Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
டென்ட்' துணியில் இருந்து பிறந்த ஜீன்ஸ்!
ஆஸ்கார் லெவி ஸ்ட்ராஸ் என்பவர் 1849-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு வந்தார். சுரங்கத்தில் தங்கம் தோண்டும் பணி பரபரப்பாக நடைபெற்ற காலம் அது. சுரங்கத் தொழிலாளர்களின் கால்சட்டைகள் வெகு சீக்கிரமே கிழிந்து விடுவதை அவர் கவனித்தார். உறுதியான ஒரு துணியில் பேன்ட் தைத்துக் கொடுத்தால்தான் இவர்களுக்குச் சரிப்படும் என்று அவர் நினைத்தார். டென்ட் அமைக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியின் மீதத்தைக் கொண்டு ஒரு பேன்ட் தைத்தார். சுரங்கத் தொழிலாளர்களுக்கு அது பிடித்துப் போய்விடவே, ஆர்டர்கள் குவிந்தன. ஸ்ட்ராஸ், பிரான்சில் இருந்து `நீம்' என்றழைக்கப்பட்ட கனத்த துணியை வாங்கித் தைத்தார். அதுவே `டெனிம்' என்று பெயர் மாற்றம் பெற்று உலகெங்கும் பரவியது.
`ஜீன்ஸ்'களில் தற்போது காணப்படும் `ரிவிட்' உங்களுக்குப் பிடிக்கும் என்றால், நீங்கள் அல்கலி ஐக் என்ற கவனக்குறைவான சுரங்கத் தொழிலாளிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர், சுரங்கத் தொழிலுக்கான உபகரணங்களை ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் வைத்து விடுவார். அதனால் பாக்கெட்டுகள் அடிக்கடி கிழிந்து போகும்.
அல்கலியின் கிழிந்த பாக்கெட்டுகளை தைத்துத் தைத்துச் சலித்துப் போன அவரது தையல்காரர் என்ன செய்தார் தெரியுமா? அல்கலியை ஒரு கொல்லரிடம் அழைத்துப் போனார். அவரது பாக்கெட்டுகளில் `ரிவிட்' அடித்து விடும்படி வேடிக்கையாகச் சொன்னார்.
`இது ரொம்ப நல்ல யோசனையாயிருக்கே!' என்று அதைப் பார்த்து வியந்த லெவி ஸ்ட்ராஸ், எல்லா ஜீன்ஸ்களிலும் `ரிவிட்' அடிக்கத் தொடங்கி விட்டார்.
2011- நிறுவனங்கள் தரப்போவது என்ன ?
புத்தாண்டில் கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்று எல்லாரும் கணித்துள்ளனர். பலர் தொழில் நுட்பத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் பல எதிர்பார்ப்புகளைச் சொல்லி வருகின்றனர். நாம் இத்துறையில் இயங்கும் நிறுவனங்கள் வாரியாக, அவை என்ன திட்டமிட்டுள்ளன, அவற்றிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.ஆப்பிள்: 2010 ஆம் ஆண்டில் மிகவும் வெற்றிகரமாக, புத்தம் புதிய மல்ட்டி டச் டேப்ளட் பிசியினை அறிமுகப்படுத்தி, பல லட்சக் கணக்கில் அதனை விற்று சாதனை படைத்தது ஆப்பிள் நிறுவனம். இனி அந்த வெற்றியைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டியது இந்த நிறுவனத்திற்கு அவசியமாகிறது. மேலும் இதே டேப்ளட் பிசி சந்தையில் பல புதிய நிறுவனங்கள் வந்து மொய்க்க இருப்பதால், போட்டியும் மிகக் கடுமையானதாக இருக்கும். ஐ-பேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பை புதிய வசதிகளுடன் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இதற்கு உள்ளது. தன் ஐ-போனை மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து விற்பனைக்குக் கொண்டு வரலாம். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, தன் புதிய மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஆப்பிள் லயன் (Lion) என்ற பெயரில் கொண்டு வரும். இதனால் மேக் கம்ப்யூட்டரின் விலை அதிகமாகும். இதில் ஐ-பேடில் உள்ள சில வசதிகளை இணைக்க ஆப்பிள் முயற்சித்து வருகிறது.அடுத்து ஆப்பிள் இன்னும் வலுவாக ஊன்றாத இரு பிரிவுகளில், இந்த ஆண்டில் செயல்படும் எனத் தெரிகிறது. அவை - கிளவ்ட் கம்ப்யூட்டிங் மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங். இவற்றை அடுத்து வெளி நாடுகளில் விற்பனை செய்து வரும் ஆப்பிள் டிவியை, இன்னும் மலிவான விலையில் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் கொண்டு செல்ல, ஆப்பிள் முயற்சிக்கும்.கூகுள்: தேடல் பிரிவில் தனக்கு நிகர் இல்லை என இயங்கும் கூகுள், தற்போது பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதன் முக்கிய போட்டியாளரான, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சினுக்குத் தன் வாடிக்கையாளர்கள் சென்றுவிடாமல் இருக்க, பல புதிய வசதிகளைத் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பெரிய வெற்றியை அடைந்தாலும், ஐபோன் சாப்ட்வேர் போல நகாசு வேலைகளைத் தருவதாய் இல்லை. டேப்ளட் பிசிக்கான ஆண்ட்ராய்ட் பதிப்பு ஐ-பேட் சாதனத்திற்குச் சவால் விடுவதாய் அமையலாம்.2011ல் கூகுள், பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் தன் நிலையை உறுதிப்படுத்தலாம். கிளவ்ட் கம்ப்யூட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் படி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு பிரவுசராக வலுப்பெறலாம். பயனாளர்கள் இதன் மூலம் இணைய சர்வரில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்துவார்கள். தங்கள் பைல்களைக் கூட, கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இணையத்தில் சர்வரில் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்துவார்கள். இந்தப் பணிகளுக்கெல்லாம் உதவிடும் வகையில், கூகுள் நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாற்றத்தினைக் கொண்டு வரும்.இதே போல இதுவரை தீவிரமாக இறங்காத, சோஷியல் நெட்வொர்க்கிங் பிரிவிலும், கூகுள் இந்த ஆண்டில் தடம் பதிக்கலாம். கூகுள் டிவியிலும் கவனத்தைச் செலுத்தி, இன்டர்நெட்டினை, டிவியில் நம் வீட்டு ஹாலுக்குக் கொண்டு வரலாம்.மைக்ரோசாப்ட்: சாப்ட்வேர் பிரிவில் சக்கரவர்த்தியாகத் திகழும் மைக்ரோசாப்ட், இன்னும் வாடிக்கையாளர் களை எல்லாப் பிரிவுகளிலும் தன் வசம் வைத்துள்ளது. விண்டோஸ், ஆபீஸ் மற்றும் எக்ஸ் பாக்ஸ் இதற்கு எடுத்துக் காட்டுக்களாகும். ஆனால் இரண்டு பிரிவுகளில், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசி, மற்ற நிறுவனங்களிடமிருந்து சவால்களை எதிர் கொண்டுள்ளது. விண்டோஸ் போன் 7 சிறப்பான சிஸ்டமாக இருந்தாலும், போட்டியைச் சமாளிக்கும் அளவிற்கு விரிவாக இல்லை.பேஸ்புக் மற்றும் ட்விட்டர்: சோஷியல் நெட்வொர்க்கிங் பிரிவில் இந்த இரட்டையர்கள், 2010 ஆம் ஆண்டில் சிறப்பான முன்னேற்றத்தினைப் பெற்றனர். இந்த ஆண்டிலும் சவால்களைச் சந்தித்துப் பல புதிய பரிமாணங்களைத் தங்கள் சேவையில் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

நீங்கள் 30 வயதை கடந்தவரா? அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறீர்களா: அவசியம் படியுங்கள்...

வீட்டிற்கு வீடு சர்க்கரை நோய் இருக்கிறது. இன்னும் 15 ஆண்டுகளில் 30 கோடிபேருக்கு இந்நோய் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இன்று 25 வயது, 30 வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர்.

இதற்கான காரணங்கள் குறித்து, மதுரை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் சங்குமணி கூறியதாவது : குடும்பத்தினரில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்களால் இதை தடுக்க முடியும். அதிக உடல் எடை, உழைப்பின்மை, ரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு சத்து, கர்ப்ப கால சர்க்கரை நோய், அதிக எடையுடன் குழந்தை பிறப்பு, சினைப்பை சம்பந்தப்பட்ட நோய், தொப்பை வயிறு ஆகியவற்றால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தினமும் 4 கி.மீ., வரை "வாக்கிங்' செல்ல வேண்டும். இதனால் ரத்தஅழுத்தம் சீராகிறது. ரத்தகொழுப்பு சத்து குறைகிறது. இதய ரத்தநாளங்கள் மற்றும் கால், கை ரத்தநாளங்கள் விரிவடைகின்றன. உடல் எடை குறைகிறது. மூளைக்கு செல்லும் ரத்தஓட்டத்தை அதிகரிக்கிறது.

"வாக்கிங்' செல்லும்போது கவனிக்க வேண்டியவை: சரியான ஷூ அல்லது செருப்பு அணிதல், தனது வயது ஒத்த ஒருவருடன் செல்வது, சிறிது சிறிதாக "வாக்கிங்' நேரத்தை அதிகரிப்பது உடலுக்கு நல்லது. உடல்நலம் இல்லாதபோது உடற்பயிற்சி செய்யக்கூடாது. உடல் பருமன் உள்ளவர்கள் 10 சதவீத எடையை குறைக்கும்போது, சர்க்கரை நோய் வருவதற்குரிய வாய்ப்பு 60 சதவீதமாக குறைகிறது. முதற்கட்டமாக, உடற்பயிற்சி செய்யும்போது 5லிருந்து 10 நிமிடம் மெதுவாக நடந்து உடல் உறுப்புகளை பயிற்சி செய்ய தயார்படுத்த வேண்டும். இதற்கு "வார்ம்-அப் பிரீயட்' என்பர். இரண்டாம் கட்ட உடற்பயிற்சியில், 30 நிமிடம் மித வேகம் அல்லது அதிக வேகத்துடன் நடக்கலாம்; சைக்கிள் ஓட்டலாம், நீச்சல் பயிற்சி செய்யலாம். மூன்றாம் கட்டத்தில், 10 நிமிடம் மெதுவான பயிற்சி செய்யும்போது நாடித்துடிப்பு சீராகிறது. இதை "கூல்டவுண் பிரீயட்' என்பர்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்: நார்ச்சத்து அதிகமுள்ள கீரை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த காய்கறி மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்கவும். காலை உணவை தவிர்த்துவிட்டு, மதிய உணவை அளவுக்கு அதிகமாக எடுத்தாலோ, மதிய உணவை தவிர்த்துவிட்டு இரவு உணவை அதிகமாக எடுத்தாலோ சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகம்.

தொப்பைக்கு தேவை "குட்பை' தொப்பை பல நோய்களுக்கு காரணமாகிறது. அதில் உள்ள கொழுப்பு செல்கள், சுரக்கும் ஹார்மோன்கள் சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது. மது, சிகரெட்டை நிறுத்த வேண்டும். இவை இன்சுலின் சுரப்பை குறைப்பதுடன் அதன் செயல்திறனையும் குறைத்துவிடுகிறது. ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் பழக்கம் இருந்தால் நிச்சயமாக நிறுத்திவிட வேண்டும். அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், கோபப்படுதலை குறைத்து யோகா பயிற்சி செய்தால் சர்க்கரை நோயை தடுக்கலாம். வடை, சோமாஸ், காரா சேவு, மிக்சர் போன்ற உணவுகளில் அதிக கொழுப்புச்சத்தும், கலோரியும் உள்ளது. இந்த உணவுகளை குறைப்பதன்மூலம் சர்க்கரை நோயை தடுக்கலாம். வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யலாம். அப்பார்ட்மென்ட் என்றால், "லிப்ட்'டிற்கு பதில், மாடி படிகள் வழியாக செல்லலாம். இவ்வாறு கூறினார்.

