வண்ணத்துப்பூச்சி பறந்த பனித்தீவு!
தற்போது வெள்ளை வெளேரென்று பனி படர்ந்த தீவாக இருக்கும் கிரீன்லாந்து, ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இத்தீவின் தென்பகுதியில் ஒரு மைல் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட சேற்று மண் படிவங்களில் இருந்து பூக்களின் மகரந்தங்களும், அதிலிருந்த பூச்சிகளின் மரபணுக்கும் ஆராய்ச்சி செய்யப்பட்டன.
அவற்றின் மூலம், 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வண்ணத்துப்பூச்சிகள், பட்டுப்பூச்சிகள், தேனீக்கள், வண்டுகள், சிலந்திப்பூச்சிகள் ஆகியவை வாழ்ந்த அடர்ந்த காடுகளுடன், பசுமையாகவும், வெப்பமாகவும் கிரீன்லாந்து இருந்தது தெரியவந்தது.
இப்பகுதியில், பைன், ஈவ், ஆல்டர், ஸ்பர்சி ஆகிய ஊசியிலை மரக் காடுகள் நிறைந்து இருந்திருக்கின்றன. கோடைகால வெப்பநிலை 10 டிகிரி சென்டிகிரே
டாகவும், குளிர்கால வெப்பநிலை மைனஸ் 17 டிகிரி சென்டிகிரேடாகவும் இருந்து வந்திருக்கின்றன. மேலும், மேலேயுள்ள பனியடுக்குகள் உருகினாலும் கூட, அடிமட்டப் பனியடுக்குகள் உருகுவதில்லை என்பதும், கடல் மட்டம் தற்போது இருப்
பதைவிட 30 மீட்டர் உயரத்தில் இருந்த விவரமும் தெரியவந்துள்ளது.
இதுவரை, இந்தக் காலகட்டத்தில் கடைசிப் பனியுகம் நிலவியதாகத்தான் பொதுவாகக் கருதப்பட்டது. அதற்கு மாறாக, இந்தக் காலகட்டத்தில் கிரீன்லாந்து தீவிலேயே வெப்பம் அதிகமாக இருந்திருப்பதால், பனியுகம் என்று கருதப்பட்ட காலகட்டத்திலும் பூமி மிகவும் வெப்பமாக இருந்தது தெரியவந்திருக்கிறது.