Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

உதவி ! உதவி! கம்ப்யூட்டரில் வைரஸ்

1.எச்சரிக்கை சமிக்கைகள்: மெதுவாக இயங்குவது, எந்த கீ போர்டு அல்லது மவுஸ் இயக்கத்திற்கும் சரியான செயல்பாடு காட்டாதது, திடீரென இயக்கம் முடங்குவது, ட்ரைவ்களைச் சரியாகக் காட்டாதது, அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் முறையாக இயங்காதது ஆகியவை வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களின் சில செயல்பாடுகளாகும். இவற்றுடன்,வழக்கத்திற்கு மாறான பிழைச் செய்திகள், மாற்றி அமைக்கப்பட்ட மெனுக்கள் மற்றும் டயலாக் பாக்ஸ்கள் எனக் காட்டப்படும்.
ஸ்பைவேர் மற்றும் மால்வேர் ஆகியவை கம்ப்யூட்டரில் இருந்தால், மெதுவாக இயங்கும் தன்மையுடன், நம் பிரவுசரில் புதிய டூல்பார்கள், லிங்க்குகள், ஹோம்பேஜ் மாற்றம், மவுஸ் பாய்ண்ட்டர் மாற்றம், சர்ச் இஞ்சின் மாற்றம் ஆகியவை ஏற்படும். நாம் டைப் செய்து பார்க்க விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு தளத்திற்கு நம்மை இட்டுச் செல்வது, பாப் அப் விளம்பரங்கள் எனப் பலவகைகளில் அவை ஆட்டம் காட்டும். இதில் என்ன வேடிக்கை என்றால், நம் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பு இல்லாத போதும் இந்த மாற்றங்களை நம் கம்ப்யூட்டரில் சந்திக்கலாம்.
2. சிஸ்டம் பிரச்னைகள்: கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கினாலே, அதில் வைரஸ் அல்லது ஸ்பைவேர் உள்ளது எனக் கலவரப்பட வேண்டாம். நம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் வேறு சில ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னைகள் இருக்கலாம். கம்ப்யூட்டரின் டிஸ்க்கினை பார்மட் செய்திட வேண்டியதிருக்கும். மெமரி கூடுதலாகத் தேவைப்படும். அல்லது வேறு ஏதேனும் பிரச்னை இருக்கலாம்.
3. சில தீர்வுகள்: இவ்வாறு ஸ்பைவேர், மால்வேர் அல்லது வைரஸ் இல்லாமல், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கினால், அதற்கென சில நல்ல தீர்வுகள் இலவசமாகக் கிடைக்கின்றன. சி கிளீனர் (CCleaner) என்னும் இலவச புரோகிராம் இதில் மிகச் சிறந்ததாகும். கம்ப்யூட்டரை மிக அழகாகக் குறைந்த நேரத்தில் ட்யூன் செய்திட இது சிறந்த புரோகிராம் ஆகும். தேவையற்ற ரெஜிஸ்ட்ரி கீகளை இது நீக்கும். IOBit Smart Defrag மற்றும் Auslogics Disk Defrag ஆகியவை, டிஸ்க் டிபிராக் செய்வதில் கில்லாடிகள். System Mechanic என்பதுவும் இந்த வகையில் சிறந்ததொரு புரோகிராம் ஆகும். (உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இருந்தால், டிஸ்க் டிபிராக் நீங்கள் செய்திடத் தேவையில்லை என்பதை இந்த வேளையில் நினைவு படுத்துகிறேன்.)
4.பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள்: அதிகமான திறனுடன் கூடிய ஆண்ட்டி வைரஸ் அப்டேட்டட் தொகுப்பு, பயர்வால், தேவையற்ற லிங்க்குகளில் கிளிக் செய்யாமை, சோதனை இன்றி அட்டாச்மெண்ட் பைல்களைத் திறக்காமல் இருத்தல் போன்ற எச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டு இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் மற்றும் மால்வேர், ஸ்பைவேர் தொகுப்புகள் ஊடுறுவலாம். இலவச புரோகிராம்களுக்காக, இணையத்தில் அலைந்து திரிபவர்களையும், பாலியல் கலந்த செய்திகளுக்கென இணையத்தில் மேய்பவர்களையும் இது போன்ற ஸ்பைவேர் புரோகிராம்கள் கட்டிப் போடுகின்றன. பல போலியான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் பெயரில், நம்மை ஏமாற்றும் கெடுதல் புரோகிராம்கள் பல அடிக்கடி வருகின்றன. நம் கம்ப்யூட்டரில் வைரஸ் இருப்பதாகக் காட்டி, இலவச ஸ்கேன் செய்து தருகிறேன் என்று ஆசை காட்டி, பின் பணம் கட்டு என்று பயமுறுத்தும்.
5.ஊடுறுவியதை எப்படி நீக்குவது? மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான ஸ்கேனர்கள் அனைத்தும், பாதிக்கப்பட்ட பைல்கள் என அவை அறிந்தவுடன், அவற்றை நீக்கும் சாதனங்களையும் கொண்டுள்ளன. இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய Malicious Software Removal Tool, சாதனத்தினை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சாதனத்துடன் இணைத்துத் தந்து, ஒவ்வொரு மாதமும் அப்டேட் செய்கிறது. மால்வேர் புரோகிராம்களை நீக்குவது குறித்தும், பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுவதற்காகவும் bleepingcomputer என்று ஒரு அமைப்பு உள்ளது (http://www.bleepingcomputer.com/). இந்த மன்றத்தில் இணைந்து மால்வேர் புரோகிராம்கள் குறித்த தகவல்களைப் பெறலாம். நீக்குவதற்கான உதவிகளையும், நீக்கும் புரோகிராம்களையும் இங்கு காணலாம்.
6. நாமாக எப்படி நீக்குவது? முதலாவதாக, சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுத்தலாம். வைரஸ், மால்வேர் அல்லது ஸ்பைவேர் வரும் முன், கம்ப்யூட்டர் நல்ல நிலையில் இயங்கும்போது, குறிப்பிட்ட நாள் ஒன்றை சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட்டாக வைத்திருப்பது இதற்கு உதவும். அந்த நாளுக்குக் கம்ப்யூட்டரை மீட்டுச் சென்றால் (ரெஸ்டோர்), கம்ப்யூட்டரில் பதிந்துள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் நீக்கப்படும்.
கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் நுழைந்து, கிடைக்கும் பாப் அப் மெசேஜ்களை காப்பி எடுத்து, இணையத்தில் தேடுதல் சாதனங்களில் பேஸ்ட் செய்து தேடினால், இதே போன்ற இன்னல்களுக்கு ஆளானவர்கள், என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்று தகவல் கிடைக்கும். அதே போன்ற நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்ளலாம்.
7. எதிர்காலத்தில் பாதிப்பைத் தடுக்க? ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி ஸ்பைவேர் மற்றும் பயர்வால் சாப்ட்வேர் தொகுப்புகளை நிறுவி, அவ்வப்போது அவற்றை அப்டேட் செய்து வைப்பது, நம் கம்ப்யூட்டரை தாக்குதல் களிலிருந்து காப்பாற்றும். CNET TechTracker மற்றும் Mozilla Plugin Checker போன்ற புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டர் எதிர்ப்பு புரோகிராம்களை எப்போது அப்டேட் செய்திட வேண்டும் என நினைவூட்டல்களை அளிக்கும். AVG LinkScanner மற்றும் McAfee Site Advisor போன்றவைகள் நாம் ஆபத்தான இணைய பக்கங்களில் நுழையச் செல்கையில் எச்சரிக்கும்.
NoScript Firefox என்ற பயர்பாக்ஸ் ப்ளக் இன் புரோகிராம், ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் பிளாஷ் போன்றவற்றில் கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைத் தடுக்கும்.
பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாட்டினை எப்படி மேற்கொள்ள லாம் என்பதற்கு http://www.microsoft.com/security/pypc.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நல்ல பல ஆலோசனைகளைத் தருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தருகிறது.அவை Security Essentials, Windows Defender. Windows Security Starter Kit ஆகியவை ஆகும்.
நம் கம்ப்யூட்டர்களில் எப்படியாவது நுழைந்து, தனி நபர் தகவல்களைத் திருடி, பணம் திருடும் கூட்டம் தொடர்ந்து மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களைத் தயாரித்துக் கொண்டு அனுப்பி வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. எனவே பாதுகாப்பாக இருந்தாலும், சில வேளைகளில் அவர்கள் வெற்றி பெறுகின்றனர். எனவே தான், இந்த புரோகிராம்களின் செயல் தன்மையினை அறிந்து, நாம் முறையாகக் கம்ப்யூட்டர்களைப் பாதுகாப்பது நம் கடமையாகிறது.

சர்க்கரை நோய் மற்றும் தீய கொழுப்பை குறைக்கும் பிஸ்தா!

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இருதய நோய் தாக்குவதற்கான அபாயம் 4 மடங்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இருதய நோய் தலைநகராக
இந்தியா உருவெடுத்து வருகிறது.