3ஜி தரும் பயன்கள்

பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் முதல் நமக்கு 3ஜி சேவை பல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு உள்ளது. தகவல் பரிமாற்றத்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப்படுவதே அதன் அடிப்படையான ஒரு செயல்பாடாகும். 3ஜி இதனைத் தருவதுடன், மிகத் தெளிவான ஒலி பரிமாற்றத்தையும் தருகிறது. மேலும் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் பரிமாற்றத்தை 3ஜி மூலம் மேற்கொள்ள முடியும். இந்தியாவில் அண்மைக் காலத்தில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமுதாய இணைய தள சேவைத் தளங்களால், டேட்டா பரிமாறப்படுவது அதிகரித்துள்ளது. அதே போல ப்ளிக்கர் மற்றும் யு–ட்யூப் போன்ற தளங்களால், வீடியோ, இமேஜ் தகவல்களும் பரிமாறப் பட்டு வருகின்றன. இவற்றுக்கு இன்னொரு காரணம், டாட்டா டொகோமோவில் தொடங்கி பல தொலைதொடர்பு நிறுவனங்கள், மிகக் குறைவான கட்டணத்தில் டேட்டா பரிமாறிக் கொள்வதற்கு அளித்து வரும் திட்டங்களாகும்.
பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடங்கி வைத்த 3ஜி சேவையினை, இனி பல தனியார் நிறுவனங்கள் தர இருக்கின்றன. 3ஜி சேவையில் பலப் பல புதிய தொழில் நுட்ப மாற்றங்களையும் பயன்பாடுகளையும் காண இருக்கிறோம். ஏற்கனவே முதன்மையான பயன்பாடுகளை இந்த மலரில் குறிப்பிட்டு எழுதி உள்ளோம். இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்.
1. லைவ் டிவி – கூடவே வரும் செய்திகள்: 3ஜி மூலம் மொபைல் போனில், ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடப்படுவதை லைவ்வாக, எங்கு சென்றாலும் பார்த்துக் கொண்டே செல்லலாம். அதே போல, டிவி ஒன்றை நாடித்தான், செய்திகளைப் பெற வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பப் படுவதனை, மொபைல் மூலம் பெறலாம்.
2. இமெயில் மற்றும் பைல் பெறுதல்: 3ஜி மூலம் நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகளை மொபைல் போன் வழியாக, எந்த நேரத்திலும் பெற முடியும். அதே போல அனுப்பவும் முடியும். நமக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பைல்களையும் இதே போலப் பெற முடியும். நாம் தயாரித்து வைத்துள்ள ஆவணங்களில், எந்த நேரத்திலும் எடிட் செய்து மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
3. மொபைல் ஒரு முனையமாக: மொபைல் போனை இனி ஒரு ஆன்லைன் டெர்மினல் போலப் பயன்படுத்த 3ஜி வழி தருகிறது. திடீரென நமக்குக் கிடைத்து வரும் இன்டர்நெட் இணைப்பு செயல்படாமல் போகும்போது, மொபைல் போனை நம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து, இணைய மோடம் போலப் பயன்படுத்தலாம். இதனால் எந்த நேரத்திலும் சூழ்நிலையிலும் நமக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும்.
4. வீடியோ ஸ்ட்ரீமிங்: நாம் நண்பர்களுடனும், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோ பைல்களை, எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப, காண முடியும். வேகமான பரிமாற்றத்தை 3ஜி மூலம் பெற முடியும். இவற்றைப் பதிந்து கொள்வதற்கும் 3ஜி உதவிடும்.
5. இணைய வழி அழைப்புகள் – வி.ஓ.ஐ.பி. (Voice Over Internet Protocol (VOIP): மிகப் பெரிய அளவில் பேண்ட்வித் எனப்படும் தகவல் பரிமாற்றத்திற்கான அலைவரிசையை, 3ஜி தருகிறது. ஏற்கனவே நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வரும் ஸ்கைப் போன்ற புரோகிராம்கள் மூலம், குறைந்த கட்டணத்தில் நம்மால் நம் நண்பர்களுடன், அவர்கள் எங்கிருந்தாலும் பேச முடியும். வீடியோ வழி உரையாடலையும் மேற்கொள்ள முடியும்.
6. அதிக வேகத்தில் கூடுதல் தகவல்: பல வேளைகளில் நாம் பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்து, பின்னர் படிக்கிறோம். அதிகமாக ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள், அதில் உள்ள லிங்க்ஸ் தரும் இணைப்புகளை இதே போல்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஜி.பி.ஆர்.எஸ். வழங்கும் வேகம் மிக மிகக் குறைவாக உள்ளதால் இவ்வாறு செயல்படுகிறோம். 3ஜி மூலம் இந்தக் குறை நிவர்த்தி ஆகும். வேகமாக டேட்டா கிடைப்பதால், லிங்க் இணைக்கும் அந்த வேளையிலேயே பைல்களைக் காண முடியும்.
7. துல்லிய ஒலி அனுபவம்: சிக்னல் கிடைக்கல, வாய்ஸ் விட்டு விட்டு வருது, பேசறது ஜாம் ஆகுது – போன்ற உரையாடல்களை நாம் 3ஜியில் சந்திக்க மாட்டோம். மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் ஒருவர் பேசுவதை இதன் மூலம் நாம் பெற முடியும். உங்கள் குழந்தையின் மழலையை, நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பக்கத்தில் இருந்து பேசுவது போலக் கேட்டு ரசிக்கலாம். மொத்தத்தில், இதுவரை தொழில் நுட்ப நீண்டநாள் கனவாக இருந்த 3ஜி சேவை, இப்போது கையில் வந்துவிட்டது. சிறிய வணிகர்கள் இதன் சேவையினை முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் வர்த்தகத்தினை மேம்படுத்தலாம். இன்னும் இன்டர்நெட் நுழையாத கிராமங்களில் உள்ள மக்கள், 3ஜி மூலம் அதனைப் பெறலாம். வலைமனைகளை இணையத்தில் உருவாக்கி செயல்பட்டு வருபவர்கள், இடைஇடையே இணைப்பு அறுந்து போகும் இன்டர்நெட்டை விட்டு, 3ஜி சேவை மூலம் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
பல துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு, 3ஜி ஒரு வரப்பிரசாதமாகக் கிடைத்துள்ளது. அனைவரும் இதனைப் பயன்படுத்தி நம்மையும் நாட்டையும் வளப்படுத்துவோம்.

சர்க்கரையை கண்டுபிடிக்க நவீன பரிசோதனை

சர்க்கரையை கண்டுபிடிக்க நவீன பரிசோதனை hba1c அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரத்தத்தில் கடந்த மூன்று மாத காலமாக ஏறி இறங்கும் சர்க்கரையின் சராசரி அளவுகோல். இது எப்படி கண்டறியப்படுகிறது என்றால், நம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களிலிருந்து பிரித்தெடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. hba1c இதுவரை ஒருவருக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா? இல்லையா என்று கண்டறிய செய்யப்பட்டு வந்தது. இப்போது இதே பரிசோதனை ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்க சர்க்கரை நோய் கழக ஆய்வில் சர்வதேச சர்க்கரை நோய் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.


பயன்கள்: எந்த நேரம் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒரே ரத்த பரிசோதனை மூலம் சர்க்கரை உள்ளதா? இல்லையா என்று கண்டறிய முடியும். இரண்டு அல்லது மூன்று வேளை ரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த பரிசோதனை முடிவு 6.5 சதவீதத்துக்கு மேல் இருந்தால் சர்க்கரை உள்ளது என்று உறுதி செய்யலாம். 6 முதல் 6.5 சதவீதம் வரை இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 6 சதவீதத்துக்கு கீழ் இருந்தால், சர்க்கரை இல்லை என்று கூறலாம். சர்க்கரை அளவு உண்ணும் உணவை பொருத்து மாறுபடும். பரிசோதனைக்கு முன் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும் சர்க்கரை அதிகமாக காட்டும். இதை வைத்து கொண்டு ஒருவருக்கு சர்க்கரை உள்ளது என்று தீர்மானம் செய்யக் கூடாது. இதனால் தான் இந்த புதிய பரிசோதனை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பரிசோதனை அதிநவீன கருவிகளாக பயோரேட் d-10 அல்லது immunoturbidometry முறைகளில் செய்யப்பட வேண்டும். சாதாரண முறையில் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.


உணவு முறை: நார்சத்து நிறைந்த உணவு. உதாரணம்: நான்கு இட்லி சாப்பிடுவதற்கு பதில் மூன்று இட்லி, ஒரு கப் காய்கறி பொரியல், ஒரு கப் கூட்டு, ஒரு கப் சுண்டல், காய்கறி சாலட், பழ சாலட் சாப்பிடுவதால், சாப்பிட்ட பின் சர்க்கரை 240 மி.கி.,லிருந்து 170 மி.கி., குறைந்துள்ளது. இந்த உணவு முறையே நமது ரிசார்ட் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. காய்கறி சேர்த்து சாப்பிடுவது இட்லி ஜீரணமாகும் தன்மை குறைந்து சர்க்கரை மெதுவாக ஏறுகிறது. நார்சத்து குறைந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசி நல்லதல்ல. இந்த மாதிரி உணவு சாப்பிட்டால், குறைவான அளவு இன்சுலின் இருந்தாலும் சர்க்கரை ஏறாது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, இன்சுலின் வேலை செய்யும் திறன் அதிகம். இதனால் உடலில் குறைந்த அளவு இன்சுலின் இருந்தாலும் அது முழுமையாக திறமையாக பணி செய்ய முடியும். இன்சுலின் தசைகளுக்குள் உள்ளே குளுகோஸ் செல்ல உதவுகிறது மற்றும் தசைகளுக்குள் சென்ற குளுகோஸை சக்தியாக மாற்றுவது இன்சுலினின் முக்கிய பணி. சுரக்கும் இன்சுலின் 30 - 40 சதவீதம் தசைகளில் தான் வேலை செய்கிறது. இதற்கு உடற்பயிற்சி அவசியம்.


- டாக்டர் சேகர்,

அச்சிடுகையில் எழுத்தின் அளவைப் பெரிதாக்க.



அச்சிட விரும்பும் டெக்ஸ்ட்டின் எழுத்தளவினை அதிகப்படுத்துவதும் குறைப்பதுவும் பல வழிகளில் மேற்கொள்ளலாம். இது ஒவ்வொரு புரோகிராமிற்கும் ஒரு மாதிரியாக இருக்கும். பிரிண்டர் ஒன்றை இந்த அளவில் தான் அது எழுத்துக்களை அச்சிட வேண்டும் என வரையறை செய்திட முடியாது.

முதலில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். திரையில் காணப்படும் எழுத்து அளவும், அதனை அச்சிடும் போது தாளில் கிடைக்கும் எழுத்து அச்சின் அளவும் ஒரே மாதிரியாக இருக்காது. மானிட்டர் திரையில் மிக எளிதாக, எழுத்தின் அளவினை மாற்றிப் பார்க்கலாம். ஆனால் இதனால் அது அச்சிடப் படுகையில் மாறி அச்சாகாது. எடுத்துக் காட்டாக, ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை, மேலும் கீழுமாகச் சுழற்றினால், மானிட்டர் காட்சித் தோற்றத்தில் எழுத்தின் அளவு அதிகமாகவும் குறைவாகவும் தோன்றும். ஆனால் புரோகிராமில் செட் செய்தபடி தான் அச்சில் எழுத்தின் அளவு இருக்கும்.
இமெயில் கடிதங்களைத் தான், நம்மில் பெரும்பாலானவர்கள், பெரிய எழுத்துக்களில் அச்சிட விரும்புவார்கள். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.
ஜிமெயில் கடிதம் ஒன்றை பயர்பாக்ஸ் பிரவுசரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனைச் சற்று பெரிய அளவிலான எழுத்துக்களில் அச்செடுக்க விரும்புகிறீர்கள்.
1.முதலில் எந்த மெயிலை அச்செடுக்க விரும்புகிறீர்களோ, அதனைத் திறக்கவும்.
2. இமெயிலின் வலது பக்கத்தில் உள்ள Print all என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. அப்போது எழும்பி வரும் பாப் அப் கட்டத்தில் Cancel என்பதில் கிளிக்கிடவும்.
4. இனி உங்கள் திரையில் மேலாக உள்ள File மெனு சென்று கிளிக் செய்திடவும்.
5. அடுத்து கீழாக இறங்கி வந்து, Print Preview என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் இமெயில் அச்சில் எப்படி இருக்கும் என்று ஒரு முன் தோற்றத்தினைக் காட்டும்.
6. அந்தப் பக்கத்தின் மேலாக Scale என்னும் சொல்லுக்கு அடுத்ததாக ஒரு கீழ்விரி பெட்டிக்கான அடையாளம் இருக்கும். எழுத்துக்களின் அளவைப் பெரிதாக்க, இதில் 100% என்பதற்கும் மேலாக எதனையாவது தேர்ந்தெடுக்கவும். இப்போது Print Preview காட்சி தானாகப் பெரிய எழுத்துக்களில் தோற்றமளிக்கும். இது நீங்கள் தேர்ந்தெடுத்த சதவிகிதத்திற்கு ஏற்றபடி இருக்கும்.
7. அடுத்து எந்த பக்கங்களை அச்சிட வேண்டும் என முடிவு செய்து பின்னர், பிரிண்ட் பாக்ஸில் கீழாக உள்ள ஓகே பட்டனைக் கிளிக் செய்திடவும்.
அச்செடுத்து முடித்த பின்னர், 100%மேலாக அமைத்ததனை மீண்டும் 100%என அமைத்துவிட்டு வெளியேறவும். இல்லை எனில், மற்ற மெயில்களும் அதே அதிகப்படுத்தப்பட்ட அளவில் அச்சிடப்படும்.
இதே பயர்பாக்ஸ் பிரவுசரில், இணைய தளப் பக்கத்தினை எப்படி கூடுதலான அளவில் எழுத்துக்களைக் கொண்டதாக அச்செடுப்பது எனப் பார்க்கலாம்.
1. நீங்கள் திறந்துள்ள இணையப் பக்கத்தின் மேலாக உள்ள பைல் மெனுவில் கிளிக் செய்திடவும்.
2. Page Setup என்பது வரை சென்று கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கும் பெட்டியில், Scale என்ற சொல்லினை அடுத்து உள்ள பெட்டியில் 100க்கும் மேலாக உள்ள ஒரு எண்ணைத் தரவும்.
4. இந்த மாற்றத்தை அமல்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். இது எழுத்தின் அளவை மட்டுமின்றி, இணையப் பக்கத்தில் உள்ள அனைத்தின் அளவையும் அதே அளவில் சீராக அதிகப்படுத்தும்.
5. உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அச்சிடப்படும் அனைத்து இணையப் பக்கங்களிலும் இந்த மாற்றம் ஏற்படுவதனைப் பார்க்கலாம்.
திரையில் காணப்படும் தோற்றத்தில் ஏற்படுத்தப்படும் அளவு மாற்றத்திற்கேற்ப அச்சிடப்படுவதும் நடக்கும். நீங்கள் ஏதேனும் டைப்பிங் புரோகிராம்(வேர்ட் அல்லது எக்ஸெல் போன்ற புரோகிராம்கள்) பயன்படுத்துகையில் இந்த மாற்றம் ஏற்படும். எழுத்துக்களின் அளவை அச்சிடுவதற்கு முன் மாற்றலாம். ஆவணத்தின் குறிப்பிட்ட பகுதியை வேறு ஒரு அளவில் வேண்டும் என விரும்பினாலும், அந்த பகுதியை மட்டும் மாற்றிப் பின் அச்சிடலாம். ஆனால் இந்த மாற்றங்கள், அவற்றை மேற்கொண்ட டெக்ஸ்ட்டுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டு அச்சாகும். அடுத்து புதிய பக்கம் ஒன்றைத் திறந்து அமைத்தாலோ, அல்லது வேறு ஒரு டாகுமெண்ட் அமைத்தாலோ, அதில் இந்த மாற்றம் ஏற்றப்படாது. எனவே முன்பே சொல்லியபடி, அச்சிடும் வழிகள் எல்லாம் அந்த அந்த புரோகிராமின் வரையறைக்கு உட்பட்டன ஆகும்.

எதிர்கால நவீன சிகிச்சைகள்

இன்று உலக மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது எய்ட்ஸ். அடுத்து இதய நோய்கள். அதிலும் குறிப்பாக மாரடைப்பு. இவை தவிர, புற்றுநோய் உள்ளிட்ட எத்தனையோவிதமான நோய்களில் எய்ட்ஸ் தவிர மற்ற அனைத்துக்கும் ஏதோ ஒரு வகையில் பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.

