இருந்து கெண்டே இருக்கும். மலச்சிக்கல் ஏற்படும். வலி குன்மத்தில் மேனியெங்கும் உலர்ந்து காணப்படும். உடம்பில் இடுப்புவலி, முதுகுத்தண்டு வலி, விலாவில் வலி போன்றவை ஏற்படும். தூக்கம் இருக்காது. வயிறு இரைச்சலுடன் ஊதிக்கொண்டே இருக்கும். ஆகாரம் சரியாக ஏற்காது. பொய்ப்பசி இருக்கும்.

மருந்துகள்

அனைத்து வகை குன்மங்களுக்கும் நம் சித்தர்கள் நிறைய மருந்துகளை ஓலைச் சுவடிகளில் கூறியுள்ளனர். அவரவர் உடற்கூறு மற்றும் வாழும் சூழல் மற்றும் குன்மத்தோடு சேர்ந்துள்ள மற்ற நோய்கள் என்ன என்று கண்டறிந்து அதற்குத் தக்கவாறு சிகிச்சை அளித்தால் மட்டுமே இந்த நோய் மட்டுப்படும். சுமார் 134 வகை மருந்துகள் குன்ம நோய்க்கு என வகைப்படுத்தியுள்ளனர்.

மருந்துஉண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கங்கள்

· அதிக காரம், புளிப்பு, எண்ணெய் பலகாரங்கள், மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும்.

· நெய் உருக்கி, மோர் பெருக்கி அதாவது நெய்யை நன்கு உருக்கியும், மோரில் அதிக நீர் சேர்த்தும் சாப்பிட வேண்டும்.

· தினமும் இரவில் பால் அருந்துவது நல்லது.

· டீ (tea), காஃபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

· மனக்கவலை, பரபரப்பு, மன உளைச்சல் இவற்றை குறைக்க வேண்டும்.

· மணத்தக்காளிக் கீரை, முட்டைகோஸ் இவற்றை தினமும் சாப்பிடுவது நல்லது.

மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி,

கொத்துமல்லித்தழை - 1/2 கைப்பிடி

கறிவேப்பிலை - 1/2 கைப்பிடி

சீரகம் - 1ஸ்பூன்

சின்னவெங்காயம் - 4

இஞ்சி - 1 துண்டு

இவற்றுடன் ஏதாவது காய்கள் சேர்த்து தேவையான அளவு உப்பு, நல்ல மிளகு சேர்த்து சூப் செய்து தினமும் ஒருவேளை காலை அல்லது மாலை அருந்தி வரவேண்டும். அல்லது, காலை உணவுக்குப் பின்னும், மதிய உணவுக்கு முன்னும் 11 மணி முதல் 12 மணிக்குள் பித்த அபகாரம் கூடியிருக்கும் நேரத்தில் அருந்தி வந்தால் பித்த அபகாரம் குறைந்து குடற்புண் பாதிப்புகள் குறையும்.

நன்றி - ஹெல்த் சாய்ஸ்

Job sites (gulf)

http://www.uaedubai jobs.com

http://www.alluaejo bs.com

http://www.dubaijob s.net

http://www.bayt. com

http://www.uaestaff ing.com

http://www.nadia- me.com

http://www.jobsindu bai.com

http://www.naukrigu lf.com

http://www.itjobsgu lf.com

http://www.gulftale nt.com

http://www.mybetter future.com

http://http: //jobs.theemirat esnetwork. com

http://ae.timesjobs .com

http://aljazeerajob s.com/jobs/ jobs-in-dubai- uae.html

http://www.allarabi a.com

http://uae.monsterg ulf.com/

http://www.recruitg ulf.com

http://www.apnijobs .com/

http://www.jobs- me.com

http://jobs. efinancialcareer s.com/Accounting _Finance/ UAE.htm

http://www.fsi. jobs

http://www.jobs123. com/

http://www.arabianb usiness.com/ jobs

http://www.gulfcons tructionjobs. com/

http://www.ixpats. com/jobs

http://www.careerje t.ae/

http://www.recruitg ulf.com/Jobs- in-UAE.asp

http://www.emirates village.com/

http://dubai- bb.com/dubai- classifieds- 40.html

http://www.balajob. com/index. php

http://www.charterh ouseme.ae

http://www.gnads4u. com/jobs

http://www.retailjo bsdubai.com

http://uae.monsterg ulf.com/it- jobs-uae. html

http://www.dubaijob snetwork. com

http://www.syriajob s.net/

http://www.workindu baiuae.com

http://www.guide2du bai.com/jobs/

http://aljazeerajob s.com

http://www.riskcare ers.com/jobs/ jobs-in-UAE

http://www.jobs4med ical.co.uk/ medical-jobs- in-uae.php

http://www.gulftale nt.com/home/ index.php

http://gulfjobseeke r.com

http://www.jobs- in-gulf-uae- bahrain-qatar- oman-dubai. linksseo. com/

http://www.bestduba ijobs.com

http://www.gulfjobs bank.com/

http://www.jobsouk. com

http://www.jobsup. com/

http://www.careermi dway.com

http://www.allabudh abijobs.com/

http://www.gulfresu meblaster. com

http://www.wizeefa. com

http://www.kareerbu ddy.com/public/ index.php

http://www.fsi. jobs/advantages. asp

http://www.apnijobs .com/jobs/ uae

http://jobs. efinancialcareer s.ie/UAE. htm

http://www.emirates -ads.ae/jobs. aspx

http://www.naukrihu b.com/overseas- jobs/gulf/ uae/

http://www.hotelier career.com/

http://www.naukridu bai.com/

http://www.precisio ndubai.com

கம்ப்யூட்டர் விசன் சின்(ட்)றோம் - Computer Vision Syndrome (CVS)

இன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்கா முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான வாலிபர்கள், சிறுவர்கள் என புதிய தலைமுறையினர் அதிகம்மகவே இந்த கணினியால் கவரப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த செய்தி ஒரு விழிப்புணர்வுக்காக இங்கே இடப்படுகிறது.
கணினி பயன்பாட்டில் இருப்பவர்களில் 1 மணி நேரத்துக்குமேல் ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தினால் அவர்களுக்கு
Computer vision syndrome ( CVS )
1 . கண்ணில் எரிச்சல், வலி
2. தலைவலி (சாதாரண நெற்றிப்பொட்டில் வலிக்கும் தலைவலி அல்ல)
3 . கண் மங்கலாக, இரட்டிப்பாக தெரிவது
4 . கண் ஈரப்பதம் இல்லாமல் காய்ந்து விடுவது
5 . கழுத்து மற்றும் தோள்பட்டை வலி
6 . தன்னை அறியாமலேயே உடலில் ஏற்படும் சிலிர்ப்பு
7 . வெளிச்சத்தை கண்டால் கண் கூசுவது
8. தூக்கமின்மை
Computer vision syndrome ( CVS )
போன்ற அறிகுறிகள் வரும். இது சாதரணமாக அனைவருக்கும் இருக்கும் ஒரு வியாதியாகி விட்டது. தொடர்ச்சியாக இந்நிலை நீடித்தால் அது கண் பார்வையை பாதிக்கும். இந்த நோய்க்கு கம்ப்யூட்டர் விசன் சின்றோம் (Computer Vision Syndrome (CVS)) என பெயர்.
கணினி திரையில் இருக்கும் ஒளிக்கதிர் கண்களில் உள்ள ஈரப்பதத்தை உளறச்செய்து விடுகிறது இதனால் சிறிது நேரத்தில் கண்களை நேரடியாக திரையின் ஒளிக்கதிர் பாதிப்பத்தின் மூலம் கண்களில் இருக்கும் சிறிய நரம்புகளும் பாதிப்படைகிறது. இதனால் கண்ணில் எரிச்சல், தலைவலி, பார்வை மங்குதல் மற்றும் கண் கூசுவது போன்ற அறிகுறிகள் தென்படுகிறது.
இதற்க்கு மருந்தோ மாத்திரைகளோ இல்லை. இந்த பதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து கணினி பயன்பாட்டை நிறுத்தவேண்டும் அல்லது 10 நிமிடத்திற்கு ஒருமுறை கணினி திரையிலிருந்து உங்களது பார்வையை 20-30 வினாடிகள் விளக்கி வேறு பொருளை பார்த்துவிட்டு மீண்டும் கணினித்திரையை பார்க்க வேண்டும் இந்த பயிற்சியின் மூலமாக சற்று இந்த பாதிப்பில் இருந்து தவிர்ந்து கொள்ள முடியும்.
uv கண்ணாடிகள் உள்ளன ஆனால் அதுவும் 100 % பாதுகாப்பு அளிக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கண்ணாடிகளை கண் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்து பின் உபயோகிக்க வேண்டும். பார்வை குறைவுக்காக கண்ணாடி போடுபவர்களும் அவர்களின் பார்வை லென்சில் இந்த வகை uv கோட்டிங் சேர்த்து ஒரே கண்ணாடியாக போட்டுக்கொள்ளலாம்.
எதைப்போட்டாலும் பத்து௦ நிமிடத்திற்கு ஒருமுறை உங்களது பார்வையை திருப்புவது மட்டுமே உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
இவ்வகை பாதிப்புகள் பழைய CRT மானிட்டரில் அதிகமாக இருக்கும், LED மற்றும் LCD மானிடர்களில் சற்றுக்குரைவாகவும் LAPTOP கணினியில் மிகக்குரைவாகவும் இந்த CVS பாதிப்பை உணரமுடியும். மேலும் போதுமான வெளிச்சம் இல்லாமல் கணினியை உபயோகிக்கும் போதும் இருட்டில் மொபைல் போன் திரையில் அதிகநேரம் உங்கள் பார்வையை செலுத்துவதும் இந்த CVS பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும் காரணிகளாகும்.
பொதுவாக கணினியை எந்த கோணத்தில் வைக்க வேண்டும், நம் பார்வை எந்த கோணத்தில் இருக்கவேண்டும் என்றெல்லாம் விதிகள் உண்டு ஆனால் பெரும்பாலும் யாரும் அதை கடைபிடிப்பதில்லை. கனிக்காக வடிவமைக்கப்படும் மேசைகளில் இந்த விதி பயன்படுத்தப் படுகிறது. அதை நீங்கள் ரெடிமேடாக வாங்கினாலும் சரியே.
அதன் படி மானிடர் திரை சுமார் 10 முதல் 20டிகிரி வரை மேல்நோக்கியும். மானிடருக்கும் கண்களுக்கும் இடையே சுமார் 20" முதல் 26 " வரையும் இடைவெளி இருக்கவேண்டும். இருக்கை சரியான முறையில் இருக்கவேண்டும், கணினி வைக்கப்பட்டு இருக்கும் மேஜை சரியான உயரத்திலும், கீபோடு சரியான இடத்திலும் அதாவது உங்கள் கை 90 டிகிரி சாய்ந்து இருக்குமாறு அமைந்து இருக்க வேண்டும். இதுபோன்ற அமைப்பில் இல்லாவிட்டாலும் உங்களின் உடலுக்கு CVS மற்றும் உடல்ரீதியான முதுகுதண்டு வலி போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
இது தவிர கணினியில் 8 மணிநேரம் வேலை பார்ப்பது, செய்தி மற்றும் கட்டுரைகளை கூர்ந்து நீண்டநேரம் படிப்பது, சினிமா காட்சிகளை நீண்ட நேரம் கணினி திரையில் பார்ப்பது போன்ற மேலதிக காரணங்களும் உண்டு.