நாள்தோறும் 1 அல்லது 2 பிஸ்தா பருப்புகளை சாப்பிடுவதன் மூலமாக, 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு தீமை செய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் என டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பிஸ்தா சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. உயர் கார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடும் போது, அதனுடன் உணவுப் பொருளாக பிஸ்தாவைச் சாப்பிடும் போது, உடலுக்குள் கார்போஹைட்ரேட் கிரகிக்கப்படுவது குறைகிறது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

எக்ஸெல் டிப்ஸ் - இரு தேதிகளுக்குஇடையே

எக்ஸெல் தொகுப்பு இரு தேதிகளுக்கிடையே உள்ள நாட்களைத் தெளிவாக ஆண்டு, மாத மற்றும் நாட்கள் அடிப்படையில் காட்டும். இதற்கு DATEDIF என்ற பங்சன் பயன்படுகிறது.இதனுடைய பயன்பாடு இப்படி இருக்க வேண்டும்–– =DATEDIF(Date1, Date2, Interval) இதில் Date1 என்பது முதல் தேதி; Date2 என்பது இரண்டாம் தேதி. Interval என்பது இடைப்பட்ட காலம் எதில் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பது. இதில் Date1 என்பதில் தரப்படுவது Date2 க்குப் பிந்தைய தேதியாக இருந்தால் அல்லது இரண்டில் ஒன்று சரியான தேதியாக இல்லாமல் இருந்தால் DATEDIF பயன்பாடு #VALUE என்ற பிழைச் செய்தியைக் காட்டும். அதே போல Interval என்பதற்குச் சரியான அலகு தரப்படாவிட்டாலும் பிழைச் செய்தி காட்டப்படும். இன்டர்வெல் பகுதியினை பார்முலாவிற்குள்ளேயே கொடுப்பதாக இருந்தால் அதனை மேற்கோள் குறிகளுக்குள் தர வேண்டும். எடுத்துக் காட்டாக =DATEDIF(Date1,Date2,”m”) என இருக்க வேண்டும். இவற்றில் m என்பது இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள முழுமையான மாதத்தினைக் குறிக்கும். d என்பது நாட்களைக் குறிக்கும். y என்பது ஆண்டுகளைக் குறிக்கும். ym எனக் கொடுத்தால் இரண்டு நாட்களுக்கு இடையேயான முழுமையான மாதங்களை, அவை எத்தனையாயிருந்தாலும் அவை அனைத்தும் ஒரே ஆண்டின் மாதங்களைப் போலக் காட்டும். அதே போல yd என்பது இரண்டிற்கும் இடையே உள்ள முழு நாட்களைக் காட்டும்.
காலியான செல்களை அறிய ஒர்க் ஷீட் ஒன்றில் குறிப்பிட்ட செல்களிடையே எத்தனை செல்களில் டேட்டா அமைக்கவில்லை என்று தெரிந்தால் உங்களுக்கு வேறு சில கணக்குகளை அமைத்திட வசதியாக இருக்கும். இதற்கு என்ன செய்திடலாம்? மானிட்டரில் பென்சில் முனையால் தொட்டு தொட்டு எண்ணவா முடியும்? எடுத்துக் காட்டாக A1:B15 என்ற செல்களிடையே சிலவற்றை விட்டுவிட்டு டேட்டா தந்திருக்கிறீர்கள். காலியான செல்களின் எண்ணிக்கையப் பார்ப்போமா? 30 செல்களில் 14ல் டேட்டா உள்ளது. இதனை அறிய கீழே தந்துள்ள பங்சனைப் பயன்படுத்தலாம். =COUNTBLANK(A1:B15) என்று இன்னொரு செல்லில் தந்தால் 16 என விடை வரும்.
கண்டிஷன் பார்முலா
ஒர்க் புக் ஒன்றில் பல செல்களில் எண்களை அமைக்கிறீர்கள். பொருட்களின் விலையாகவோ அல்லது மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களாகவோ இருக்கலாம். இவற்றில் குறிப்பிட்ட எண்களுக்கு இடையே உள்ள எண்கள் எத்தனை இருக்கின்றன என்று எப்படி அறிவது? எடுத்துக் காட்டாக விலையோ அல்லது மதிப்பெண்களோ A1:A7 ஆகிய செல்களில் 24,35,36,38,37,48,42 என அமைத்திருக்கிறீர்கள். இவற்றில் 30 முதல் 40 வரையில் வேல்யூ உள்ள செல்கள் எத்தனை என்று எப்படி அறிவது? இதற்கான பார்முலாவினை இன்னொரு செல்லில் அமைக்க வேண்டும். அந்த செல்லையும் பார்முலாவில் குறிப்பிடலாம்
பார்முலா இப்படி அமைய வேண்டும். =COUNTIF(A1:A7,”>”&B1)-COUNTIF(A1:A7,”>”&B2) இங்கு கிரைட்டீரியா B1 மற்றும் B2 செல்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசல்ட் என்னவாக இருக்கும். 4 என்று கிடைக்கும்.

'கிவி பழம்' உடல்நலனுக்கு நல்லது

கிவி பழம்'(பசலிப்பழம்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில்
கூறப்பட்டுள்ளது.

தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் கிவி. இதை நம்மூரில் கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம்.

அதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக லேட்டஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது.

ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் கூறியதாவது: கிவி ப்ரூட்டில் ஏராளமான மினரல்கள், விட்டமின்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழமான அதில் விட்டமின் ஏ, சி, இ அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட பலவற்றில் இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.

விட்டமின் சியின் பணிகளை விட்டமின் இ அதிகரிக்கும். இந்த இரண்டும் கிவி ப்ரூட்டில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. கிவி ப்ரூட்டில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும். ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார். கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.

கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள்

கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள்
கூகுள் என்றாலே எளிமை தான். அவர்களின் அனைத்து வசதிகளிலும் கடைபிடிக்கும் தாரகமந்திரம். கூகுளின் ஒரு அங்கமான கூகுள் குரோம் வெளிவந்து இரண்டே வருடங்களில் சக்கை போடு போட்டு அனைவராலும் உபயோகபடுத்த படும் ஒரு இணைய உலவி ஆகும். இதில் உள்ள சிறப்பம்சமே எளிமை தான். வெளியில் பார்ப்பதற்கு ஒன்றுமே இருக்காதது போன்று காணப்படும்.
மிகவும் எளிமையான இந்த உலவியில் எவ்வளவோ வசதிகள் மறைந்து கிடக்கின்றன. இந்த வசதிகள் அனைவராலும் பயன்படுத்த படுகிராதா என்றால் அது சந்தேகமே ஆகவே அதில் இருந்து சில முக்கியமான வசதிகள் உங்கள் பார்வைக்கு.

1) PIN TAB

* உங்கள் குரோம் உலவியில் TAB வசதி இருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரே விண்டோவில் பல பக்கங்களை திறப்பதற்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
* இந்த TAB களை கையாள PIN TAB என்ற வசதி இங்கு உள்ளது. இந்த வசதியை பெற TAB மீது ரைட்க்ளிக் செய்து பாருங்கள்.
* இந்த PIN TAB வசதி மூலம் நம்முடைய TABஇன் அளவை குறைக்கலாம்.

2) PASTE AND GO/ PASTE AND SEARCH

* குரோமின் அட்ரஸ் பாரில் ரைட் க்ளிக் செய்தால் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.
* இதில் ஏதேனும் URL காப்பி செய்து பேஸ்ட் செய்து விட்டு பின்னர் ENTER கொடுப்பதிற்கு பதில் இந்த வசதியை பயன் படுத்தினால் நாம் ENTER கொடுக்காமலே அந்த பக்கம் நமக்கு ஓபன் ஆகும்.

3) DRAG AND DROP DOWNLOADS

* இந்த வசதி மூலம் இணையத்தில் உள்ள படங்களை நம் கணினியில் சேமிக்க ரைட் க்ளிக் செய்து SAVE IMAGS AS என்று கொடுத்து தான் சேமிக்க வேண்டிய என்ற அவசியம் இல்லை.
* நமக்கு தேவையான படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தி இழுத்து நம் கணினியில் விட்டாலே போதும் அந்த படங்கள் நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.

4) CALCULATOR

* கூகுள் குரோமின் அட்ரஸ் பார் கூகுள் SEARCH ENGINE ஆக உபயோகிக்கலாம் என்று அனைவருக்கும் தெரியும்.
* ஆனால் அதை சிறிய கணக்குகள் போதும் கால்குலேட்டராகவும் உபயோகிக்கலாம்.
* உதாரனத்திற்க்கு 1254*5 என்று நீங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்தால் அடுத்த வினாடியே அதற்க்கான விடை உங்களுக்கு வரும்.


5) RESIZE WEB FORMS

* நாம் இணையத்தில் பல தளங்களில் உறுப்பினராகி இருப்போம் அல்லது ஏதேனும் தளங்களில் FEEDBACK போடுவதற்கும் இந்த WEB FORMS கொடுக்கப்பட்டிருக்கும்.
* இந்த படிவங்களை கூகுள் குரோம் மூலம் சிறியதாகவும் பெரியதாகவும் ஆக்கலாம்.

6) TASK MANAGER

* நம் கணினியில் task manager என்று இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். CTRL+ALT+DEL கீகளை ஒருசேர அழுத்தினால் கணினியின் TASK MANAGER வரும்.
* இதில் எந்தெந்த வேலைகள் எவ்வளவு மெமரியை உபயோகிக்கின்றன என்றும் மற்றும் ஏதேனும் ப்ரோக்ராம் ஹாங் ஆகி நின்றால் இதனை உபயோகித்து அதை நிறுத்திவிடும்.
* இதே போன்று கூகுள் குரோமில் ஒரு TASK MANAGER வசதி உள்ளது. இது பிரவுசரில் இதே வேலையை செய்ய உதவுகிறது.
* SETTING- TOOLS - TASK MANAGER என்றும் செல்லலாம் அல்லது உங்கள் கீபோர்டில் SHIFT+ESC அழுத்தியும் இந்த வசதியை பெறலாம்.