இதய நோய்களுக்கான அடிப்படை விஷயம்:
இதயத் திசுக்கள் பல்வேறு பரம்பரைக் காரணங்களால் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு இதயம் பாதிக்கப்படுவதறகு மரபணுக்கள் காரணமாக இருக்கின்றன. அதேபோல், புகை, மது, மிகை ரத்த அழுத்தம், நீரிழிவு, நுண்கிருமிகள், கொலஸ்ட்ரால் போன்ற பல காரணங்கறாலும் இதயம் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு இதய பாதிக்கப்படும் போது, ஆக்ஸிஜனும், போதுமான சத்தும் கிடைக்காமல் இதய செல்கள் நலிவடைந்து பிறகு செயலிழந்துவிடுகின்றன. இதுதான் இதய நோய்களின் அடிப்படை விஷயம். இப்படிப்பட்ட பலவகையான இதய நோய்களுக்கும் எத்தனையோ வகையான சிகிச்சைகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, மக்களுடைய உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை நடைமுறைகள் போன்றவற்றால் புதுப்புது இதய நோய்கள் உருவாகின்றன. அவற்றைத் தொடர்ந்து அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆக, என்றென்றும் இதய நோய்கள் துறை 'புதுப்பிக்கப்பட்டு' வருகிறது.அந்த வகையில், மரபணு சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை போன்ற நவீன சிகிச்சை முறைகள் தற்போது பரிசோதனை முறையைக் கடந்து கிட்டத்தட்ட செயல்வடிவம் பெறும் நிலையில் இருக்கின்றன. இவற்றை இதய நோய்களுக்கான எதிர்கால நவீன சிகிச்சை முறைகள் என்று சொல்லலாம். அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1. ஸ்டெம் செல் சிகிச்சை
2. மரபணு சிகிச்சை
முதல் வகையான ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், நலிவடைந்த இதய செல்களை சீராக்க முடியும். அதேசமயம், மரபணு சிகிச்சையின் மூலம் செயல்படாத, நலிவடையாத இதய செல்களையும் பாதுகாக்க முடியும்.

ஸ்டெம் செல் எனப்து மிகவும் அடிப்படையான மனித செல்லாகும். அதிலிருந்துதான் உடல் உறுப்புக்கான அனைத்து செல்களுமே உருவாகின்றன.ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது உண்டாகும் கருத்தரித்த செல்தான் ஸ்டெம் செல்லாகப் பிரிந்து, உடலில் ஒவ்வொரு உறுப்புகளையும் உருவாக்குகிறது.இத்தகைய ஸ்டெம் செல்கள் உடலில் பல இடங்களிலும் காணப்படும். இந்த செல்களைத் தனியே பிரித்தெடுத்து, அவற்றை நேரடியாக இதயத்தில் செலுத்துவதன் மூலமாகவோ அல்லது இதய ரத்தக் குழாய் வழியாக செலுத்துவதன் மூலமாகவோ, நலிவடைந்த பாதிக்கப்பட்ட செல்களுக்குப் பதிலாக புதிய செல்களை உற்பத்தி செய்து இதயத்தைச் சீராக்கும்.எலும்பு மஜ்ஜை, தசைப்பகுதி மற்றும் சிசுவின் வளர்ச்சிப் பருவத்தில் இருந்தோ இத்தகைய ஸ்டெம் செல்கள் அதிக அளவில் பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

மரபணு சிகிச்சையில், மரபணுக்களை உடலில் செலுத்தும்போது, பரம்பரைக் காரணங்களால் பாதிக்கப்பட்ட மரபணுவோடு அவை சேர்த்து அவற்றைச் சீராக்குகின்றன.இந்தப் புதிய மரபணுவின் உத்தரவுப்படி, இதயத்தில் பாதிக்கப்படாத, நலிவடையாத இதய செல்கள் தூண்டப்பட்டு அவை வேலை செய்யும் விதமாக மாற்றப்படும்.இப்படி, மரபணுக்களை உடலில் செலுத்துவதற்கு வைரஸ் நுண்கிருமிகள்தான் ஊடகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், மரபணுக்கள் மிகவும் நுட்பமான உயிர்ப்பொருள் என்பதால், அவற்றைக் கடத்திச் செல்ல வைரஸ் போன்ற மிகவும் நுட்பமான உயிரினகளையே பயன்படுத்தவேண்டி இருக்கிறது.அதேசமயம், இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் வைரஸ் நுண்கிருமிகளால் புதிய நோய் ஏற்படாமலும் தடுக்க வேண்டும். அதற்காக, அடினோ வைரஸ், ரீட்ரோ வைரஸ், லென்டீ வைரஸ் போன்ற வைரஸ்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.இந்த இரண்டு நவீன சிகிச்சை முறைகளும் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தால், இதய நோய்கள் மட்டுமல்ல வேறு பல சிக்கலான நோய்களுக்கும் பெரிய தீர்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உலக இதய தினம்:
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'உலக இதய தினமாக'க் கடைப்பிடிக்கப்படுகிறது.இன்றைய தினம், உலகம் முழுவதும் சிறப்பு மருத்துவ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இதய நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் மருத்துவர்களே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலும், அதில் மக்களே அதிகமாகக் கலந்துகொள்கிறார்கள்.
இதய நோய்கள் குறித்த கருத்தரங்குகள், விழிப்புணர்வு பிரசார பேரணிகள், கூட்டங்கள் போன்றவை நடத்தப்படுகின்றன. இதில கலந்துகொள்ளும் மக்கள், இதய நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுகிறார்கள். மேலும், இதய நோய் வராமல் தடுக்கும் முறைகளையும், உணவு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் இதயத்தை வலுவாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் அறிந்து கொள்கிறார்கள்.தவிர, இதய நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன? அவற்றின் சிறப்புகள் என்னென்ன? என்பது போன்ற தகவல்களைத் தெரிந்து தங்களுக்கு உள்ள பாதிப்புகளுக்கு ஏற்ற மருத்துவச் சிகிச்சையை அவர்களே தேர்வு செய்யும் 'வசதியும்' அவர்களுக்குக் கிடைக்கிறது.

பல இடங்களில் 'இலவச இதய மருந்துச் சிகிச்சை முகாம்' நடத்தப்படும். அதில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு இலவச இதய ஆலோசனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்படும். பண வசதி இல்லாதவர்கள், இந்த முகாம்களுக்கு வந்து நிவாரணம் பெற முடியும்

மருந்து... மாத்திரை... உணவு!

சில நோய்களுக்கான மருந்துகளை சாப்பிடும் காலகட்டத்தில் மிகுந்த ஆரோக்கியம் தருவதாக நம்பும் உணவு வகைகளைக்கூட சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் எதிர்விளைவுகள் ஏற்பட்டு விடும்.

* தொற்றுநோயின் பாதிப்பிற்காக `ஆன்டிபயாடிக்' மருந்துகள் சாப்பிடுவோர், பாலையும், `யோகர்ட்' உள்ளிட்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இறைச்சியையும் ஒதுக்கி விடலாம்.

* வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு'களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். இதனால் வயிற்றுப் போக்கு இன்னும் மோசமாகி விடும்!

* ஒவ்வாமைக்காக மருந்து சாப்பிடும்போது, நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்ளும்போது, கால்சியம் செறிந்த உணவுகள், முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ் போன்ற உணவுகளை தவிர்த்திடுங்கள். வேறு வழியின்றி சாப்பிடுவதாக இருந்தாலும், தைராய்டு மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

* நீங்கள் வலிநிவாரணி மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும்.

* மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம்.

* மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம்.

பயர்பாக்ஸ் டேப் நகர்த்த ஷார்ட்கட் கீகள்

பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகமான தளங்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில், சில குறிப்பிட்ட டேப்கள் அடுத்தடுத்து இருந்தால், நமக்கு வசதியாக இருக்கும் என எண்ணுவோம். எடுத்துக் காட்டாக, கூகுள் ரீடர் தளத்தில் ஒரு கட்டுரையைத் தேர்ந்தெடுத்துப் படித்துக் கொண்டிருக்கலாம். இதற்கான தளம் இடது மூலையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே நேரத்தில் நீங்கள் உங்களின் வலைமனை (பிளாக்) ஒன்றைத் திறந்து எழுதிக் கொண்டிருக்கலாம். இதற்கான டேப் வலது மூலையில் இருக்கலாம். ஆனால் நீங்கள் இந்த இரண்டு தளங்களும் அடுத்தடுத்து இருந்தால், பயன்படுத்த எளிது என்று எண்ணுகிறீர்கள். கூகுள் ரீடரில் விஷயத்தைப் படித்து, அதனை உங்கள் கருத்துக்களுடன், உங்கள் வலைமனையில் உடனுக்குடன் அமைக்க விரும்பலாம். இதற்கென டேப்களை மாற்றி அமைத்திட சில வழிகளை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
பொதுவாக, எந்த டேப்பினை நகர்த்த விரும்புகிறோமோ, அதில் கிளிக் செய்து, இழுத்து நகர்த்தி வைக்கலாம். இன்னொரு வழியும் உள்ளது. எந்த டேப்பினை மாற்ற விரும்புகிறோமோ, அதன் இடத்தினை எண் அறிந்து, கண்ட்ரோல் + அந்த எண் அழுத்த, அது தேர்ந்தெடுக்கப்படும். ஆனால் ஒன்பதுக்கும் மேற்பட்ட டேப்கள் திறந்திருக்கையில், இது சற்று வேலை வாங்கும் விஷயமாக இருக்கும். மானிட்டரில், ஒரு பேனா அல்லது பென்சில் முனையைக் கொண்டு ஒன்று, இரண்டு என எண்ண வேண்டும். இது ஒரு பழைய முறை ஆகும்.
இதற்கான ஒரு எளிய வழியை புதியதாக வந்துள்ள ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இதன் மூலம் பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ள டேப்களை எளிதாக நகர்த்தலாம். இதன் பெயர் Move Tabs . இதனைப் பெற https://addons.mozilla.org/en-US/firefox/addon/220875/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இந்த எக்ஸ்டென்ஷன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்த பின்னர், டேப்களின் இடத்தை எளிதாக மாற்றலாம். அதற்குக் கீழ்க்கண்ட ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தலாம். டேப்களை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இந்த கீகளைப் பயன்படுத்தவும். பயன்படுத்துகையில் அந்த டேப் எந்த இடத்திற்குச் செல்கிறது என்று கவனத்தில் கொள்ளவும்.
Control + Shift + Home: தேர்ந்தெடுக்கப்பட்ட டேப்பினை இடது ஓரத்திற்குக் கொண்டு செல்கிறது.
Control + Shift+ End: தேர்ந்தெடுக்கப்பட்ட டேப்பினை வலது ஓரத்திற்குக் கொண்டு செல்கிறது.
Control + Shift+ Page Up:தேர்ந்தெடுக்கப் பட்ட டேப்பினை இடது பக்கம் ஒரு இடம் நகர்த்துகிறது.
Control + Shift + Page Down:தேர்ந்தெடுக்கப் பட்ட டேப்பினை வலது பக்கம் ஒரு இடம் நகர்த்துகிறது. இந்த ஷார்ட்கட் கீகள், டேப்களை நகர்த்த எளிய வழியைத் தருவதனை, இதனைப் பயன்படுத்து கையில் உணர்வீர்கள். இதில் ஒரு ட்ரிக் பார்ப்போமா! நீங்கள் 15 டேப்களைத் திறந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் 3 ஆவது டேப்பில் இருக்கிறீர்கள். அதிலிருந்து 14 ஆவது டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். இது ஏறத்தாழ வலது மூலை அருகே இருக்கலாம். டேப் பாரில் உள்ள அம்புக்குறி கீகளை அழுத்தி, ஒவ்வொரு தளமாகச் செல்லாமல், முதலில் Control + Shift + End அழுத்தவும். பின்னர், Control + Shift + Tab அழுத்தவும். இப்போது நீங்கள் விரும்பிய இடத்தில் இருப்பீர்கள்.
போனஸ் டிப்ஸ்:
சில கூடுதல் ஷார்ட்கட் கீகளை நினைவு படுத்திக் கொள்ளலாமா!
1. அனைத்து பிரவுசரிலும் செயல்படும் ஷார்ட்கட் கீகள்:
பின்னணியில் புதிய டேப்பில் தளங்களைத் திறக்க –– கண்ட்ரோல் + கிளிக் ctrl+click
2. முன்னணியில் புதிய டேப்பில் தளங்களைத் திறக்க –கண்ட்ரோல் + ஷிப்ட்+கிளிக் ctrl+shift+click
3. முன்னணியில் புதிய டேப் ஒன்றைத் திறக்க – கண்ட்ரோல் + mi ctrl+t
4. டேப்களுக்கிடையே செல்ல: ctrl+tab/ctrl+shift+tab
5. அனைத்து டேப்களையும் மூட : ctrl+tab/ctrl+shift+tab
6.மற்ற டேப்களை மட்டும் மூட: ctrl+alt+f4
பயர்பாக்ஸ் பிரவுசரில் மட்டும்:
1. குறிப்பிட்ட பிரவுசருக்குச் செல்ல: கண்ட்ரோல் + அந்த தளத்தின் டேப் உள்ள நிலை. கண்ட்ரோல் + அந்த எண். எடுத்துக்காட்டாக, நான்காவதாக உள்ள டேப்பிற்குச் செல்ல வேண்டும் எனில், ctrl+4.
இதில் ஒன்பது டேப்கள் இருந்தால் மட்டுமே இந்த ஷார்ட்கட் கீ செயல்படும்.
2. அப்போதைய டேப்பினை மட்டும் மூடிட ctrl+w
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7க்கானவை:
1. அட்ரஸ் பாரிலிருந்து புதிய டேப் ஒன்றைத் திறக்க: ஆல்ட் + என்டர்
2.டூல் பார் சர்ச் பாக்ஸிலிருந்து புதிய டேப் ஒன்றைத் திறக்க: ஆல்ட் + என்டர்
3. டேப்களுக்கான தளங்களின் சிறிய படத் தோற்றம் பெற: கண்ட்ரோல் + க்யூ
4. இதிலும் கண்ட்ரோல் + டேப் எண் கொடுத்துத் திறக்கலாம். ஆனால் இதில் 8 தளங்களுக்கு மட்டுமே செயல்படும்.
மவுஸ் ஷார்ட்கட் கீகள்
லிங்க் ஒன்றில் நடுவே உள்ள மவுஸ் பட்டன் அல்லது ஸ்குரோல் வீல் கிளிக் செய்தால், பின்புலத்தில் திறக்கப்படும். காலியாக உள்ள டேப் வரிசை காலி இடத்தில் கிளிக் செய்திட புதிய டேப் ஒன்று திறக்கப்படும்.
டேப்பில் நடுவே உள்ள பட்டனைக் கிளிக் செய்தால், டேப் மூடப்படும்.