கணனி -சில விஷயங்கள்

1. இணைய இணைப்பின் வேகம் 8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.
2.“Start Me Up” என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
3. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.
4. அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.
5. உங்கள் லேப்டாப் மீது தண்ணீர், காப்பி,டீ, கூல் ட்ரிங்க்ஸ் என ஏதாவது திரவும் கொட்டிவிட்டால், உடனே மின்சக்தி வரும் ப்ளக்கினை எடுத்து மின்சக்தியை நிறுத்தவும். அல்லது பேட்டரியினை வெளியே இழுக்கவும்.
6. லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.
7. கம்ப்யூட்டர் கேம்ஸ்களில், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டது The Sims என்ற கேம்.
8. உங்களையும் அறியாமல், உங்களிடம் உள்ள ஒரே நகல் உள்ள ஒரு கோப்பினைக் கம்ப்யூட்டரிலிருந்து அழித்துவிட்டால், உடனே ரெகுவா போன்ற, கோப்பு மீட்டுத் தரும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். எனவே இதனை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைப்பது நல்லது.
9.ஒரு பிரிண்டரை வெகுநாள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் திட்டமிட்டால், பிரிண்டரை வாங்கும் முன், ஒரு பக்கம் அதில் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்பதனையும் கணக்கிட்டுப் பார்க்கவும்.
10. “Hotswapping” என்பது, கம்ப்யூட்டருடன் ஒரு சாதனைத்தை இணைத்துப் பயன்படுத்திய பின்னர், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடாமல் அல்லது ரீபூட் செய்திடாமல், இணைப்பை நீக்குவதனைக் குறிக்கும்.
11. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின், சிஸ்டம் முடங்கினாலோ, மிக மெதுவாக இயங்கினாலோ, உடனே சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் மூலம், அந்த அப்ளிகேஷன் பதிந்த நாளுக்கு முன்னர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வருவதுதான் சிறந்த வழியாகும்.
12. ஒரு பிழைச் செய்தியைக் காட்டிய பின்னர், கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், அதற்கான தொழில் நுட்ப வல்லுனரை அழைக்கும் முன், அந்த பிழைச் செய்தி என்ன என்று குறித்து வைத்துக் கொள்வது சிறந்த வழி முறையாகும். முடியுமானால், அதனை செலக்ட் செய்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பேஸ்ட் செய்திடலாம். இயலாவிட்டால், அதனைப் பார்த்து எழுதிக் கொள்ளலாம். அதுவும் முடியாவிட்டால், அப்படியே அந்த பிழைச் செய்திக்கான திரையை, ஒரு இமேஜாக சேவ் செய்து, பின்னர் அதனைத் திறந்து அதில் இருப்பதைப் பார்த்து, டெக்ஸ்ட் பைலாக சேவ் செய்து வைக்கலாம்.
13. FAT16, FAT32, மற்றும் NTFS ஆகியவை வெவ்வேறு வகையான பைல் கட்டமைப்புகளாகும்.
14. விண்டோஸ் என்.டி. (Windows NT) யில் உள்ள என். டி. என்பது New Technology என்ற சொற்களைக் குறிக்கிறது.
15. 1977 ஆம் ஆண்டு,பில் கேட்ஸ் ஒருமுறை, மிக வேகமாகக் காரை ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.
16. விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா? இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss) எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ஓ ரியர் (Charles O’Rear). கலிபோர்னியாவில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.

உற்சாகம் தரும் மெல்லோட்டம்-(Jogging

ஓய்வு, உறக்கம், உடற்பயிற்சி இவை மூன்றும் மனிதனுக்கு அவசியத் தேவையாகும். ஆனால் அவை அளவோடு இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி மனிதனை என்றும் புத்துணர்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கச் செய்யும் மருந்தாகும். இன்றைய கால கட்டத்தில் இளம் வயதில் உடற்பயிற்சியின்றி இருந்தவர்கள், 40 வயதை கடந்தாலே நோயின் பிடிக்கு ஆளாகின்றனர். நோயில்லா பெருவாழ்வு பெற உடற்பயிற்சி அவசியமாகும்.

தேங்கிய குட்டை நீர் சாக்கடையாக மாறிவிடும். ஓடாத இயந்திரம் பழுதாகிவிடும். உபயோகமில்லா இரும்பு ஆயுதங்களில் துரு ஏறிவிடும். உழைக்காத, உடற்பயிற்சி செய்யாத உடலும் உருக் குலைந்துவிடும்.

பொதுவாக சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்றவை உலகெங்கிலும் உள்ள மக்களால் ஆண், பெண் பாகுபாடின்றி மேற்கொள்ளப்படுகிறது.

உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்

· உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

· நம் உடலின் உறுப்புகளும், நரம்புகளும் புத்துணர்வடையும்.

· தசைகள் நன்கு சுருங்கி விரிவடைவதால் உடல் பலமடையும்.

· உண்ட உணவு எளிதில் சீரணமடையும். அதன் சத்துக்கள் முழுவதும் உடலில் சீராக பரவும்.

· இதயம் பலப்படும்.

உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி தேவை இல்லை. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.

நல்ல காற்றோட்டம் நிறைந்த பகுதியில் அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் முன் மலம், சிறுநீர் இரண்டையும் வெளியேற்றி விடவேண்டும்.

மெல்லோட்டம்

மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள். விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.

இந்த மெல்லோட்டத்தை ஆண் பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.

பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்

· மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.

· நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

· இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

· உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.

· இதயத் தசைகள் வலுவாக்குகிறது.

· இதயம் சுருங்கி விரியும்போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

· இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது.

· உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.

· எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

· என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.

· முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.

மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.

ஃபைல் ப்ராப்பர்ட்டீஸ்

பைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்து விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். சில கோப்புகளின் தன்மைகளை, கூறுகளைக் காணும்போதுதான், இதனை இப்படி அமைத்திருக்கலாமே என்று எண்ணலாம். எடுத்துக் காட்டாக, இதன் அளவை இன்னும் குறைத்திருக்கலாமே என்று சிந்திக்கலாம். அல்லது வேறு பார்மட்டில் சேவ் செய்திருக்கலாமே என்று திட்டமிடலாம். அப்படியானால், கம்ப்யூட்டர் நம்மிடம், இந்த பைலை இப்படிப்பட்ட கூறுகளுடன் சேவ் செய்யப் போகிறேன் என்று கேட்டால் எவ்வளவு வசதியாகவும், நன்றாகவும் இருக்கும். இந்த வசதியைக் கம்ப்யூட்டர் நமக்குத் தருகிறது. வேர்ட் தொகுப்பில் இதனை மேற்கொள்ளலாம். அந்த வழிகளைப் பார்ப்போம்.
Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் Save அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் Prompt for Document Properties என்ற இடத்திற்கு நேராக டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஒவ்வொரு டாகுமெண்ட் சேவ் செய்திடுகையிலும் உருவாகப் போகும் பைல் குறித்த பிராபர்ட்டீஸ் டீடெய்ல்ஸ் கிடைக்கும்.
பிராபர்ட்டீஸ் பிரிவில் யார் டாகுமெண்ட்டை உருவாக்கினார்கள் என்று உங்களைப் பற்றிய தகவல்கள் பதியப்படும். இது வேண்டாம் என்று நினைத்தால் அவை பதியப்படாமல் இருக்கும் வகையில் செட் செய்து கொள்ளலாம். Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்து பின் Security டேபை அழுத்தவும். இதில் Remove personal information from the properties on save என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் டிக் செய்து ஓகே அழுத்தி வெளியேறவும். இதே போல நீங்கள் ஒரு பைலைப் பார்த்த விஷயம் கம்ப்யூட்டரில் My Recent Documents என்பதில் இருக்கும் அல்லவா? இங்கும் நீங்கள் பைலைப் பார்த்த விஷயம் பதியப்படக் கூடாது என எண்ணினால் டாகுமெண்ட்டைத் திறந்து பின் Ctrl + O அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் கிடைக்கும் கட்டங்களில்
My Recent Documents அழுத்தவும். பின் கிடைக்கும் விண்டோவில் வலது பக்கம் Tools எனத் தெரியும் இடத்தில் அழுத்தி கீழ் விரியும் விண்டோவில் Clear Documents History என்பதில் டிக் ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