7) ABOUT : MEMORY

* கூகுள் குரோமின் அட்ரஸ் பாரில் about:memory என்று டைப் செய்து என்ட்டர் கொடுங்கள்.
* உங்கள் பிரவுசரில் நீங்கள் திறந்துள்ள பக்கங்கள் எவ்வளவு மெமரியை எடுத்து கொண்டுள்ளன என்ற அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.

8) FULL SCREEN

* கூகுள் குரோமில் நீங்கள் தற்போது பார்த்து கொண்டிருக்கும் விண்டோவை FULL SCREEN மோடில் பார்க்க வேண்டுமேண்டுமா
* உங்கள் கீபோர்டில் F11 கீயை அழுத்தவும். உடனே உங்கள் ஸ்க்ரீன் பெரிதாக காட்டப்படும். மீண்டும் பழைய நிலைக்கு வர அதே கீயை திரும்பவும் அழுத்தவும்.

9) COPY TEXT ONLY

* நாம் ஏதேனும் இணைய பக்கத்தில் உள்ள தகவலை சேமிக்க நினைப்போம். ஆனால் அதை காப்பி செய்து நம் கணினியில் பேஸ்ட் செய்தால் அந்த பக்கத்தில் உள்ள அனைத்தும்(படங்களோடு) நமக்கு வரும்.
* ஆனால் நமக்கு வெறும் எழுத்தக்கள் மட்டும் வேண்டுமென்றால் நீங்கள் முதலில் அந்த இணைய பக்கத்தை காப்பி செய்து கொள்ளுங்கள்.
* GMAIL, GOOLE DOC போன்ற இடங்களில் CTRL+SHIFT+V அழுத்துங்கள். நீங்கள் காப்பி செய்த பக்கங்களில் உள்ள எழுத்தக்கள் மட்டும் பேஸ்ட் ஆகி இருக்கும்.
* அதை காப்பி செய்து உங்கள் கணினியில் நீங்கள் சேமித்து கொள்ளலாம்.

10) APPLICATION SHORTCUTS

* நீங்கள் ஏதேனும் வலைதளத்தை தினமும் ஓபன் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த தளத்தின் URL டைப் செய்து ஓபன் செய்ய வேண்டிய அவசியமில்லை.
* அந்த தளத்திற்கு ஒரு SHORTCUT கீ வைத்து கொள்ளலாம். நம் STRAT MENU , QUICK LAUNCH, DESKTOP போன்ற இடங்களில் அமைத்து கொள்ளலாம்.
* இதற்க்கு SETTINGS- TOOLS - CREATE APPLICATION SHORTCUT என்பதை க்ளிக் செய்து இந்த வசதியை பெறலாம்.

விருப்பப்பட்ட புரோகிராமில் திறக்க

நாம் திறக்க விரும்பும் புரோகிராம்களை, ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கும் புரோகிராம்களில் தான் திறந்து காட்டுகிறது. நாமும், அப்படியே பழகியிருக்கிறோம். ஆனால், ஓப்பன் சோர்ஸ் இயக்கம் வந்த பின்னர், பல தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் என்று சொல்லப்படும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளால் தயாரித்து இலவசமாக வழங்கப்படும் புரோகிராம்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டம் இனங்காணும் புரோகிராம்களைக் காட்டிலும், கூடுதல் வசதிகள் கொண்டதாக உள்ளன. எனவே அந்த புரோகிராம்களில், நாம் குறிப்பிடும் பைல்களைத் திறந்து இயக்க நாம் விருப்பப்படுவோம்.
குறிப்பிட்ட வகை பைல்களை அந்த புரோகிராம்களில் தாமாகத் திறக்கப்பட வேண்டும் என எண்ணுவோம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் .txt பைல்களை தான் கொண்டுள்ள நோட்பேட் புரோகிராமில் தான் திறக்கும். இதற்குப் பதிலாக Notepad ++ போன்ற பல புரோகிராம்கள் இப்போது கிடைக்கின்றன. இவற்றில் திறக்க நாம் விரும்பலாம்.
இதே போல இமேஜ் பைல்கள், பிரசன்டேஷன் பைல்கள், ஆகியவற்றைப் பயன்படுத்த நமக்கென சில விருப்பமான புரோகிராம்கள் இருக்கலாம். நம் விருப்பத்திற்கேற்ப பைல்களைத் திறக்கும் புரோகிராம்களை, நிலையாக அமைத்துக் கொள்வதற்கு விண்டோஸ் இடம் தருகிறது. அதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.
திறக்க விரும்பும் பைலை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Open With என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் பட்டியலில் Choose Program என்பதைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடவும்.
இனி, உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள, இந்த பைல் சார்ந்த புரோகிராம்கள் பட்டியல் கிடைக்கும். இதில் உங்களுக்கு உகந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம். அந்த பட்டியலில் நீங்கள் எதிர்பார்க்கும், உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துள்ள குறிப்பிட்ட புரோகிராமின் பெயர் காட்டப்படவில்லை என்றால், Browse என்ற பட்டனில் கிளிக் செய்திடலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். இதில் Program Files என்ற போல்டருக்குச் சென்று, நீங்கள் விரும்பும் .exe புரோகிராமின் பைலைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
புரோகிராமின் பைலைத் தேர்ந்தெடுத்த பின்னர், Always use the selected program to open this file என்பதில் கிளிக் செய்துவிடவும். இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பும் பைல் மீது டபுள் கிளிக் செய்திடுகையில், நீங்கள் தேர்ந்தெடுத்த புரோகிராம் திறக்கப்பட்டு, அந்த பைல் இயக்கப்படும்.
இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. My Computer ஐகான் மீது கிளிக் செய்து திறந்து கொள்ளவும். Tools செல்லவும். கிடைக்கும் பட்டியலில் Folder Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு தரப்படும் பட்டன்களில் Change என்னும் பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் நீங்கள் விரும்பும் பைல் வகையினைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தவுடன், கிடைக்கும் Choose Program பட்டியலில், தேர்ந்தெடுத்த பைலுக்கான புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். மேலே சொன்ன வழிகளை எந்த வகை பைலுக்கும் மாற்றி அமைக்கலாம். எனவே விருப்பப்பட்ட புரோகிராமில் தான், நீங்கள் விரும்பும் பைல், உங்கள் கம்ப்யூட்டரில் திறக்கப்பட வேண்டும் என விரும்பினால், மேலே சொன்ன வழிகளைப் பின்பற்றி மாற்றிக் கொள்ளுங்கள்.

அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?!

ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை. இதயநோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

ஒருநாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதேபோல் சிறுநீர் அடிக்கடி வெளியேறக்கூடாது.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதற்கு குறைந்த நேரத்தில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.

சிறுநீரகத்தில் பிரச்சினை, மது குடித்தல், புகைப்பழக்கம், சிறுநீர் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

முதுமையில் புராஸ்டேட்(விந்து) சுரப்பி வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஆனால் குளுகுளு அறையில் இருப்பது, பரபரப்பாக செயல்படுவது, பதட்டத்தில் இருக்கும் நேரங்களில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்பட்டால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை!

இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது?

நமது உடல் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப் போது -ஓய்வு கிடைக்கும். அதாவது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கினால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும்.
ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன், இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது? இதயம் 'துடிக்கவில்லை' என்றால், அசுத்த ரததம் தூய்மையாகாது. உடல் திசுகளுக்கு, சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் பேய்ச் சேராது. போதுமான சத்து கிடைக்காமல் திசுக்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே 'இறந்துபோகும்'.
இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது.

உங்களுக்குத் தெரியுமா ?

1. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் தொகுப்பில் சேவ் என்ற செயல்பாட்டிற்கான ஐகான் இன்னும் பிளாப்பி டிஸ்க்காகவே உள்ளது. அதிலும் அதன் ஷட்டர் பின்புறமாக இழுக்கப்பட்ட நிலையில் உள்ளது.
2.இன்று இணையத்திற்கான ஏகப்பட்ட சர்ச் இஞ்சின்கள் உள்ளன. முதல் முதலில் உருவாக்கப்பட்ட சர்ச் இஞ்சின் குறித்துப் பார்ப்போமா! Archie என்ற பெயரில் முதல் சர்ச் இஞ்சின் உருவானது. இதனை Alan Emtage என்பவர் தயாரித்தார். இவர் McGill என்ற பல்கலைக் கழகத்தில் அப்போது மாணவராக இருந்தார். இது 1990ல் உருவானது.
3. உலகின் சிறிய ஹார்ட் டிஸ்க்கை உருவாக்கிய பெருமை தோஷிபா நிறுவனத்தைச் சேரும். 0.85 அங்குல அளவில் இந்த ஹார்ட் டிஸ்க் தயாரிக்கப்பட்டது. ஒரு அங்குலத்திற்கும் குறைவான அளவிலான டிஸ்க்கில் பல கிகாபைட் அளவிலான தகவல்களைக் கொண்டிருந்ததும் இந்த டிஸ்க்கே.
4. இன்டர்நெட்டில் உலா வருபவர்கள் விக்கி பீடியாவைப் (Wikipedia) பயன்படுத்தாமல் இருக்க மாட்டீர்கள். அனைத்திற்கும் அதன் ஆதி அந்தம் முதல் தகவல்களைத் தரும் இணைய களஞ்சியமாகும். நீங்களும் உங்களிடம் உள்ள தகவல்களை இதில் இடலாம் என்பது இதன் சிறப்பு. இந்த Wikipedia என்ற சொல் ஏன் இதற்கு வைக்கப்பட்டது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா! ஹவாய் மொழியில் “Wiki” என்றால் விரைவில் என்று பொருள். அதோடு என்சைக்ளோ பீடியாவின் பின் பகுதி சேர்க்கப்பட்டு இந்த சொல் உருவாக்கப் பட்டதாம்.
5. பல வீடுகளில் மைக்ரோ ஓவன் அடுப்பு உள்ளது. இது பயன்படுத்தும் மின்சாரம் 600 வாட் முதல் 1100 வாட் வரை ஆகும்.
சரி, உங்கள் மொபைல் போன் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? ஜஸ்ட் 0.6 வாட்ஸ் தான்.
6. இமெயிலில் @ என்ற எழுத்து பயன்படுத்தப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது. இது at என்ற ஆங்கில சொல்லின் சுருக்கம் ஆகும். ‘இந்த இடத்தில்’ என்பதனை இது பொருளாகக் கொண்டுள்ளது. இந்த முகவரியில் உள்ள சர்வரில் இவருக்கு இன் பாக்ஸ் உள்ளது என்பதே ஒரு இமெயில் முகவரியாகும்.
7.சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.
8. எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில் உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் தகவல்கள்.