தொடர் அழுகை

குழந்தைகள் பிறந்தவுடன் நன்றாக வேகமாக அழ வேண்டும். அப்போதுதான், முதன்முறையாக தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசிக்க முடியும். உடலும் சிவப்பு நிறமாக மாறும்.
குழந்தையின் முதல் அழுகை என்பது தன்னுடைய சுவாச முறையைத் தொடங்குவதற்காகவே இயற்கை ஏற்படுத்தியது. ஆனால், இந்த இயற்கையான நடவடிக்கைக்கு மாறாக வேறு பல காரணங்களால் குழந்தை அழலாம். அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டு சிகிச்சை அளித்தால், ஒருவேளை குழந்தைக்கு வேறு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.
சில காரணங்களை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். பசிக்கும்போது அழலாம். வயிற்றில் இருந்து காற்று வெளியேறும் போது அழலாம். துணியால் உடல் மூடப்படாமல் கதகதப்பு இல்லாமல் இருந்தால் அழலாம்.
சில குழந்தைகள், விளக்கை அணைத்தால் அழத் தொடங்கும். சில குழந்தைகள், விளக்கைப் போட்டால் அழும். எல்லாக் குழந்தைகளும், கை கால்கள் மற்றும் கழுத்துப் பகுதியை கெட்டியாக அழுத்திப் பிடித்தால் அழும்.
வேறு காரணங்கள்
கைக்குழந்தைகள்
பசி
தாகம்
வயிற்றில் காற்று
அரிப்பு
வயிற்று வலி
ஈரமான துணி
அதிக சத்தம்
மாட்டுப்பால் அலர்ஜி
பல் முளைக்கும் போது
சிறுநீர் கழிக்கும்போது
தனிமை
இவை தவிர,
1. நோய்த் தொற்று
2. தலைவலி
3. காது வலி
4. குடல் இறக்கம்
5. விறை முறுக்குதல்
6. குடல் அடைப்பு
போன்ற காரணங்களாலும் குழந்தை அழலாம்.
சிறுவர்கள்
1. ஆளுமை
2. பாதுகாப்பு இல்லாமை
3., பழக்கம்
4. பசி
5. களைப்பு
6. நோய்
7. மருந்துகள் ஏதாவது
8. அலர்ஜி
சிகிச்சை
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். பாலுக்காகத்தான் அழுகிறது என்றால், பால் கொடுத்தால் அழுகை நின்று விடும். குழந்தையைப் படுக்க வைத்திருக்கும் துணி நனைந்திருப்பதால் குழந்தை அழுகிறது என்றால், அந்தத் துணியை மாற்றிவிட்டால் அழுகை நின்றுவிடும்.
காது வலி போன்றவை இருந்தால், மருத்துவரிடம் காட்டி மருந்துபோட்டால் அழுகை நின்றுவிடும்.

காணாமல் போகும் கிரெடிட் கார்டு மோகம்!

2003-ம் ஆண்டில் அந்த அலை எழுந்தது. ஒட்டுமொத்த நாட்டையும் அந்த அலை பெருவேகமாக அடித்துச் சென்றது. இந்திய நடுத்தர வர்க்கம், தங்கள் கனவுகளை உடனடியாக நனவாக்க வந்த வரமாக நினைத்த `கிரெடிட் கார்டு' அலை பற்றித்தான் நாம் கூறுகிறோம்.

அது இப்போது பழைய கதை. `பிளாஸ்டிக் மணி' மீதான மக்களின் கவர்ச்சி வெகுவாக மறைந்துவிட்டது. அப்படித்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ரிசர்வ் வங்கி இதழில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், இந்திய வாடிக்கையாளர்களிடையே `கிரெடிட் கார்டு' பயன்பாடு வெகுவாகக் குறைந்து வருவது தெரிகிறது.

கடந்த 2005- 2006-ல் இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சமாக இருந்தது. அது 2007- 2008-ம் ஆண்டில் 2 கோடியே 75 லட்சமாக எகிறியது. அது 2008- 2009-ம் ஆண்டில் 2 கோடியே 46 லட்சமாகக் குறைந்தது. தொடர்ந்து வந்த 2009- 2010 ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. தற்போது கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை, 1 கோடியே 83 லட்சம்தான்.

ஆனால் `டெபிட் கார்டுகள்' விஷயத்தில் இந்த நிலைமை இல்லை. 2005- 2006-ல் இநதியச் சந்தையில் புழக்கத்தில் இருந்த `டெபிட் கார்டுகளின்' எண்ணிக்கை 4 கோடியே 98 லட்சம்தான். 2007- 2008-ல் இரு மடங்குக்கும் மேலாக உயர்ந்து 10 கோடியே 24 லட்சம் ஆனது. 2009- 2010 ஆண்டிலோ 18 கோடியே 14 லட்சம் ஆகியிருக்கிறது.

ஆக, வாடிக்கையாளர்கள் இடையே ஆரம்பகட்ட `கிரெடிட் கார்டு' மோகம் மறைந்து, அவர்கள் `டெபிட் கார்டு'க்கு மாறி வருவது தெளிவாகத் தெரிகிறது.

2005- 2008 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் வங்கிகள் கிரெடிட் கார்டுகளை அள்ளி வழங்கின. தொடர்ந்து வந்த பொருளாதார மந்தநிலையும், கிரெடிட் கார்டு விஷயத்தில் தவறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பும், வங்கிகளை எச்சரிக்கையாகச் செயல்படச் செய்திருக்கின்றன.

`பிளாஸ்டிக் பண' பயன்பாடு குறித்த வாடிக்கையாளரின் மனோபாவமும் மாறியிருக்கிறது. இது ஒரு `பேன்சி ஐட்டம்' அல்ல, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தவேண்டிய சீரியசான பணம் செலுத்தும் முறை என்று எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள் என இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் கொட்டும் ஏடிஎம்

இருபத்துநான்கு மணி நேரமும் பணம் எடுக்க, இப்போது, தெருவுக்கு தெரு ஏ.டி.எம்.,கள் வந்து விட்டன. தானியங்கி பணம் வழங்கும் இந்த இயந்திரங்கள் மக்களுக்கு மிகவும் வசதியாக உள்ளன. "ஏ.டி.எம்.,மில் பணம் மட்டுமே வழங்க வேண்டுமா? தங்கத்தை வழங்கினால் என்ன?' என யோசித்தது ஒரு நிறுவனம். உடனே, தங்கம் வழங்கும் ஏ.டி.எம்., இயந்திரத்தையும் நிறுவி விட்டது. ஆனால், இது இந்தியாவில் அல்ல. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகர ஓட்டல் ஒன்றில் இந்த ஏ.டி.எம்., நிறுவப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்.,மில் நீங்கள் தங்கம் வாங்க கார்டை செருக வேண்டாம். அதற்கு பதில், பணத்தை போட வேண்டும். பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப ஒன்று, ஐந்து அல்லது பத்து கிராம் எடையுள்ள தங்க பார்கள் வந்து விழும். தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி வரும். எனவே, இந்த இயந்திரமும் தங்கத்தின் விலையை பத்து நிமிடங்களுக்கு, ஒரு முறை சரி செய்து கொள்ளும். "எக்ஸ் ஓரியன்ட் லக்ஸ் ஏ.ஜி.,' என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தாமஸ் ஜிஸ்லர் என்பவர், இந்த இயந்திரத்தை மாட்ரிட் நகரில் வெஸ்டின் பேலஸ் என்ற ஓட்டலில் நிறுவியுள்ளார். "விழாக்களின் போது பரிசாக கொடுக்க தங்க நாணயங்களை வாங்க கடைகளுக்கு செல்வதை தவிர்க்க, இந்த இயந்திரத்தை நிறுவி உள்ளோம். மிக குறைந்த பணத்திற்கு கூட சிறிய நாணயத்தை இந்த இயந்திரம் மூலம் வாங்கலாம்!' என தாமஸ் கூறியுள்ளார். இந்தியாவிலும் இந்த இயந்திரத்தை பொருத்தி விட்டால், நகைக்கடைகளில் கூட்டத்தை குறைக்கலாம்.

நகங்களும் நலம் சொல்லும்

நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

* நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங் களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவ தோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.

* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.

* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.

* சமையல் அறை, கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா போன்ற ரசாயனங் களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

* தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும் கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.

* பசை, தண்ணீரில் கலந்து உபயோ கிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.

* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சு களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.

* நகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே. நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.

* நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்ப மாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மை தான்.

வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்தஓட்டம் கிடைக்க உதவுகிறது.

* நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.

நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் `மானிட்டர்' போலவும் செயல்படும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு இவற்றைக் கண்டுபிடிக்கலாம். நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு...

* நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்டு நோய் போன்றவற்றின் அறிகுறி யாகவும் இது கருதப்படுகிறது.

* நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் ரையீரல் நோய்கள் வரலாம்.

* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.

* நகங்கள் வெளிறி இருந்தால் ரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.

* நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.

* கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.

* நீலநிறமாக மாறிவிட்டால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.

* நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.

* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துக் கொள்வது நலம்.

கவனக் குறைவாக டாகுமெண்ட் அழிக்கப்பட்டால்
வேர்ட் தொகுப்பில் நாம் ஆவணங்களை உருவாக்கிய பின்னர், பலர் அவற்றைக் கவனக் குறைவாக அழித்துவிடுவார்கள். சிலர் அவசரத்தில் ரீசைக்கிள் பின்னுக்கும் போகாத வகையில் முற்றிலுமாக நிக்கிவிடுவார்கள். பின்னர் வருத்தப்படும் இவர்களுக்கு உதவுவதற்காகவே, வேர்ட் புரோகிராம் பேக்அப் பைல் உருவாக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இதனை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். முதலில் File மெனு சென்று Save As பிரிவைத் தேர்ந்தெடுங்கள். வரும் டயலாக் பாக்ஸில் Tools பட்டன் தட்டவும். பின் உங்கள் தொகுப்பிற்கேற்ப General அல்லது Save தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Always create Backup copy என்பதில் டிக் செய்து ஓகே கிளிக் செய்திடவும். இனி பேக்கப் காப்பி உருவாகும். இறுதியாக சேவ் செய்யப்பட்ட டாகுமெண்ட் பைலைப் பெற்று மீண்டும் சேவ் செய்திடலாம்.
நாளும் நேரமும் நீங்களே அமைக்கலாம்
வேர்ட் அல்லது பிரசன்டேசன் பைல்களில் அடிக்கடி தேதி மற்றும் நேரத்தினை பதிபவரா நீங்கள்! என்ன செய்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் டைப் செய்கிறீர்களா? வேண்டாமே! வேர்டில் Alt + Shift + D என அழுத்துங்கள். தேதி சிஸ்டத்திலிருந்து எடுத்து டைப் செய்யப்படும். நேரத்தை இடைச் செருக Alt + Shift + T அழுத்தலாம்.
பவர் பாயிண்ட்டில் இந்த கீகளை அழுத்தினால் ஒரு கட்டம் கிடைக்கும். இதில் எந்த மாதிரி வகையில் டேட் மற்றும் டைம் அமைக்க வேண்டும் மற்றும் எந்த ஸ்லைடில் அமைக்க வேண்டும் என்பதனை முடிவெடுத்து செட் செய்து ஓகே அழுத்தினால் அதே போல தேதியும் நேரமும் அமைக்கப்படும். பார்த்தீர்களா! தேதியும் நேரமும் உங்கள் பிங்கர் டிப்ஸில் உள்ளதே!

வேர்டில் சப்ஜெக்ட் இண்டெக்ஸ்
வேர்டில் ஆவணம் ஒன்றை உருவாக்கிய பின்னர், அதன் பொருள் குறித்து ஒரு அட்டவணைக் குறியீடு ஒன்றினை உருவாக்க விருப்பப்பட்டால், அதனை நிறைவேற்றிக் கொள்ளும் வசதியினை, வேர்ட் தருகிறது. இதனை மிக எளிதாக உருவாக்கலாம். தேவையைக் குறிப்பிட்டுவிட்டால் வேர்ட் தொகுப்பு தானாகவே இந்த பொருளடக்கத்தினைத் தயாரித்து வழங்கும். முதலில் எந்த வரிகளில் உள்ள சொற்கள் உங்கள் பொருளடக்கத்தில் வரவேண்டும் என்பதனை முடிவு செய்து அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் பாண்ட்ஸ் புல் டவுணை அடுத்து இருக்கும் இடத்தில் கர்சரை வைத்து மெனுவைப் பெறவும்.பின் பொருளடக்கத்தில் மெயினாக வரவேண்டிய சொற்களை Header 1 என்பதற்கு மாற்றவும். துணைத் தலைப்புகளை Header 2 என்பதற்கு மாற்றவும். இப்போது எங்கு உங்களுக்கு பொருளடக்க அட்டவணை வேண்டுமோ அங்கு கர்சரை வைத்துக் கொண்டு பின் “Insert” மற்றும் “Index and Tables” என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்களுடன் வரும் டயலாக் பாக்ஸில் “Table of Contents” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதிலேயே கொடுத்துள்ள வசதிகளைப் பயன்படுத்தி பக்க எண்கள் வேண்டுமா என்பதனையும் முடிவு செய்து பின் ஓகே கிளிக் செய்திடவும். பின் பொருளடக்க அட்டவணை கிடைக்கும். அதன்பின் ஆவணத்தில் மாற்றங்கள் செய்தால் எந்த பீல்டை அப்டேட் செய்திட வேண்டுமோ அதில் கர்சரை வைத்துக் கொண்டு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Update Field” என்பதனைக் கிளிக் செய்துவிடவும்.

