Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

வேர்டில் பிக்சர் ப்ளேஸ் ஹோல்டர்


வேர்ட் தொகுப்பில் ஆவணங்கள் உருவாக்கப்படுகையில், அதில் நிறைய
படங்கள் இணைப்பதாக இருந்தால், அதனால் ஆவணங்களைத் திருத்துவதில் தாமதம் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் படங்களை வைத்துக் கொள்ள நினைவகத்தின் இடம் அதிகம் எடுக்கப்படுகிறது. ஆவணக் கோப்பினைத் திறக்கும்போதே இது தெரிய வரும். டெக்ஸ்ட் கிடைப்பதற்கும், படங்கள் கிடைப்பதற்குமான நேரத்தைக் கவனித்தால் இதனை நாம் உணரலாம். ஆவணங்களை விரைவாகத் திருத்துவதற்கென நாம் படங்களை நீக்கி வைக்கவும் முடியாது. இந்த சிக்கலைத் தீர்க்க வேர்ட் தொகுப்பில் ஒரு வழி உள்ளது. படங்கள் அதிகம் பயன்படுத்தி, வேர்டில் ஆவணங்களைத் தயாரிக்கையில் நாம் இந்த தீர்வைப் பயன்படுத்தலாம். இதற்கு வேர்ட் பிக்சர் பிளேஸ் ஹோல்டர் ( picture placeholder) என்று பெயர்.

இதனை இயக்கிவிட்டால் ஆவணத்தைத் திருத்துகையில் படங்கள் இருக்கும் இடத்தில் ஒரு கட்டம் மட்டுமே தெரியும். பிரிண்ட் பிரிவியூ பார்க்கையில் இந்த படங்கள் காட்டப்படும். டாகுமெண்ட்டைப் பிரிண்ட் செய்கையிலும் இந்த படங்கள் காட்டப்படும். ஆனால் டாகுமெண்ட்டை திருத்துகையில் கட்டம் மட்டுமே காட்டப்படும். இந்த வசதியை எப்படி கொண்டுவருவது என்று பார்ப்போம். Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுத்து கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Picture Placeholders என்னும் இடத்தைக் கண்டுபிடித்து எதிரே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் உருவாக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி டாகுமெண்ட்களை எடிட் செய்கையில் படங்கள் கொண்டுவரப்படுவது இருக்காது; இதனால் நேரம் மிச்சமாகும்; வேகமாக ஸ்குரோல் செய்து எடிட் செய்திடலாம்.