கூகுளில் என்ன புதிது ?

சாப்ட்வேர், ப்ளக் இன், பிரவுசர், அப்டேட், இன்னும் என்னனென்னவோ கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கான சாதனங்களை, அவ்வப்போது கூகுள் தந்து கொண்டிருக்கிறது. புதிதாக என்ன தந்து கொண்டிருக்கிறது என்று அறிய, நாம் பல பிரிவுகளுக்குச் சென்று தேட வேண்டியதில்லை. கூகுள் தன் தளத்தில் இதற்கென Google New என்று ஒரு லிங்க் தந்துள்ளது. இதில் கிளிக் செய்தால், http:/www.google.com/newproducts/ என்ற முகவரியில் உள்ள தளம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்படுகிறோம். இங்கு கூகுள் தந்துள்ள பல புதிய வசதிகளைக் காணலாம். இவை கூகுள் அண்மையில் தந்துள்ள கூகுள் இண்ஸ்டன்ட் என்னும் பெரிய விஷயமாகவும் இருக்கலாம். அல்லது பழைய வசதிகளுக்கான அப்டேட் ப்ளக் இன்களாகவும் இருக்கலாம். இதில் பல நமக்குத் தெரியாத வசதிகளாகவும் இருக்கலாம். வரிசையாகக் கட்டங்களில், ஒரு நாளுக்கு முன், இரண்டு நாட்களுக்கு முன் என கூகுள் தந்த புதிய வசதிகள் கட்டம் கட்டப்பட்டு தரப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளையும் காண ஒரு கீழ்விரி மெனு ஒன்று பட்டியலாகத் தரப்பட்டுள்ளது. மேலும் நமக்கு ஆர்வம் உள்ள பிரிவுகளுக்கு எனவும் ஒரு கட்டம் தரப்பட்டுள்ளது. இதில் வர்த்தகம், கல்வி, பொழுது போக்கு எனப் பல பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகவும் நாம் தேடிப் பார்க்கலாம். இப்படியே பல பக்கங்கள் தரப்பட்டுள்ளன.
ஆனால், இந்த தளத்தின் சிறப்பு, புதிய விஷயங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான். கிட்டத்தட்ட, இது கூகுள் அக்கவுண்ட்ஸ் பக்கம் போலத்தான். இங்கு சென்றால், உங்களின் இமெயில் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டீர்களோ, அவை அனைத்தும் பட்டியலிடப்பட்டுக் கிடைக்கும்.
இருப்பினும் கூகுள் தந்துள்ள சில புதிய வசதிகள் சிலவற்றை இங்கு காண்போம். கூகுள் மிக புத்திசாலித்தனமாக ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் முகவரி Google Image Labeler (http://images.google.com/imagelabeler/) இங்கு சென்றால், கேம்ஸ் போல ஒரு செயல்பாடு கிடைக்கிறது. உங்களுக்கு ஒரு கூட்டாளியை கூகுள் கண்டறிந்து தரும்.அவருடன் இமேஜ்களுக்கு பெயர் சூட்டும் விளையாட்டினை விளையாட வேண்டும். கூகுள் தேடுதளம் கண்டறியும் இமேஜ்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும்.உடன் உங்கள் கூட்டாளி அதனை ஏற்க வேண்டும். ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு பாய்ண்ட். இப்படியே தொடர்ந்து விளையாடலாம். கூகுள் தளத்திற்கு, அதன் இமேஜ்களுக்குப் பெயர் கிடைக்கிறது. அதே நேரத்தில், இதற்கென எந்த செலவும் அதற்கு ஏற்படப் போவதில்லை. இதில் நிறையப் பேர் உற்சாகத்துடன் கலந்துகொள்கின்றனர். அடுத்ததாக கூகுள் பேக் மேன். பேக்மேன் என்ற பிரபலமான கேம்ஸ் (Pacman )அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் ஆனதற்காக, சென்ற மே மாதம், கூகுள் தன் தளத்தில் இந்த விளையாட்டினை அளித்தது. லட்சக்கணக்கான பேர், தங்களின் வேலைக்கு இடையே இதில் விளையாடி மகிழ்ந்தனர். சிலர் தங்களின் வேலையில் கவனம் செலுத்தாமல், விளையாண்டு கொண்டே இருந்தனர். பின்னர், சில நாட்கள் கழித்து, இந்த கேம் நீக்கப்பட்டது.
ஆனால் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இதனைத் தனித் தளத்தில் தந்துள்ளது கூகுள். அதன் முகவரி http://www.google.com/pacman/. இந்த தளம் சென்றால், இந்த கேம் விளையாடி மகிழலாம். இந்த கேம் கீழாக, கூகுள் தேடுதளமும் கிடைக்கிறது.
அடுத்து கூகுள் லேப்ஸ் (GoogleLabs) என்ற தளத்தைக் கூறலாம். இங்கு கூகுள் தளத்தின் புதிய இலக்குகள், தொழில் நுட்பம், அதன் சோதனைச் சாலையிலிருந்து புதியதாக என்ன வந்துள்ளது என்று அறியலாம். இதன் தளம் http:/www.googlelabs.com. இதுவே நமக்கு கூகுள் தரும் புதிய வசதிகளுக்கான நுழைவு வாயிலாகவும் அமைகிறது.

வெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்துவத் தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் இது மருத்துவத் தாவரமாகவும் விளங்குகிறது. மட்டுமின்றி வெந்தயத் தழை சிறந்த கீரையாகவும் பயன்படுத்தப்படுகிறது. முற்காலத்திலிருந்தே வெந்தயம் உணவு வகைகளில், மணமூட்டவும், சுவையூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.

இது உணவில் பல்வேறு முறைப்படி சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருளுக்கு மணத்தை ஊட்டுவது மட்டுமின்றி, சத்துக்களையும் தருகிறது. கறி, கூட்டு, தோசை, இட்லிகளிலும், சாம்பார்பொடி, ரசப்பொடி, மல்லி, மஞ்சள் இவைகளோடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு குழம்புகளில் சேர்க்கப்படுகிறது. பேக்கரி, பிஸ்கட், ரொட்டி தயாரிப்பிலும் வெந்தயம் பயன்படுகிறது.

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் "ஏ" போன்றவைகளும் அடங்கியுள்ளன.

பயன்கள்:
வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையலிலும் பயனாகிறது.

மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணை எடுக்கப்படுகிறது. இது சென்ட், மணப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

ஒருவகை மஞ்சள் சாயம் தயாரிக்கப்பட்டு துணிகளுக்கு வண்ணமேற்ற மாத்திரைகளுக்கு வண்ணம் கொடுக்க பயன்படுகிறது.
வெந்தயத்தை ஊற வைத்து எடுக்கப்படும் பசை நூற்பு ஆலைகளிலும், அச்சு தொழில்களிலும் பயன்படுகிறது.

சீயக்காய் தூளில் வெந்தயம் சேர்க்கப்படுகிறது.

வெந்தயத்தின் தன்மைகள்:
வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.

சித்த யுனானி முறைகளில் வெந்தயம்:
சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்:
சீதபேதி குணமாக:-
20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும்.

சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.

வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும்.

வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.

வயிற்று வலி, பொருமல் நீங்க:-
மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.

இரவில் வெந்தயத்தை அரிசி கஞ்சியில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வலி தீரும்.

வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும்.

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.

ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும்.
இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

கணைச்சூடு நீங்க:-
வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும்.

20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.
மாதவிடாய் வயிற்று வலி நீங்க:-

100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும்.

வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.

உடல் பலம் ஏற்பட:-
200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும்.

தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படும்.

முகப்பரு நீங்க:-
ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருவில் பூச பரு மறையும்.


பேன், பொடுகு நீங்க:-
தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும்.
பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.

வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.

வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வர தோல் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும் இந்த களி.