ஆட்டோ டெக்ஸ்ட் அமைக்கும் வழி
ஆவணங்களை வேர்டில் தயாரிக்கையில், மிகப் பெரிய முகவரிகள் அல்லது தலைப்புகளை அடிக்கடி பயன்படுத்த வேண்டியதிருக்கும். இவற்றை ஒவ்வொரு முறையும் தவறின்றி டைப் செய்வது சற்று சிரமமான வேலையாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையும் அதுவே. ஆனால் இதனை ஒரு ஆட்டோ டெக்ஸ்ட் உருவாக்குவதன் மூலம் மிக எளிதாக மேற்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக,“Shri Meenakshi Videos and Accessories, Pudhu Mandapam, Madurai” என்று உங்களின் கடைப் பெயரை தொடர்ந்து அடிக்கடி அமைக்க விரும்புகிறீர்கள். இதனை ஒரு ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரியாக அமைத்துவிட்டால், ஒரு கீ அழுத்தலில் இது கிடைக்கும். எப்படி இதனை ஏற்படுத்தலாம் என்று பார்ப்போம்.
Insert மெனு சென்று அதில் AutoText என்ற துணை மெனுவைத் தேர்ந்தெடுத்து பின் அதில் ஆட்டோ டெக்ஸ்ட் விண்டோவில் நீங்கள் தர வேண்டிய நீளப் பெயரைத் தருகிறீர்கள். நீங்கள் ஆட்டோ டெக்ஸ்ட் விண்டோ வில் இருக்கையில் “Show AutoComplete suggestions” என்பதற்கு எதிரே உள்ள கட்டத் தில் டிக் அடையாளம் உள்ளதா என்பதனை ஒரு முறைக்கு இரு முறை உறுதிப்படுத்தவும்.
இந்த வழிமுறை உங்களுக்கு ஆட்டோ கம்ப்ளீட் வசதியைத் தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த டெக்ஸ்ட்டை என்டர் செய்து ஆட்டோ டெக்ஸ்ட் அமைப்பது சிறிது சுற்றுவேலை இல்லையா? இந்த மெனு மற்றும் சப்மெனு இல்லாமல் ஆட்டோ டெக்ஸ்ட் அமைத்திட முடியாதா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அதற்கான வழி:– முதலில் எந்த டெக்ஸ்ட்டை ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரிக்குக் கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுத்து ஹை லைட் செய்திடவும். டெக்ஸ்ட் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் போதே ALT + F3 கீகளை அழுத்தவும். இப்போது Create AutoText window என்ற விண்டோ திறக்கப்படும்.
இந்த விண்டோ வில் ஹைலைட் செய்யப்பட்ட டெக்ஸ்ட் இருக்கும். நீங்கள் மிகப் பெரிய சொல் தொகுதியை எடுத்திருந்தால் அதில் ஓரிரு சொற்களும், சிறியதாக இருந்தா லும் முழுவதுமாக இந்த விண்டோவில் தெரியும். உங்களுக்குக் காட்டப்படும் சொற்கள் சரியானதாகத் தென்பட்டால் ஓகே டிக் செய்து வெளியேறவும். அடுத்து இந்த டெக்ஸ்ட்டின் ஓரிரு எழுத்துக்களை டைப் செய்திடுகையிலேயே டெக்ஸ்ட் முழுவதும் காட்டப் பட்டு இந்த டெக்ஸ்ட் வேண்டு மென்றால் என்டர் தட்டுக என்ற செய்தி காட்டப்படும். நீங்கள் முழுவதுமாக டைப் செய்தி டாமல் என்டர் தட்டிவிட்டுப் பின் தொடர்ந்து மற்ற சொல் தொகுதிகளை டைப் செய்து கொண்டு போய்க் கொண்டே இருக்கலாம். மெனு, சப் மெனு என்றில்லாமல் ஆட்டோ டெக்ஸ்ட் ரெடி.

மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை

மாரடைப்புக்கு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதையடுத்து, செயல்முறை மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது இரண்டு வகைப்படும். 1) ஆன்ஜியோ பிளாஸ்டி 2) பைபாஸ் அறுவை சிகிச்சை.

ஆஞ்சியோ பிளாஸ்டி என்பது என்ன?
ஆன்ஜியோகிராம் செய்வது போலவே இருதய ரத்தக்குழாயினுள் பிளாஸ்டிக் டியூபைச் செலுத்தி, அதன் வழியாக எளிதாக அடைப்பை சரிசெய்யும் முறையே ஆன்ஜியோ பிளாஸ்டி. இது அறுவை சிகிச்சை அல்ல. மயக்க மருந்தும் தேவையில்லை.

ஆன்ஜியோ பிளாஸ்டி எவ்வாறு செய்யப்படுகிறது?
ஆன்ஜியோகிராம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாயைவிட சற்று தடித்த, அகலமான, எளிதில் வளையும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் டியூப் (Guide Catheter) தேர்ந்தெடுக்கப்படுகிறது.
வலது கையின் மணிக்கட்டிலோ, தொடைகளின் மேல்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வழியாகவோ இந்த டியூப் செலுத்தப்பட்டு, அதன் நுனிப்பகுதி பாதிக்கப்பட்ட அல்லது அடைப்பு உள்ள இதய ரத்தக் குழாயின் ஆரம்ப பகுதியில் நிறுத்தப்படுகிறது. அடுத்து மிக எளிதில் வளைந்து செல்லும் தன்மையை நுனிப்பகுதியாக கொண்ட நீண்ட மெல்லிய இழை (Guide Wire) கைடு டியூபின் வழியாக அடைப்பு உள்ள ரத்தக் குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதற்கு "வழிகாட்டி இழை' என்று பெயர். இந்த வழிகாட்டி இழையின் மூலம் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பின் தன்மைக்கு ஏதுவான சுருக்கப்பட்ட பலூன் எடுத்துச் செல்லப்பட்டு, அடைப்பு உள்ள பகுதியில் நிறுத்தப்படுகிறது. இப்போது அந்த பலூனை விரிவடையச் செய்வதன் மூலம், அடைப்பின் பெரும்பகுதி ரத்தக்குழாயின் தசை சுவர்களுக்குள் அழுத்தப்படுகிறது. ரத்தக்குழாயின் வழி அகலப்படுத்தப்படுகிறது. அதன் பின் பலூன் மீண்டும் சுருக்கப்பட்டு ரத்தக்குழாயில் இருந்து வெளியே எடுத்து வரப்படுகிறது. இச்செய்முறையால் அடைப்பால் பாதிக்கப்பட்ட இருதய தசைக்கு ரத்த ஓட்டம் மீண்டும் சீராக்கப்படுகிறது. அகலப்படுத்தப்பட்ட ரத்தக்குழாய் மீண்டும் சுருங்கி அடைபடாமல் தடுக்க, மெல்லிய, விரியும் தன்மை கொண்ட, பால்பாயின்ட் பேனாவில் உள்ள ஸ்பிரிங் போன்ற "உலோக வலை' (Stent) அவ்விடத்தில் பொருத்தப்படுகிறது.


இந்த உலோக வலை இரு வகைப்படும். 1. சாதாரண உலோக வலை (Bare Metal Stent), 2. மருந்து தடவப்பட்ட உலோக வலை (Drug Eluting Stent).


மருந்து தடவப்பட்ட உலோகவலை சில காரணங்களால் சாதாரண உலோக வலையைவிட சிறப்பானது. ஆனால் விலை அதிகமானது. எல்லாருக்கும் மருந்து தடவப்பட்ட உலோக வலை தான் பொருத்தப்பட வேண்டும் என்பதில்லை. இதய ரத்தக்குழாயின் அடைபட்ட பகுதியின் அளவு, சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற சில காரணங்களைக் கருத்தில் கொண்டு எத்தகைய உலோக வலை பொருத்த வேண்டும் என மருத்துவரே தீர்மானிப்பார். மாரடைப்பு வந்து மூன்றில் இருந்து எட்டு மணி நேரத்திற்குள், மருத்துவமனை வருவோருக்கு ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்து தராமலேயே இத்தகைய சிகிச்சை முறை மேற்கொள்வதே மிகச்சிறந்ததாகும். மேலும் சிலவகை மாரடைப்புக்கு ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்து தரமுடியாது. அத்தகைய சூழலில் ஆன்ஜியோ பிளாஸ்டி போன்ற இத்தகைய சிகிச்சை முறை தான் உகந்ததாக இருக்கும்.
இந்த சிகிச்சைக்கு பின் இரண்டாவது நாளில் எழுந்து நடமாடலாம். நான்கு அல்லது ஐந்து நாட்களில் வீடு திரும்பலாம்.


- டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா, மதுரை

இதய நோய்க்கான முக்கிய மருந்துகள்

இதய நோயளிகளுக்கு, அவர்களுக்கு ஏற்படடுள்ள நோயைக் குணப்படுத்துவதற்கான பல்வேறு சிகிச்சைகளும், மருந்துகளும் உள்ளன. இதய நோய்களைக் குணப்படுத்த எத்தனைவிதமான கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு சில மருந்துகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட சில மருந்துகளை இங்கே பார்ப்போம்.
இந்த மருத்தின் பெயர், அதில் உள்ள மருந்துப் பொருள்கள் , எந்தெந்த இதய நோய்களுக்கு இம்மருந்து பயன்படுகிறது என்பது உள்ளிட்ட பல தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

டில்டியாஸெம்:
இது மாத்திரைகளாகவும், ஊசி மருந்தாகவும் தயாரிக்கப்படுகிறது.இந்த மருந்து, செல்களுக்குள் கால்சியம் அயனிகள் கடத்தலைத் தடுக்கிறது. இதயத்திலும் ரத்த நாளங்களிலும் இந்த மருந்து செயல்படும். இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவது, ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, ரத்த நாளங்களை விரிவடையச் செய்வது, போன்ற பல பணிகளைச் செய்கிறது இந்த மருந்து.மேற்கூறிய பண்புகளால், ரத்த அழுத்தத்தைக் குறைக்கப்ப பயன்டுத்துவடன், மாரடைப்புக்கான முக்கியமான மருந்தாகவும் இது பயன்படுகிறது.

அட்டார்வஸ்டேட்டின்:
இது, ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஒரு முக்கிய மருந்து. இந்த மருந்து, உடலில் ஒரு நொதியின் செயல்பாடு மூலம் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.இந்த மருந்து ஆஸ்பிரின் மருந்தோடு சேர்ந்தும், பிற ரத்த கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளோடு சேர்ந்தும் தயாரிக்கப்படுகிறது.இது, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பிற காரணங்களால் ஏற்படும் மிகை ரத்த கொலஸ்ட்ராரைக் குறைக்கவும் பயன்படுகிறது.

டிசாக்ஸின்:
இது, இதய செயலிழப்பைத் தடுக்கப் பயன்படும் ஒரு முக்கியமான மருந்தாகும்.இதய 'டானிக்' என்று இந்த மருந்து அழைக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் ஏற்படும் இதய செயலிழப்பைத் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, இதய வால்வு நோய்கள், மாரடைப்பு, இதயத் தசை நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் இதய பாதிப்பையும் அதனால் உண்டாகக்கூடிய இதய செயலிழப்பையும் தடுக்கிறது. மேலும், இதயம் சீரில்லாமல் துடிப்பதையும் இம் மருந்து கட்டுப்படுத்துகிறது.

ஸிம்வாஸ்டேட்டின்:
இந்த மருந்து, உடலில் செயல்படும் ஒரு முக்கிய நொதியின் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதன் மூலம் விணிக்ஷிகிலிளிழிமிசி என்ற அமிலம் சுரக்காது. இதன் காரணமாக, ரத்தத்தில் 'கொலஸ்ட்ரால்' அதிகமாக ஏற்படுவது தடுக்கப்படும். மேலும், ரத்தத்தில் டிரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கிறது.மேற்கூறிய பண்புகளால், ரத்ததில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்களுக்கு, கொலஸ்ட்ராரைக் குறைக்கத் தரப்படுகிறது. இது தனியாகவோ, பிற மருந்துகளோடு சேர்த்தோ கொடுக்கப்படுகிறது.

அமைலோடீப்பின்:
இந்த மருந்து, கால்சியம் அயனிகளைத் தடை செய்யக்கூடிய ஒரு முக்கியமான மருந்தாகும். இந்த மருந்தால், இதய நாளங்கள் விரிவடையும். இதயத்தின் பளு குறையும். ரத்த அழுத்தமும் குறையும்.இந்த மருந்தின் செயல்பாட்டல், மிகை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்தாகப் பயன்படுகிறது. இதய ரத்தநாளம் திடீரென சுருங்கி ஏற்படும் இதய பாதிப்புக்கும், நெஞ்சு வலிக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது.

அட்டினாலால்:
இந்த மருந்து, உடலில் உள்ள பீட்டர் ஏற்பிகளில் தடையை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும்.
இந்த மருந்து, அட்ரீனல் சுரப்பி ஹார்மோன் செயல்பாட்டைத் தடுக்கும். இந்த மருந்தின் செயல்பாட்டால் இதயத் துடிப்பு குறையும். இதயத்துக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவு குறையும். இதன் காரணமாக, இதயத் சுமையும் (வேலைப்பளுவும்) குறையும். ரத்த அழுத்தமும் குறையும்.இதய நோயாளிகளுக்கு, குறிப்பாக மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, மிகை இதயத் துடிப்பு உள்ளவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. மேலும், இதயத்தசை நோய்கள், அட்ரீனல் சுரப்பி நோய்கள், கை, கால் நடுக்கத்துக்கும் சிறந்த மருந்து இது.

ஃபலோடீபைன்:
இது, கால்சியம் அயனிகளை செல்களுக்குள் நுழைய விடாமல் தடுக்கக்கூடிய ஒரு முக்கியமான மருந்தாகும். இந்த மருந்து, இதயத்திலும், ரத்த நாளங்களிலும் செயல்படுகிறது. இதனால், இதயம் சீராகச் செயல்பட முடியும். ரத்த அழுத்தமும் குறையும்.
இதய நோய்களால் ஏற்படும் இதய செயலிழப்புக்கு மருந்தாக பயன்படும் இது, இதய பாதிப்பால் ஏற்படும் நெஞ்சு வலியைக் குறைக்கப் பயன்படுகிறது.

லேபீட்டலால்:
இந்த மருந்து, ஆல்பா மற்றும் பீட்டா ஏற்பிகளில் தடையை ஏற்படுத்தும் மருந்தாகும். இவ்வாறு, இதயத்தில் உள்ள நரம்பிழை ஏற்பிகளில் இந்த மருந்து செயல்படுவதால், இதயத் துடிப்பு குறைகிறது. இது, ரத்த அழுத்தையும் குறைக்கிறது.ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்தாகவும் பயன்படும். இது, குறிப்பாக கர்ப்பிணிகளுக்குப் பயன்படுகிறது.

அம்யோடரோன்:
இந்த மருந்து, இதயத் துடிப்பு தொடர்பான நோய்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இது, இதய மின்னோட்டத்தை ஏற்படுத்தும் நரம்பிழைகளில் செயல்பட்டு, அங்கு மின்னோட்டக் கடத்தலைக் குறைக்கிறது. இதனால், இதய மின்னோட்டத்தில் தாமதம் ஏற்படும். இதன் காரணாக, இதய மின்னோட்டத்தில் தாமதம் ஏற்படும். இதன் காரணமாக, இதயத் துடிப்பு குறைந்து, இதயம் சீரில்லாமல் துடிப்பது கட்டுப்படுத்தப்படும்.
இதய மேல் அறை சீரில்லாமல் துடிக்கும் இதய பாதிப்புக்கும், கீழ் அறை சீரில்லாமல் துடிக்கும் இதய பாதிப்புக்கும் சிறந்த மருந்து இது.

கிளிசரைல் டிரைநைட்ரேட்:
இது, 'நைட்ரேட்' வகையைச் சேர்ந்த மருந்தாகும். இது, இதய ரத்த நாளங்களில் செயல்படும். ரத்த நாளங்களின் மெல்லிய தசையை விரிவடையச் செய்யும். இதன் மூலம், ரத்த நாளத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கி, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும், இது ஆவி மருந்தாகவும், தோலில் பூசும் களிம்பு மருந்தாகவும் தயாரிக்கப்படுகிறது. இதய ரத்த நாள அடைப்பால் மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு, உடனடியாகக் கொடுத்து ரத்த அடைப்பை நீக்குவதற்கு இந்த மருந்து பயன்படுகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.

