Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

வாழ்க்கை இன்பத்திற்கு...!

`உங்கள் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுவையாக அமைய வேண்டுமா? நீங்கள் உங்கள் வாழ்வில் யாரையாவது மிக முக்கிய முன்னோடி மனிதராக கருதி, அவரை பின்பற்றி வாழ விரும்புகிறீர்களா? அந்த முக்கியமான மனிதர் வேறு யாருமல்ல அது நீங்கம் தான்! இதை நீங்கள் உணர்ந்தீர்களானால், உங்கள்வாழ்க்கை சுகமாக அமையும்' என்கிறார், முற்போக்குச் சிந்தனையாளர் சித்ரா ஜா. தொடர்ந்து அவரது சிந்தனைக் கருவூலங்கம் உங்கள் கவனத்திற்கு...
`நான் நல்லவனா?' -இந்தக் கேள்வியை உங்களுக்குள்ளே அடிக்கடி கேட்டுக் கொள்ளுங்கள்.`உங்களுக்குள் இருக்கும் சுயநலம் தான் உங்களை உங்களிடமிருந்தே தூரமாக்குகிறது!' என்பதை நீங்கள் விடையாகக் கொண்டால், அந்த எண்ணம் உங்களை முதிர்ச்சியுற்ற பண்பாளனாக பரிமளிக்கச் செய்யும். எந்த ஒரு அர்த்தமற்ற பொருளையும் பிறரிடமிருந்து எதிர்பார்த்து நிற்கும் எண்ணத்தை மாற்றி அமையுங்கள்! இலவசம் இனிது என்ற சிந்தனை உங்களை இன்னொருவரை நம்பி வாழும் நிலைக்குத் தள்ளிவிடும்.
சிலர் தங்களால் முடிகிற காரியத்தை செய்ய முயலாமல் நொண்டிச்சாக்கு சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவ்வாறே உங்களிடமும் எந்த ஒரு காரியத்திற்கும் நொண்டிச்சாக்கு சொல்லும் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடுங்கள்!
வாழ்க்கை போக்கில் சில தடைகள் உங்களை மேற்கொள்ள பார்க்கலாம். தடைகளைத்தாண்டி வாழ்க்கையை முன்நடத்திச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த ஏதாவது ஒரு சிறு குற்றத்திற்காக உங்கம் மனதை வீணாக அலட்டிக்கொள்ளாமல் சுதந்திரமாக செயல்படுங்கள்.
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டு மனதை வருத்திக் கொண்டிருக்காதீர்கள்.
உங்கம் முயற்சி அல்லது முயலாமை குறித்து அதிகநேரம் சிந்தித்து காலவிரயம் செய்யாதீர்கள்.
`ஒரு காரியத்தை செய்து முடித்தபிறகு `அதை அப்படிச் செய்திருக்கலாமே... இதை இப்படிச் செய்திருக்கலாமே..!' என்று மாறிமாறி சிந்தித்து, குழம்பிக் கொண்டிருக்காதீர்கள்.
உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் அதன் விளைவுக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்பதில் தெளிவாயிருங்கள். ஏதேனும் தவறு நேர்ந்தால் நீங்களே பொறுபேற்றுக் கொள்ளுங்கள். பிறர் மீது பழிபோடும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
உங்கள் வாழ்வில் உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நல்ல சந்தர்பத்தையும் நழுவ விடாமல், அதனை முழுமையாக பயன்படுத்துங்கள்.
கடந்த கால சிந்தனைகளில் அதிக நேரம் ஆழ்ந்து விடாமல் நடப்பு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவை நல்லபடியாக நடப்பதற்கு, முழுக்கவனத்துடன் செயல்படுங்கள்.
முன்னேற்றம் பற்றியே எப்போதும் சிந்திங்கள். சிலநேரங்களில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைக் கண்டு ஒருபோதும் பின்னோக்கி போய்விடாதீர்கள்.
அறிந்தோ, அறியாமலோ யாருக்கேனும் உங்களால் சிறு தீங்கு நடந்திருந்து அதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்தால், அதை உடனே கேட்டு விடுங்கள். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போடாதீர்கள்.
உங்கம் வாழ்வில் நிகழும் எல்லா செயல்களுக்கும் நீங்கள்தான் காரணம் என்பதை பகுத்துணர்ந்து கொள்ளுங்கள். பிறர்மீது பழிபோடுவது முட்டாள்தனமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சந்தேகம் ஏற்படுகிற காரியங்களில் `நாம் செய்வது சரிதானா? சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறோமா?' என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.