வைரஸ் பாதிப்பா ? கம்ப்யூட்டரை ஒதுக்கி வை

பாட்நெட்(Botnet) என்னும் வைரஸ் புரோகிராமினை, அடக்கித் தடுப்பது பெரிய வேலையாய் உள்ளது. இந்த வகை வைரஸ்கள் தாக்கும் வழிகள் பலவாய் அமைந்துள்ளன. எனவே இதனை எதிர்க்கும் புதிய வழி ஒன்று குறித்து மைக்ரோசாப்ட் எண்ணி வருகிறது.
இந்த பாட்நெட் வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஸ்காட் சார்னி, இதற்கான மாற்று வழியினை அறிவித்துள்ளார். பாட்நெட் பாதித்த கம்ப்யூட்டர்களை, இணைய இணைப்பில் இருந்து ஒதுக்கி வைத்திடும் வழிகளை ஆய்வு செய்து வருகிறார். இவருடைய திட்டப்படி, ஒவ்வொரு கம்ப்யூட் டரும் இணைய இணைப்பில் இருக் கையில் சோதனை செய்யப்பட்டு ஒரு ""ஹெல்த் சர்டிபிகேட்'' வழங்கப்படும். முதலில் ஒரு கம்ப்யூட்டர் அனைத்து பேட்ச் பைல்களாலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா, அதன் வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு அப்டேட் செய்யப்பட்டு சரியாக இயங்குகிறதா என்று அறியப்படும். பின் வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை நடத்தப்படும். பாட்நெட் வைரஸ் இருப்பின் உடனே, அந்த கம்ப்யூட்டர், ஆன்லைனிலேயே, குவாரண்டைன் எனப்படும் நோய் தடுப்பு பிரிப்பு கூடத்திற்கு ஒதுக்கப்படும்.
இது இறுதி நடவடிக்கையாகத்தான் இருக்கும். இதனால், இந்த கம்ப்யூட்டரிலிருந்து, இணையத்தில் இணைந்திருக்கும் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு, இந்த வகை வைரஸ்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். இந்த திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு வரும் என்று இவர் எதிர்பார்க்கிறார். வைரஸ்கள் அதிகம் பெருகி வரும் இந்நாளில், ஒருவர் செய்யாத குற்றத்திற்கு இணைய தடுப்பு தண்டனை என்பது அதிகம் என்று எதிர்ப்பு வரலாம். இருப்பினும் இவர் தன்னுடைய திட்டத்தினையும் நியாயப் படுத்துகிறார். எப்படி அம்மை போன்ற தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு ஊசி போடாதவர்கள், அந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு இதே நோய்களைத் தர முடியுமோ அது போலத்தான் தடுப்புமுறைகளை மேற்கொள்ளாத, வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களும் உள்ளன. எனவே நோயாளிகளை பாதுகாப்பு தடுப்பு மையங்களில் வைப்பது போல, கம்ப்யூட்டர்களையும் ஒதுக்கி வைப்பதில் தவறில்லை என்கிறார். அமெரிக்காவில் சில இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள், இது போன்ற திட்டங்களை இப்போதும் அமல்படுத்தித்தான் வருகின்றன. இருப்பினும், உலகம் முழுமையும் என்கிற போது, இதனை அமல்படுத்துவதில் தடைகள் ஏறபடலாம். இந்த திட்டம் முழுமையாக அறிவிக்கப்படும்போதுதான், எதிர்ப்பு குறித்து நாம் அறியலாம்.

முகவாத நோய்க்கு சித்த மருத்துவம்

குளிர் காலத்தில் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் ஆகியவை ஏற்படுவது சகஜம். ஆனால் எவ்வித தடுப்பும் இல்லாமல் பனியில், குளிரில் இருப்பவர்களுக்கு முகவாதம் என்னும் நோய் தாக்குகிறது. காது, மூக்கு வழியே செல்லும் குளிர் காற்று முகத்துக்கு செல்லும் ரத்தநாளங்களை தாக்குவதால் முகம் கோணலாகும்! ஏழாவது முக நரம்பு பாதிப்பினால் இந்த பாதிப்பு உண்டாகிறது.

இதற்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஒரு காரணம். இந்த நோய்க்கு `பெல்ஸ் பாஸ்சி'- முகவாதம் என்று பெயர். ஆண்களைவிட பெண்களை இந்த நோய் அதிகம் தாக்கும்!

பிறவியிலேயே அல்லது குளிர்காலத் தாக்குதலால் முகம் கோணல் ஆகும்போது அதை சித்த மருத்துவத்தில் முழுமையாக குணப்படுத்த மருந்துகள் உள்ளன.

* மாவிலங்கு மரப்பட்டை - 20 கிராம்
* மூக்கிரட்டைப் பட்டை வேர் - 20 கிராம்
* வெள்ளைச் சாரணை வேர் - 20 கிராம்

ஆகிய மூன்றையும் நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் `நண்டுகல் பற்பம்' சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும்.

அதேபோல், சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை `தோள்பட்டை உறைவு'. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பற்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.

- டாக்டர் சோமசுந்தரம், சென்னை.

`ஹைவேஸ்' - பெயர் வந்தது எப்படி?


நகரங்களுக்கு இடையே பொதுமக்கள் பயன்படுத்தத்தக்க வகையில் பொதுவான சாலைகள் முதன்முதலில் ரோம் நாட்டில் அமைக்கப்பட்டன. அவை, மற்ற தனியார் அமைத்த சாலைகளை விட உயரமாகவும், சிறந்ததாகவும் இருந்தன. எனவே, பொதுச் சாலைகள் `ஹைவேஸ்' என்று அழைக்கப்பட்டன. இதே போல, `ஹை சீஸ்' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டின் கடலோரத்தை ஒட்டிய மூன்று மைல் தூர கடல் பகுதி பொதுமக்களுக்கு உரியது என்ற பொருளில், `பொதுவானது' அல்லது `பொதுமக்களுக்கு உரியது' என்று உணர்த்தும் விதத்தில் `ஹை' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பலம் தரும் பீட்ரூட் கீரை

பெரும்பாலான கிழங்கு வகைகளில் நார்சத்துக்கள் அதிகம் காணப்படுவதில்லை. வெறும் கார்போஹைட்ரேட் சத்துகள் மட்டுமே பெருமளவு காணப்படுகின்றன. அதிலும் நாம் சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான கிழங்குகள், வெறும் ருசிக்காக மட்டுமே பயன்படுகின்றன. கார்பாஹைட்ரேட் அதிகம் நிறைந்த கிழங்குகளை சிப்ஸ், வறுவல், பொரியல் என எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவதால் அதில் தங்கியுள்ள உயிர்சத்துகள் அழிந்து விடுகின்றன. கிழங்கு மற்றும் விதை வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது அத்துடன் அதன் மேல் பாகங்களான இலை, விதை மற்றும் தண்டுகளையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் காரட், முள் ளங்கி, பீட்ரூட், நூல்கோல், வெந்தயம், சீரகம், ஓமம், வெங்காயம், பூண்டு போன்றவற்றின் கீரைப் பகுதிகளையும் உணவில் சூப் அல்லது அரைத்த விழுதாக சேர்த்து பயன்படுத்தலாம். ஏனெனில் கிழங்குகளில் இல்லாத சில உயிர்சத்துக்களும், கனிமங்களும், அத்தியாவசிய உப்புகளும், நார்சத்துகளும் இந்த கீரைகளில் பெருமளவு உள்ளன. நாம் உண்ணும் கிழங்குகளில் பீட்ரூட்டின் பங்கு இன்றியமையாதது. சமையலில் ருசியையும்,உணவுகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் தருவதுடன், அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதற்கு பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டிலிருந்து சாயம் தயாரிக்கப்பட்டு, பலவிதமான உணவுப் பொருட்களும் நிறமேற்றப்படுகின்றன. பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கீனோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச்செடிகள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன. கிழங்குகளைவிட இதன் இலைகள் ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்டுள்ளன. கிழங்கு மற்றும் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் சி மற்றும் ஏராளமான வைட்டமின்களும், கனிமங்களும் காணப்படுகின்றன. இதிலுள்ள பீட்டைன் என்னும் ஆல்கலாய்டு இருதயத்தை பாதுகாப்பதுடன், போலிக் அமிலம், ஏ வைட்டமின், பி வைட்டமின்கள் மற்றும் புரொஜஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் செயல்பாட்டிற்கும் பெருமளவு உதவுகின்றன. இலை மற்றும் கிழங்குகள், சிறுநீரை நன்கு பெருக்கி, இதய வீக்கத்தை குறைக்கின்றன. பீட்ரூட்டிற்கு இனிப்பு சுவை இருந்த போதிலும் இதன் இலை மற்றும் கிழங்கு சாறானது ரத்த சர்க்கரையளவை குறைக்கின்றன. கல்லீரலின் கொழுப்பை கரைக்கின்றன. பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடாக மாற்றமடைந்து, மென்மையான சதைப்பகுதிகளை சுருங்கி, விரியச் செய்கின்றன. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது. பீட்ரூட் கிழங்குகளை உணவில் அதிகமாக உட்கொள்ளும் பொழுது தற்காலிகமாக சிறுநீர் மற்றும் மலம் சிவப்பாக செல்வதுண்டு. உணவில் உள்ள சத்து, உடலால் முழுவதும் கிரகிக்கப்பட்டதும், இந்நிலை மாறி விடுவதுண்டு. செரிமான கோளாறுகளை நீக்கி, உணவுப்பாதையில் தோன்றிய அழுகல் மற்றும் கழிவுகளை நீக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு. பூண்டு உட்கொள்ளும் பொழுது ஏற்படும் வாய் நாற்றத்தை நீக்கவும் பீட்ரூட் துண்டுகளை வாயில் போட்டு மென்று வரலாம். சாலட், பொரியல், ஜாம், ஊறுகாய், சூப் என பலவகைகளில் உட்கொள்ளப்படுகிறது. பீட்ரூட் இலை மற்றும் கிழங்கை வேகவைத்து, சூப் தயார் செய்யலாம். பீட்ரூட் இலை-2 கைப்பிடியளவு, பீட்ரூட் கிழங்கு-200 கிராம், தக்காளி-2, பெரிய வெங்காயம் அரிந்தது-2 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய்-2, சீரகம் மற்றும் சோம்பு அரைத்த கலவை-ஒரு கரண்டி, தேங்காய் துருவல்-2 மேசைக்கரண்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட் இலைகளை ஓடும் நீரில் அலசி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பீட்ரூட் கிழங்கையும் தோல் சீவி சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
வெட்டிய வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் சோம்பு, சீரக கலவை ஆகியவற்றை வதக்கி, அத்துடன் பீட்ரூட் இலை மற்றும் கிழங்கு துண்டுகளை கலந்து 500மி.லி., நீரில் போட்டு வேகவைத்து, வெந்ததும், அரைத்த தேங்காய் துருவலை கலந்து, மீண்டும் 250 மி.லி., நீர் ஊற்றி நன்கு கொதிக்கவைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை வாரம் ஒருமுறை குடித்து வர ரத்த ஓட்டம் சீராகும்; சிறுநீர் நன்கு பெருகும்; ரத்த சோகையினால் பெண்களுக்கு தோன்றும் மாதவிலக்கு தடை நீங்கும். கல்லீரல் பித்தப்பையில் தோன்றும் கற்கள் மற்றும் மண்ணீரல் வீக்கம் நீங்கும்.