அப்போதைய ஹிஸ்டரியை நீக்க

பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரினை நீங்களும் பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் அதில் பார்த்த இணைய தள முகவரிகளை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில் இதனை இரு வழிகளில் மேற்கொள்ளலாம். முதலாவதாக பிரைவேட் பிரவுசிங் என்னும் தற்போதைய வசதி மூலம், நாம் செல்லும் தளங்களின் முகவரிகள் பிரவுசரில் பதியப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இன்னொரு வழி, ஹிஸ்டரியில் பதிந்துள்ள முகவரிகளை அழிப்பது. ஆனால் அன்றைக்கு, அந்த பயன்படுத்துதலில், நீங்கள் கண்ட தளங்களை எப்படி நீக்குவது?
பயர்பாக்ஸ் பிரவுசரில் நீங்கள் அப்போது மேற்கொண்ட தளங்கள் குறித்த தகவல்களை மட்டும் நீக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதி தரப்பட்டுள்ளதனைப் பலர் அறியாமல் உள்ளனர். CtrlShiftDel அழுத்துவதன் மூலம், அப்போது பயன்படுத்திய தளங்களை நீக்கும் வசதி கிடைக்கிறது. அல்லது Tools > Clear Recent History எனச் சென்று இந்த வசதியினைப் பெறலாம். இந்த வழிகள் மூலம் கிடைக்கும் விண்டோவில், நீக்கப்படக் கூடிய அனைத்து தகவல் வகைகளும் கிடைக்கின்றன. இந்த தகவல்களின் மேலாகக் காட்டப்படும் நேரம், நம் வேலையை எளிதாக்குகிறது. இந்த மெனுவினைக் கீழாக இழுத்தால், கடந்த ஒரு மணி நேரத்தில், இரண்டு அல்லது நான்கு மணி நேரங்களில் என, நேரத்தினைக் கணக்கிட்டு, பார்த்த தளங்களை அழிக்கலாம்.

வயிற்றுப்போக்கில் பல வகை உண்டு!

வாழ்நாளில் ஒரு முறையாவது வயிற்றுப்போக்கு தொந்தரவால் நாம் அவதிப்படுவோம். கடுமையான இதிலிருந்து உடனே வெளியே வர வேண்டுமென அனைவரும் நினைத்தாலும், துரதிருஷ்ட வசமாக, ஒரே மாத்திரையில் இது குணமாவதில்லை.ஏனெனில், வயிற்றுப்போக்கு ஏற் படுவதற்கு ஒரே காரணம் இருப்பதில்லை. எனவே, ஒரே சிகிச்சையில் குணப்படுத்தி விட முடியாது. உணவு ஒவ்வாமை, உணவு விஷமாதல், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று, வயிற்றில் ஒட்டுண்ணிகள் பரவுதல் ஆகியவை காரணமாக அமை கின்றன. உணவு விஷமாவது, அதிகளவில் ஏற்படும் பாதிப்பு. விஷமாகிப் போன உணவைச் சாப்பிட்ட இரண்டு முதல் 34 மணி நேரத்திற்குள், கடுமையான பாதிப்பு துவங்கி விடும். பொதுவாக அந்த உணவு சாப்பிட்ட அனைவருக்கும், வயிற்றுப் போக்கு ஏற்படும். 48 மணி நேரத்தில் தானாகவே சரியாகி விடும். ஆன்ட்டிபயாடிக் தேவையில்லை. கடல் உணவு, செயற்கை நிறமி ஏற்றப்பட்ட உணவு வகைகளால், ஒவ்வாமை ஏற்படலாம். குழந்தைகளில் சிலருக்கு பால் சாப்பிடுவது ஒவ்வாமை யாகி விடும். இதை அந்த குழந்தையோ, அதன் பெற்றோரோ கண்டுபிடிப்பர். அந்த உணவைத் தவிர்த்து விட்டால், வயிற்றுப் போக்கு நின்று விடும். வைரஸ் தொற்றால் ஏற்படும் வயிற்றுப் போக்கின் போது, நீராகவே வெளி யேறும். லேசான காய்ச்சல் ஏற்படலாம். உடலில் நீர் சத்தை அதிகரித்தால், தானாகவே சரியாகி விடும். ஆறு மணி நேரத்திற்கு மேல் சிறுநீரே வெளியேறாமல், காய்ச்சல், வாந்தி, நினைவு தப்புதல், கடும் வயிற்று வலி, வயிற்றுப்போக்குடன் ரத்தம் வெளி யேறுதல், 48 மணி நேரத்திற்கும் மேலாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மருத்துவ ரிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது கூட, ஆன்ட்டிபயாடிக் மருந்து உட்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை. சீதபேதி (டிசென்டரி, வயிற்றுக் கடுப்பு)க்கும், பேதி (டயரியா, வயிற்றுப் போக்கு)க்கும் வித்தியாசம் உண்டு. சீதபேதி என்பது, வயிற்றுப் போக்குடன் ரத்தமும், மலத்தில் சளியும் கலந்து வரும். காய்ச்சலும் இருக்கும். "ஜியார்டியாசிஸ்' என்ற வகை வயிற்றுப்போக்கின்போது, வயிறு உப்புசம் ஆகிவிடும். வயிற்று வலி, பிரட்டல், வாயு பிரிதல், தண்ணீராக மலம் வெளியேறுதல், அதிக நாற்றம் எடுத்தல் ஆகியவை ஏற்படும். "அமீபியாசிஸ்' என்ற வகை வயிற்றுப் போக்கு, வெகு தாமதமாகவே பாதிப்பை உண்டாக்கும். அடி வயிற்றில் வலியுடன், மலத்தில், ரத்தமும், சளியும் கலந்து வரும். இரண்டு வகை நோயுமே, சிகிச்சை அளிக்காவிட்டால், பல வாரங்கள் தொடரும்.
பேதி ஏற்பட்டால், முதல் 48 மணி நேரத்திற்கு தண்ணீர், எலக்ட்ரோலைட் போன்றவை உட்கொண்ட படி இருக்க வேண்டும். வயிற்றிலிருந்து எவ்வளவு நீர் வெளியேறுகிறது, அதை ஈடு செய்யும் வகையில் தண்ணீர் பருக வேண்டும். சிறுநீர் செல்வதும் தடைபடக் கூடாது; அதன் நிறத்தையும் கண்காணிக்க வேண்டும்.
டீ, இளநீர், எலுமிச்சை பழச்சாறு, மோர் ஆகியவை பருகலாம். "ஓரல் ரீஹைட் ரேஷன் சொல்யூஷனை' (ஓ.ஆர்.எஸ்.,) வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு டீஸ்பூன் சால்ட், எட்டு டீஸ்பூன் சர்க்கரை, கொதிக்க வைத்த குடிநீர் 1,000 மி.லி., ஆகியவை கலந்து குடிக்க வேண்டும். மருந்து கடைகளிலும், பாக்கெட் வடிவில் ஓ.ஆர்.எஸ்., கிடைக்கும். பாட்டிலில் கிடைப்பவை சற்று விலை அதிகமாக இருக்கும். பாக்கெட்டை வாங்கும் போது, அதில் குறிப்பிட்டுள்ள படி, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை, சரியான அளவு கலக்க வேண்டும். பாக்கெட்டில் உள்ள பொடியைப் போட்டு, தண்ணீரை கொதிக்க வைக்கக் கூடாது. அப்படி கொதிக்க வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் குறைந்து, சர்க்கரை பயனற்றதாகி விடும். இந்த தண்ணீர் குடிப்பது, வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தாது. உடலில் நீர் சத்து குறையாமல் மட்டுமே பாதுகாக்கும். ஓ.ஆர்.எஸ்.,க்கு பதிலாக, அரிசியும், பருப்பும் சம அளவில் கலந்து, பிரெஷர் குக்கரில் வேக வைத்து, நன்கு மசித்து, உப்பு கலந்து, மீண்டும் கஞ்சி போலக் குழைத்து வேக வைக்க வைத்து சாப்பிடலாம். கஞ்சி பதத்தில் தான் சாப்பிட வேண்டும். இறுகிய பதத்தில் அல்ல. இதனுடன் இடையிடையே வாழைப் பழம் சாப்பிடலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி மேட் பழச்சாறுகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த, "லோமோடில்' அல்லது "லோமோபென்' மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. அவை குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் நல்லதல்ல. வயிறு உப்புசம் ஏற்படும். சிலர் "என்ட்ரோக்வினால்' அடங்கிய மருந்துகள் வாங்கி சாப்பிடுகின்றனர். இவை, தடை செய்யப்பட்ட மருந்துகள். இதுவும் இல்லையெனில், "லாக்ஸ்' என்ற பெயருடன் கூடிய, "சிப்ளோக்சோப்ளாக்ஸ், கேடிப்ளாக்ஸ்' மருந்துகளோ, டிரை மீதோப்ரிம் அடங்கிய மருந்துகளான, செப்ட்ரான் அல்லது மெட்ரோனிடே சோல் மருந்துகளோ வாங்கி சாப்பிடு கின்றனர்.
இவை, வயிற்றுப்போக்கை சரி செய்யாது. அதை வயிற்றிலேயே தங்க வைத்து விடும். இதனால், வயிற்றில் கிருமிகள் பல்கிப் பெருகி, "சூப்பர் பக்' உருவாகக் காரணமாகி விடும். டாக்டரின் ஆலோசனை இன்றி, இந்த மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கை தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால் போதும். அவை:
* வெளி இடங்களில் விற்கப்படும், ஈக்கள் மொய்த்த தின்பண்டங்கள், கையுறை அணியாமல் எடுத்துக் கொடுக்கப்படும் உணவுப் பொருட் களைச் சாப்பிடக் கூடாது.
* பழச்சாறு குடிக்கும் போது, சாறு தயாரிக்க பயன்படும் ஜூசர் கருவி சுத்தமானதாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அதில் போடப் படும் ஐஸ் துண்டு, சுத்தமான தண்ணீரில் தயாரிக்கப்பட்டதா என் பதையும் உறுதி செய்ய வேண்டும்.
* வேக வைக்காத உணவை சாப்பிடக் கூடாது.
* சுத்தமில்லாத பாத்திரத்தில் சமைத்த உணவுகள், சாப்பிடும் தட்டு, தண்ணீர் குடிக்க பயன்படும் தம்ளர் ஆகியவை சரியாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை வெளியில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மிக சூடாக இருக்கும் உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
* வெளியில் செல்லும் போது, மினரல் வாட்டரோ, மிக சூடாக உள்ள டீயோ, காபியோ தான் குடிக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில், ஒரு நிமிடம் வரை நன்கு கொதித்த தண்ணீரைக் குடிக்கலாம்.
* கைவசம், "டிங்ச்சர் அயோடின்' எடுத்துச் சென்றால், அதில் 2 சதவீத அளவில், ஐந்து சொட்டை எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்து, அரை மணி நேரம் சென்ற பின் குடிக்கலாம்.
* காலரா பாதித்த பகுதிகளுக்கு சென்றால், பல் துலக்க பயன்படுத்தப்படும் தண்ணீரால் கூட, அந்த தொற்று ஏற்பட்டு விடலாம். எனவே, பல் துலக்க, குளிக்கக் கூட, நல்ல தண்ணீரை பயன்படுத்துவது நல்லது.