குயூனீடின்:
இது, நீண்ட காலமாகவே இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, இதய மின்னோட்டத்தைத் தடை செய்கிறது. இதன் மூலம், இதயம் சீரில்லாமல் துடிப்பது தடுக்கப்படுகிறது.இதய மேல் அறை சீரல்லாமல் துடிப்பது, கீழ் அறை சீரில்லாமல் துடிப்பது, தன்னிச்சை இதயத் துடிப்புகள் போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்து.

டிஸ்ஸோபைரமைட்:
இதுவும் இதய நோயாளிகளுக்கான ஒரு முக்கியமான மருந்து. இது, இதயத்தைப் பாதித்துஅங்கு மின்னோட்டத்தை நீட்டிகிறது. இதன் மூலம், இதயத்தின் மேற்பகுதியில் தொடங்கும் மின்னோட்டம் இதய கீழ்ப்பகுதிக்கு வருவதற்குத் தாமதமாகும். இதனால், இதயம் சீரில்லாமல் துடிப்பது தடுக்கப்படும். இதயம் சீரில்லாமல் துடிக்கும் பாதிப்புக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

ஸ்டிரப்டோகைனேஸ்::
ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரல் படிந்து அதனால் ஏற்படும் அடைப்பைக் கரைக்க உதவும் முக்கியமான மருந்து இது.ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளில் உள்ள 'பிளாஸ்மினோஜின்' என்ற பொருளை 'பிளாஸ்மின்' என்ற பொருளாக மாற்றுகிறது. இந்த பிளாஸ்மின் தனித்தனியாகப் பிரிந்து பல்வேறு புரதப் பொருளாக மாறிவிடுவதால், அடைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இதனால் இதயத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்படுகிறது.இந்த, மருந்து, ரத்த நாளங்களில் உறைந்த ரத்தத்தைக் கரைத்த உதவுகிறது. குறிப்பாக, மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, உடனடியாக இதய றாள அடைக்பைக் கரைக்க இது ஊசி மருந்தாகப் போடப்பபடுகிறது. இதய அவசர சிகிச்சைப் பிரிவில் (மி.சி.சிஹி.) சேர்க்கப்படும் நோயாளிக்குப் போடப்பட்டு உயிர்காக்க உதவும் முதல் ஊசி இதுதான். மேலும், நுரையீரல் ரத்த நாள அடைப்பு, கால் பகுதி ரத்த நாள அடைப்பு ஆகியவற்றைக் கரைக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.

விரப்பமில:
இந்த மருந்து, கால்சியம் அயனிகளை செல்லுக்குள் செல்லவிடாமல் தடுக்கக்கூடியது. இது, இதய மின்னோட்ட செல்களிலும் தடையை ஏற்படுத்தும். இதன் மூலம், ரத்த நாளங்களில் ஏற்படும் சுருக்கம் தடுக்கப்படுகிறது. இந்த மருந்து இதயத் துடிப்பைக் குறைப்பதுடன், இதயத்துக்கு ரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்தும்.மாரடைப்பு, இதயம் சீரில்லாமல் துடிப்பது உள்ளிட்ட பல இதயப் பாதிப்புகளுக்கும் மருந்தாகப் பயன்டுகிறது.

நிப்பீடிபைன்:
இது, இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, கால்சியம் அயனிகளின் வினைகளைத் தடுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இதனால், தசைப் பகுதியில் உள்ள செல்களுக்குள் கால்சியம் சத்து நுழைவது தடுத்து நிறுத்தப்படும்.இந்த செயல்பாட்டல், இதயத்தின் ஆக்ஸிஜன் தேவையும் குறைகிறது. மேலும், இதயத்துக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும் ஏற்படுத்தும். தகட்டணுக்களின் சேர்க்கையையும் கட்டுப்படுத்தும்.

மெட்டோபுரலால்:
இந்த மருந்து, பீட்டர்&1 நரம்பிழை ஏற்பிகளில் மின்னோட்டத்தைத் தடை செய்யும் உதவும் மருந்தாகும். இந்த மருந்து ரத்தத்தில் 'ரெனினின்' அளவையும் குறைக்கிறது. மேலும், இதயத் துடிப்பையும், இதயத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவையும் குறைக்கிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிற மருந்துகளோடு சேர்த்து இதயப் பாதிப்பைக் குறைக்கப் பயன்படுகிறது.

புரோபுரானாலல்:
இந்த மருந்து, பீட்டா நரம்பிழை ஏற்பிகளில் மின்னோட்டத்தைத் தடை செய்கிறது. இத்துடன், ரத்தத்தில் 'ரெனினின்' என்ற பொருளின் அளவையும் குறைக்கிறது. இது தவிர, ரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. மேலும், கை, கால், நடுக்கத்தையும் தடுக்க உதவுகிறது.

நிகோரான்டீல்:
இது, இதய நோயளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்து. ரத்தக் குழாய்களின் மெல்லிய தசைகளை விரிவடையச் செய்யும் இந்த மருந்து, இதயத்துக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவற்றுக்குச் சிறந்த மருந்து. இதய ரத்த நாளப் பாதிப்பால் ஏற்படும் நெஞ்சு வலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

புரவாஸ்டாட்டின்:
இந்த மருந்து, ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கப் பயன்படும் ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, ஒரு நொதியின் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம், ரத்தத்தில் 'கொலஸ்ட்ரால்' அதிகமாவதைத் தடுத்துவிடும்.

குளோபிடோக்ரீல்:
ஆஸ்பிரின் மருந்தைப் போல் செயல்படக்கூடிய மருந்து இது. ரத்தத்தில் உள்ள தகட்டணுக்களின் சேர்க்கையைத் தடுத்து, ரத்த உறைதலைத் தடுத்து நிறுத்துகிறது.இந்த மருந்து தனியாகவோ அல்லது ஆஸ்பிரின் மருந்துடனோ சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்கப்பயன்படும் இது, இதய நோயாளிகளுக்கான சிறந்த மருந்து. இந்த மருந்து ரத்த உறைதலைத் தடுப்பதால், மூளை பாதிப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்டாமல் தடுக்கிறது. இந்த மருந்தையும், ஆஸ்பிரின் மருந்தையும் பயன்படுத்தும் போது, வயிற்றில எரிச்சல் ஏற்படும். ஆகவே, குடற்புண் .... பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மருந்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

ஜெம்ஃபைட்ரோஸில்:
இந்த மருந்து, இதயத்தில் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு முக்கிய மருந்தாகும். இது, ரத்தத்தில் எல்.டி.எல் டிரைகிளிசரைடு போன்ற கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது. அதே நேரம் இதயத்துக்கு தன்மை விளைவிக்கும் ஹெச்.டி.எல். கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது.இதன் மூலம், ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு, இதய நோய்கள், ரத்தக் குழாய் நோய்கள் போன்றவை வராமல் தடுக்கப்படுகின்றன.இந்த மருந்தை, தனியாகவோ அல்லது பிற கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளுடனோ சேர்த்துக் கொடுக்கலாம். அத்துடன் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

ஆஸ்பிரியன்:
நீண்ட காலமாவே, பல்வேறு நோய்களுக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைவலிக்கு அதிகமாகப் பயன்படுத்துவார்கள். சிலர் உடல் வலிக்குப் பயன்படுத்துவார்கள். இது, ரத்தத்தில் உள் தகட்டணுக்களின் சேர்க்கையைத் தடுத்து நிறுத்துகிறது.கெட்ட அணுக்களின் சேர்க்கையைக் குறைப்பதில் சிறந்து விளங்கும் இது. இதய நோய்க்கான மருந்துகளில் மிக முக்கியமானது. மேலும், வாதக் காய்ச்சலால் ஏற்படும் வலியைக் குறைக்கவும் இந்த மருந்து பயன்படுகிறது.

அஸிநோகாவ்மாரோல்:
இதுவும், இதய நோய்க்கான ஒரு முக்கியமான மருந்து. இந்த மருந்து, ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கிறது. மேலும், இதய வால்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், செயற்கை வால்வு பொருத்தியவர்களுக்கு ரத்தம் உறைய வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு முக்கிய மருந்தாக இது கொடுக்கப்படுகிறது. மேலும், நுரையீரல் ரத்த நாள அடைப்பு நோய் ஏற்பட்டவர்களுக்கு அது மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் இது பயன்படுகிறது.

புதிய மருந்துகள்:
இதய நோய்க்கான பல்வேறு முக்கி மருந்துகளைப் போலவே, மிகச் சமீபமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்ககப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சில புதிய மருந்துகளும் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

போஸன்டான்:
இது, ரத்தத்தில் உள்ள உள்சுவர் ஏற்புகளில் செயல்பட்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.நுரையீரல் ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி, தொடர்ந்து பல வாரங்கள் சாப்பிட வேண்டி இருக்கும்.இந்த மருந்தை, ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொடுக்கக்கூடாது.பின் விளைவுகள் இந்த மருந்தால், தலைவலி, தொண்டை அழற்சி, தோலில் அதிக ரத்த ஓட்டம், கால் வீக்கம், குறை ரத்த அழுத்தம், வயிற்றுத் தொந்தரவுகள், ரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

கவனம் இந்த மருந்த படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். உடனே நிறுத்தக்கூடாது. இந்த மருந்தைப் பயன்படுத்தும் போது, மருந்துகளைத் தவிர்த்து விட வேண்டும்.

டோஃபிடிலைட்:
இது, இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய முக்கிய மருந்து. சீரில்லாமல், முறையில்லாமல் ஏற்படும் இதயத் துடிப்புக்கு இது சிறந்த மருந்து. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக்கூடாது. மேலும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கம் கொடுக்கக்கூடாது.பின் விளைவுகள் இந்த மருந்தால், சிலருக்குத் தலைவலி, நெஞ்சு வலி, சுவாசக் கோளாறுகள், தலை கிறுகிறுப்பு, குமட்டல், காய்ச்சல், உடல்வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதைப் பயன்படுத்தும்போது, மருந்துகளைத் தவிர்த்துவிட வேண்டும்.

அஸிபியூட்டலால்:
பீட்டா அட்ரீனல் ஏற்புகளில் தடையை ஏற்படுத்தப் பயன்படும் மருந்து இது. இந்த மருந்தால், ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், இதயம் சீரில்லாமல் துடிக்கும் இதய நோயாளிகளுக்கும் இம்மருந்தைக் கொடுக்கலாம். இந்த மருந்து 24 மணி நேரமும் செயல்படுவதால், இதை ஒருநாளைக்கு ஒரு மாத்திரையாகச் சாப்பிட்டாலே போதும். மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.பின் விளைவுகள் இந்த மருந்தால் சிலருக்கு, ஒவ்வாமை, அசதி, தலைவலி, தலைச்சுற்றல், தூக்கமின்மை, தோல் பாதிப்புகள், உடல் வலி, சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.
இந்த மருந்தை, ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா, இதய செயலிழப்பு, இதய மின்னோட்டத் தடை உள்ளவர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் இந்த மருந்தைத் தவிர்க்க வேண்டு. இந்த மருந்தை, கல்லீரல், சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்குக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

அனாகிரீலைட்:
இது, ரத்த தகட்டணுக்களுக்கு எதிராகப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, ரத்தத்தில் புதிய தகட்டணுக்கள் அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதனால், ரத்தத்தில் தகட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவை ஒன்றோடு ஒன்று சேர்த்து ரத்தத்தை உறையச் செய்து ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் இதய பாதிப்பு, பக்கவாதம், தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கப்படுகிறது.இந்த மருந்தை, தகட்டணுக்கள் மிகையாக உள்ளவர்களுக்கு, மருத்துவரின் ஆலோசனையை பெற்று இரண்டு நேரமும் கொடுக்க வேண்டும்.

பின் விளைவுகள் இந்த மருந்தால், சிலருக்கு படபடப்பு, வயற்றோட்டம், வயிறுவலி, குமட்டல், தலைவலி, அசதி, உடல்வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
மற்ற மருந்துகளைப் போலவே, இதையும் ஒவ்வாமை உள்ளவர்களுக்குத் தரக்கூடாது. கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும்கூட தரக்கூடாது.
இந்த மருந்தை கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்குக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

கெமிக்கல் சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்

உணவு பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும், ஆடைகளுக்கு பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களும் பயன்படுத்துவதால், அதை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு, உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.
சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் பலர், வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக, தாங்கள் தயாரிக்கும் உணவு பொருட்களில் பல்வேறு வண்ணங்களை கலக்கின்றனர். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக், சுவீட், குழல் அப்பளம் முதல் ஓட்டல்களில் பெரியவர்கள் சாப்பிடும் சிக்கன்-65, பொறித்த மீன் என அனைத்திலும், வண்ண சாயங்கள் கலக்கப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வண்ணங்கள் சேர்ப்பதால், உணவு பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதற்கு மாறாக, பாதிப்பையே ஏற்படுத்தும்.

இயற்கை மற்றும் செயற்கை வண்ணத்தை பயன்படுத்திய வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் பலர், சமீபகாலமாக விலைமலிவு, பலன் அதிகம் என்பதற்காக, துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களை உணவு பண்டங்களில் சேர்க்கின்றனர். இதுபோன்ற கெமிக்கல் வண்ணம் சேர்த்த உணவு பண்டங்களை சாப்பிடுவதால், குழந்தைகள் கடுமையாக பாதிக்கின்றனர்.

நகராட்சி உணவு ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: உணவு பொருட்களில் இயற்கை வண்ணம், செயற்கை வண்ணம் என்ற இருவகை வண்ணங்கள் கலக்கப்படுகின்றன. பீட்டா கரோட்டின், குளோரோபில், ரிபோப்ளேவின், கேராமல், சேப்ரான் உட்பட 11 வகை இயற்கை வண்ணங்களை உணவு பொருட்களில் பயன்படுத்தலாம். சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஆகிய நான்கு செயற்கை வண்ணத்தையும் பயன்படுத்தலாம். செயற்கை வண்ணத்தை பொறுத்தவரை, சிவப்பில் பான்சியோபோராக், கார்மோசிம், எரித்ரோசின், மஞ்சளில் டாட்ராசின், சன்செட் எல்லோ, நீலத்தில் இன்டிகோ கார்மென், பிர்லியண்ட் புளூ, பச்சையில் பாஸ்ட் கிரீன் ஆகிய வண்ணங்களையே உணவு பொருட்களில் சேர்க்க வேண்டும். அதிலும், ஒவ்வொரு பண்டங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் மட்டுமே வண்ணங்களை சேர்க்க வேண்டும். நிர்ணயித்த அளவுக்கு கூடுதலாக இயற்கை, செயற்கை வண்ணம், கெமிக்கல் சாயம் கலந்த உணவு பொருட்களை சாப்பிடும் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும், கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, கேன்சர்,
பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

உணவு கலப்பட தடை சட்டம் 1954ல் கீழ், நிர்ணயிக்கப்பட்ட வண்ணத்தை விட கூடுதலாக சேர்த்திருப்பது உறுதியானால், அதை தயாரித்தவர்கள், விற்பவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஆயுள் தண்டனை வரையும், 1,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். "உணவு பாதுகாப்பு சட்டம் 2006' இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அந்த சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால், உணவு பொருளில் கலப்படம் செய்வோருக்கு லட்சக்கணக்கில் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வாளர் கூறினார்.