வேர்ட் டிப்ஸ்-பைல் முன்தோற்றம்

கீழே காட்டியுள்ள சூழ்நிலையில் இதனைப் படிக்கும் நீங்கள் ஒருநாள் நிச்சயம் இருந்திருப்பீர்கள். பைலைத் தேடுவீர்கள். அதன் பெயர் நினைவில் இல்லை. வேர்ட் பைல் தான்; ஆனால் என்று என்பது கூட நினைவில் இல்லை. ஒவ்வொன்றாகத் திறந்தால், அது இல்லை, இதுவும் இல்லை என உங்களைத் திட்டிக் கொண்டே மூடி மூடித் திறக்கிறீர்கள். வெகு நேரம் கழித்தே, நீங்கள் தேடிய பைல் கிடைக்கிறது. ஆனால், இதனைத் திறந்து பார்த்து, அது இல்லை என்று ஏற்கனவே நீங்கள் மூடிய பைல் தான் அது. இந்த அனுபவம் வேர்ட் பைலில் மட்டும் இல்லை. ஆபீஸ் தொகுப்பின் அனைத்து பைல்களிலும் ஏற்படலாம். பைல் தெரியவில்லை என்பதற்காக, விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பைத் திறந்து வைத்து ஒவ்வொன்றாகத் திறந்து மூட முடியுமா? இதற்கு ஒரு சின்ன வழியை, ஆபீஸ் தொகுப்பு காட்டுகிறது. இந்த வழிக்குப் பெயர் பைல் பிரிவியூ. அதனை எப்படி வடிவமைத்து பார்ப்பது என்று பார்க்கலாம்.
முதலில் File மெனு சென்று அதில் Open விண்டோவினைத் திறக்கவும். இந்த விண்டோ கிடைத்தவுடன் நீங்கள் அதில் காட்டப்படும் பைல்களின் பட்டியலைத்தானே பார்க்கிறீர்கள். இப்போது அந்த விண்டோவின் வலது பக்க ஓரத்தில் பாருங்கள். அதில் Views என்று ஒரு பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்து திறந்தால் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Preview என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பெறவும். இப்போது விண்டோ இரு பகுதியாகப் பிரிந்து காட்டப் படுவதனைப் பார்க்கலாம். ஒரு பக்கம் பைல் பட்டியலுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் பெயர் தேர்ந்தெடுத்த நிலையில் இருக்கும். வலது பக்கம் உள்ள கட்டத்தில் அந்த பைலின் உள்ளே என்ன இருக்கிறது என்பது காட்டப்படும். இதன் முதல் பக்கம் தெரிந்தாலும் அருகே உள்ள அம்புக் குறியை அழுத்தி கீழே சென்று பைலில் உள்ளதைப் பார்க்கலாம். இதுதான் நீங்கள் தேடும் பைல் என்றால் உடனே அதனைக் கிளிக் செய்து திறந்து எடிட் செய்திடலாம்.இல்லை என்றால் கர்சரை பைல் பட்டியலில் அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அந்த பைலின் பிரிவியூ கிடைக்கும். இந்த தேடல் எளிதாகத் தெரிகிறதா? நேரம் மிச்சமாகிறதா! அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
வேர்டில் என் மற்றும் எம் டேஷ்
வேர்ட் ஆவணங்களில் சிறு இடைக்கோடுகளை பல இடங்களில் அமைக்கிறோம். ஆங்கிலத்தில் இவற்றை டேஷ் (Dash) என அழைக்கிறோம். வேர்ட் தொகுப்பில் மூன்று வகையான இடைக்கோடுகள் இருக்கின்றன. ஏன் மூன்று என்று கேட்டால், ஒவ்வொன்றையும் ஒரு பயன்பாட்டிற்கு என டெக்ஸ்ட் டைப் செய்பவர்கள் வைத்து அமைப்பார்கள். சரி, இவற்றை எப்படி அமைப்பார்கள், அவற்றை எப்படி அழைப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.
மூன்று வகையான டேஷ்களுக்கிடையே உள்ள வித்தியாசம் ( – —) அவற்றின் அகலத்தில்தான் இருக்கிறது. வேர்ட் தொகுப்பில், மைனஸ் கீயை அழுத்துகையில் ஒரு வகையான டேஷ் கிடைக்கிறது. இது சற்று குறுகலாக இருக்கும். இது ஒரு டேஷ். அடுத்ததாக சிறிது அகலம் கூடுதலான டேஷ்; இதனை என் டேஷ் என அழைக்கின்றனர். ஏனென்றால், இது என் என்ற ஆங்கில எழுத்தின் அகலத்தில் இருக்கிறது. எண்களின் வரிசையைச் சுட்டிக் காட்டுகையில் இது பயன்படுத்தப்படுகிறது. இன்னும் அகலமானது எம் டேஷ். இது எம் என்ற ஆங்கில எழுத்தின் அகலத்தில் அமைவது. இது வாக்கியங்களில், சில சொற்றொடர்களின் இடையே ஒன்றை விளக்கி எழுதுகையில் அமைக்கப்படுவது. என் டேஷ் ஒன்றை உங்கள் டெக்ஸ்ட்டில் அமைக்க, நம் லாக் அழுத்திய பின்னர், ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு, நம்பர் பேடில் 0150 அழுத்தவும். எம் டேஷ் வேண்டும் என்றால், இதே போல் கீ அழுத்தி 0151 அழுத்தவும்.
இன்னொரு வழியும் உள்ளது. நியூமெரிக் கீ பேடில் உள்ள மைனஸ் கீ பயன்படுத்தி அமைக்கும் வழி. கண்ட்ரோல் கீ அழுத்தி மைனஸ் கீயை அழுத்தினால், வேர்ட் ஒரு என் டேஷ் அமைக்கும். கண்ட்ரோல் + ஆல்ட் + மைனஸ் கீ அழுத்தினால் எம் டேஷ் கிடைக்கும். ம்...ம்... அழுத்திப் பாருங்க..