குளோனிங் பசுக்களின் பால்

குளோனிங் முறையில் உயிர்களை உருவாக்க ஒரு புறம் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதே நேரத்தில், குளோனிங் முறையில் படைக்கப்படும் உயிரினங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தும் வருகிறது. குளோனிங் மூலம் படைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களின் பால், பிரிட்டனில் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ரகசியமாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நம்ம ஊரில் வீடுகளில் மாடுகளை வளர்ப்பது போல், பிரிட்டனில் மாடுகளை வளர்க்க முடியாது. ஊருக்கு வெளியே, பெரிய பண்ணைகளில் தான் மாடுகளை வளர்க்க முடியும். தொழிற்சாலைகள் போல் காட்சி தரும் மாட்டுப் பண்ணைகளில் பல வித மாடுகள் வளர்க்கப்படும். அங்கிருந்தே பால், மாமிசம் போன்றவை நகருக்குள் அனுப்பப்படும். கடந்த 2006ம் ஆண்டு, பிரிட்டனில் முதல் குளோனிங் பசு மாடு உருவாக்கப்பட்டது. "துண்டி பேரடைஸ்' என அழைக்கப்பட்ட அந்த பசு ஷூரோப்ஷையர் என்ற ஊரில் உள்ள பண்ணையில் பிறந்தது.
பிரிட்டனில் பல பண்ணைகளில் குளோனிங் பசு மாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பசு மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால், நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. "இது குளோனிங் பசுவிடம் இருந்து பெறப்பட்ட பால்...' என எந்த முத்திரையும் இன்றி, அந்த பால் விற்பனை செய்யப்படுகிறது. குளோனிங் பசுக்களின் பால், இறைச்சிகளை விற்பனை செய்ய தனி சட்டம் எதுவும் பிரிட்டனில் இல்லை. எனவே, உடனடியாக அதற்கான தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என, மிருக வதை தடுப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். "குளோனிங் அல்லது குளோனிங் வாரிசு பசுக்களின் மூலம் கிடைக்கும் உணவு பொருட்கள், மனித உடல் நலனுக்கு ஏற்றதா என இன்னும் ஆய்வு செய்யப்பட வில்லை. குளோனிங் மூலம் உருவாக்கப்படும் மிருகங்களுக்கு உறுப்பு குறைபாடுகள், ஆரோக்கியமில்லாத உடல், வலி ஆகியவை உள்ளன. எனவே, குளோனிங் மிருகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்...' என, மிருக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு குளோனிங் மிருகங்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும், பிரிட்டன் விவசாயிகள் அது பற்றி கவலைப்பட வில்லை. "குளோனிங் பசுக்கள் மிகவும் பெரிதாக உள்ளன. அதன் மூலம் அதிக அளவு பால் கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கு நல்லதுதானே. அதை ஏன் எதிர்க்க வேண்டும்?' என்கின்றனர் அவர்கள். "குளோனிங் மிருகங்கள் மூலம் உணவின் தரம் அதிகரிக்கும்!' என, விவசாயிகளுக்கு ஆதரவாக விஞ்ஞானிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு அருகில் புதிய கிரகங்கள் !

பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. விண்வெளி ஆய்வுகளை அமெரிக்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆய்வு திட்டம் அங்கு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், உடா மாநில பல்கலைக்கழக டைனமிக் பரிசோதனை கூடத்தில் 16 அங்குல தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.
"வைஸ்' என்று சுருக்கமாக அழைக்கப்படும், "வைட் பீல்டு இன்பிராரெட் சர்வே எக்ஸ்புளோளர்' என்ற இந்த விண்வெளி தொலைநோக்கி, கடந்த டிசம்பரில் பூமியில் இருந்து 300 மைல் தூரத்தில் விண்வெளியில் சுற்றி வரும்படி ஏவப்பட்டது. 11 நொடிக்கு ஒரு படம் என்ற அளவில் இந்த தொலைநோக்கி விண்வெளியை கேமராவால் சுட்டுத்தள்ளி, படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இவ்வாறு அனுப்பப்பட்ட படங்கள் மூலம் விண்வெளி குறித்த பல்வேறு புதிய விஷயங்கள் கிடைத்து வருகின்றன. "வைஸ்' தொலைநோக்கி அனுப்பிய படங்கள் மூலமாக, கடந்த ஆறு மாதங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 95 கிரகங்கள் பூமிக்கு மிக அருகில் உள்ளன என தெரியவந்துள்ளது. மிக அருகில் என்றால், இக்கிரகங்கள் பூமியில் இருந்து 3 கோடி மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றால் பூமிக்கு தற்போது எந்த அபாயமும் இல்லை.
"வைஸ்' தொலைநோக்கி, விண்வெளியில் தன் முதல் முழுமையான தேடுதலை சமீபத்தில் தொடங்கி உள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள், பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கான விடை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய கிரகங்களை மட்டும் இல்லாமல் 15 புதிய வால் நட்சத்திரங்களையும் அமெரிக்க தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. நட்சத்திரங்களை விட அளவில் சிறியதும், கிரகங்களை விட பெரியதுமான வளர்ச்சி குறைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை, "வைஸ்' ஆய்வு செய்துள்ளது. இவற்றில் 20 குறித்த தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளன. 45 ஆயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒளிமிக்க ஒரு பால் மண்டலத்தை, "வைஸ்' கண்டுபிடித்துள்ளது.
சாதாரண தொலைநோக்கியை விட, "வைஸ்' தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அது அனுப்பி வரும் விண்வெளி தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இன்பிரா ரெட் தொழில்நுட்ப தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை உருவாக்கப்பட்ட தொலைநோக்கிகளில், "வைஸ்' தொலைநோக்கி தான் மிக சக்தி வாய்ந்தது.
"விண்வெளியில் காணப்படும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஒளி கொண்ட பொருட்களை நோக்கியே பெரும்பாலான தொலைநோக்கிகள் செயல்படும். ஆனால், அடர்த்தியான தூசிகளின் உள்ளேயே ஊடுருவி, தெளிவற்று காணப்படுபவைகளையும் தெளிவாக பார்க்கலாம்; குளிர்ச்சியான மற்றும் இருட்டில் மறைந்துள்ள பொருட்களையும் காணலாம் என்பதுதான், "வைஸ்' விண்வெளி தொலைநோக்கியின் சிறப்பு!' என்கிறார் ரிச்சர்டு பின்செல் என்ற விஞ்ஞானி. "பிரபஞ்சத்தில் பூமிக்கு அருகில் காணப்படும் பொருட்களை கொண்டு பால் மண்டலம் உருவானதை சிறிது சிறிதாக அறிந்து வருகிறோம். இனி கிடைக்கும் புள்ளி விவரங்களை கொண்டுதான் உண்மையான கண்டுபிடிப்புகள் வெளிவரும்!' என்கிறார் நாசா விஞ்ஞானி பீட்டர் இசென்ஹர்டு.

ரோபோ' குப்பைத் தொட்டி

இன்று பல நகரங்களில் குப்பை வண்டிகள் வீடு தேடி வந்து குப்பையைச் சேகரித்துச் செல்கின்றன. அது மாதிரி வீட்டுக்கு வந்து குப்பையை `விழுங்கி'ச் செல்லும் ரோபோவை ஐரோப்பிய விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.

ஆள் உயரத்துக்கு இருக்கும் இந்த `ரோபோ' நீங்கள் தொலைபேசியில் அழைக்கும் நேரத்துக்கு வந்து உங்கள் வீட்டு வாயிலில் காத்திருந்து குப்பையைப் பெற்றுக்கொள்ளும்.

`டஸ்ட்கார்ட்' என்ற இந்த `ரோபோ' குப்பைத் தொட்டியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் பாலோ டாரியோ கூறுகையில், ``இது அடிப்படையில் ஒரு நகரும் குப்பைத் தொட்டிதான். ஆனால் இது அபாரமான உணர்திறனும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் கொண்டது'' என்கிறார்.