வேண்டாத பழக்கங்களால் விபரீதம்!

விரல் சூப்புதல், காதை குடைதல், பற்களை குத்துதல், மூக்கை துழாவுதல் என்று பலருக்கு இந்தப் பழக்கங்கள் தொட்டில் பழக்கமாய் தொடரும்.

குழந்தையாக இருக்கும் போது இந்த பழக்கம் இருந்தால், `அதெல்லாம் சரியாகி விடும்' என்று ஆரம்பத்தில் மெத்தனமாக விட்டுவிடுவோம். ஆனால், இது போன்ற பழக்கங்கள், உடலில் பல பிரச்சினைகளுக்கு வழி வகுத்து விடும்.

தொடக்கத்தில், காதை குடைந்தால் ஏதோ ஒன்று சரியாகிவிடும் என்ற மனோபாவத்தில் அதை தொடருவார்கள். இதனால் காதுக்குள் புண், செவிக்குள் இருக்கும் ஜவ்வு கிழிந்து காது கேட்காத சூழ்நிலை ஏற்படும்.

மூக்கை துழாவுதலும் இப்படித்தான். மூக்கினுள் இருக்கும் ரத்த ஓட்டங்கள் நிறைந்த பகுதி பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் காற்றில் இருக்கும் தூசுகளை அகற்ற உதவும் ரோமங்கள் உதிர்ந்து, அசுத்தம் கலந்த காற்று ரையீரலுக்குச் செல்ல வழி வகுக்கும். சில குழந்தைகள் மூக்கை அடிக்கடி உறிஞ்சிக் கொண்டே இருப்பார்கள். இதனால் மூளையில் உள்ள சிறு நரம்புகள் பாதிக்கப்படலாம். இதனால் குழந்தைப் பருவத்திலேயே மூக்கை சிந்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

விரல் சூப்பும் பழக்கம் தொடர்ந்தால் வாயினால் சுவாசிப்பார்கள். இதனால் பற்கள் மேல் நோக்கி வளரும். குழந்தைகள் பாதுகாப்பின்மை காரணமாக, மனதளவில் ஒரு துணைக்காக விரலை சூப்புகின்றனர்.

எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்
எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும். இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும்.இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.

நெட்டுக்குத்தாக டெக்ஸ்ட்டை அமைக்க
எதிலும் மாறுபட்டு நாம் நிற்க வேண்டும் எனப்பலர் விரும்புவார்கள். டெக்ஸ்ட்டைப் படுக்கை வரிசையில் அமைக்காமல் நெட்டுக் குத்தாக அமைத்தால் பிறரின் கவனத்தைத் திருப்ப வசதியாக இருக்கும் எனத் திட்டமிடும் நபர்களில் நீங்களும் ஒருவரா? எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இவ்வாறு டெக்ஸ்ட்டை எப்படி அமைக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.
1. ஏதேனும் ஒரு செல் அல்லது நீங்கள் விரும்பும் பல செல்களை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன்பின் அவற்றின் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Format Cells” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Alignment” என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில்“Degrees” என்பதை அடுத்து எத்தனை டிகிரி கோணத்தில் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதனைத் தீர்மானித்து அமைக்கவும். அல்லது அங்கு உள்ள கிராபிக் கட்டத்தில் கோட்டினை சாய்வாக அமைத்தால் அதே சாய்வான தோற்றத்தில் டெக்ஸ்ட் கிடைக்கும். இதனை செட் செய்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

பேசப்பேச சார்ஜ் ஆகும்-மொபைல் போன்

மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் பேட்டரியை சார்ஜ் செய்வதுதான். எந்த போனாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே, அதன் பேட்டரி பேசுவதற்கு திறன் கொடுக்கும். இப்போது மல்ட்டி மீடியா இயக்கம், இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வேலைகள் பேட்டரியின் திறனை அதிகம் எடுத்துக் கொள்வதால், பேட்டரி சார்ஜ் செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாகின்றன. அமெரிக்க வல்லுநர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினைத் தொடங்கி உள்ளனர். ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். காலமைன் லோஷனில் உள்ள ஸிங்க் ஆக்ஸைட் கொண்டு நானோ வயர் பீல்டை உருவாக்கி, அதனை இரண்டு எலக்ட்ரோடுகளுக்கிடையே அமைத்து, ஒலி அலைகள் மூலம் அவற்றை நெருக்கிய போது 50 மில்லி வோல்ட் மின்சக்தி உருவாகி இருந்துள்ளது. எப்படி எலக்ட்ரிக் சிக்னல்கள், ஸ்பீக்கர்களில் ஒலியாக வெளியேறுகிறதோ, அதே போல எதிர்வழியில், சரியான வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி, ஒலி அலைகளை மின் அலைகளாகவும் மாற்றலாம். இதன் மூலம் மொபைல் போன்களில் பேசப்பேச, அந்த ஒலி அலைகளையே பயன்படுத்தி, அதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்திடலாம் என்று இந்த விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.

மாற்று மருத்துவ முறைகள்: "ஜப்பானிய நீர் சிகிச்சை"

தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்' என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ, பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்பு மண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக் கொள்வது நல்லது.

தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப் படுத்திக் கொள்ளலாம்.

இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.

மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-

தலைவலி, இரத்த அழுத்தம், சோகை, கீல்வாதம், பொதுவான பக்கவாதம், ஊளைச்சதை, மூட்டுவலி, காதில் இரைச்சல்
இருதயப் படபடப்பு, மயக்கம், இருமல், ஆஸ்த்மா, சளி, க்ஷய ரோகம், மூளைக் காய்ச்சல், கல்லீரல் நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள், வாயுக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், இரத்தக் கடுப்பு, மூலம், மலச்சிக்கல், உதிரப்போக்கு, நீரழிவு, கண் நோய்கள், கண் சிவப்பு, ஒழுங்கில்லாத மாதவிடாய், வெள்ளை படுதல், கர்ப்பப்பை புற்றுநோய், மார்புப் புற்றுநோய், தொண்டை சம்பந்தமான நோய்கள்

நம்பவே முடியவில்லையா... சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.

சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது:-

மலச்சிக்கல் - ஒரே நாளில்

வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்

சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்

இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்

புற்று நோய் - நான்கு வாரங்கள்

காய்கறிகள் தருமே முக வசீகரம்...

அழகை அழகாய் எடுத்து கூறும் வார்த்தை... வசீகரம். பார்த்ததுமே, பளிச்சென மனதை கவர்வது முகம் தான். முகத்தை அழகாய் வைத்துக் கொள்ள, அழகு நிலையத்தை தேடி ஓடுவது மட்டுமே முடிவல்ல. காய்கறிகள், பழங்களைக் கொண்டு அழகாய் பேஸியல் செய்து, முகப்பொலிவை பாதுகாக்கலாம் என்கிறார், மதுரை ஆரப்பாளையம் அழகுக்கலை நிபுணர் வித்யாஸ்ரீ. பால்... முகத்தின் அழுக்குகளை நீக்கும் உன்னதமான பொருள். பஞ்சில் பாலை நனைத்து முகத்தை கீழிருந்து மேலாக துடைக்க வேண்டும். துடைத்த பின், ஒரு நிமிடம் வரை நீராவியில் முகத்தை காண்பிக்க வேண்டும். இப்படி செய்தால், முகத்தில் உள்ள துளைகள் திறக்கும். பேஸியல் செய்யும் போது முகத்தில் நல்ல பளபளப்பைக் கொடுக்கும்.
காய்கறிகளைப் பொறுத்தவரை, உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் வைத்து பேஸியல் செய்யலாம். உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைத்து, அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் முல்தானிமெட்டியை சேர்த்து கலக்க வேண்டும். முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி கலவையை பூசி, 20 நிமிடங்கள் காயவிட வேண்டும். நன்றாக காய்ந்துவிடக் கூடாது. இதேபோல மற்ற காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.
பழங்களில் ஆஸ்திரேலிய ஆரஞ்ச், பட்டர் ப்ரூட், வாழைப்பழம், ஆப்பிள், கறுப்பு திராட்சை, பப்பாளிப் பழம், தர்பூசணி பழங்களை பயன்படுத்தலாம். செவ்வந்தி, பன்னீர் ரோஜா பூக்களையும், பாதாம் பருப்பு, வெள்ளை கொண்டைக் கடலையை அரைத்து, தேன், முல்தானிமெட்டி கலந்து பேஸியலாக பயன்படுத்தலாம். பூக்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டாம்.
எந்த வயதினரும் இதை பயன்படுத்தலாம். மாலை நேரத்தில் செய்வதே நல்லது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செய்து பார்க்கலாம்

புதிய வைரஸ் எச்சரிக்கை

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக் (Zero Day Attack) ஆக இருக்கும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவன வல்லுநர் விக்ரம் தாக்கூர் இது பற்றிக் கூறுகையில், இமெயில் மூலம் கவனத்தைத் திருப்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனத்தைப் பயன்படுத்தி, வைரஸ் அல்லது வேறு மால்வேர் உள்ளே புகலாம் என்று கூறியுள்ளார். தாக்குதலுக்குக் குறி வைத்துள்ள நிறுவனம் அல்லது குழு உறுப்பினர் ஒருவருக்கு, இமெயில் ஒன்றை அனுப்பலாம். அதில் அந்நிறுவனம் அல்லது குழுவின் இணையதளம் போலவே தோற்றம் அளிக்கும், தளம் ஒன்றிற்கான லிங்க் தரப்பட்டிருக்கும். இந்த லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், அந்த தளம் காட்டப்படும். பின்னணியில், மால்வேர் அல்லது வைரஸ், மேலே தரப்பட்டுள்ள பிழையான இடத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முடியும். பின்னர், அந்த இணைய தளத்தில் எந்த பைலையும் அப்லோட் செய்திட முடியும். இந்த சிக்கல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6, 7 மட்டுமின்றி பதிப்பு 8லும் உள்ளது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சோதனைப் பதிப்பு 9 ஐப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இமெயில்களை எச்.டி.எம்.எல். பார்மட்டில் படிக்காமல், வெறும் டெக்ஸ்ட் வடிவில் படித்தால், இதனைத் தவிர்க்கலாம்.

ஸீரோ டே / ஸீரோ அவர் அட்டாக் என்பது, ஒரு அப்ளிகேஷனை உருவாக்கியவர் களுக்கே, அந்த அட்டாக் எங்கு ஏற்படுகிறது என்ற விபரம் தெரியாமல் இருக்கும் நிலையாகும். பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, அவரால் எங்கு பிழை உள்ளது என அறிந்து, அதனைத் தீர்க்க இயலும். எனவே தாக்குதல் நடைபெறும் காலத்தில், அதனைத் தடுக்க இயலாநிலை இருக்கு2ம். இதனையே ஸீரோ டே அல்லது ஸீரோ அவர் அட்டாக் என்று கூறுகின்றனர்.

கடல் என்றாலே அலை

கடல் என்றாலே மனதுக்குள் இனம் புரியாத ஒரு ஆச்சரியம் அல்லது பய உணர்வு ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும். 1070 கி.மீ. நீளமுள்ள தமிழக கடற்கரையில் ஒவ்வொரு தமிழரும் ஏதாவதொரு காரணத்திற்காக சில முறையாவது செல்கிறோம். கால் நனைக்கவோ, பீச்சில் குடும்பத்துடன் அமர்ந்து குதூகலமாக பேசி மகிழவோ, குளிக்கவோ என எதற்கு சென்றாலும் சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் உங்களுள் ஒருவரை கடலின் அலைகளுக்கு எளிதாக பலியாக்கிவிட்டு வீடு திரும்ப வேண்டியிருக்கும்.

ஒரு சாதாரண நிகழ்வாக ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் எங்காவது ஒரு கடற் கரையில் ஒரு உயிர் பறிபோய்க் கொண்டே இருக்கிறது. இந்தச் செய்தி தொகுப்புகளை ஆராய்ந்து பார்த்தால் அப்படி இறந்துபோகும் சராசரி வயதினர் பெரும்பாலும் குழந்தை களோ பெரியவர்களோ பெண்களோ அல்ல. அடுத்த கட்ட கனவை மனதில் சுமந்து தன் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாய் விளங்கும் இளைஞர்களே அந்த சில நிமிட அமிழ்தலில் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தன் பெற்றோரின் கனவையும், அலைகளில் கரைத்து விடுகிறார்கள்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை எந்த கடற்கரையில் வேண்டுமானாலும் சென்று பாருங்கள். ஏதாவது ஒரு இளைஞர்கள் கூட்டம் கடலில் உற்சாகத்துடன் குளித்து கொண்டு இருக்கும். காணும் பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, ஆடிப்பெருக்கு என எந்த பண்டிகை தினமானாலும் சரி, புகழ்பெற்ற புனித தலங்களான ராமேஸ்வரம், வேளாங் கண்ணி மற்றும் திருச்செந்தூர் போன்ற இடங்களில் நடைபெறும் திருவிழாக்களாக இருந்தாலும் சரி தமிழரின் ஒவ்வொரு முக்கிய விசேஷங்களிலும் கடற்கரைகளில்தான் பெரும் கூட்டம் கூடுகிறது.

சுற்றுலாவில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கடலில் குளிக்கும்போது இன்னும் சற்று ஆழமாய் சென்றால் ஏற்படும் சாகச உணர்வுக்காக அலையில் விழுந்து சிலர் உயிரை தொலைக்கிறார்கள். சில மணி நேரங் களுக்குப் பிறகு அதே இடத்திற்கு வருபவர்கள் முந்தைய பலியைப் பற்றி அறியாமல் மீண்டும் இந்த பாதுகாப்பற்ற ஆபத்தான விடுமுறை கொண்டாட்டத்தை தொடர் கிறார்கள். கடல் அலைகளில் சென்று விளையாடும் ஆர்வம் உள்ள அளவுக்கு அதில் உள்ள ஆபத்துகளை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்கவும் தெரிந்து கொள்வது அவசியமாகும். எனவே தமிழக கடல் அலைகளின் தன்மையை பற்றியும் உயிர்காக்கும் சில பாதுகாப்பு முறைகளை பற்றியும் பார்ப்போம்.