வேர்டில் படுக்கைக் கோடுகள்

வேர்ட் தொகுப்பில், ஆவணங்களில் படுக்கைக் கோடுகள் தயாரிப்பதற்கு, எந்த கீகளைச் சிலமுறை அழுத்தினால் போதும், கோடுகள் தயாராகிவிடும் என இந்த பிரிவில் எழுதி இருக்கிறோம். மீண்டும் அவற்றை இங்கு நினைவு படுத்தலாம்.
1. மூன்று முறை ஹைபன் கீ அழுத்தி என்டர் செய்தால், அழுத்தமில்லாத நீள கோடு கிடைக்கும்.
2. மூன்று முறை அண்டர் ஸ்கோர் எனப்படும் 0க்கு அடுத்த கீயினை அழுத்தி, என்டர் செய்தால், சற்று அழுத்தமான நீளக் கோடு கிடைக்கும்.
3. மூன்று ஆஸ்டெரிஸ்க் ( ஷிப்ட்+3 எண்ணுக்கான கீ ) கீ அழுத்தி என்டர் தட்டினால், புள்ளிகள் வைத்த கோடு கிடைக்கும்.
4. டில்டே (கீ போர்டில் முதல் கீ ஷிப்ட் கீயுடன்) மூன்று முறை அழுத்தி என்டர் அழுத்த, நெளிவு கோடு கிடைக்கும்.
5. ஈக்குவல் என்னும் சமம் என்பதற்கான கீ (பேக் ஸ்பேஸ் கீக்கு முந்தைய கீ, ஷிப்ட் கீயுடன்) மூன்று முறை அழுத்தி, என்டர் அழுத்த, சிறிய அளவிலான இரட்டைக் கோடு கிடைக்கும்.
இது போல கோடுகள் அமைவது, வேர்ட் தொகுப்பில் மாறா நிலையில் நமக்குத் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு இந்த கோடு, தானாக அமைவது பிடிக்காது.
ஏனென்றால், சிறிய அளவில் ஏழே ஏழு ஹைபன்களை அடுத்து அடுத்து போட விரும்பினால், போட முடியாது. அது வேர்டால், தானாக முழு நீளக் கோடாக மாற்றிவிடும்.
அப்படியானல் என்ன செய்திடலாம்? வேர்ட் தொகுப்பில் இதனை நிறுத்துவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. வேர்ட் 2003 தொகுப்பில்:
டூல்ஸ் மெனுவிலிருந்து ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் AutoFormat As You Type என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக் கவும். பின்னர் Apply As You Type என்ற பிரிவில் Border Lines என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
2. வேர்ட் 2007:
முதலில் ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடுக. அதன்பின் AutoCorrect Options என்ற பிரிவில், AutoCorrect Options என்பதில் கிளிக் ஏற்படுத்தவும்.
பின்னர் AutoFormat As You Type என்ற டேப்பில், Apply As You Type என்ற பிரிவில் Border Lines என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
3. வேர்ட் 2010 தொகுப்பில்:
File டேப்பில் Help என்பதன் கீழ் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
இதன் பின், கிடைக்கும் பிரிவுகளில், இடது பக்கம் கிடைக்கும் பிரிவுகளில், Proofing என்பதில் கிளிக் செய்திடவும். அதன்பின் AutoCorrect Options என்ற பிரிவில், AutoCorrect Options என்பதில் கிளிக் ஏற்படுத்தவும்.
பின்னர் AutoFormat As You Type என்ற டேப்பில், Apply As You Type என்ற பிரிவில் Border Lines என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டாகுமெண்ட்டில் வெப் டெக்ஸ்ட் ஒட்ட
இணைய தளத்திலிருந்து டெக்ஸ்ட் எடுத்து வேர்டில் ஒட்டுகையில் நமக்குத் தேவையில்லாத பார்மட்டிங், பாண்ட் மற்றும் டெக்ஸ்ட் அருகே உள்ள சிறிய விளம்பரக் கட்டங்கள் ஆகியவையும் ஒட்டப்படும். இது பல வேளைகளில் எரிச்சல் தரும் விஷயம் ஆகும். ஏனென்றால் நாம் டெக்ஸ்ட் மட்டும் வைத்துக் கொள்ள விருப்பப்பட்டால் தேவையற்ற இந்த அனைத்து சங்கதிகளையும் ஒவ்வொன்றாக நீக்க வேண்டியுள்ளது. இதனால் காலம் விரயமாகிறது. இதற்குப் பதிலாக Edit மெனு சென்று அதில் Paste Special என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து மீண்டும் அதில் Unformatted Text கிளிக் செய்து அதன் பின் வெப் சைட்டிலிருந்து காப்பி செய்ததை பேஸ்ட் செய்தால் நீங்கள் திட்டமிடுகிற மாதிரி வெறும் டெக்ஸ்ட் மட்டும் நமக்குக் கிடைக்கும்.

மனது : வலி நல்லது!

நீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா?


'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்!'

'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்?'

'எனக்கு மட்டும் ஏன் இப்படி ஓர் அப்பா-அம்மா?'

'என்னைப் புரிந்துகொள்ள ஏன் இந்த உலகத்தில் ஒருவர்கூட இல்லை?'

'என் எதிர்காலத்துக்கு எந்தவிதத்திலும் பயன் தராத விஷயங்களை ஏன் பள்ளியி லும் கல்லூரியிலும் நான் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்?'

'என்னை ஏன் இவ்வளவு அசிங்கமாகப் படைத்திருக்கிறான் இறைவன்?'

'நான் ஏன் நார்மலாக இல்லை?'

மூன்று கேள்விகளுக்கேனும் 'ஆம்' என்பது உங்கள் பதிலாக இருந்தால், சந்தேகமே வேண்டாம்... நீங்கள் நார்மலாகத்தான் இருக்கிறீர்கள்!

பதின் பருவத்தில் இப்படியான எண்ணங்கள் அலைக்கழிப்பதுதான் அந்தப் பருவத்தின் இயல் பான மனநிலை என்கிறார் ஆண்ட்ரு மேத்யூஸ். உலகின் 96 சதவிகித டீனேஜ் பருவத்தினர் தங்கள் தோற்றம், உடல் அமைப்பில் திருப்தியற்று இருக்கிறார்களாம். இதுபோலவேதான் நண்பர்கள், பெற்றோர்கள், காதலன்/காதலி ஆகியோருடனான உறவுகளையும் குழப்பிக்கொண்டு, எப்போதும் ஒருவித அவஸ்தை மனநிலையிலேயே இருக்கிறார் கள். அப்படியானவர்களுக்கு, தன் புத்தகம்மூலம் தோள் தட்டும் தோழனாக டிப்ஸ் தருகிறார் ஆண்ட்ரு. மிக எளிமையான ஆங்கிலம், குட்டிக் குட்டிப் படங்கள் மூலம் பெரிய உண்மைகளை எளிதில் புரியவைக்கிறார்.

வாழ்க்கை ஏன் கசக்கிறது?

உங்களையும் அறியாமல் நாக்கைக் கடித்துக் கொள்கிறீர்கள். வலிக்கிறது! கொதிக்கும் தேநீர் என்று தெரியாமல் ஒரு வாய் குடித்துவிடு கிறீர்கள். சுள்ளென்று சுடுகிறது. பென்சில் சீவும் போது, விரலை பிளேடு வெட்டிவிடுகிறது. ரத்தம் வெளியேறி எரிகிறது. இவை எல்லாம் உடலை வருத்தும் காயங்கள். அந்தக் காயங்கள் ஏற்படுத் தும் வலி, 'ஏதோ தப்பு. நீ செய்துகொண்டு இருக் கும் விஷயத்தை மேற்கொண்டு தொடராமல் இருப்பது நல்லது!' என்று உணர்த்தும் சமிக்ஞை.

'வலி' என்ற ஒரு அலாரம் இல்லாவிட்டால், என்ன நடக்கும்? ரத்தம் வர வர... நாக்கைக் கடித்துக்கொண்டே இருப்பீர்கள். வாய் பொத்துப்போன பிறகும் அந்தத் தேநீரைக் குடித்துக்கொண்டே இருப்பீர்கள். ரத்தம் வழிந்த பிறகும் நிறுத்தாமல், பென்சிலை கூராக்கிக்கொண்டு இருப்பீர்கள். இதே லாஜிக்தான் மனதை வருத்தும் காயங்களுக்கும்!

உங்கள் மனதை ஏதோ ஒரு நடவடிக்கை அல்லது சம்பவம் வருத்துமானால், அதைத் தொடராதீர்கள். மேலும் மேலும் அதனால் நீங்கள் கஷ்டப்படாமல் இருக்கத்தான், அந்தச் சம்பவம் உங்கள் மனதில் ஒரு வலியை ஏற்படுத்துகிறது. பிறகு ஏன் அதைத் தொடர வேண்டும்? உள்ளுக்குள் சோகமாக உணர்ந்தால், நீங்கள் யோசிக்கும் விதத்தையே மாற்றிக்கொள்ளுங்கள். மற்றவர் மீது பொறாமைகொள்ளும்போதோ, கேலி கிண்டல் செய்து மற்றவரைக் காயப்படுத்தும்போதோ, நமது சந்தோஷத்துக்காக அடுத்தவரை எதிர்பார்த்திருக்கும்போதோ, பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளும்போதோ... நமது மனது வலிக்கும். அலாரம் அடித்துவிட்டது. விழித்துக்கொள்ளுங்கள்!

படம் பார்த்து, பாடம் படிக்கலாமா?

'ஒருவன் நாயிடம் இருந்து தப்பிக்க முற்படுகிறான். அவனுடைய சட்டையின் நுனிப் பகுதியை நாய் கடித்து இழுத்திருக்கிறது. கோபமாக இருக்கும் அந்த நாய்க்கு வாலும் ஒரு காலும் வெள்ளை நிறம். ஒரு காது சிவப்பு நிறம். அவனுடைய சட்டையில் சிவப்பு மற்றும் வெள் ளைக் கோடுகள். ஒற்றைக் காலில் நிற்கிறான்அவன்!'

இதைப் படித்துக் கிரகித்து அந்தக் காட்சியைக் கற்பனை செய்ய உங்களுக்கு 20 நொடிகளேனும் பிடிக்கும். அதுவே, இந்தப் படத்தைப் பாருங்கள்...

சட்டென்று, பச்சக்கென்று மனதில் பதிந்துவிட்டதா? பல காலமாகச் சொல்லி வருவதுதான். வார்த்தைகளைக் காட்டிலும் ஒரு ஓவியம் அல்லது கார்ட்டூன் நம் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிடும்.

'20-07-1969 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல் ஆளாகக் கால் பதித்தார்' என்று மனனம் செய்து மறந்துபோவதைக் காட்டிலும், இப்படி நீங்களாக ஒரு கார்ட்டுன் வரைந்தால்... எப்படி இருக்கும்?

அந்தத் தேதி உங்களுக்கு மறக்கவே மறக்காது!

ஏமாற்றங்களை ஏமாற்றுவது எப்படி?

எவ்வளவுதான் 'அலர்ட்' ஆக இருந்தாலும், பல சமயங்களில் எல்லோரும் ஏமாற்றத்துக்கு உள்ளாவார்கள். நமது முறை வரும்போது பஸ் பாஸ் கவுன்ட்டரில் 'உணவு இடைவேளை' என்று போர்டு விழுவது, அத்தனை பேர் தப்பும் தவறுமாகச் செய்து இருக்கும்போது நமது ரெக்கார்ட் நோட் குளறுபடிகளை மட்டும் புரொஃபஸர் கண்டுபிடித்துத் திட்டுவது, மனதுக்குப் பிடித்தவளிடம் காதலைச் சொன்னதும், 'என்னை உனக்குப் பிடிக்காதுன்னு நினைச்சேன். அதான் போன மாசம் அருண் புரபோஸ் பண்ணப்போ, 'ஓ.கே' சொல்லிட்டேன்!' என்று அவள் கண்ணைக் கசக்குவது. சிறிதும் பெரிதுமாகத் தினமும் நம்மை ஏமாற்றங்கள் கடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்?