அவர் மேலும் தொடர்ந்து கூறுகையில், ``நாங்கள் மிகச் சிறந்த, மிகவும் நவீனமான ரோபோட்டிக்ஸ் பாகங்களைக் கொண்டு இந்த `ரோபோ' குப்பைத் தொட்டியை உருவாக்கியிருக்கிறோம். ஐரோப்பா முழுவதும் உள்ள, குப்பையை அகற்றும் நிர்வாகத்தினருக்கு இது பெரிய பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கிறது என்று கூறலாம். இதில் உள்ள இழுப்பறையில் நீங்கள் உங்களின் குப்பைகளை அல்லது மறுசுழற்சிக்கான பொருட்களை இட்டுவிடலாம். ஆனால் இந்த `டஸ்ட்கார்ட்'டின் விசேஷம் இத்துடன் முடிந்துவிடவில்லை!'' என்கிறார்.

அப்படியென்ன விசேஷம்?

முதலாவதாக, இந்தத் தானியங்கி குப்பைத் தொட்டியை பயமின்றி அப்படியே தெருக்களில் இறக்கி விட்டுவிடலாம். இதில் `சென்சார்களும்', `காமிராக்களும்' பொருத்தப்பட்டுள்ளதால், தான் எங்கே செல்கிறோம் என்று இதனால் உணர முடியும். இது தனது பாதையை `பார்த்து' அறிந்து, நிலையான பொருட்கள் மீது மோதாமல் செல்லும். அதேபோல பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள்... ஏன், தெருநாய் வந்தால் கூட விலகிச் சென்றுவிடும்.

இந்த குப்பைத் தொட்டி `காணும்' காட்சிகள் வெளி கட்டுப்பாட்டு மையம் ஒன்றுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும். அங்கிருந்து பார்த்தும் இந்த `ரோபோ' குப்பைத் தொட்டியைக் கட்டுப்படுத்தலாம், திசை மாற்றலாம். குப்பைத் தொட்டியை யாரும் திருடிச் சென்றுவிடாமலும், அதைச் சேதப்படுத்திவிடாமலும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கலாம்.

`டஸ்ட்கார்ட்' இயங்கும் பகுதியில் ஒரு `வயர்லெஸ் நெட்வொர்க்' அமைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அவ்வப்போது தேவையான தகவல்களைப் பெற்று இது நகரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இது ஒரு புத்திசாலித்தனமான குப்பை அள்ளும் `எந்திரன்'! நம்மூருக்கு `இவன்' எப்போது வருவான்?

பறக்கும் அதிசய மீன்!

படத்தில் நீங்கள் பார்ப்பது பறவை அல்ல. இது ஒரு வகை மீன். இந்த மீன், கடலில் தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து வெளியே பாய்ந்து, ஒன்பது அடி உயரம் வரை செல்லும். பின் சில அடி தூரம் சுற்றி விட்டு, மீண்டும் கடலில் தொப் என விழுந்து விடும். பறவை மீன் என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மீனின் பெயர், "மந்தா ரேய்ஸ்!' மத்திய அமெரிக்காவில் கோஸ்டாரிகா கடல் பகுதியில் இந்த வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போட்டோகிராபர் தம்பதியரான ரோலன்ட் மற்றும் ஜூலியா ஆகிய இருவரும் நடுக்கடலில் படகில் சென்று, இந்த மீனை புகைப்படம் எடுத்தனர். "இந்த மீன் தண்ணீருக்கு வெளியே வரும் போது, தன் செதில்களை, இறக்கைகள் போல் விரித்து, படபடவென அடித்து பறக்கிறது. கடலில் சுறா மீன்களை படம் எடுக்கச் சென்ற எங்களுக்கு இந்த மீன் மிக அபூர்வ காட்சியாக அமைந்தது...' என்கின்றனர் இந்த இருவரும். இந்த வகை மீன்கள் 25 அடி நீளம் வரை வளரும். அதிக பட்சம் 2,000 கிலோ வரை இருக்கும். இந்த சைசில் உள்ள மீன்கள் பறப்பது மிகவும் அபூர்வ காட்சிதான்.

சமையல் எண்ணை... சில விஷயங்கள்...

ருசியாகச் சாப்பிட நினைப்பவர்களால் எண்ணையில் பொரிக்காமலும், வறுக்காமலும், வதக்காமலும் சாப்பிட முடியாது. ஆனால் சமையலுக்காக எண்ணையைப் பயன்படுத்தும்போது கீழ்க்கண்ட விஷயங்களைக் கவனத்தில் கொள்ளலாம்...

* வாணலியில் எண்ணை ஊற்றி உணவுப் பதார்த்தத்தை பொரிக்கும்போது மிக அதிக சூடு வேண்டாம். எண்ணையில் தீப்பற்றிக் கொள்ளும் அளவுக்கு சூடாக்குவது கூடவே கூடாது.

* ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அது மிகப் பெரிய தவறு.

* பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணையை ஊற்றி சூரிய ஒளியில் படுமாறு வைக்க வேண்டாம்.

* எண்ணையை சமைப்பதற்கு எடுப்பதற்கு கரண்டிக்குப் பதில் `ஸ்பூனை' பயன்படுத்தினால் எண்ணையின் அளவு குறையும்.

உடற்பயிற்சி - நமக்கு தெரிய வேண்டிய சில உண்மைகள்

நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் "பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்" என்றும், மற்றும் சில விளம்பரங்கள் "தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்" என்று கூறுகின்றன. இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை நீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும்.

கருத்து:1 தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.

இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

கருத்து:2 வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.

இதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

கருத்து:3 எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

கருத்து:4 நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று

உண்மை. நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை. இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன. ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

கருத்து:5 ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோ¡¢களை எ¡¢க்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது.

மிகத் தவறான கருத்து. நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.

கருத்து:6 தசைகள் வி¡¢வுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

இதுவும் தவறான கருத்து. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

கருத்து:7 நமது சுவாசமும், இதயத் துடிப்பும், உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும்.

சரியான கருத்து. உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள். அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.

கருத்து:8 ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?

20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் "14 நாட்களில் கட்டுடல் நிச்சயம்" போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.

ஆங்கில அகராதியில் புதிய தகவல் தொடர்பு சொற்கள்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்து வழங்கும் ஆங்கில அகராதி உலகப் புகழ் பெற்றது. குறிப்பிட்ட கால அளவில் இந்த அகராதியின் ஆசிரியர் குழு, புதிதாக ஆங்கில மொழியில் புழங்கும் சொற்களை அகராதியில் அதிகார பூர்வமாக இணைக்கும். அந்த வகையில் அண்மையில் வெளிவந்த புதிய அகராதி பதிப்பில், 2,000 சொற்கள் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் தகவல் தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் பிரிவுகளில் புதிதாக உருவாகிப் பயன்படுத்தப்படும் பல சொற்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். Tweetup Tweetமற்றும் Meetup என்ற சொற்களின் இணைப்பு. Twitter தளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் என்பது இதன் பொருள்.
Defriend: இன்டர்நெட், மெயிலிங் லிஸ்ட் ஆகியவற்றில் நீங்கள் ஏற்படுத்திய உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்குவதனை இந்த சொல் குறிக்கிறது.
Chillax: சற்று குளிர்ச்சியாகவும் ஓய்வாகவும் (Chill + Relax) இரு Micor Blogging: ஒரு இணைய சேவை. சேவை ஒன்றில் சிறிய செய்தியினை அந்த சேவையைப் பெறும் அனைவருக்கும் அனுப்புவது.
Paywall: குறிப்பிட்ட இணைய தளத்தில் உள்ள தகவல்களை, கட்டணம் செலுத்திய பின்பே அனுமதிக்கும் சாப்ட்வேர் சுவர்.
Netbook: நெட்புக் கம்ப்யூட்டர் இன்னும் பெரிய அளவில் புழக்கத்திற்கு வரவில்லை என்றாலும், ஆக்ஸ்போர்ட் அகராதி இதற்கு அங்கீகாரம் தந்து எடுத்துக் கொண்டுள்ளது.
சில சொற்கள், மொழி இலக்கணப்படி முறையாக இல்லை என்றாலும், அகராதியில் இணைக்கப் பட்டுள்ளன. மொழியியலாளர்கள் இவற்றைக் கண்டு முகம் சுழித்தாலும், இவை அகராதியில் இடம் பிடிக்கின்றன. அவற்றில் சில, Wurfing: வேலை (Work+Surfing) பார்க்கும் போது, திருட்டுத்தனமாக இணையத்தில் உலா வருவது.
Earworm: சில ட்யூன்கள் நம் மனதில் இடம் பிடித்து, நம் தலைக்குள்ளாக ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும். அதனை இச்சொல் குறிக்கிறது.
Nonversation: வெட்டி அரட்டை என்று நம் மக்கள் கூறுவார்கள் இல்லையா? அதனை இந்த சொல் குறிக்கிறது. இப்படி பல சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன.

உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜிம்’முக்கு ஓடுகிறவர்கள் உண்டு. ஆனால் உடற்பயிற்சிக் கூடத்துக்குத் தினமும் தவறாமல் போவது மட்டும் அதிசயத்தை நிகழ்த்தி விடாது.

எல்லா விஷயங்களைம் போல உடற்பயிற்சிக்கும் சில விதிகளும் முறைகளும் இருக்கின்றன. அவற்றைச் சரியாக பின்பற்றவில்லை என்றால் உரிய பலனிருக்காது. சில நேரங்களில் பாதிப்பும் ஏற்படக்கூடும். ஜிம்’மில் ஏற்படக்கூடிய பொதுவான பாதிப்புகள் குறித்து உடல்தகுதி நிபுணர் அல்தியா ஷா விளக்குகிறார்…


சரியான முறை

அனைத்து பயிற்சிகளும் அதிகபட்ச பலனைத் தரும்படி குறிபிட்ட முறையில் அமைக்கபட்டிருக்கின்றன. ஒருவர் தனது திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளிலேயே கடைசியாக அதிகபட்ச எடையைத் தூக்குவது அதிகமான பலனைத் தரும். ஆனால் சரியான முறையில் எடை தூக்க வேண்டும். இல்லாவிட்டால் அது வீணாக போகும். பலனேதும் இருக்காது.


