கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

ராபர்ட் கோக் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். காசநோய்க் கிருமிகள், காலரா கிருமிகள், காயங்களில் தொற்றும் கிருமிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து, அவற்றைத் தடுக்கும் முறைகளையும் முதன்முதலில் கண்டுபிடித்தார்.
அதற்குப் பின்புதான் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படுகின்ற பல கொடிய நோய்களை அடையாளம் கண்டுபிடிக்கும் முறைகள் வகுக்கப்பட்டன. இன்றைக்கும்கூட கிருமிகளால் உண்டாகும் நோய்களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ராபர்ட் கோக்கின் கண்டுபிடிப்புகளே ஆதாரமாய் விளங்குகின்றன.