1. 'எனக்கு மட்டும் ஏன் இப்படி எப்போதும் கெட்டதாகவே நடக்கிறது?' என்று உள்ளுக்குள் புழுங்குவேன்! - இப்படி நினைத்து சுய பச்சாதாபத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம், அந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்கான எந்த ஓர் உருப்படியான செயலிலும் உங்கள் மனம் கவனம் செலுத்தாது!

2. 'அது எனது தப்பு அல்ல!' என்று பழியை அடுத்தவர் மீது சுமத்துவதும் ஒரு விதத் தப்பிக்கும் மனோநிலைதான். அது உங்கள் தப்பாக இல்லாவிட்டாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தானே!

3. 'இதில் இருந்து நான் என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?' என்று உங்களுக்குள் நீங்கள் கேட்டுக்கொண்டால்... சபாஷ்! இதுதான் மேற்கொண்டு அதுபோன்ற ஒரு தவறு நிகழாமல் தடுக்கும் மனோநிலை.

நமது ஒவ்வொரு ஏமாற்றமும், கல் மேல் விழும் உளி செதுக்கல் என்று நினைத்துக்கொண்டால், நம்மை நாமே செதுக்கி எடுக்கலாம். தண்டிக்கப்படுவதற்காக, நாம் இந்த உலகத்தில் அவதரிக்கவில்லை என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்!

தேங்க்ஸ் : யூத்ஃபுல் விகடன்

நெல்லிக்காய்

உலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில பருப்பு வகைகள் எப்படி நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைப் போன்றே நெல்லிக்காய், நார்த்தங்காய், தேசிக்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய், பூண்டு போன்றவையும் மிகவும் பலன் தரக்கூடிய இயற்கையின் படைப்புகளாக நமது அன்றாட சமையலில் சேர்க்கக் கூடிய உணவு வகைகளாகும்.

நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அரி நெல்லிக்காய் எனப்படும் நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைக்காலம் முழுவதும் தரக்கூடியது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய், இருவகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே பச்சையாகச் சாப்பிடக்கூடியதாகும். எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும்.

அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் வெப்பத்தைக் குறைத்து மூளைக்குக் குளிர்ச்சியும் ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தரக்கூடியதாகும். கோடைக்காலங்களில் நமக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணக் கோளாறு ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் நல்ல மருந்தாகும். எனவே நெல்லிக்காயை எந்த விதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

சிறுவயதில் நெல்லிக்காய் பறிக்கத் தோப்புக்குச் செல்வதும், பாடசாலைகளின் வெளியே விற்கப்படும் தின்பண்டக் கடைகளில் கமர்கட், கச்சான், பஞ்சுமிட்டாய், மாங்காய் பத்தை, இலந்தைப்பழம், முந்திரிப்பழம் மற்றும் அரி நெல்லிக்காய், பொறி கடலை ஆகியவற்றை இளம் சிறார்கள் ஆவலுடன் வாங்கி உண்டு மகிழ்வது நமது நாட்டில் வாடிக்கை தானே! அதுவும் நெல்லிக்காய் சீசனில், நம் வீட்டுப் பெண்மணிகள் இவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து ஊறுகாய், சட்னி, பச்சடி போன்றவற்றையும் வடகம் தயாரிப்பதும் வழக்கம் தானே !

நெல்லிக்காய் எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவக் குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும் ஈறுகளும் பலப்படுவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும். கணைச்சூட்டால் அவதியுறும் குழந்தைகளுக்கு நெல்லிக்காயைச் சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும். உடல் அசதி மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத்தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்குண்டு. இரத்த உறைவால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாகப் பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேசியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

உணவு செரிமானமின்மைக்கு எப்படிப் பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவி புரிகிறது. நெல்லிக்காயைப் பதப்படுத்தித் தலையில் தேய்த்துக் குளிக்கவும் நெல்லிக்காய்த் தைலம் மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்த விதத் தொல்லையுமின்றி குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உணர்வுடன் மக்கள் இதுபோன்ற அரிய இயற்கை உணவு வகைகளை அடிக்கடி நமது உணவு வகைகளில் பக்குவமாகப் பயன்படுத்தினால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகி, நோய் வருமுன் காக்கவும், வந்தபின் முறையான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல்லாண்டு காலம் வாழ ஏதுவாகும்.

இயற்கை அளித்துள்ள அனைத்து உணவு வகைகளிலும் பிரதான இடம் கொண்டவை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் கனிவகைகளே. நமது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருக்கவும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும், தெம்பையும் அளித்து நீண்ட ஆயுளை அளித்து வளமாய் வாழ வைக்கின்றன. இயற்கை அளித்துள்ள இத்தகைய உணவு வகைகளையும், அவற்றின் பயன்களையும் முக்கியமாக அவற்றிலிருந்து நாம் பெறக்கூடிய மருத்துவப் பயன்களையும் எளிதாய்ப் புரிந்து அறிந்து வாழ்க்கை வாழ்வதற்கே என்ற குறிக்கோளை அடைவதற்கே. அதிலும் நமக்குத் தகுந்தவாறு எளிதாகக் கிடைக்கின்ற உணவுப் பொருட்களைப் பற்றியே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். பிறர் நலனில் அக்கறைகொண்டு, எனது இயற்கை மருத்துவ முறைகளால் பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை அளித்தும் ஆலோசனைகள் வழங்கியும் சேவை புரிவதின் மூலம் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

நன்றி : இனிய திசைகள் – சமுதாய மேம்பாட்டு மாத இதழ்

அக்டோபர் 2010

ரோஜா காதல்

* சிவப்பு ரோஜாக்கள் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும். மரியாதை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தவும் இந்த ரோஜாக்கள் உதவும். ஆழ்மனதில் இருக்கும் அழகையும் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை சிவப்பு ரோஜாக்களுக்கு உண்டு.

* இளஞ்சிவப்பு ரோஜாவை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழங்கலாம். பாராட்டுவதற்கும், வாழ்த்து கூறவும், நட்பு பாராட்டுவதற்கும் ஏற்றது `பிங்க்` ரோஜா.

* மெலிதான இளம்சிவப்பு ரோஜாக்கள் அழகை வெளிப்படுத்தக் கூடியது. கருணை, மகிழ்ச்சி, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த சிறந்தது இந்த ரோஜாக்கள்.

* அடர்ந்த `பிங்க்' நிற ரோஜா நன்றி தெரிவிக்க கொடுக்கப்பட வேண்டியது.

* இளம்நீல நிற ரோஜா, முதல் பார்வையில் இதயத்தை கொள்ளை கொண்டவருக்கு கொடுக்கப்பட்டால் அவரது அன்பை மேலும் பெருக்கித்தரும்.

* வெள்ளை ரோஜா உயிரில் கலந்த தூய காதலை வெளிப்படுத்த வழங்கப்படுவதாகும். திருமணம் நிச்சயமான சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கலாம். பயபக்தி, பணிவைக் காட்டவும் வெள்ளை ரோஜா பொருத்தமானது. குற்றமற்றவன் என்பதைச் சொல்லவும் வெள்ளை ரோஜா ஏற்றது.

* நட்பு, மகிழ்ச்சி, பெருமிதம், சுதந்திரம் போன்றவற்றில் உங்களுக்கு இருக்கும் அக்க றையை வெளிக்காட்ட மஞ்சள் ரோஜா பொருத்த மானது.

* பவள நிற ரோஜா உங்கள் விருப்பங்களை உங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு உணர்த்த ஏற்றது.

* இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த `பீச்' நிற ரோஜா தன்னடக்கத்தை காட்டும்.

* ஆரஞ்சு நிற ரோஜாவை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வழங்கலாம். கவர்ச்சியாய் தோன்ற விரும்புபவர்களும் இந்நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம்.

* சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்களை பாராட்டுத் தெரிவிக்க வழங்கலாம்.

* மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரோஜாக்களை இணைத்து கொடுப்பது எண்ணங்களை ஈர்த்து மனதை உருக வைக்கும்.

* எளிய காதல் தூதுவன் ரோஜாப் பூக்கள்தான். ஒற்றை ரோஜா உறுதியான காதலைச் சொல்லும். இரட்டை ரோஜா அல்லது இரட்டை நிறம் கலந்த ரோஜா, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்கும் பொருளில் கொடுப்ப தாகும். இனிய அழைப்புகளுக்கும் இரட்டை ரோஜா வழங்கலாம்.

* வெளிர்நிற ரோஜாக்கள் எல்லாம் நட்பை வெளிப்படுத்துவன. 12 ரோஜாக்கள் சேர்ந்த மலர்ச்செண்டு (பொக்கே) நன்றி தெரிவிக்கவும், 25 ரோஜாக்களின் இணைப்பு வாழ்த்துச் சொல்ல வும், 50 ரோஜாக்கள் சேர்ந்தது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தவும் ஏற்றது.

* மலர்ந்திருக்கும் நேரங்களில் மனிதர்களை மகிழச் செய்யும் பண்பு மலர்களுக்கே உரியது. அன்பையும், காதலையும் இதமாகச் சொல்லும் ரோஜாக்களை உங்கள் இதயம் கவர்ந்தவர்களுக்கு கொடுங்கள்!