அதிகமாகத் தூக்குவது

உங்கள் தசைகள் தாங்கக்கூடிய அளவை விட அதிகமான எடையைத் தூக்காதீர்கள். படிபடியாக எடையை அதிகரிப்பது தசை பலத்தைக் கூட்டுவதற்கான நல்ல வழியாகும். அத்துடன் நீங்கள் ஒருவருக்கு எடை தூக்க உதவும்போது எடை தூக்குபவருக்கு இடைறாக இல்லாமல் உங்கள் உடம்பை விலக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதன்மூலம் எடை தூக்குபவருக்குக் காயம் ஏதும் ஏற்படாமலும் தவிர்க்கலாம்.


சுத்தமே சுகாதாரம்

ஒரு ஜிம்’ உபகரணத்தை பயன்படுத்தும் முன்பும் பயன்படுத்திய பின்பும் அதை ஒரு துண்டால் நன்றாகத் துடைத்து விடுங்கள். அதன்மூலம் தொற்று வியாதியால் பாதிக்கபடாமலும் அது பரவாமலும் தவிர்க்கலாம். உடற்பயிற்சிக்கூட நடத்தை விதிகளின்படி உடற்பயிற்சி உபகரணங்களை சுத்தமாக வைத்திருப்பது வலிறுத்தபடுகிறது. குறிப்பாக இதயத் தசைக்கு வலுவூட்டும் எந்திரங்களை பயன்படுத்தும்போது! அம்மாதிரி வலியுறுத்தபட்டாலும் இல்லாவிட்டாலும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. பக்கத்தில் உள்ள உபகரணங்களில் இருந்து கூட நீங்கள் பயன்படுத்த போகும் கருவிக்கு கிருமிகள் பரவக் கூடும் என்பதால் துடைத்துவிட்டு பயன்படுத்துவதே நல்லது.


வெறுங்காலுடன் போகாதீர்கள்

நேரடி சூரிய வெளிச்சம் இல்லாத மூடபட்ட பகுதிகள் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற சூழலாக அமைகின்றன. எனவே எப்போதும் காலணி அணிந்தே பயிற்சி செய்யுங்கள். அதன்மூலம் அத்லெட்ஸ் பூட்’ என்ற பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இந்த பூஞ்சைத் தொற்றால் கால் விரல்களுக்கு இடையே அரிப்புடன் கூடிய செதில்களும் கொப்புளங்களும் ஏற்படும். காலணி அணிவது ஜிம்’மின் வழுவழுப்பான தரையில் வழுக்கி விழுவதையும் தடுக்கும்.


செல்போனை தவிருங்கள்

உடற்பயிற்சிக்குத்தான் உடற்பயிற்சிக் கூடம். எனவே அங்கே அதில் மட்டும் கவனமாக இருங்கள். ஜிம்’மில் போய் எஸ்.எம்.எஸ்.’ அனுப்புவதும் அரட்டையடிப்பதும் உங்கள் நேரத்தை மட்டும் வீணாக்குவதில்லை. காயமடையும் அபாயத்தைம் ஏற்படுத்துகிறது.


சரி பாருங்கள்

எந்த உபகரணத்தையும் பயன்படுத்தும் முன் அதில் நட்டு’கள் ஸ்க்ரூ’க்கள் எதுவும் லூசாக’ இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். எந்திரம் கடகட’வென்று ஆடினாலோ அசைவுகள் அதிகமாக இருந்தாலோ ஜிம்’ நிர்வாகியிடம் தெரிவித்து விட்டு வேறு உபகரணத்துக்கு மாறிக்கொள்ளுங்கள்.

பசிபிக் கடலில் அதிசயத் தீவு!

மனித உழைப்பின் இன்னொரு அதிசயமாக விளங்கபோகிறது பசிபிக் கடலில் உருவாக்கபடும் பிளாஸ்டிக் அதிசயத் தீவு. அந்த அழகுத்தீவு பற்றிய சில ரகசியங்கள் இங்கே...

* இது கடல் நீரில் மணல்மேடு உருவாக்கி எழுப்பபடும் தீவல்ல. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டிட பயன்பாட்டு பொருட்களாக மாற்றபட்டு தீவு உருவாக்கபடுகிறது. மிதக்கும் பிளாஸ்டிக் தீவாக இது விளங்கபோகிறது.

* கடலில் இதுபோல் மிதக்கும் கட்டிடங்கள் பல ஏற்கனவே எழுப்பபட்டுள்ளன. எனவே இது புது முயற்சிமல்ல, முதல் முறையுமல்ல. ஜப்பானில் கடலுக்குள் விமானநிலையமும், துபாயில் ஓட்டலும், அரபு நாடுகளில் எண்ணைக் கிணறுகளும் கடலுக்குள் அமைக்கபட்டுள்ளன. பிளாஸ்டிக் மூலம் அமைக்கபடுவதுதான் இந்த தீவின் சிறப்பு.

* வெறும் அழகுக்காகவோ, சாதனைக்காகவோ இந்தத் தீவு உருவாக்கபடவில்லை. மனிதர்கள் வசிக்கும் சூழலுடன், ஒரு மாற்று வாழிடமாக இந்தத் தீவு அமைக்கபடுகிறது.

* இங்கு வானுயர்ந்த மாளிகைகள் கட்டி குடியிருக்க போவதில்லை. சாதாரண மக்கள் வசிப்பதுபோன்ற இயல்பான சூழலில் வீடுகள் உருவாக்கபடும். வாழும் வகைக்கும், சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது என்பதால் இதுபோல் அமைக்கபடுகிறது.

* பிளாஸ்டிக்கால் தீவு உருவாக்கபட்டாலும் இங்கு பிளாஸ்டிக் உபயோகம் இருக்காது. முழுவதும் மக்கும் பொருட்களே பயன்படுத்தும் பசுமைத் தீவாக இது விளங்கும்.

* இங்குள்ளவர்கள் எந்தத் தேவைக்கும் மற்ற நாடுகளை சார்ந்திராத வண்ணம் தண்ணீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யபடுகின்றன. வாழ்வாதாரத்துக்கான தொழில்கள் ஏற்படுத்தபட்டு வணிகம் செய்யபடும்.

* அதிசயத்தீவு 10 சதுர கிலோமீட்டர் பரபளவு கொண்டது. இது உலகின் மிக அழகான தீவான ஹவாய்த் தீவுக்கு சமமானது.

* வடக்கு பசிபிக் கியர் கடல் பகுதியில்தான் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் கண்டு பிடிக்கபட்டுள்ளது. அங்கேயே அவற்றை மறுசுழற்சி செய்து தீவு எழுப்பபடுகிறது. ஹவாய் தீவுக்கு வடகிழக்கு பகுதியில் இந்த பிளாஸ்டிக் தீவு உருவாகிறது.

* புவி வெப்பமடைதல் போன்ற சூழல் மாற்றத்தால் தற்போது உலகம் முழுவதும் 2 கோடி பேர் தங்கள் இயல்பான வாழ்விடங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். சகாரா பாலைவனத்தையொட்டிய பகுதியினர், அலாஸ்கா தீவைச் சேர்ந்தவர்கள் இப்படி இடம் பெயர்ந்துள்ளனர். இன்னும் 30 ஆண்டுகளில் 20 கோடிபேர் இதுபோன்ற நிலைக்கு ஆளாவார்கள் என்று கணிக்கபடுகிறது. அப்போது இந்த அதிசயத்தீவு போன்ற மாற்று வசிப்பிடங்களின் தேவை அதிகமாகும் என்று கணிக்கபடுகிறது. அதனால் மேலும் சில புதிய வாழ்விடங்கள் உருவாக்கபடும்.

* இங்கு மனிதர்கள் மாசுபடுத்தாத சுத்தமான காற்று கிடைக்கும். அதனால் நலமாக வசிக்க முடியும்.

* மிகுதியாக கிடைக்கும் கடற்பாசியை உணவாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்த முடிவு செய்யபட்டுள்ளது. கடற்பாசி கார்பன்டைஆக்சைடை கிரகித்து வாழும் என்பதால் காற்று மாசுபடாமல் இருப்பதற்கும் இதை வளர்க்கலாம்.

அதிசயத் தீவில் வசிக்கபோகும் அதிர்ஷ்டசாலிகள் யாரோ!

