சேவ் செய்திடும் போல்டரை மாற்ற...
எக்ஸெல் தொகுப்பில் நாம் உருவாக்கும் பைல்கள், மாற்றப்படா நிலையில் மை டாகுமெண்ட்ஸ் என்ற போல்டரிலேயே சேவ் செய்யப்படும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் அனைத்து ஆவணங்களும் இங்குதான் சேவ் செய்யப்படும். சேவ் செய்யப்படுகையில், நாம் ட்ரைவ் மற்றும் போல்டரை மாற்றி சேவ் செய்திடலாம் என்றாலும், ஒவ்வொரு முறையும் மாற்றுவது நேரம் வீணாகும் செயலாக மாறிவிடும். இதற்குப் பதிலாக ஒவ்வொரு தொகுப்பிலும் உருவாக்கும் பைல்களை எந்த போல்டரில் சேவ் செய்திட விரும்புகிறோமோ, அந்த போல்டரை, அந்த தொகுப்பிற்கான சேவ் செய்திடும் போல்டராக, மாறா நிலையில் அமைத்திடலாம். எக்ஸெல் தொகுப்பில் இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலா.
1. மெனு பாரில் Tools–>Options என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
2.பின்னர் Options மெனுவில் “General” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு பைல்கள் சேவ் செய்யப்படும் போல்டர் குறித்த இடம் Default File Location என இருக்கும். இங்கு எந்த போல்டரை மாறா போல்டராக, எக்ஸெல் பைல்கள் சேவ் செய்திடும் போல்டராக மாற்ற விருப்பமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். பின்னர், வேறு ஒரு போல்டரைத் தேர்ந்தெடுக்க எண்ணினால், இதே வழிகளைப் பின்பற்றி மாற்றிவிடலாம்.