Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

எக்ஸெல் : ஒர்க்ஷீட் இடம் மாற்ற

எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றை உருவாக்குகையில், அதில் கையாளப்படும் பொருள் மற்றும் தன்மைக்கேற்ப நாம் ஒர்க்ஷீட்டுகளை அமைப்போம். வரிசையாக அமைந்த ஒர்க்ஷீட்டுகளைப் பார்க்கையில் சில வேளைகளில் அவை இடம் மாறி இருந்தால், அவற்றில் பணி புரிய எளிதாக இருக்குமே என்று எண்ணுவோம். இந்த ஒர்க்ஷீட்களை இடம் மாற்ற, எக்ஸெல் சில எளிய வழிகளைத் தந்துள்ளது. அவற்றைக் காணலாம்.
1.முதலில் எந்த ஒர்க்ஷீட்டின் இடத்தை மாற்ற வேண்டுமோ, அதனைத் திறந்து கொள்ளவும்.
2. பின்னர் Edit மெனுவிலிருந்து, Move or Copy Sheet என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது Move or Copy Sheet டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Before Sheet என்ற பட்டியலில், நீங்கள் தற்போது திறந்துள்ள ஒர்க்ஷீட்டிற்குப் பின் எந்த ஒர்க்ஷீட் வரவேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. ஓகே கிளிக் செய்து வெளியேறவும். ஒர்க்ஷீட்டுகள் நீங்கள் விரும்பியபடி அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. ஒர்க்ஷீட்டிற்கான டேப்பில், மவுஸின் இடது பட்டனை அழுத்திக் கொண்டு, அதனை இடது, வலதாகவும் நகர்த்தலாம். மவுஸ் பட்டனைச் சரியாக அழுத்திப் பிடித்து நகர்த்த வேண்டும். எங்கு பட்டனை விடுகிறீர்களோ, அங்கு அந்த டேப்பிற்கு உரிய ஒர்க்ஷீட் நிறுத்தப்படும்.