மின்னஞ்சல் பிழைச் செய்திகள்

சாப்பிடுகிறோமோ இல்லையோ, அன்றாடம் நமக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதுவும், அவற்றிற்கான பதில்களை அனுப்புவதும் நம் அன்றாட வேலையாக மாறி வருகிறது. இவை எல்லாம் சரியாகச் செல்லும் வரை நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் பல வேளைகளில், மின்னஞ்சல் பரிமாற்றத்திலும் நமக்குப் பல பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1.Delivery Error:: இந்த பிழைச் செய்தி சில வேளைகளில் 550 அல்லது 554 என்ற எண்ணுடன் குறிப்பிடப்படும். இது பொதுவாக அடிக்கடி பெறப்படும் பிழைச்செய்தியாகும். இதன் பொருள்: நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி என ஒன்று இல்லவே இல்லை. இதற்கு எந்த மெயிலையும் அனுப்ப முடியாது என்பதுவே. இதற்குக் காரணம், முகவரி அமைப்பதில் ஏதேனும் சில எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். முகவரியில் உள்ள எண்கள் அல்லது வேறு குறியீடுகள் விடுபட்டிருக்கலாம்.
2.Unknown host: இதற்கான எண் எதுவும் இருக்காது. காரணங்கள்:1) முகவரியில் இறுதியில் உள்ள சர்வரின் பெயரில் எழுத்துப் பிழை, 2) அந்த பெயரில் இப்போது எந்த சர்வரும் இல்லை, அல்லது 3) அந்த சர்வரின் அமைப்பு இப்போது வேறாக இருக்கலாம்.
எனவே இந்த மின்னஞ்சல் முகவரியினை முழுமையாகச் சோதனை செய்திட வேண்டும். இதுவும் தீர்வு தரவில்லை என்றால், அஞ்சல் முகவரிக்கானவரை, வேறு வழிகளில் தொடர்பு கொண்டு சரியான முகவரியினைப் பெறவும்.
3. Mail not accepted: பிழை எண் 550 அல்லது 554 ஆக இருக்கலாம். யாருக்கு இந்த அஞ்சலை அனுப்பு கிறீர்களோ, அவருக்கான இந்த முகவரிக்கு ஒரு சிலர் மட்டுமே அஞ்சலை அனுப்பும் வகையில் வரையறை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது ஒரு குழு மட்டுமே அனுப்பும் வகையில் இருக்கலாம். இந்த அமைப்பினை அவர் மாற்றினால் தான் இந்த முகவரியினைப் பயன்படுத்தி, அஞ்சல் அனுப்ப முடியும்.
4. Service Unavailable: சில வேளைகளில் இது 550 என்ற எண்ணுடன் இருக்கும். அல்லது எண் இல்லாமல் இருக்கும். தற்போதைக்கு, இந்த முகவரிக்கான சர்வர் அஞ்சல் எதனையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை; அல்லது பராமரிப்பு காரணமாக அஞ்சல் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். சில மணி நேரம் காத்திருந்த பின்னர், அஞ்சலை அனுப்பலாம்.
5. Sender’s address rejected:பிழை எண் 550 அல்லது 554 ஆக இருக்கலாம். இது உங்களுக்கு ஒரு மோசமான செய்தி. உங்கள் முகவரியினை ஸ்பேம் மெயில் அனுப்பும் முகவரியாக, உங்கள் அஞ்சலைப் பெறுபவர் வரையறை செய்துள்ளார். அல்லது அவர் சார்ந்துள்ள குழு அது போல அமைத்திருக்கும். அவரை வேறு வழியில் தொடர்பு கொண்டு, கறுப்பு பட்டியலில் இருந்து உங்களின் முகவரியினை நீக்குமாறு கேட்டுக் கொள்ளலாம்.
6.Inbox Full : சில வேளைகளில் 552 என்ற எண்ணுடன் இந்த பிழைச் செய்தி இருக்கலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில், அஞ்சலைப் பெற வேண்டிய நபர், அதிக பட்ச மெயில்களைப் பெற்றிருக்கலாம். அவரின் அஞ்சல் பெறும் பெட்டியில் கொள்ளும் அளவிற்கு அஞ்சல்கள் பெறப்பட்டுள்ளதால், உங்கள் மெயில் திருப்ப அனுப்பப்பட்டுவிட்டது. எனவே மெயிலைப் பெற இருப்பவர், அவராக இந்த பாக்ஸில் உள்ள மெயில்களை நீக்கினால்தான், மேலும் அவருக்கு மெயில்கள் சென்றடையும்.
7.Message exceeds maximum file size: இந்த பிழைச் செய்தி சில வேளைகளில் 552 என்ற எண்ணுடன் தரப்படும். நீங்கள் உங்கள் அஞ்சலுடன் இணைத்துள்ள பைலின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமானதாக இருப்பதாக பொருள். எனவே இணைக்கப்படும் பைலின் அளவை குறைக்க வேண்டும். அல்லது இணைப்பையே நீக்க வேண்டும். பைலின் அளவைக் குறைக்க இயலவில்லை என்றால், பைலை வேறு வழிகளில் அனுப்பலாம். வெளியாக பைல் மாற்றும் சேவைகள் தரும் பல தளங்கள் இதற்கென உள்ளன. இன்னும் பல பிழைச் செய்திகளை, மின்னஞ்சல் அனுப்பும்போது நாம் பெறலாம். இருப்பினும் மேலே காட்டப்பட்டுள்ள செய்திகளே நாம் அடிக்கடி சந்திக்கும் செய்திகளாகும்.

வேண்டாம் அசைவம்!

அசைவம் கூடாது என்று வலியுறுத்தியுள்ள வேதாத்திரி மகரிஷி, மாமிசம் உண்பதை ஏன் நிறுத்த வேண்டும்? என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகிறார் :

"மனிதனைத் தவிர, மற்ற உயிரினங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய திறமை இல்லாததால் அவை எல்லாம் பிற உயிர்களைக் கொன்று, உடலை உண்டு வாழ்கின்றன. இதை குற்றம் என்று கூற முடியாது.

விதை விதைத்து, தானே உணவை உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்ற ஆறறிவு மனிதர்களுக்கு இன்னொரு உயிரை உணவாக உட்கொள்ள வேண்டிய பழக்கம் தேவையில்லை. அதனால், மனிதன் பிற உயிரை உணவுக்காக கொல்வது நீதி ஆகாது. உணவுக்காக உயிர்க்கொலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

மாமிசமானது பிற உயிரினங்களை துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி பெறப்படுவதாகும். அது, நம் உடல் அணுக்களில் கலந்தால் நம் எண்ணத்திலும் வன்முறை வளர வாய்ப்பை ஏற்படுத்தாதா? உலக சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் புலால் உண்கின்ற சமுதாயங்களில் குற்றங்கள், போர்கள் அதிகமாக நிகழ்ந்தது தெரிய வரும்.

தாவர ஆகாரத்தை சாப்பிடுவதால் குடலுக்கு வலிமை ஏற்படும். சுலபமாக உடலுடன் கலந்து சத்தாக மாறிவிடும். ஆனால், மாமிசம் உண்பதால் குடல் வலிமையும், ஜீரண பலமும் குறைந்து, உடல் உள் உறுப்புகள் சோம்பல் நிலையை அடைந்துவிடும்.

மாமிசம் உண்பவர்கள் ஒரே தாவலில் தாவர உணவுக்கு வந்துவிட தேவையில்லை. அப்படி முயன்றால், ரத்தத்தில் ரசாயன மாறுபாடு ஏற்பட்டு, நரம்புகளுக்கு பலவீனம் உண்டாகிவிடும். சிலருக்கு நோய்களும் ஏற்படலாம். நீங்கள் சைவத்துக்கு மாற விரும்பினால் படிப்படியாகவே அந்த மாறுதலை மேற்கொள்ள வேண்டும்.

உணவு மாற்றத்தை உடலும், மனமும் ஒத்துக்கொள்கின்ற வகையில் மாமிச உணவை சிறிது சிறிதாக குறைத்து, தாவர உணவு வகைகளை அதிகப்படுத்தி, 2, 3 மாதங்கள் இவ்வாறு உட்கொண்டால் சாத்வீக உணவு முறையினை பழக்கமாக்கிக் கொள்ளலாம்.

குழந்தை முதலே தாவர உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் கஷ்டமே தோன்றாது'' என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