பொதுவாக கடலில் தொடர்ந்து அடித்துக் கொண்டு இருக்கும் அலைகளின் காரணமாக கடல் நீர் கரைக்கு தள்ளப்பட்டு மீண்டும் இழுக்கப்படுகிறது. இந்த தொடர்ச்சியான நிகழ்வால் மேற்பரப்பில் உள்ள கடல் நீர் கரை நோக்கியும், அடிப்பரப்பில் உள்ள கடல்நீர் கடல் நோக்கியும் ஓடிக்கொண்டு இருக்கும். கடற்கரையில் உங்களை நோக்கி வரும் அலைகளை ரசித்து கொண்டு இருக்கும்போது காலடியில் உள்ள மணல் வேகமாக அரித்து செல்லப்பட்டு கால் மண்ணுக்குள் புதைவதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். அதற்கு காரணம் இந்த அடிப்பரப்பு நீரோட்டமே ஆகும். இதற்கு ஆங்கிலத்தில் அண்டர்டோ கரண்ட்ன்ட்ஸ் (ஞிஙூக்ஷக்சுஞ்ச்ஞு ஷஞிசுசுக்ஙூஞ்சூ) என்று பெயர்.

மேற்பரப்பில் வரும் அலைகளின் சக்தியோடு ஒப்பிடும்போது இந்த அடிப்பரப்பு நீரோட்டம் சக்தி குறைந்தது. எனவே கடற்கரையில் நின்று கொண்டு இருக்கும் ஒருவரை நீண்ட தூரம் ஆழத்திற்கு இழுத்து செல்லும் அளவுக்கு இதற்கு பொதுவாக பலம் இருப்பதில்லை. ஆழம் குறைவான இடத்தில் நிற்கும் நீச்சல் தெரியாத ஒருவரை பெரிய அலை கீழே தள்ளுகிறது என வைத்துக் கொள்வோம். மேற்பரப்பில் தொடர்ந்து வரும் அலைகள் அவரை மீண்டும் எழவிடாமல் தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்போது ஏற்படும் பய உணர்வில் வாய் மற்றும் மூக்கு வழியாக கடல்நீர் விழுங்கப்படுவதால் மயக்கம் ஏற்பட்டு இறக்க நேரிடுகிறது.

பெரும்பாலும் கடலில் மூழ்கி இறப்பவர்கள் நல்ல ஆரோக்கியமான இளைஞர்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். கடல் அலைகளின் இயல்பை புரிந்து கொள்ளாமல் அதில் சிக்கி கொள்வதாலேயே நன்றாக நீச்சல் தெரிந்த இளைஞர்கள் கூட உயிரை விடுகின்ற னர் என்பதுதான் உண்மை. எனவே அலைகளின் சில அடிப்படை இயல்புகளை பற்றி பார்ப்போம்.

சாதாரணமாக பார்த்தால் அலைகள் தொடர்ந்து கரையில் அடித்துக்கொண்டு இருப்பது போல்தான் தோன்றும். ஆனால் அலைகள் ஒரு குழுவாகவே எப்போதும் கரைக்கு வரு கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஆறு முதல் எட்டு அலைகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக கரையில் வந்து அடிக்கின்றன. பிறகு ஏறத்தாழ ஒரு நிமிடத்திற்கு அலைகளின்றி இருக்கும் அமைதியைத் தொடர்ந்து அடுத்த அலை கரையில் வந்து மோதும். அடுத்த முறை நீங்கள் கடற்கரைக்கு செல்லும்போது இதை கூர்ந்து கவனித்து பார்த்தால் அலை களின் இந்த குழு அமைப்பு உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். கடலில் குளிக்கும் போது இந்த அலைக்குழுவின் சிறு அலைகளை பார்த்து சற்று ஆழத்திற்கு செல்லும்போது இந்த பெரிய அலைதான் பலமாக அறைகிறது.

இரு அலைக்குழுக்களுக்கு இடைப்பட்ட குறுகிய அமைதியான நிலையை நம் மீனவர்கள் அற்புதமாக கண்டுபிடிப்பார்கள். இந்த துல்லிய கணக்கீட்டு திறனால் அடுத்த அலைக்குழு கரையில் மோதுவதற்குள் வேகமாக படகை தள்ளிக்கொண்டு கடலுக்குள் சென்றுவிடு வார்கள். அதே முறையை பயன்படுத்திதான் கரைக்கும் திரும்புவார்கள். அதனால்தான் ரொம்ப தூரம் கடலில் இருந்து திரும்பி வரும் மீனவர்கள் அலைகள் மோதும் கரைப் பகுதிக்கு வந்தவுடன் சிறிது நேரம் காத்திருந்து லாவகமாக கரையேறுவார்கள். இது இயற்கை அன்னையிடம் அவர்கள் கற்ற ணுக்கமான பாடங்களில் ஒன்றாகும். அந்த சில சாகச நொடிகளில் சிறிய பிழை நேர்ந்தால்கூட படகும், மீன்பிடி வலையும் அலை களால் தூக்கிவீசப் பட்டுவிடும்.

இந்த அலைக்குழு இடைவெளியை கடக்க முயலும்போது நான் உயிர் தப்பிய சம்பவத்தை பற்றி இங்கு சொல்ல விரும்புகிறேன். கடலின் மீது இருந்த ஈடுபாட்டால் 2007-ம் ஆண்டு ராமேசுவரத்தில் இருந்து சென்னை வரை ஒரு சிறு பிளாஸ்டிக் துடுப்பு படகில் தனியாக பயணம் மேற்கொண்டேன். தமிழக கடல் முழுவதையும் நேரில் உணர வேண்டும் என்ற உள்ளுணர்வால் துவங்கிய இந்த பயணம். எனக்கு தெரிந்த சில கடற்சூழல் விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டு கடற் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு பயணமாக அமைந்தது. ஒரு நாளைக்கு பதினைந்து முதல் இருபது கிலோமீட்டர் பயணம் செய்து கடலோர கிராமங்களில் இரவு தங்கி மக்களிடம் பேசி அடுத்த நாள் பயணத்தை தொடர்ந்தவாறு பயணம் செய்து கொண்டு இருந்தேன்.

கோடியக்கரை வரை அமைதியாக இருந்த இந்த பயணம். அதற்கு பிறகு மிக கடினமாக மாறத் தொடங்கியது. அன்றைய பயணத்தின் முடிவில் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த கிராம கடற்பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் கரைக்கு வருவதற்காக படகை செலுத்திக் கொண்டிருந்தேன். அன்று கடலும் இயல்பைவிட மிக சீற்றமாகவே இருந்தது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல நான் புத்தகங்களில் படித்து இருந்ததைவிட அலைகள் மிக பிரமாண்டமாக வந்துகொண்டு இருந்தன. சரியான அலைக்குழு இடைவெளியை கணித்து கரையோரத்தில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் வரச்சொல்லி சமிக்கை செய்தனர். துடுப்பை வேகமாக தள்ளி கரையை நோக்கி வந்துகொண்டு இருந்தபோது திடீரென ஒரு உயரமான அலை எனக்குப் பின்னால் துரத்த தொடங்கியது. அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் அந்த அலை படகை தலைகீழாக தூக்கத் தொடங்கியது. படகு என் கட்டுப்பாட்டை இழந்தபோது அந்த பெரிய அலை தலைகீழாக என்னை படகுடன் கடலுக்குள் அழுத்தியது. படகையும் என்னையும் பிணைத்து வைத்திருந்த கயிறு என் இடுப்பை நன்றாக சுற்றிக் கொண்டது. வாயிலும் மூக்கிலும் வேகமாக மணல் கலந்த தண்ணீர் ஏறிக்கொண்டு இருக்க கவிழ்ந்த படகின் அடியில் தலைகீழாக தொங்கி கொண்டு இருந்தேன்.

நல்ல வேளையாக அடுத்த அலை தாக்கியவுடன் கயிறை அறுத்துக் கொண்டு படகு என்னை விட்டு விலகி சென்றது. சில நிமிடங்களுக்குப் பிறகு கரையை நோக்கி நீந்தி வந்து சேர்ந்தேன். உயிரை காக்கும் லைப் ஜக்கேட் (மிதவை உடை) அணிந்து இருந்ததால் என்னால் சுலபமாக பிழைக்க முடிந்தது. இதுபோன்று முன்னறிவிப்பு இன்றி திடீரென வரும் பெரிய அலைகள் எந்த ஒரு அலைக்குழுவிலும் சேர்வதில்லை. இவற்றை ஆங்கிலத் தில் ஸ்லீப்பர் வேவ்ஸ் என்று சொல்வார்கள். இந்த பெரிய முரட்டு அலை சாதாரண அலைக்குழுக்களைவிட வேகமாக கரையைத்தாக்கும். அந்த சமயத்தில் குளிக்கும் அப்பாவிகளின் பாதுகாப்பிற்கு இந்த முரட்டு அலை எந்த உத்திரவாதமும் தருவதில்லை. மெரினா கடற்கரை, மகாபலிபுரம், புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி கடற்கரைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் இந்த வகை அலையில் சிக்கி இறந்துள்ள சம்பவங் களும் நடந்துள்ளன.

தமிழகத்தின் கடலோரங்களில் உள்ள முக்கியமான சுற்றுலா மையங்களில் அலைகளின் அமைப்பு எல்லா இடங்களிலும் எல்லா மாதங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கரையின் அமைப்பை பொருத்தும் கால நிலைகளை பொருத்தும் இது மாறக்கூடியது. மிகவும் சரிவாக கரைகள் இருந்தால் பெரிய அலைகள் நேரடியாக கடற்கரை வரை வரும். எனவே இவை ஒற்றை அலை கடற்கரைகள் ஆகும். மீனவர்கள் இதை புனுவுக்கடல் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு மெரினா மற்றும் பாண்டிச்சேரி கடற்கரைகளை சொல்லலாம்.

ஆனால் தமிழகத்தின் வேறு சில இடங்களில் கடற்கரை மிதமான சரிவுடன் காணப்படும். இந்த பகுதிகளில் பெரிய அலைகள் தூரத்திலேயே நின்றுவிடுவதால் கரையை நோக்கி சிறிய மற்றும் நடுத்தர அலைகள் மட்டுமே வரும். மீனவர்களை இதை தரைக்கடல் என அழைப்பார்கள். உதாரணத்திற்கு வேளாங்கண்ணி மற்றும் வேதாரண்யம் கடற்கரையை சொல்லலாம்.

டாக்டர் வே.பாலாஜி, கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர், தஞ்சாவூர்.

விண்டோஸ் 7 ஷட் டவுண் ஷார்ட் கட்


விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், உடனே எதிர்பார்க்கும் ஒரு வசதி, சிஸ்டம் ஷட் டவுண், பவர் டவுண் மற்றும் சிஸ்டம் ரீ ஸ்டார்ட் போன்றவற்றிற்கான ஷார்ட் கட்களை அமைப்பதுதான். இதற்கான வழிமுறைகள், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கான வழிமுறைகளைப் போன்றே தான் உள்ளன. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதனை டாஸ்க் பார் அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பதித்து வைக்க முடியும் என்பது ஒரு கூடுதல் வசதியாகும். இந்த ஷார்ட்கட் வழியை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் எல்லாரும் ஷார்ட்கட் உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து வைத்துள்ளனர். இருப்பினும் அவற்றை எளிமையாக இங்கு உறுதிப்படுத்திக் கொள்வோம்.
முதலில், டெஸ்க்டாப்பில் எதுவும் இல்லாத ஓர் இடத்தில், ரைட்கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New | Shortcut என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்தவுடன், சில தகவல்களை உங்களிடம் கேட்டுப் பெறுகின்ற உள்ளீடு செய்திடும் திரை உங்களுக்குக் கிடைக்கும். இங்கு தான் நீங்கள் உருவாக்க விரும்பும் ஷார்ட்கட் வழிக்கான அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
எடுத்துக் காட்டாக, விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றினை ஷட் டவுண் செய்திடுவதற்கான ஷார்ட்கட் உருவாக்குவது குறித்து இங்கு காணலாம். எடுத்துக் காட்டாக, இங்கு ஷட் டவுண் செய்திட கீழ்க்காணும் கட்டளை வரியினை, கட்டத்திற்குள் அமைக்கவும்.
Shutdown.exe -s -t 00
இதன் பின் Next என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோ இந்த ஷார்ட்கட்டிற்கு பெயர் ஒன்றினைத் தருமாறு கேட்கும். எந்த கட்டளைக்கான ஷார்ட்கட் அமைக்கப்படுகிறதோ, அதனை நினைவு படுத்தும் வகையிலான பெயர் ஒன்றை அமைக்கவும். இங்கு, எடுத்துக்காட்டாக Shutdown என அமைக்கலாம். இதோடு இங்கு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் இதற்கென ஐகான் ஒன்று அமைத்தால் நன்றாக இருக்கும். இங்கும் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் ஐகான்களை மாற்றுவது போல மாற்றலாம். இங்கு சம்பந்தப்பட்ட ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, காண்டெக்ஸ்ட் மெனு பெறவும். பின்னர் அதில் ப்ராப்பர்ட்டீஸ் மெனு செல்லவும். ப்ராப்பர்ட்டீஸ் கண்ட்ரோல் பேனலில், Change Icon பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து வரும் திரையில், ஐகான்கள் நிறைய காட்டப்படும். இதில் எதனை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, இரண்டு முறை ஓகே பட்டனை இருமுறை கிளிக் செய்து முடிக்கவும். இப்போது உங்கள் டெஸ்க் டாப்பில் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்வதற்கான ஐகானைக் காணலாம். இதில் கிளிக் செய்தால், சிஸ்டம் ஷட் டவுண் ஆகும்.
இனி இதனை எப்படி ஸ்டார்ட் மெனு அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பின் செய்து வைப்பது என்று பார்க்கலாம். ஷார்ட்கட் மீது ரைட் கிளிக் செய்திடவும். காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். பின்னர் டாஸ்க்பாரில் அமைக்க வேண்டும் எனில் Pin to Taskbar என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இதில் பின் செய்தவுடன், சிஸ்டம் ஷட் டவுண் செய்வதற்கான அவசர திறவுகோலான ஷார்ட்கட் கைகள் அருகில் கிடைக்கும்.
இதே முறையில் இன்னும் சில ஷார்ட்கட் கீகளுக்கான கட்டளையைப் பார்ப்போமா!
கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட
Shutdown.exe -r -t 00
கம்ப்யூட்டரை ஹைபர்னேட் என்னும் நிலையில் வைத்திட
rundll32.exe PowrProf.dll,SetSuspendState
கம்ப்யூட்டரை ஸ்லீப் மோடில் வைத்திட
rundll32.exePowrProf.dll,SetSuspendState 0,1,0