காற்று வாங்கப் போய் கொசுக் கடியுடன் திரும்புவதா?
கொசு வந்தாச்சு! மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த வேட்டையைத் துவங்கி விடும்.கொசுக்களில் பல வகை உண்டு; பகல் நேரங்களில் கடிப்பவை, இரவு நேரங்களில் கடிப்பவை என! எவ்வகை கொசுவாயினும், அவற்றில் பெண் கொசுக்கள் முட்டையிட, ரத்தம் தேவை. தொடர்ந்து ஒவ்வொரு மனிதராக அது கடிக்கும் போது, ரத்தத்தின் மூலம் பரவும் மலேரியா, யானைக்கால் நோய் (பைலேரியா), மூளைக்காய்ச்சல் (என்செபாலிடிஸ்), டெங்கூ, சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாகின்றன.மலேரியா தொற்றுக் கிருமிகளை ஏந்தி வரும் ஒரு கொசு, நம்மைக் கடித்த 10 முதல் 14 நாட்களுக்குள், மலேரியா உருவாகும். காய்ச்சல், தலைவலி, உடல் வலி, பேதி ஆகியவை ஏற்படும்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்ச்சல் ஏற்படும். குளிரும்; திடீரென வியர்க்கும். உடலில், ரத்த சிவப்பணுக்கள் அளவு குறையும். இதனால், ரத்த சோகை உருவாகி, சோர்வு, சோம்பல் ஏற்படும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்நோய் வந்தால் ஆபத்து.ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் மலேரியா காய்ச்சலை கண்டறியலாம். நோய் உறுதி செய்யப்பட்டால், முழு சிகிச்சை எடுக்க வேண்டியது மிக அவசியம். இந்த நோய்க்கு காரணமான ஒட்டுண்ணிகள், நம் கல்லீரலில் அமைதியாக வாழ்ந்தபடி இருக்கும். முழுமையான சிகிச்சை எடுக்காவிடில், மீண்டும் அதிதீவிரமாக தாக்கத் துவங்கி விடும். காய்ச்சல் குறைந்தவுடன், மருந்து மாத்திரை சாப்பிடுவதை பலரும் நிறுத்தி விடுவது துரதிருஷ்டவசமானது.கடும் காய்ச்சல் ஏற்பட்டால், முறையான மருத்துவரிடம் காண்பிக்கும் பழக்கமும் மக்களிடையே இல்லை. முறையாக மருத்துவம் படிக்காத டாக்டர்கள், பல மாத்திரைகளைக் கலந்து ஒரு பேப்பர் பாக்கெட்டில் போட்டு கொடுத்து விடுகின்றனர். இவை ஆன்டிபயாடிக், ஜுர மத்திரை, ஒரு ஸ்டிராய்டு, ஒரு மலேரியா தடுப்பு மாத்திரை என இருக்கும்.இது போன்ற, குத்து மதிப்பான சிகிச்சை, சில நேரங்களில் வெற்றி பெறலாம்; பாக்டீரியாவுக்கு ஆன்டிபயாடிக்கும், மலேரியாவுக்கு அதற்கென மாத்திரையும் கொடுக்கப்படுவதால். ஆனால், இறுதியில் இந்த இரண்டு நோய்களுமே, மீண்டும் திரும்பத் தாக்கத் துவங்கிவிடும். இதன் விளைவு, உடலிலுள்ள ஒட்டுண்ணிகள், மலேரியா நோய்க்கான மருந்தையே எதிர்க்கத் துவங்கி விடும். இது ஆபத்து.பைலேரியக் கொசுக்கள் கடித்தால் ரத்தத்தில் பைலேரியா கிருமி பரவும். யானைக்கால் நோய் ஏற்படும். கடும் காய்ச்சல், குளிர் ஏற்படும். நிணநீர் சுரப்பிகளை இந்த கிருமி அடைத்துக் கொள்ளும். இதனால், கை, கால்கள் வீங்கும். ஆண்களுக்கு விரைப்பை வீக்கமும் ஏற்படும். வீங்கிய இடங்களிலுள்ள தோல் தடிமனாகி விடும். இந்த தோல், மீண்டும் கிருமிகளால் பாதிக்கப்படும்.ரத்தத்தில் பைலேரியா புழுக்கள் உள்ளனவா என்பதை, இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை வைத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்ப நிலை பாதிப்பை, சரி செய்து விடலாம். அல்பெண்டிசால் மாத்திரைகள் இரண்டு வாரத்திற்கும், ஐவெர்மெக்டின் மாத்திரை ஒன்றும், டைஈத்தைல் கார்பாமேசைன் மருந்து 12 முதல் 14 நாட்கள் வரையும் சாப்பிட்டால், குணமாகும். நோய் தீவிரமடைந்தால், குணப்படுத்துவது கடினம்; அறுவை சிகிச்சை மூலம் தான் வீக்கத்தை நீக்க முடியும்."ஏடிஸ் ஈஜிப்டி' கொசுக்களின் உடலில், புலிகள் போல வரி காணப்படும். பகல் நேரங்களில் மனிதர்களைக் கடிக்கும். இவற்றால், டெங்கூ, சிக்குன்குனியா நோய்கள் ஏற்படும். அதிக காய்ச்சல், உடல் முழுதும் தடிப்பு ஏற்படுதல், இணைப்புகளில் வலி, முதுகு வலி, தசை வலி ஏற்படும்.இந்த நோய்கள் இப்போது வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. இந்நோயால் தாக்கப்பட்டவர்களில், மருந்து உட்கொண்டு, காய்ச்சல் குறைந்தாலும், மூட்டுகள் வலி, முதுகு வலி ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த நோய்களுக்கு மருந்துகளும் கிடையாது.மூளைக்காய்ச்சலும், கொசுக்கள் மூலம் பரவுவதே. இதற்கும் சரியான மருந்து கிடையாது. ஆனால், உயிரைப் பறிக்கும் ஆபத்து, இந்த நோயில் உள்ளது. ஜப்பான் பி வகை மூளைக்காய்ச்சல் ஏற்படாமலிருக்க, தடுப்பு மருந்து உள்ளது.இத்தகைய நோய்கள் வந்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்வதை விட, வராமல் காப்பதே நல்லது.* பாத்திரங்களில் நீரைத் தேக்கி வைக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள், தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் ஷீட்களை அவ்வப்போது நிமிர்த்திக் கட்ட வேண்டும்.* "ஏசி' மற்றும் கூலர்களிலுள்ள டிரேக்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் உப்பு தூவி வைத்தால், கொசுக்கள் அண்டாது.* பூந்தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.* திறந்த கிணறுகள், தொட்டிகளில் கொசுக்கள் புகா வண்ணம் வலை அடிக்க வேண்டும்.* அலங்கார மீன்களான, கபூசியா, போசிலி (கப்பி வகைகள்) ஆகியவை, கொசு முட்டைகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவை. நகராட்சி அலுவலகங்கள், மலேரியா கட்டுப்பாட்டுத் திட்ட அலுவலர்கள் மற்றும் சில கடைகளில் இந்த மீன்கள் கிடைக்கும். இவற்றை பொதுக் கிணறுகள், நீர் நிலைகளில் வளர்த்தால், கொசு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.* வீட்டு ஜன்னல்கள், கதவுகளில், கொசு வலை அடித்து வைக்கலாம்.* இரவு நேரங்களில் அறையில் கொசு வலை கட்டித் தூங்கினால், கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம்.* முழுக்கை சட்டை, கால் மறையும் வகையில் பேன்ட் ஆகியவை அணிந்து படுத்தால் கொசு கடிக்காது.* கொசு கடியிலிருந்து தப்பிக்க, உடலில் பூசும் வகையிலான களிம்புகள் உள்ளன. ஆனால், அவற்றை நேரடியாக உடலில் பூசுவதை விட, ஆடைகளில் பூசிக் கொள்வது நல்லது. குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்தக் களிம்புகளைப் பயன்படுத்தக் கூடாது.* கொசு வத்திகள், சுருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை, மூச்சுக் குழலில் ஒவ்வாமை ஏற்படுத்தும். ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் ஆகியவற்றை உருவாக்கி விடும்.* பூச்சிக்கொல்லி மருந்துக் கெல்லாம் இப்போதைய கொசுக்கள் கட்டுப்படுவதில்லை. இந்தப் பூச்சிக் கொல்லிகளை, "ஸ்பிரே' செய்தால், இந்த மருந்தை எதிர்க்கும் சக்தியைக் கொசுக்கள் பெற்று விடும்; மனிதர்களுக்கு, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும்.
டாக்டர் கீதா மத்தாய், வேலூர்.

அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?

"கூகுள்' இணையதளத்தின், "பிளாக்' எனப்படும் தனிநபர் விமர்சனங்கள், கட்டுரைகள் வெளியிடும் பகுதியில் அவதூறான செய்திகள் வெளியானால் அவற்றுக்கு அந்நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றும், செய்திகளின் ஆசிரியரே பொறுப்பாவார் என்றும், அந்நிறுவன முன்னாள் ஊழியர் விளக்கம் அளித்துள்ளார்.
"கூகுள்' இணையதளம், கட்டுரைகள், பத்திரிகைகள், விமர்சனங்கள், ஆராய்ச்சிகள் போன்றவற்றை, விருப்பப்பட்டவர்கள் எழுதி வெளியிடுவதற்கு ஏதுவாக
www.blogger.comஎன்ற இணையதளச் சேவையை நடத்தி வருகிறது.இந்த, "பிளாக்'கில் இவ்வளவு தான் எழுத வேண்டும் என்ற வரையறை கிடையாது என்பதாலும், இது இ-மெயில் போன்று இலவச அடிப்படைச் சேவையாகக் கிடைக்கிறது என்பதாலும், பெரும்பாலோர் தங்கள் விமர்சனங்களை இதன் மூலம் தெரிவிக்கின்றனர்.ஆனால், வெளியிட முடியாத, அநாகரிகமான, அவதூறான செய்திகளையும் விமர்சனங்களையும் கூட, சிலர் தங்கள் பெயரைக் குறிப்பிடாமல் வெளிப்படுத்த, இந்த, "பிளாக்'கைப் பயன்படுத்துகின்றனர்.
அப்படி ஒரு, "பிளாக்'கில் ஒருவர் அவதூறான சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார் என்று, மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 2006, ஜூன் மாதமும், 2007, ஏப்ரலில் மற்றொருவரும், மும்பை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.அவர்கள் தம் மனுவில், அவதூறான செய்திகள் கொண்ட, "பிளாக்'கை வெளியிட அனுமதித்ததாக, "கூகுள்' நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்காலிகமாக அந்த "பிளாக்' செயல்படத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.இதற்கிடையில், 2007, ஜூனில் "பிளாக்' ஆசிரியர் மீதும், நிறுவன வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க, மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.
2008, அக்டோபரில், "பிளாக்'குக்கு மும்பை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது."கூகுள்' இந்தியா நிறுவனத்தில் 2005ல் இருந்து 2007 வரை அதன் விற்பனை மற்றும் வெளியீட்டுப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர் சுந்தராமன். அவருக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து 2009, மார்ச்சில் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து சுந்தராமன் தாக்கல் செய்த மனுவில், தான், "கூகுள்' நிறுவனத்திலிருந்து விலகி மும்பையை விட்டு வெளியே சென்று விட்டதால், கோர்ட் சம்மனைப் பெறவில்லை என்று கூறினார். அதன்பின் 5,000 ரூபாய் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.இந்த ஆண்டில், மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் சுந்தராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், "கூகுள் நிறுவன ஊழியர்கள் எவருக்கும் அந்நிறுவனத்தையோ அதன் சேவைகளையோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.
அதேபோல், "பிளாக்'கில் வரும் செய்திகளை அகற்றவோ, தடை செய்யவோ அதிகாரம் கிடையாது.வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை மக்களிடம் தெரிவிக்க, கூகுள், ஒரு தளம் மட்டுமே அமைத்து கொடுக்கிறது. மற்றபடி, வாடிக்கையாளர்களின் சொந்த கருத்துக்களுக்கு அந்நிறுவனமோ அதன் ஊழியர்களோ பொறுப்பேற்க முடியாது."பிளாக்' வெளியீடு என்பதை, "பப்ளிகேஷன்' என்பதாகக் கருத முடியாது' என்று கூறியுள்ளார்.அவர் மனு மீதான விசாரணை விரைவில் துவங்க உள்ளது.